Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்சுறுத்தலாகிவரும் உமாஓயா

Featured Replies

அச்சுறுத்தலாகிவரும் உமாஓயா

 

 

  • 7 ஆயி­ரத்து 37 வீடுகள்  
    வெடிப்­பு­க­ளுடன் சேதம்.  

 

 

  • 3 ஆயி­ரத்து 112 கிண­றுகள்  
    வற்­றி­யுள்­ளன.  

 

 

  • 400 க்கும் அதி­க­மான நீர்
    நிலைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.   

 

 

  • விவ­சாய நிலங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.
    உயி­ரி­னங்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

 

 

  • நிலம் தாழி­றக்கம், மண்  
    சரி­வுகள் ஏற்­பட்டு அபாயம்

 

 

ஒரு நாட்டின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் அந்த நாடு அடுத்­த­கட்ட நீண்­ட­கால பய­ணத்தை முன்­னெ­டுத்து செல்ல ஊன்­றுகோலாக அமை­ய­வேண்டும். ஒரு பரம்­பரை மட்டும் அல்­லாது அடுத்து வரும் பரம்­ப­ரை­களும் அந்த அபி­வி­ருத்தி மூல­மாக நலன் பெறும் வகையில் முன்­னெ­டுத்து செல்ல வேண்டும். ஆனால் சில அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் மிகப்­பெ­ரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தற்­காக சில நல்ல உதா­ர­ணங்கள் உள்­ளன. இந்­தி­யாவின் கூடங்­குளம் அனல் மின்­நி­லையம், சென் ஹெலேனா விமா­ன­நி­லையம் போன்ற பல திட்­டங்கள் உள்­ளன.

சில வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்கும் போதே அதன் விளை­வுகள் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்து விடு­கின்­றது. அதன் எதிர்­கால விளை­வுகள் குறித்து அச்­சமும் ஏற்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களில் ஒன்­றாக தற்­போது இலங்­கையில் அடை­யா­ள­ப்ப­டுத்­த­ப்படும் பிர­தான வேலைத்­திட்­ட­மாக உமா ஓயா அபி­வி­ருத்தி வேலைத்­திட்­ட­மாகும். இன்று சமூக ஆர்­வ­லர்கள், பொது­மக்கள் என அனை­வரும் எதிர்ப்பை தெரி­வித்து வரும் ஒரு வேலைத்­தி­ட்ட­மாக இந்த உமா­ஓயா திட்டம் அமைந்­துள்­ளது.

ஈரான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து முன்­னெ­டுத்­தி­ருந்த மிகப் பெரிய அபி­வி­ருத்தி திட்­ட­மான உமா ஓயா திட்டம் அமைந்­துள்­ளது. இந்த பல­நோக்கு அபி­வி­ருத்தித் திட்டம் தற்­போது நிறை­வ­டையும் தறு­வாயில் இருக்­கி­றது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் திட்­டத்­திற்கு 76 ஆயி­ரத்து 316 மில்­லியன் ரூபாய் நிதி ஈரா­னினால் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அந்­நாட்டின் உள்­நாட்டு அர­சியல் குளறு­பா­டுகள் கார­ண­மாக ஒதுக்­கப்­பட்ட நிதியில் சிறிய மாற்­றங்கள் ஏற்­பட்­டன. எனினும் இலங்கை அர­சாங்­கமும் தமது நிதியை செல­வ­ழித்து இந்த வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்­திருந்தது.

இவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­ட­மா­னது பின்னர் பொது மக்­களின் எதிர்ப்பின் கார­ண­மாக நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக ஊவா, வெல்­லஸ்ஸ, உரு­குணு பிராந்­தி­யங்­க­ளுக்குப் பெரும்­போக, சிறு­போக நெற்­செய்­கை­யின்­போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்­க­ளுக்கு நீர்ப்­பா­ச­னத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­கவும் மேலும் 12 ஆயிரம் ஏக்­கரில் புதி­தாக விவ­சாயம் செய்­யவும் குடி­நீரைப் பெற்­றுக்­கொ­டுக்­கவும் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் அதன் நன்­மை­க­ளை­வி­டவும் பெரும் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத்­திட்­டத்தின் நீர்மின் உற்­பத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக 800 மீற்றர் ஆழத்தில் நிலம் தோண்­டப்­பட்­ட­தா­கவும் இத­னூ­டாக இலங்­கையின் மின்­சார சபை உற்­பத்தி திறனை 120 மெகாவோட் ஆக மாற்ற திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டி­ருந்­தது. 2018 ஆம் ஆண்டில் இடம்­பெ­ற­வுள்ள மின்­சார குறைபாட்டை பூர்த்­தி­யாக்கும் வகை­யி­லேயே இந்த உமா ஓயா திட்டம் நிறு­வப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உமா ஓயா ஆற்றின் இரண்டு கிளை­க­ளாக புகுல்­போல, தைறாப அணைகள் உள்­ளன. இந்த அணை­களை 23 கிலோ­மீற்­ற­ருக்கு கீழ் உள்ள சுரங்­கங்­க­ளுடன் இணைத்து நீர்மின் உற்­பத்தி பிரிவின் ஊடாக நீரை கட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் தென்­கி­ழக்கு பகு­தி­களில் உள்ள உலர் வல­யங்­களில் நீர்மின் உற்­பத்தி செய்­தலே இதன் நோக்கம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், உமா ஓயா திட்­டத்­தினால் தமது வீடு வாசல்­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக மக்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். பண்­டா­ர­வளை நகரில் பாரிய எதிர்ப்பு பேர­ணி­யுடன் கடை­ய­டைப்பும் செய்­தி­ருந்­தனர். இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டால் மிகப்­பெ­ரிய அழி­வு­க­ளுக்கு பண்­டா­ர­வளை மக்கள் முகங்­கொ­டுக்க நேரிடும் என சமூக ஆர்­வ­லர்­களும் சில பூகோ­ள­வியல் ஆய்­வா­ளர்­களும் தெரி­விக்­கின்­றனர். இதன் கார­ண­ம­ாக பொது­மக்­களும் மிகுந்த அச்­சத்தில் உள்­ள­மையே உண்­மை­யாகும். தமது அச்­சத்தை வெளிப்­ப­டுத்­தியும் இந்தத் திட்­டத்தைக் கைவி­டு­மாறு கோரியும் சில தினங்­க­ளுக்கு முன்னர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள்.

மேலும் கரந்­து­வெள்ள -எல்ல பகு­தியில் உரு­வாக்­கப்­பட்டு வரும் சுரங்­க­மா­னது சுமார் 8 கிலோ­மீட்டர் பாதை­யாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சுரங்­கத்தில் ஒரு செக்­க­னுக்கு 256 லீட்டர் நீர் கசிவு ஏற்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் ஒரு நாளைக்கு 22 கோடியே 13 இலட்­சத்து 56 ஆயி­ரத்து 800 லீட்டர் நீர் இந்த சுரங்கக் கசிவின் மூலம் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றது என்ற ஒரு கணிப்பு உள்­ளது. உதா­ர­ண­மாக எல்ல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ராவண எல்ல நீர்­வீழ்ச்­சியின் தண்­ணீரை விடவும் அதி­க­ளவு நீர் இந்த சுரங்­கங்­களில் கசி­யப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பிர­தான சுரங்­க­மா­னது 15.2 கிலோ மீட்டர் நீள­மு­டை­யது. இதை உரு­வாக்­கிய போது முதல் நீர்­க­சிவு பிர­தேசம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அப்­போது சுரங்கம் 3.5 கிலோ­மீட்டர் வரையில் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. அதேபோல் அப்­போது செக்­க­னுக்கு 876 லீட்டர் தண்ணீர் ஊற்­றெ­டுத்­த­தாக கூறப்­பட்­டது. அதேபோல் பல்­வேறு இடங்­களில் இன்­று­வ­ரையில் நீர் ஊற்­று­களும், கற்­பா­றைகள் சிதைவும் ஏற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. எனவே இந்த சுரங்­க­மா­னது வெடிப்­பு­களை சந்­திக்க நேரி­டவும் வாய்ப்­புகள் உள்­ளது. எனவே பூகோ­ள­வியல் கருத்­துப்­படி இவ்­வா­றான ஊற்­றுக்­களின் மூல­மாக நிலம் பல­வீனம், பாசான் அற்ற தனிமை மற்றும் நீர் உறிஞ்சி அகற்­றப்­படும் நிலை­மைகள் ஏற்­படும் அபாயம் உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இப்­போது நிலை­மை­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் குறித்த பகு­தியில் இன்னும் சிறிது காலத்தில் அல்­லது சற்று நீண்ட காலத்தின் பின்னர் குறித்த பிர­தே­சங்கள் பாரிய அச்­சு­றுத்­த­லுக்கு இலக்­கா­கலாம் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போது வரையில் மத்­திய மாகா­ணத்தின் 7 பிர­தேச சபை­க­ளுக்கு இந்த அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. ஊவா பர­ண­கம, வெலி­மடை, ஹாலி­யலை, பண்­டா­ர­வளை, எல்ல, ஹப்­புத்­தளை மற்றும் வெள்­ள­வாய ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த பகு­தி­களில் மொத்­த­மாக 7 ஆயி­ரத்து 37 வீடுகள் வெடிப்­பு­க­ளுக்கு உள்­ளாகி சேத­மா­கி­யுள்­ளன. இந்த பகு­தி­களில் மொத்­த­மாக 3 ஆயி­ரத்து 112 நீர் நிலைகள் (கிண­றுகள், சிறிய ஓடைகள், கேணிகள்) வற்­றி­யுள்­ளன.

பண்­டா­ர­வ­ளையின் பிர­தான நதி­யான ஹில் ஓயா மற்றும் அமு­னு­தொவ ஓயா நீர் வற்­றி­யுள்­ளது. ஹாலி­எ­லையில் சில நீர்த்­தேக்­கங்கள் வற்­றி­யுள்­ளன. இவ்­வாறு இந்த ஏழு பகு­தி­க­ளிலும் 400 க்கும் அதி­க­மான நீர் நிலைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு நீர் நிலைகள் பாதிக்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக விவ­சாய நிலங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. உயி­ரி­னங்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதேபோல் சில பகு­திகள் கீழ் இறங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் மண் சரி­வுகள் ஏற்­பட்டு வரு­வ­தா­கவும் அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது.

பண்­டா­ர­வளை மாவட்டம் பாரிய குடிநீர் பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றது. இப்­போது அர­சாங்கம் பவு­சர்கள் மூலம் 10 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு நீர் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. மலை­நாட்டு மக்­க­ளுக்கே நீர் வழங்­க­வேண்­டிய நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். பண்­டா­ர­வளை, வெலி­மடை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு வெளிமாவட்­டங்­களில் இருந்து நீர் சேக­ரிக்க வேண்­டிய நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். மத்­திய மலை­நாட்டு மக்கள் நாட்­டுக்கு பார­மான மக்கள் அல்ல. மலை­நாட்டு மக்கள் நாட்டின் முது­கெ­லும்­பாக வாழ்­கின்­றனர். ஆனால் அபி­வி­ருத்­திகள் என்ற பெயரில் இவர்­களை அநா­தை­க­ளாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­க­ப்­ப­டு­கின்­றது என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.

உமா ஓயா திட்­டத்தின் மூலம் மைஹியங்­கனை, அம்­பாந்­தோட்டை பகு­தி­க­ளுக்கு நீர் வழங்க உரு­வாக்­கப்­பட்­ட­போதும் இப்­போது ஏனைய மாவட்­டங்­களில் இருந்து உமா­ஓ­யா­விற்கு நீர் கொண்­டு­வர வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நாட்­டுக்­கான மின்­சா­ரத்தை, நீரை, இயற்கை வளத்தை வழங்­கிய மலை­நாட்­டுக்கு இன்று வறட்­சி­யையும், அனர்த்­தத்­தையும் எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த உமா ஓயா திட்­ட­மா­னது வெறு­மனே மத்­திய மலை­நாட்­டுடன் முடிந்­து­விடும் பிரச்­சினை அல்ல. இதன் விளை­வுகள் முழு நாட்­டையும் அழிக்கும் வகையில் அமையும். ஆகவே இதனை ஒரு தேசிய பிரச்­சி­னை­யாக கவ­னத்தில் கொண்டு கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.

பண்­டா­ர­வளை பிர­தேசம் கீழ் இறங்­கு­வ­தாக கூறப்­பட்டு வரு­கின்­றது. அனர்த்­தத்திற்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றது என பூகோ­ள­வியல் ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். இலங்­கையில் பதுளை மாவட்­டத்தில் மண்­ச­ரிவு வீத­மா­னது 89.7 என தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு மலை நாட்டில் குறிப்­பாக பது­ளையில் முன்­னெ­டுத்து வரும் வேலைத்­திட்­டங்கள் தான் கார­ண­மாகும். அதே­போன்று உமா ஓயாவும் மண்­ச­ரி­வுக்கு இலக்­காகும் நிலைமை உள்­ளது.

இன்று நாட்டில் அனர்த்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றது. இதற்கு காரணம் இயற்­கையை தவ­றான வகையில் உப­யோ­கிப்­ப­தே­யாகும். வெள்­ள­ப்பெ­ருக்கு, மண்­ச­ரிவு, குப்பை பிரச்­சினை, நோய் தொற்­றுகள் அனைத்தும் அதி­க­ரித்து வரு­கின்­றது என்றால் நாம் இயற்­கையை சரி­யாக கையாள மறுக்­கின்­ற­மை­யே­யாகும். இயற்­கை­யுடன் போட்­டி­போட்டு எம்மால் வெற்­றி­கொள்ள முடி­யாது. இன்றும் அதுவே இடம்­பெற்று வரு­கின்­றது. மலை­ய­கத்தில் இன்னும் உண்­மை­யான அழி­வுகள் இடம்­பெ­ற­வில்லை. இப்­போது இடம்­பெற்று வரும் அனைத்தும் பாரிய அனர்த்­தத்­திற்­கான முன்­னெச்­ச­ரிக்கை மட்­டுமே. ஆனால் எதிர்­கா­லத்­தில் அழி­வுகள் தெளி­வாக தெரி­கின்­றது.

உலக நாடு­களின் கடன்­களை வாங்கி அபி­வி­ருத்தி செய்து வரு­கின்றோம். ஆனால் இவை அனைத்தும் மாயை அபி­வி­ருத்­தி­யாகும். கடந்த 2007 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் உயி­ரினப் பல்­வ­கைத்­தன்மை அற்­றுப்­போகும் நாடுகள் பட்­டி­யல்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்த பட்­டி­யலில் 36 நாடுகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. வேக­மாக உயி­ரின பல்­வ­கைத்­தன்­மை­யினை அழித்­துக்­கொள்ளும் நாடு­களின் பட்­டி­யலில் இலங்­கையும் உள்­ளது. இதற்கு போலி­யான அபி­வி­ருத்தி செயற்­ப­ாடு­களே கார­ண­மாகும். ஒரு நகரை அபி­வி­ருத்தி செய்யும் திட்­டமோ, குடி­யி­ருப்பு திட்­டமோ வீதி திட்­டமோ இலங்­கையில் இல்லை. இடத்தின் தன்மை எவ்­வா­றா­னது என்­பதை தெரிந்­து­கொள்­ளாது அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலை­மை­யினால் நாடு மிகவும் மோச­மான நிலை­மையை அடைந்­துள்­ளது.

மண்­ச­ரிவு ஏற்­படும் என்றால். புதை­வுகள் ஏற்­படும் என்றால், கட­ல­ரிப்பு ஏற்­படும் என்றால், வறட்சி நிலவும் என்றால் அவ்­வா­றான தன்­மை­களை கொண்ட அபி­வி­ருத்­தி­களை கைவிட வேண்டும். விளை­வு­களை நாம் அள­வு­கொள்ள முடி­யாது. அனர்த்­தத்தின் பின்­னரே அதன் விளை­வு­களை அறிய முடியும். எனவே இதனை உணர்ந்­து­கொண்டு ஆரோக்­கி­ய­மான நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்டும். ஒரு வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்க முன்னர் அது தொடர்பில் பூலோ­க­வியல் சூழலை ஆராய்­வதை போலவே அந்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுத்த பின்­னரும் ஒவ்­வொரு ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­மு­றை­யேனும் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆனால் இலங்­கையில் அவ்­வா­றான ஆய்­வுகள் உள்­ள­னவா என்ற கேள்வி எழு­கின்­றது. அவ்­வாறு ஒரு வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் ஒலுவில் துறை­முக வேலைத்­திட்டம், மாத்­தளை, ஹம்­பாந்­தோட்டை, மகா­வலி வேலைத்­திட்டம் அனைத்தும் தோல்வி கண்ட வேலைத்­திட்­டங்கள் என்­பது வெளிப்­படும். பிரான்ஸ் நாட்டின் லோயரே மற்றும் லேகர் நதியை மறைத்து வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதனால் அப்­ப­குதி வறட்சி நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டது. இதனை எதிர்த்து மக்கள் போராட ஆரம்­ப­ித்­த­வுடன் அந்த வேலைத்­திட்டம் கைவி­டப்­பட்­டது. இன்று பசு­மை­யான நில­மாக அது மீண்டும் மாற்­றப்­பட்­டுள்­ளது. கொரி­யாவின் சியோல் நதியின் மீது நெடுஞ்­சாலை திட்டம் ஒன்று அமைக்­கப்­பட்­டது. அதனால் பாதிப்பு ஏற்­படும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டதன் பின்னர் அதனை உட­ன­டி­யாக நிறுத்­தினர். தாய்­லாந்து சயோ நதியை ஒட்­டிய வேலைத்­திட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதன் மூல­மான விளை­வுகள் கண்­ட­றி­யப்­பட்ட பின்னர் அதனை கைவிட்­டனர். அவ்­வா­றான பல்­வேறு உதா­ர­ண­ங்களை நாம் கூற முடியும். எனவே நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் அச்­சு­றுத்­த­லான வேலைத்­திட்­டங்­களை கைவிட முடியும். மேலும் ஆராய்ந்து மாற்று வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடியும். இதனை அர­சாங்கம் கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.

உமா ஓயா திட்­டத்­துக்கு எதி­ராக மக்கள் முன்­னெ­டுத்த போராட்டம் நியா­ய­மா­னது. அவர்கள் இன்று விளை­வு­களை அனு­ப­விக்க ஆரம்­பித்­துள்­ளனர். அபாய எச்­ச­ரிக்கை கண்­ணெ­திரே தெரி­கின்­றது. உமா ஓயா திட்டம் கடந்த அரசால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பொறி­யி­ய­லா­ளர்­களின் கருத்தை மீறி அரசியல் பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் பெரிய பிரச்சினை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் நான் ஆட்சிபீடம் ஏறியவுடன் அந்த வேலைத்திட்டத்தை நிறுத்த முயற்சித்தேன். எனினும், அந்தக் காலப்பகுதியில், வேலைத்திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி வேலைகள் நிறைவடைந்து விட்டதால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என ஜனாதிபதி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.

தற்­போது அங்கு நிலவும் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் வகையில் நோர்வே நாட்டு பொறி­யி­ய­லா­ளர்­களை அனுப்பி வைக்­கு­மாறு, அந்த நாட்டு அர­சிடம் கோரி­யுள்­ள­தா­கவும் நோர்வே நாட்டுப் பொறி­யி­யலா­ளர்கள் இலங்­கைக்கு வந்து ஆய்­வு­களை நடத்­தி­ய­வுடன் சரி­யான முறையில் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். தொழி­நுட்ப உத­வி­களை கொண்டு வேலைத்­திட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வது இல­கு­வான காரி­ய­மாகும். ஆனால் பாதிப்­பு­க­ளுக்கு மக்­களே முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை உரு­வாகும். இன்றும் மக்கள் குடிநீர் பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. இவற்­றையே அர­சாங்கம் முதலில் கவ­னத்தில் கொள்ள வேண்டும். இழந்த பின்னர் அனுதாபக் கண்ணீர் வடிப்பது யாருக்கும் பலனில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.