Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸியில் புலிகள் தடை குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்தும்.

Featured Replies

ஆஸியில் புலிகள் தடை குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்தும்.

ஆஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியாகத் தடைசெய்யும் சாத்தியக்கூறுகள் பற்றி அந்த நாட்டு அரசுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சுகாதார அமைச்சர் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சுப் பிரதிநிதிகள் குழு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமென அறியமுடிகின்றது. ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் உட்பட அரச அதிகாரிகளுடன் விடுதலைப் புலிகளின் தடைகுறித்து இக்குழுவினர் பேச்சு நடத்துவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இப் பேச்சுகளின் போது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும் தற்போதைய இலங்கை சமாதான முயற்சிகள் குறித்தும், வடக்கு, கிழக்கு மாகாணங் களில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், புலிகள் அமைப்பை சட்ட ரீதியாகத் தடைசெய்யவேண்டிய அவசியம் குறித்தும் குழுவினர் தமது நிலைப்பாட்டை விளக்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ்விஜயத்தின்போது ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்களுடன் சந்திப்பொன்றையும் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறியமுடிகிறது.

-Uthayan-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யார் எனக்குள் குடிகொண்டிருக்கும் இந்த அதீத சக்தி என்ன ஏன் நான் இப்படி அன்னியப்படுகின்றேன். இவ்வளவு காலமாக போராடி கடைசியில் அனியாகமாக இப்படியாகவா தடை செய்யப்பட்டு முடக்கப்படவேன்டும். ஏன் இப்படி எமக்கு நடந்தது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினை சிங்கள அரசு மக்கள் அதுவும் கூட தொழிற்சாலைகளில் கீழ் மட்டங்களில் இருப்பவர்களாலும், பீற்சா விற்பவர்களாளும், ரெக்னீசன்களாக ஆக விரல் விட்டு எண்ணக்கூடிய படித்த சிங்கள மக்களால் எமக்கெதிராக் திசை திருப்ப முடியுமென்றால் எங்கேயோ யாரோ தூங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்குறிய கடைமைகள சரிவர செய்ய வில்லை. படித்த வர்கள் எப்பவும் ஆணவம் கூடி இருப்பதால் தான் அவர்களால் இங்கு சாதிக்கக் கூடியதாக இருக்கிறாது. நானும் 15 வருடங்களாக தமிழர்களுக்கு வேலை செய்ய பாடாய் படுகிறேன். அனால் உள்ளே குளிர் காய்ந்து கொண்டு தூங்குவர்கள் எங்களை வேலை செய்ய விடுகிறார்கள் இல்லை. ஆக் நாம் சிடீ விக்கத்தான் லாயக்கு என்று கருதுவதால் ஒருவரும் கிட்டபோவதே இல்லை. ஆக நான் மட்டும் என்னதான் எமக்குள் கூடாத பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அதனைக்கலைந்து சாதியே இல்லையடி பாப்பா என்ற அந்த பாரதியின் கனவையும் நனவாக்க திருந்தி எல்லோரையும் சகோதரர்களாக கருதி ஒருவர் மேல் ஒருவர் கறள் வைக்காது ஒரு பரட்சிகர தமிழனம் ஒன்று ஒன்டு உருவாகிட ஓடி ஓடி மீண்டும் மீண்டும் வருகிறேன். கழுத்துக்கு மேல தண்ணி வந்திட்டுது எனியும் நாம வித்தியாசம் பார்க்கா அவுஸ்திரேலிய வீதிகளில் இறக்குவோம். நான் முன்னுக்கு போக தயார் ஒருவரும் பயப்படவேன்டாம். ஈழவன் ஒருக்குஆ உவையிட்ட சொல்லும் எனக்கு போன் அடிக்கச்சொல்லி. அட சிங்களவன் கடைசியா எங்கட இடதிலேயும் காரீயம் சாதிக்க முதல் நாம் வீதியில் இரங்க வேண்டும். இங்க ஒற்றுமை தேவை என்னை இதில தடைசெய்யிறதால அவுஸ்திரேலியா புலிகலை தடைசெய்வதை நிறுத்த முடியாது.என் அம்மாவினை தலைகீழாக கட்டி ஒருவன் இரும்புபெட்டி திறந்துகாசு கொள்ளை அடித்ததவர்கள் இல்லை எமது புலிகள் அனாலும் அவர்கள் பகையினைச் சம்பாதித்தென்னவோ உண்மைதான். எல்லாவற்றையும் மறப்போம். எனக்கு என்ன தான் இருந்தாலும் கோவம் வந்தா நிலை குலைந்து போய்விடுவேன் ஏன் எமக்கு தனிநாடு ஒன்று வேணும். அதை யார் உருவாக்கினாலும் பாராட்டப்படுத்த வேண்டும். பிறகு எம்மை நாம் திருத்துவோம். வெள்ளம் வர முதல் அனை கட்ட எல்லோரும் உஙகள் உங்கள் நாடுகளில் பெரிய படித்த மனிதர்களின் வீடுகளுக்கு போய் ஒரு பெரிய போராட்ட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள். தயவு செய்து. ஈழவன் எங்கே உங்கள் தமிழின உணர்வு. பொருப்பாளருக்கு அடியுங்கள் சொல்லுங்கோ சிலர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டதினால் எல்லான் குளருபடியாக முடிந்தது என்று சொல்லுங்கோ என்ன தம்பி பிழைவிட்டா அண்ணன் மன்னிக்கமாட்டானா என்ன?.

ஏனப்பா என் பெயரை இழுக்கிறீர்கள்.இதனை செய்ய வேண்டியவர்கள் சும்மா இருந்தால் நாம் என்ன செய்வது ஈழத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேணும் அல்லது எமது பிரச்சார உத்தியை மாற்ற வேண்டும் சிங்களவன் ஒற்றுமையாய் உழைப்பது போல எம்மவர் இல்லை என்பதே நிதர்சனம் போட்டி பெறமையினால் எம்மினம் கஸ்டப்படுவது இன்று நேற்றல்ல கனநாளாகவே இருக்குது அதுவும் படித்தவர்கள் என சொல்லி கொள்ளும் கூட்டம் இருக்கும் அவுஸ்திரேலியா மண்ணில் இது ரெம்பக்கூட தம்மை அடையாளப்படுத்துவதற்காக ஈழப்பிரச்சினையை பயன்படுத்துவோர் பலர்.ஒரு கசப்பாண சம்பவத்தினால் நான் ஒதுங்கி விட்டேன்.ஆனால் முக்கியமான போராட்டங்களுக்கு நிச்சயம் கைகொடுப்பேன்.

இதனை சிங்களவர்கள் செய்ய முதல் மீண்டும் நாம் எமது எதிர்புணர்வை காட்டவேணும் அதாவது தடை செய்ய முன் துதுக்குழுவினரின் வாருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களோ அல்லது தீவ்விர மின்னஞ்சல் பிரச்சாரங்களோ அல்லது உண்னாவிரத்ஹ் மோ செய்யலாம் என்னையும் உங்களையும் போல தனிமனிதனால் எதுவும் ஒழுங்கு படுத்த முடியாது சம்பந்த ப்ட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேணும்.

கருநாயிற்கு சேவை செய்யும் கூட்டங்கள் பலவும் கங்காரு நாட்டில் இருப்பதாக ஒருவர் சொன்னார். இதற்காக தெருவில் போய் அடிபட முன், எமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், ஊரவர்களிற்கு சரியான, நல்ல விடயங்களை சொல்லி எமது தாயகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலே பிரச்சனையின் 90% தீர்ந்து போய்விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நாம் எல்லாம் தண்ணியடிச்சு கும்மாலங்கள் எல்லாம் போட்டு போராட்டத்தினை பற்றித்தானே கடந்த பல பல வருடங்களாக செய்து வருகிறோம். அவன் நாளைக்கு எமக்கு வாய்க்கரிசிபோட கிலோகணக்கில அரசிவேண்டுறன். இந்த நேரதில எமக்கு ஊருக்குள்ள போய் அண்ணை ராசா என்ட குஞ்சு இஞ்சேருங்கோ எண்டு எல்லாம் விளங்கப்படுத்தி அவரவரின் நலுவல் போக்குகளுக்கு வசதியாக கதைப்பது ஒன்றும் வேலை செய்யாது. எமக்கு என்ன வேண்டும். மீடியா அதுக்குத்தான் இருக்கவே இருக்கிறது ஈழமுரசு அதில முன்பக்கமா ஒரு விளம்பரம். எமது வண்டியில தடவினவன் இப்ப சவரக்கத்தியால வெட்டப்போறன். ஈழவன் சொன்ன மாதிரி தொடர் உண்ணா விரதம் இங்க நடக்கட்டும். இரண்டு மூண்று திலீபன்கள் இங்கு உருவாகட்டும். அதுக்கு வேலிக்குள்ளால் கதைத்தா உணர்ச்சி கொப்பளிக்காது. மனுசிமார் மனசினை மாத்தி போடுவீனம். நாம் இங்கால வந்திட்டாம் எனி என்ன நாங்க அங்க போகயா போறம். பிள்ளைகளும் எனி போகாது உந்த சப்போட்டு பண்ணுற வேலைகளை விட்டுட்டு சும்மா போய் வாயை மூடிக்கொண்டு இருந்திட்டு வருவம். இப்படியானை வாயத்திறப்பீனம். ஒரு பொது கூட்டம் வைச்சா. நாம் எங்கு நிற்கின்றோம். எமது இலட்சியம் என்ன. எப்படி அதை அடைய நாம் முயலாம் என்று கூடி கதைக்கோணும். உணர்ச்சிகள் கொப்பளிக்க வேண்டும். இங்க தமிழீழ புலிகள் என்ற சொற்பதமே தேவையிலை. தமிழர் அங்க சாகிறீனம். புலிகளினை தவிர தமிழர்க்கு இன்று யாருமே இல்லை ஆக்வே பிரச்சனையை தீர்த்து, சண்டையை பிடிக்காம் தனிஅரசு அல்லது கூடிய அதிகாரம் கொண்ட தன்னாட்சி அமைப்பு. இப்படி நாங்க வீடு வீடாய் ஏறி இறங்கி அண்ணை மாரை அக்காமாரை, என்னைப்போல தாத்தாமாரை மரியாதையா கெஞ்சி கூப்பிட்டா மனம் எல்லாம் இறங்கி சனம் இறங்கிவரும். இப்ப நான் இங்க வாரது எப்படி உங்களுக்கு பிடியாதோ அதே போல தான் தமிழ மக்களுக்கும் புலிகள் அமா நாம் தான் புலிகள் வந்திருக்கோம் என்று மிடுக்காய் போனா எம்மட சனமும் தெரியுமுங்கோ என்று விட்டு கவனிக்காம போயிரும். ஆக எமக்கு யாருக்கு பிடிக்குது யாருக்கு பிடிக்கேல என்பதல்ல.

எமது பொது எதிரி எப்படி இருந்தான் 20 வெஸ்ட் கிளாஸ் தமிழன் எடுக்கேக்க அவன் 2 - 3 பேர் எடுத்து வந்த மொக்கனாசுந்தரம்கள் எல்லாம் ஒறூமையா தமிழனை முற்றுமுளுதாய் பயங்கரவாதி எண்டு சொல்ல வரேக்க நாங்க எல்லோரும் ஒரு மைதானத்தில தொடர் உண்ணாவிரதம் நடத்தி படிச்சவன், பாமரன். கடும் உழைப்பாளி, ஏன் இப்படியான சன்ம்கள் பயங்கரவாதியாக இருக்க முடியும் எண்டு சிந்திக்க வாக்கவேண்டியாகால்ம். அடியுங்கள் எண்டு நான் சொன்னது அந்த விலாசலை அல்ல( பொலீஸ் கொண்டு போயிடுவான்) டெலிபோனை அடிய்ங்கோ எண்டு தான் சொல்லவந்தனான்.அது சரி கருனாவும் பிலை விட்டவர் ஆனா நீங்க என்ன சொல்லுறீங்களோ எப்படி ஏற்றுக்கொள்ளுகிறீர்களோ. யாழ்பாணத்தானுக்கும்

மட்டக்களப்பு தமிழருக்கும் இடையே பல ஒற்றுமைகள் அதே நேரம் மதிக்கப்படவேண்டிய பல சாரம்களும் உண்டு. கருணா பிளைவிட ஆரம்பத்தில் ஏதோ ஒரு வர் இரண்டு போர் அரிகண்டம் குடுத்திருப்பீனம். அதன் பிறகு உங்களை மாதிரி அவ்ரை தனிமைப்படுத்த வெளிக்கிட அவ்ருக்குள்ள ரோசத்தில மனுசன் பிழை விடுகுது. அவரயும் திருத்தி மன்னிச்சு ஏற்றுக்கொண்டு தான் எனி போகவேண்டும். என்னைபோல துப்பரவாய் தமிழர் அன்னியப்படுத்தி விடக்கூடாது அது பெரிய மன்வியாதியினை ஏற்படுத்தி அழிவு வேலைகலை செய்யத்தோணும். அனுபவம் பேசுகிறது. ஆனா நான் ந்வ்ல்லவன் கொஞ்சம் கோபக்கர்ரன். ஏன் ஒரு தருமே உண்மையாய் நடக்குதுகள் இல்லை. அதனால் தான் எரிசால் வருகுது.

ஆஸியில் உள்ள தமிழன் என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறானா?? ஈழவா பொறுத்தது போதும் பொங்கி எழும்......

ஆஸியில் உள்ள தமிழன் என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறானா?? ஈழவா பொறுத்தது போதும் பொங்கி எழும்......

ராசா கிண்டி விடுற மாதிரி இருக்கு :P

மாப்பு

கருணா பிரிவின் போது அவருக்கு சப்போட் பண்ணலாம என இங்க கூட்டம் போட்டவையாம் கொஞ்ச பேர் :blink:

Please read this news item and attend the demonstration http://www.socialistpartyaustralia.org/arc...visit-australia

The Socialist Party will be picketing this event highlighting the war in Sri Lanka, the gross violations of human and democratic rights and repression of the Tamil people.

Join us 6pm Tuesday February 27th, Deakin University (Victoria) Burwood Campus, lecture theatre LT7 on the second floor of building W (Psychology Department). For more information or for assistance with transport contact the SP National Office 96399111.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சையாக சொன்னா வெளியில காட்டாவிட்டாலும் மனதுக்குள் மட்டக்களப்புத்தமிழன் சிங்களவனைப்போல தன் தன் ஆள் என்று வரும் போது ஒற்றுமையில் இரும்பு போல இருப்பதினை காண்கின்றேன். ஒரு பெரிய தமிழ் எழுத்தாலர் அவரின் ஒரு பட்டபே அவரை இன்னார் என்று உலகத்தின் மூலையில் இருக்கும் எந்த தமிழனுக்குமே காட்டிக்கொடுக்கும். அவர் பிறந்த இடம் மட்டக்களப்பு. அவர் புலிகளின் பெருநிகழ்ச்சிகளுக்கு முன்னுக்கு நிற்பவர் சட்டத்தரணி வேற அவரே சொன்னார் ..... அப்படியாக இருக்கும் போது ஈழவன் சொன்னதும் நடந்திருக்கு இடமுண்டு. ஆகவே யாழ் தமிழன் தான் என்னும் இங்கே அடி பிடி வெட்டு குத்து எண்டு இருக்கிறான். பணத்தினை காணாதவன் இங்க கண்டதால் அதுகளுக்கு எந்த விதமாந்தொந்தரவுகளும் அவுஸ்திரேலியா அரசால் வந்துவிடும் என்று பய்பிடுகிறீனம். அதற்காகத்தான் தனிதனியாக போராடாம் சேர்ந்து இழுத்தால் தில பிரச்சனை எண்ட சொல்லுக்கே இடமில்லை. உண்ணா நிலைபோராட்டத்திற்கே வரைவிலக்கணம் கொடுப்போம் வாருங்கள். தலைவர் இதை உங்களிடம் கண்டிப்பாக எதிர்பார்ப்பார். அதை செயலில் காட்டுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் கட்டாயம் வருவோம் வேறும் பலருடன். இதை மின்னஞ்சல் மூலமாக ப்வர் பொயின்ற்டில் எனக்கு தெரிந்த விக்க்ரோரியா மக்களுக்கு அனுப்பி விடுகிறேன்.

Thamilpuyal mikka nandri. I will give more information about other possible actions when confirmed.

Please support organisations like the Socialist Party because Australians would be coming there to protest. If we Tamils don't come they will not bother next time.

ராசா கிண்டி விடுற மாதிரி இருக்கு :P

மாப்பு

கருணா பிரிவின் போது அவருக்கு சப்போட் பண்ணலாம என இங்க கூட்டம் போட்டவையாம் கொஞ்ச பேர் :blink:

கிண்டியும் விடலை கிளறியும் விடலை... உங்களிற்கு முடியாவிடில் அதை நேர சொல்லும் ஐசே...

  • கருத்துக்கள உறவுகள்

2,3 மாதத்துக்கு முன்பு புலிகளை அவுஸ்திரெலியாவில் தடைசெய்யப்பட உள்ளதாக எட்டப்ப ஊடகங்களிலும் சிங்கள ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. பிறகு பாலித கோகன்னா அவுஸ்திரெலியாவுக்கு வந்து புலிகளை தடை செய்யுமாறு கேட்டிருந்தார். அம்முயற்சி தோல்வி அடைந்ததினை அடுத்து இப்பொழுது நிமால் டி சில்வா முயற்சி செய்ய இருக்கிறார். மூதூர் படுகொலைக்கு விசாரிக்கச் சென்ற அவுஸ்திரெலியா அமைப்பின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் இவ்விசாரணைகளுக்கு பெரிதாக உதவ விரும்பம் தெரிவிக்காதமை பற்றி குறிப்பிட்டதினால் அவுஸ்திரெலியா அரசுக்கு இலங்கை அரசின் பயங்கரவாத செயல்கள் தெரிந்துள்ள நிலமையில் புலிகளை தடை செய்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.