Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு

Featured Replies

சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு

 

பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட செளதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்து எடுக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

முஸ்லிம் பெண்படத்தின் காப்புரிமைCHRISTOPHER FURLONG/GETTY IMAGES

ஆளரவமில்லா ஒரு புராதன கோட்டையில் சிறிய, இறுக்கமான, கையில்லா உடைகளை அணிந்து, அந்தப் பெண் நடப்பது அந்த காணொளிக் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.

செளதி அரேபியாவில் பெண்கள், கைகள் மற்றும் பாதங்கள் தவிர இதர உடல் பாகங்கள் மூடுமாறு, நீண்ட, தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரபுகளை மீறி இவ்வாறு உடையணிந்து வீடியோ பதிவிட்டிருக்கும் பெண்ணை கைது செய்யவேண்டும் என்று சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தனது விருப்பத்தை நிறைவேற்றுவதை குற்றமாக கருதக்கூடாது என்ற கருத்துக்களும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global-40637762

  • தொடங்கியவர்

சவுதியில் குட்டை பாவாடையுடன் வீடியோ வெளியிட்ட பெண் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
 
 

Saudi police arrest woman for featuring in a video wearing skirt

சவுதியில் குட்டை பாவாடை அணிந்து அதனை வீடியோவாக பதிவ ு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண்ணை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் அரசு ஊடகமான எக்பரியா,

"வீடியோவில் அடையாளம் அறியப்படாத அப்பெண் குட்டை பாவடையுடன் ஒரு பழமையான சுவர்கள் அடங்கிய தெரு வழியே நடந்து செல்கிறார்.

அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காரணத்துக்காக தற்போது அப்பெண் ரியாத் போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பெயர் குறிப்பிடப்படாத அப்பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் அனைவரும் பகிர்ந்து இஸ்லாம் விதிமுறைகளை அவர் மீறிவிட்டதாக கடுமையாக சாடி வருகின்றனர்.

சவுதியில் பெண்களுக்கு எதிரான பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் முக்கியமானது,ஆடை கட்டுப்பாடு, வாகனம் ஓட்டுவதற்கு தடை போன்றவை. சவுதியில் பெண்களுக்கு எதிராக ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு அங்குள்ள பெண்கள் அமைப்புகள்தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/சவுதியில்-குட்டை-பாவாடையுடன்-வீடியோ-வெளியிட்ட-பெண்-கைது/article9776815.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

 

சௌதியில் சர்ச்சையை ஏற்படுத்திய குட்டைப் பாவடைப் பெண் - காணொளி

கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை

 

பொது இடத்தில குட்டை பாவாடை மற்றும் கைகளை மறைக்காத மேல் சட்டை அணிந்த நிலையில் இருக்கும் தனது காணொளியை இணையத்தில் பதிவிட்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி சவுதி அரேபியா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணைபடத்தின் காப்புரிமைTWITTER

"குலூத்" என்று அறியப்பட்ட அந்த மாடலிங் செய்யும் பெண், உஷாய்கிர் பகுதியிலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தான் நடந்து செல்லும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதத்தைத் தொடங்கியது. அந்த பழைமைவாத இஸ்லாமிய நாட்டின் கடுமையான ஆடை விதிகளை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர்.

பிற சவுதி நாட்டவர்களோ, அப்பெண்ணின் "துணிச்சலைப்" பாராட்டி, அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.

சவுதி அரேபியப் பெண்கள், "அபயாஸ்" எனப்படும் தலதலப்பான, முழு நீள அங்கிகளையே பொது இடங்களில் அணிய வேண்டும். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் தலையை மறைத்து முக்காடும் அணிய வேண்டும். அவர்கள் வாகனங்கள் ஓட்டுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், தங்களுடன் தொடர்பில்லாத ஆண்களிடம் இருந்தும் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொடக்கத்தில் ஸ்னாப்சாட்டில் (Snapchat) கடந்த வார இறுதியில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், சவுதி தலைநகரான ரியாதின் வடக்கில் 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, நஜ் மாகாணத்தின் உஷாய்கிர் பாரம்பரிய கிராமத்தில் உள்ள ஒரு கோட்டையின் ஆள் நடமாட்டமற்ற ஒரு தெருவில் குலூத் நடந்து போவதைக் காட்டியது.

குலூத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர் போக்கில் ஆடை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் காணொளி குறித்து சவுதி அரபியர்கள் ட்விட்டரில் கூறியிருந்தனர்.

"ஹையா எனப்படும் மதக் காவல்துறையினர் கண்டிப்பாகத் திரும்பி வர வேண்டும்," என்று பத்திரிக்கையாளர் காலேத் ஜிதான் எழுதியிருந்தார்.

CHRISTOPHER FURLONG/GETTY IMAGESபடத்தின் காப்புரிமைCHRISTOPHER FURLONG/GETTY IMAGES

"பிரான்ஸ் நாட்டில் நிக்காப் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி அணியும் பெண்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. சவுதி அரேபிய குடியரசின் சட்டங்களின்படி பெண்கள் அபயாஸ் மற்றும் அடக்கமான உடைகள் அணிய வேண்டும்," என்று இன்னொரு ட்விட்டர் பயனாளி வாதிடுகிறார்.

"அவர் குண்டுகளை வெடிக்க செய்தார் அல்லது சிலரைக் கொலை செய்தார் என்று நினைத்தேன். ஆனால் அவ்விவாதம் அவர்கள் விரும்பாத பாவாடையைப் பற்றியது என்பதை பின்னர் அறிந்தேன்," என்று எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வயேல் அல்-கஸீம் பதிவிட்டுள்ளார். "அவர் கைது செய்யப்பட்டால் விஷன் 2030 எப்படி வெற்றிபெறும்," என்று 31 வயதான புதிய முடி இளவரசர் மொஹம்மது பின் சல்மான், கடந்த ஆண்டு அறிவித்த சீர்திருத்த திட்டங்கள் குறித்துக் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலியானா மற்றும் மகள் இவான்கா சவுதி பயணத்தின்போது அபயாஸ் அல்லது நிக்காப் அணியாதது குறித்து பதிவிட்டு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அதிகாரிகள் மாகாண ஆளுநரையும் , காவல் துறையினரையும் சந்தித்ததாக திங்களன்று, ஒகாஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global-40647663?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

சௌதி: கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் வழக்கு இல்லாமல் விடுதலை

 

குட்டைப் பாவாடையும், கையில்லாத மேலுடையும் அணிந்து காணொளி வெளியிட்ட இளம் பெண்ணொருவரை சௌதி அரேபிய காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர்.

"அநாகரிகமான" முறையில் ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பின்னர், முஸ்லிம் நாடாகிய சௌதியில் எழுந்த சூடான விவாதங்களை தொடர்ந்து அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சௌதி அரேபியாவில் , உடை அணியும் முறை குறித்த கடுமையான விதிகளை மீறியதற்கு இந்த பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை முடித்துவிட்டதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

செவ்வாய்க்கிழமை இந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தன்னுடைய தலையை மூடாமல், குட்டைப் பாவாடை அணிந்து குறிப்பிட்ட இடத்தில் நடந்து சென்றதை இந்த பெண் ஒப்புக் கொண்டுள்ளார்.

சௌதி அரேபியாவிலுள்ள பெண்கள் "அபாயாஸ்" என்று அறியப்படும் இறுக்கமற்ற முழுநீள ஆடையினை அணிய வேண்டும். முஸ்லிம் என்றால் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்ற நியதி உள்ளது.

ஆனாலும், "அபாயாஸ்" ஆடைக்கு உள்ளே பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை.

இந்த காணொளி இணையத்தில் பதிவிடப்பட்டது அந்த பெண்ணுக்கு தெரியாது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

"மாடல் குலூட்" என்ற அறியப்படும் இணைய பயன்பாட்டாளரால், வார இறுதியில் "ஸ்நாப்சாட்" சமூக ஊடகத்தில் இந்த காணொளி முதலில் பதிவிடப்பட்டது.

நஜிட் மாகாணத்தில் தலைநகர் ரியாத்தின் வடக்கே 155 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பாரம்பரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை இருக்கும் உஷாய்கிர் கிராமத்தில் ஆள் அரவமற்ற தெருவில் இந்த பெண் நடந்து செல்வதை இந்த காணொளி பதிவு காட்டுகிறது.

சௌதி அரேபியாவில் மிகவும் பிற்போக்கான பகுதிகளில் ஒன்றாக நஜிட் விளங்குகிறது. இங்குதான் சுன்னி இஸ்லாமின் தன்னொழுக்கத்தில் கண்டிப்பான வாகாபிஸத்தை நிறுவியவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிறந்தார். இந்த வடிவம் தான் சௌதி அரச குடும்பம் மற்றும் மத அமைப்புகளால் கடைப்பிடிக்கப்படுகிறது.

டிவிட்டர் சமூக ஊடகத்தில் இந்த காணொளி மிக விரைவாக பரவி, "டிமாண்ட்_த_டிராயல்_ஆப்_மாடல் _குலூட்" என்ற ஹேஷ்டேக்கை பயனபடுத்தி பலரும் விமர்சனங்களை எழுத தொடங்கினர்.

பிறர் இந்த பெண்ணின் தைரியத்தை புகழ்ந்து கருத்து தெரிவித்து, அவர் விரும்பியதை அணிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சௌதியில் பெண்கள் வாகனம் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமில்லாத ஆண்களிடம் பழக விடப்படுவதில்லை.

பயணம் மேற்கொள்ளவும், வேலை செய்யவும் அல்லது சுகாதார பராமரிப்புகளை பெறவும், பொதுவாக தந்தை, கணவர் அல்லது சகோதரர் போன்ற ஆண்கள் பெண்களுடன் செல்ல வேண்டும் அல்லது அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நியதி சௌதி அரேபியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global-40665779?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை இருந்தால் மேட்டரே இல்லை ஆடை இல்லையென்றால் தான் மேட்டரே :10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.