Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்!

Featured Replies

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்!

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்!

அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களை ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒரு பூகோள உலகம்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா கோரிக்கை விடுத்த போது, அதற்கு பதிலளிக்காமல் விட்டது இந்தியாவின் மிகப் பெரிய தவறாகும். இதன் விளைவாகத் தான் சீனர்கள் அங்கு வந்து அபிவிருத்தியைச் செய்தார்கள்.

இந்தியாவில் 83 வீதமான வர்த்தகம் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்தியா பதில் கொடுக்கத் தவறியது ஆச்சரியமானது.

சபஹார் துறைமுகத்தின் அபிவிருத்திவிடயத்தில் இந்தியா பக்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதமும் கூட புத்திசாலித்தனமானது அல்ல.

பத்தாண்டுகளுக்கு முந்திய பாதையில் தான் இந்தியா இன்னமும் செய்து கொண்டிருக்கிறது, ஆனால் உலகம் நிறையவே மாறி விட்டது. வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=74153

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பென்ஷன்  எடுத்த பின்  தான்... சரி பிழையை பிரித்துப் பார்க்க தெரிகின்றது.
ஈழத் தமிழர் விடயத்தில்... இவர் செய்த துரோகம்  தெரிய... இன்னும் நாள் எடுக்கும் போல் உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவுக்கு அப்ப ஆலோசனை வழங்கினது இவர் தான். இவர் தான் விட்ட பிழையை.. எதுக்கு ஹிந்தியாவின் பிழை என்றார்...??!  தன்ர படுமுட்டாள் தனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தானே.

ஹிந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் தவறாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின்னிருந்து. 

ஈழத்தமிழர் விவகாரத்தில்.. ஹிந்தியாவுக்கு 1987 இல் கிடைத்த நல்ல வாய்ப்பை.. ராஜீவின் மொக்குத்தனத்தால்.. கெடுத்துக் கொண்டார்கள். இன்று வரை அந்த மொக்குத்தனம்... மோசமாகப் போய்க் கொண்டிருக்கே தவிர.. அதனை மாற்றி... ஈழ்த்தமிழருடனான உண்மையான நட்புறவை வளர்த்துக்கொள்ள ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவு பத்தல்ல

சொறீலங்காவை இவர்களுக்கு கையாளும் தந்திரம் தெரியாது. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின் சொறீலங்கா பற்றிய இவர்களின் கொள்கை வகுப்பு எல்லாமே படுமோசம். அதன் விளைவு.. சீனாவின் ஆதிக்கம்.. பாகிஸ்தானின் ஆதிக்கம்.. சவுதியின் ஆதிக்கம்.. அமெரிக்காவின் ஆதிக்கம்.. ரஷ்சிய ஆதிக்கம் என்று எல்லா ஆதிக்கங்களையும் சொறீலங்கா.. சிங்கள ஆளும் வர்க்கம் மடிக்க வைச்சு.. ஹிந்தியாவுக்கு சவால் விடுவது தான்.

ஹிந்தியாவின் நட்பு சக்தியாக இருந்த ஈழத்தமிழரை பகைச் சக்தியாக்கிய.. ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களும்.. றோ புலனாய்வுப் பிரிவும் தான்..இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்.. ஹிந்தியாவின் வெளிவிவகாரத் தோல்விக்கு முக்கிய காரணம். :rolleyes:

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவுக்கு அப்ப ஆலோசனை வழங்கினது இவர் தான். இவர் தான் விட்ட பிழையை.. எதுக்கு ஹிந்தியாவின் பிழை என்றார்...??!  தன்ர படுமுட்டாள் தனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தானே.

ஹிந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் தவறாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின்னிருந்து. 

ஈழத்தமிழர் விவகாரத்தில்.. ஹிந்தியாவுக்கு 1987 இல் கிடைத்த நல்ல வாய்ப்பை.. ராஜீவின் மொக்குத்தனத்தால்.. கெடுத்துக் கொண்டார்கள். இன்று வரை அந்த மொக்குத்தனம்... மோசமாகப் போய்க் கொண்டிருக்கே தவிர.. அதனை மாற்றி... ஈழ்த்தமிழருடனான உண்மையான நட்புறவை வளர்த்துக்கொள்ள ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவு பத்தல்ல

சொறீலங்காவை இவர்களுக்கு கையாளும் தந்திரம் தெரியாது. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின் சொறீலங்கா பற்றிய இவர்களின் கொள்கை வகுப்பு எல்லாமே படுமோசம். அதன் விளைவு.. சீனாவின் ஆதிக்கம்.. பாகிஸ்தானின் ஆதிக்கம்.. சவுதியின் ஆதிக்கம்.. அமெரிக்காவின் ஆதிக்கம்.. ரஷ்சிய ஆதிக்கம் என்று எல்லா ஆதிக்கங்களையும் சொறீலங்கா.. சிங்கள ஆளும் வர்க்கம் மடிக்க வைச்சு.. ஹிந்தியாவுக்கு சவால் விடுவது தான்.

ஹிந்தியாவின் நட்பு சக்தியாக இருந்த ஈழத்தமிழரை பகைச் சக்தியாக்கிய.. ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களும்.. றோ புலனாய்வுப் பிரிவும் தான்..இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்.. ஹியாவின் வெளிவிகாரத் தோல்விக்கு முக்கிய காரணம். :rolleyes:

முழு இலங்கையும் இப்பொழுது சீனாவின் ஆதிக்கத்துக்கும், கிழக்கு கடற்கரை மாவட்டம் பாக்கிஸ்த்தான் கையிலும் சென்ற பின் தான் இவருக்கு தரிசனம் வருகுது.  

ஆனாலும் இது நன்மைக்கே, ஏன் என்றால் இந்தியாவின்  பாதுகாப்புக்கு பாக்கிஸ்தான் வெளியேற வேண்டும், அதுக்கு ஒரே வழி  கிழக்கு மாகாணத்தை மீண்டும் தமிழர் கைக்கு கொண்டு வருவது தான்.

RSS அமைப்பு தான் இப்பொழுது இடம் பெறும் போராட்டங்களுக்கு எல்லாம் காரணம் என அதாவுல்லாவே தெரிவித்தது குறிப்பிட தக்கது

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

எல்லாருக்கும் பென்ஷன்  எடுத்த பின்  தான்... சரி பிழையை பிரித்துப் பார்க்க தெரிகின்றது.
ஈழத் தமிழர் விடயத்தில்... இவர் செய்த துரோகம்  தெரிய... இன்னும் நாள் எடுக்கும் போல் உள்ளது.

எம்.கே.நாரயணனும், சிவசங்கர மேனனும் ஒரே குட்டையில் ஊரின மட்டைகள், அதாவது ஒரே ஊர்க்காரகள்(ஒட்டப்பாலம்)..

தமிழகத்தில் படித்த முன்னவருக்கு பாதணி பூஜை நடந்து அமைதியாகிவிட்டார்,

பின்னவருக்கு இன்னமும் நடக்கவில்லை.. ஆனால் இருவரும் இதுவரை கிந்தியர்களை தவறாக வழிநடத்தியதாக ஒத்துக்கொள்ளவில்லை.

Mallus will never change / realize their misdeeds.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.