Jump to content

டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள்


Recommended Posts

டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள்

 
டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள்
  •  

கூட்டு அரசிலிருந்து வெளியேறுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சிக்குள் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பயணத்துக்கு முன்னதாக, அவசர அவசரமாக நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சரான ஜோன் செனவிரத்தின, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் அரசிலிருந்து தாம் வெளியேறப் போவதாகக் கூறியுள்ளார். அதிருப்தி அமைச்சர்கள் சிலரும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வெளியேறுவதாக இருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும். நாம் கூட்டு அரசில் இருப்பதால்தான், சில விடயங்களை எதிர்க்கக் கூடியதாக உள்ளது. மக்கள் விரோத தீர்மானங்களை தோற்கடிக்க முடிகின்றது. எங்களில் ஒரு பகுதியினர் வெளியேறினாலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை ஆதரிக்கும் வகையில், எஸ்.பி.திசநாயக்க, மகிந்த சமரசிங்க ஆகியோரும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

மிகக் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இறுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருங்கள். வரவு – செலவுத் திட்டக் கூட்டத் தொடருடன் முக்கிய முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்.

http://uthayandaily.com/story/11610.html

Link to comment
Share on other sites

டிசெம்­பர் வரை எம்­மால் பொறுத்­தி­ருக்க முடி­யாது

சு.க. அதி­ருப்­தி­யா­ளர் குழு மைத்­தி­ரி­யி­டம் தெரி­விப்பு

டிசெம்­பர் வரை எம்­மால் பொறுத்­தி­ருக்க முடி­யாது
  •  

டிசெம்­பர் மாதம் வரை­யில் பொறு­மை­யாக இருக்க முடி­யாது என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அதி­ருப்திக் குழு, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் தெரி­வித்­துள்­ளது.

கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­று­மாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அதி­ருப்­திக் குழு­வைச் சேர்ந்த 18 உறுப்­பி­னர்­கள், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அழுத்­தம் கொடுத்­தி­ருந்­த­னர். எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதம் வரை­யில் பொறு­மை­யாக இருக்­கு­மா­றும், வரவு – செல­வுத் திட்­டத் தொட­ரு­டன் முடிவு எடுக்­கப்­ப­டும் என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் டிசெம்­பர் மாதம் வரை பொறு­மை­யாக இருக்க முடி­யாது என்று அதி­ருப்­திக் குழு அறி­வித்­துள்­ளது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றா­மல் இருப்­ப­தாக இருந்­தால், தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­க­வேண்­டும். எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்­வ­தற்கு எமக்கு அனு­மதி வழங்­க­வேண்­டும். இந்த இரண்டு நிபந்­த­னை­க­ளை­யும் அரச தலை­வர் ஏற்க மறுத்­தால், தாம் வெளி­யே­று­வோம் என்று கூறி­யுள்­ள­னர்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் எழுந்­துள்ள இந்த நெருக்­க­டி­க­ளைச் சமா­ளிக்­கும் நட­வ­டிக்­கை­யில் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­காக குமா­ர­துங்க ஈடு­பட்­டுள்­ளார்.

http://uthayandaily.com/story/11802.html

Link to comment
Share on other sites

‘டிசெம்பர்வரை காத்திருக்கவும்’
 Comments - 0 Views - 10

image_8d571ac0f1.jpgகூட்டாட்சி அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு தங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், டிசெம்பர் வரையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளதாக, அறிய முடிகின்றது.   

இந்தச் சந்திப்பின்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியிடம் இரண்டு விடயங்களை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதில், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் என்பது, பிரதான நிபந்தனையாகும். அவ்வாறு இல்லாவிடின், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தங்களை அமர்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்பது, இரண்டாவது விடயமாகும் என்றும் அறியமுடிகின்றது.   

இதேவேளை, இந்தக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அடுத்த பேச்சுவார்த்தையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பங்குபற்றச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.   

எனினும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதி குறித்து எந்தவித உத்தியோகபூர்வத் தகவலும் வெளியாகவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதற்கு முன்னரே, இந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/டிசெம்பர்வரை-காத்திருக்கவும்/175-200710

Link to comment
Share on other sites

ரனில் இவரைimage_8d571ac0f1.jpg   காய்வெட்டி வேறொரு குழுவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் தயங்க மாட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................
    • எனக்கும் இதே பிரச்சனை. போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்.
    • நேபாளம் ஒல்லாந்தரை கலைச்சு அடிப்பாங்கள்! அதுக்கு ஸ்ரோங்காக முட்டை வேணும்தான்!
    • நாற்பதுக்குக் குறைந்த இளைஞர்கள் தமிழ் தேசிய அரசியலுக்கு வராமல் ஒதுங்க, அவர்கள் பிழைப்பை நாடி ஓடும் வயதினராக  இருப்பது மட்டுமல்ல காரணம். உழைப்பையும், படிப்பையும் முடித்து விட்டு நாட்டுக்குத் திரும்பி இப்போது பா.உ ஆக இருக்கும் சாணக்கியனை எப்படி நடத்தினோம் என்று ஒரு தடவை நிலாந்தன் தேடிப் பார்த்து தன் ஆய்வைப் பூரணப் படுத்த வேண்டும். அவரை அறிமுகம் செய்தவர் முதல், கற்பனையாக சிலர் உருவாக்கிய சாணக்கியனின் சிங்களக் காதலி வரை சாணக்கியனை தூக்கி மிதிக்கக் காரணங்களாக இருந்திருக்கின்றன. இது ஒரு உதாரணம். அம்பிகா சற்குணநாதன் என்ற இன்னொரு இளையவருக்கு நடந்தது இன்னொரு உதாரணம். இப்படி தகுதிகள் இருப்போரை எதையோ தூக்கி அவர்கள் தலையில்  சுமக்க மறுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திட்டித் துரத்தினால், உருப்படியான தகுதி இருக்கும் யாரும் இனி வர மாட்டார்கள். (அல்லது வருவோர் பார்லிமென்ற் கன்ரீனில் முழுக்கட்டுக் கட்டி வயிறு வளர்த்து, வாகன இறக்குமதி அனுமதியை விற்று இலாபம் பார்த்து,   அரச வேலை வாய்ப்பை விற்று லாரி வாங்கி ஓட விடும் pre-2000s பா.உ க்களாக வருவார்கள்😎) இதைப் புரியாமல் நிலாந்தன் புலம்பி ஒரு பலனும் இல்லை!  
    • அங்கே ஒரு கணக்குக்கு இன்னொரு கணக்கு சரியாகிவிடும்...............🤣.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.