Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பை நிச்சயம் கொண்டுவருவோம் வரைபை பௌத்த பீடங்களுக்கு முன்வைத்துவிட்டே நிறைவேற்றுவோம் என்கிறது ஐ.தே.க.

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்பை நிச்­சயம் கொண்­டு­வ­ருவோம்

GayanthaP93-3dc4ba01b7f8349f41013c4de282547f328ad3ab.jpg

 

வரைபை பௌத்த பீடங்­க­ளுக்கு முன்­வைத்­து­விட்டே நிறை­வேற்­றுவோம் என்­கி­றது ஐ.தே.க.  
(ந.ஜெகதீஸ்)

நல்­லாட்­சிக்கு மக்கள் வழங்­கிய ஆணைக்­க­மை­வாக சக­ லரும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று நிச்­சயம் கொண்­டு­வ­ரப்­படும். இவ்­அ­ர­சி­ய­ல­மைப்பு 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்­டு­ களில் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­க­ளுக்கு அப்பால் சென்று நாட்டின் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தாக அமையும் என்று காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.  

புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் பௌத்த மதத்­துக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. அதனை மறை­மு­க­மாக நிறை­

வேற்ற வேண்­டிய தேவையும் இல்லை.

குறித்த அர­சி­ய­ல­மைப்­பி­னது உத்­தேச வரைபை பௌத்த பீடங்­க­ளுக்கு முன்­வைத்து அது தொடர்பில் பூரண தெளி­வுப்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்­டதன் பின்­னரே அதனை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் எனவும் காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மாக சிறி­கொத்­தாவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எமது ஆட்சி தொடர்­பிலும் நாம் மேற்­கொள்ளும் அபி­வி­ருத்தி திட்டம் தொடர்­பிலும் கூட்டு எதி­ர­ணி­யினர் எம்­மீ­தான போலி­யான விமர்­ச­னங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

நல்­லாட்சி அர­சாங்கம் இந்த நாட்டை பிள­வுப்­ப­டுத்­தவும் ஏனைய நாடு­க­ளுக்கு எமது நாட்டை தாரை­வார்க்­க­வுமே பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். போலி­யான வார்த்­தை­களை கூறி மக்­களை குழுப்ப முயற்­சிக்­கின்­றனர். இதற்­கான ஆரம்ப கட்­டமே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான அர­சாங்­கத்தின் தேவை என்­கின்­றார்கள்.

நாம் நல்­லாட்­சியை பொறுப்­பேற்­ப­தற்கு முன்னர் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கார முறை ரத்து செய்­யப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­யினை வழங்­கி­யி­ருந்தோம். அதற்­க­மை­வாக மக்­களும் நல்­லாட்­சிக்கு அதனை நிறை­வேற்­று­மாறு ஆணை வழங்­கி­யி­ருந்­தார்கள்.

ஆகவே நல்­லாட்­சி­யி­னூ­டாக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வரு­வ­தற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டலே தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றதே தவிர குறித்த அர­சி­ய­ல­மைப்பின் சட்­ட­மூலம் எவ­ருக்கும் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யி­லேயே இவ்­வ­ர­சி­ய­ல­மைப்பில் தொடர்பில் சிலர் வெளி­யிட்ட போலி­யான கருத்­துக்­க­ளினால் தற்­போது நாட்டில் பாரிய சர்ச்­சைகள் ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்தில் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போதும் அதற்கு பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலின் போதும் மக்­களின் அனு­மதி புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு வழங்­கப்­பட்ட அனு­ம­திக்கு அதனை நிறை­வேற்ற வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்­குள்­ளது.

1972 ஆம் ஆண்டு முன்னாள் பிர­த­மர்ங சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­க­வி­னாலும் 1978 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­த­வி­னாலும் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­களை விடவும் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது நாட்டு மக்­களின் அபி­லா­சை­க­ளுக்கும், எதிர்ப்­பார்ப்­பு­க­ளுக்கும் இட­ம­ளிக்கும் வகை­யிலும் நாட்டின் ஜன­நா­யத்தை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும் அமையும்.

இதற்கு சகல கட்­சி­களின் கருத்­துக்­க­ளையும் அறிந்து முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அசி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக உரு­வாக்­கியே இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி வரு­கின்றோம்.

எனவே அவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான போலி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து மக்­களை திசைத்­தி­ருப்­பு­வ­தற்­கான செயற்­பா­டு­களை சிலர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பௌத்த மதத்­திற்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக விமர்­சிக்­கின்­றார்கள். இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தமது தெளி­வுப்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

பௌத்த மதத்­துக்கு எவ்­வித பாதிப்­பி­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. அத்துடன் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதை போன்று சகல மதங்களுக்குமான சம அந்தஸ்த்தினை வழங்குவதற்கும் இதன்மூலம் எதிர்ப்பார்க்ப்பட்டுள்ளது.

எனவே புதிய அரசியலமைப்பின் உத்தேச வரைபை பௌத்த பீடங்களுக்கு முன்வைத்து அது தொடர்பில் பூரண தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டதன் பின்னரே அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆகவே இந்த அரசியலமைப்பை மறைமுகமாக நிறைவேற்றிக்கொள்ள எவ்வித தேவைப்பாடுகளும் கிடையாது. சிலரது போலிக்கருத்துக்களால் மக்கள் குழப்பம் அடைய தேவையில்லை என்றார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-10#page-1

பௌத்த கலகக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் பௌத்த பீடைகளுக்கு (பீடங்களுக்கு) அறிவித்த அரசியலமைப்பு தமிழர்களுக்கு தேவையில்லை!

தமிழர் தாம் நிம்மதியாக, மற்றவர் ஆக்கிரமிப்பு இன்றி வாழும் சகல உரிமைகளையும் கொண்டவர்கள்! இதை அடைவதே தமிழர்களுக்கு இருக்கும் ஒரே இலட்சியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

குறித்த அர­சி­ய­ல­மைப்­பி­னது உத்­தேச வரைபை பௌத்த பீடங்­க­ளுக்கு முன்­வைத்து அது தொடர்பில் பூரண தெளி­வுப்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்­டதன் பின்­னரே அதனை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் எனவும் காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

அப்போ பிரச்சனை பௌத்தபீடத்துக்கு மட்டுமே. சிறுபான்மையினருக்கு அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.