Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னாட்டுச் சமூகத்தின் தலையீட்டின் சாதகம்!

Featured Replies

பன்னாட்டுச் சமூகத்தின் தலையீட்டின் சாதகம்!

தமிழர்­க­ளின் பிரச்­சி­னைக்கு கொழும்பு அரசு இழுத்­த­டிக்­கா­மல் தீர்வை வழங்க வேண்­டும். அதற்­குப் பன்­னாட்டு அழுத்­தமே மிக அவ­சி­யம்.

இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். கனடா நாட்­டின் கொழும்­புக்­கான தூதர் ஷெல்லி வைற்­றிங் நேற்­று­முன்­தி­னம் அவரை நேரில் சந்­தித்­துப் பேசி­ய­போது அவர் இந்­தக் கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

இப்­போது மட்­டும் என்­றில்லை போருக்­குப் பின்­ன­ரான எல்­லாக் காலத்­தி­லும் பன்­னாட்டு அழுத்­தம் ஒன்றே தீர்­வைத் தரும், பன்­னாட்­டுச் சமூ­கத்­தையே நம்­பி­யி­ருக்­கின்­றோம் என்று சம்­பந்­த­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரும் தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்­றார்­கள்.

போருக்­குப் பின்­ன­ரான சூழ­லில் தமிழ் மக்­கள் அதி­கம் நம்ப வைக்­கப்­பட்­ட­தும் இந்­தப் பன்­னாட்­டுத் தலை­யீட்­டின் மீது­தான். இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்வு ஒன்­றைப் பன்­னாட்­டுச் சமூ­கம் பெற்­றத் தரும், அதற்கு வேண்­டிய அழுத்­தத்தை வழங்­கும் என்று தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் உரைத்­தார்­கள்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மட்­டு­மல்ல, அதற்கு எதி­ராக அர­சி­யல் செய்­கி­றோம் என்று கூறிக்­கொள்­ளும் அர­சி­யல் தலை­வர்­க­ளும்­கூட உலக அர­சி­யல் போக்­குக்கு ஏற்ப நடந்­து­கொண்டு அதற்­கூ­டா­கப் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஒத்­து­ழைப்­பு­டன்­தான் ஒரு தீர்வை அடைய முடி­யும் என்ற மக்­களை நம்ப வைத்­தன.

அத­னால்­தான் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை அலு­வ­ல­கம் அமைந்­துள்ள ஜெனி­வா­வில் கொழும்­புக்கு எதி­ரா­கத் தீவி­ர­மான நிலைப்­பாட்­டைக் கூட்­ட­மைப்பு எடுக்­க­வில்லை என்று அவை குற்­றஞ்­சாட்­டின.

இப்­படி விட்­டுக்­கொ­டுப்­பது கொழும்­புக்­குச் சாத­க­மான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் போக்கு என்­றும் இது சர­ணா­கதி அர­சி­யல் என்­றும் சாடின. பதி­லுக்கு உலக நாடு­க­ளின் போக்­கோடு இணைந்­து­தான் செல்­ல­ வேண்­டும் அது­தான் ராஜ­தந்­தி­ரம் என்று கூட்­ட­மைப்­புக் கூறி­யது.

இப்­படி விடு­த­லைப் புலி­க­ளுக்­குப் பின்­ன­ரான தமிழ் அர­சி­ய­லில் அல்­லது முள்­ளி­வாய்க்­கா­லில் ஆரம்­பித்த அர­சி­ய­லில் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­யில் உலக நாடு­க­ளின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­தது என்ற நிலைப்­பாடு ஆணித்­த­ர­மாக ஊன்­றப்­பட்­டுள்­ளது.

புலி­க­ளின் கடை­சிக் காலத்­தில் அதா­வது முள்­ளி­வாய்க்­கால் துய­ரத்­தின் காலத்­தி­லும் இது­போன்­ற­தொரு ஆழ­மான நம்­பிக்கை இருந்­ததை அவ­தா­னிக்­க­லாம். புலி­கள் அழிந்­து­போ­க­வும், போரில் ஒரு மனி­தப் பேர­வ­லம் நிக­ழ­வும் உலக நாடு­கள் அனு­ம­திக்­க­மாட்டா என்ற எதிர்­பார்ப்­பும் கணிப்­பும் இருந்­தன.

மனித உரி­மை­கள் குறித்து உல­கம் அதி­கம் கரி­சனை காட்­டி­வ­ரும் சூழ­லில் வன்­னிப் போர்க் களத்­தில் கொழும்­பின் படை­கள் அவை அனைத்­தை­யும் காலில்­போட்டு மிதித்­த­படி நடத்­தி­வ­ரும் போர் இலங்­கை­யைத் துண்­டா­டக்­கூட வழி­வ­குத்­து­வி­டும் என்று நம்­பி­ய­வர்­கள்­கூட உண்டு.

இறு­திப் போரின் இரா­ஜ­தந்­தி­ர­மாக அதுவே இருக்­கி­றது என்று எழு­திய அர­சி­யல் ஆய்­வா­ளர்­க­ளும் உண்டு. கடை­சி­யில், மனி­தப் பேர­வ­லம் நடந்து முடிந்­த­து­டன் விடு­த­லைப் புலி­க­ளின் அத்­தி­யா­யத்­துக்­கும் முடி­வெ­ழு­தப்­பட்­டது. உல­கம் அந்­தப் போரில் வெற்றி பெற்­ற­வ­ரின் பக்­கமே அழ­காக நின்­று­கொண்­டது. இன்று வரைக்­கும் தமி­ழர்­க­ளுக்கு நீதியோ, உத­வியோ கிடைப்­ப­தைக்­கூட அந்த உலக நாடு­க­ளால் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை அகற்றி தமக்கு இசை­வான ஆட்சி ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குத் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­யைப் பயன்­ப­டுத்­திக் கொண்ட அள­விற்­குத் தமி­ழர்­க­ளுக்­குப் பய­னுள்ள வகை­யில் உலக நாடு­க­ளின் தலை­யீடு கொழும்­பில் நிக­ழந்­த­தில்லை. இனி­யும் நிகழ்­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளைக் காண­மு­டி­ய­வில்லை.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது உலக நாடு­க­ளின் அழுத்­தமே தீர்­வைத் தரும் என்று நம்­பி­யி­ருப்­ப­தில் எந்த அர்த்­த­மும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

தமி­ழர்­கள் அர­சி­யல் ரீதி­யாக நலிந்­தி­ருந்­த­போது நிமிர்­வ­தற்­கும் மோச­மான பின்­ன­டை­வில் இருந்து மீண்டெழுவதற்கும் உலக நாடுகளின் ஆதரவைப் பயன்ப டுத்திக் கொண்டது சரி, தீர்வையும் அவர்களே பெற்றுத் தரு வார்கள் என்று எதிர்பார்ப்பது சரியதானதுதானா என்று சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஏனெனில் போர் முடிந்து 8 வருடங்களில் தமிழர்கள் தலையில் வைத்துக் கொண்டாடி விடக்கூடிய எதனையும் இந்த உலக நாடுகள் செய்யவில்லை.

எனவே மீண்டும் மீண்டும் உலக நாடுகளின் அழுத்தமே தீர்வைத் தரும் என்ற நம்பிக்கையை மீள்விசாரணை செய்வது அவசியம்.

http://uthayandaily.com/story/15091.html

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை.

இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது.

ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப் போராட்டமும் இல்லை.

ஆக இருப்பது அமைதி வழியில் நடத்தப்பட வேண்டிய இராஜதந்திரப் போராட்டமே.

1985/6 களில் ஹிந்தியா தமிழ் போராளிகளுக்கு நேரடியாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில்.. அப்போதைய சர்வதேச ஒழுங்கில்.. இருந்த பனிப்போர் சூழலில்.. ஜே ஆர் ஜெயவர்த்தன.. அமெரிக்காவுக்கு நுரைச்சோலையில்.. வொய் ஒவ் அமெரிக்கா என்ற வானலை மையத்தை நிறுவ குத்தகைக்கு காணி விட்டுக் கொண்டிருந்தார். அது  அமெரிக்காவின் உளவு நடவடிகையின் நுழைவாகவே சோவியத் ஆதரவு ஹிந்தியாவால் பார்க்கப்பட்டது.

இன்று... இன்னொரு சூழல் எழுந்துள்ளது...

சீனாவின் ஆதிக்கம். அது பொருண்மிய ரீதியிலும் சரி.. இராணுவ ரீதியிலும் சரி.. விரைந்து வளர்ந்து வருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியம்.. பசுபி பிராந்தியம்.. அரபிக் கடல் பிராந்தியம் என்று சீனா அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்குப் போட்டியாக.. அமெரிக்க தலைமை நாடுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வருகிறது.

இப்போ.. ஹிந்தியா அமெரிக்காவின் பக்கம் நிற்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.. காரணம்.. சீனாவும் ரஷ்சியாவும் காட்டும் நெருக்கம் என்பது.. சீனா பாகிஸ்தானுடன் காட்டும் நெருக்கமென்பது.. சீனாவின் பல்வேறு பொருண்மிய.. இராணுவ நோக்கங்களைக் கொண்டது. ஆகவே சீனா அதனைப் பலப்படுத்துமே தவிர பலவீனமாக்காது. இந்த நிலையில்..ஹிந்தியா பிராந்தியத்தில் தனிமைப்பட்டுப் போயுள்ள நிலையில்.. அது அமெரிக்காவை நோக்கி சார வேண்டிய நிலை உருவாகி இருக்கும் சந்தர்ப்பத்தில்..

சிங்களம்.. சீனாவை.. கூடிய அளவு அரவணைப்பதானது..  தமிழர்களுக்கு ஒரு ராஜதந்திர நகர்வுக்கான வெளியை உருவாக்கும்.

அந்த வெளியில்.. மேற்குலக தலையீடுகளுக்கான பலமான சூழலை தமிழர் தரப்பு ஏற்படுத்திக் கொடுப்பின்.. நிச்சயம் மேற்குலகத் தலையீட்டை ஹிந்தியா.. ஒரு தலைப்பட்சமாக எதிர்த்து நிற்க முடியாது.  இந்தச் சூழல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதிருந்த சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.

ஆனாலும்.. தமிழர் தரப்பு எப்படி.. மேற்குலக தலையீட்டுக்கான களங்களை அமைக்கும் என்பதில் தான் மற்றைய விடயங்கள் உள்ளன.

 நிச்சயம் தமிழர் தரப்பு மேற்குலக தலையீட்டுக்கு என்று திட்டங்களை வகுக்காமல்.. தமிழர் தரப்பின் நியாயங்களை அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநியாயங்களை சான்றுகளாக்கி.. அதனூடு தமது நியாயங்களுக்கான எதிர்பார்ப்புக்களையும்... தீர்வுகளையும் திடமாக முன் வைத்து நிற்கும் போது.. நிச்சயம்.. அது சீன அணியின் கவனத்தையும் இழுக்கும்.. அமெரிக்க அணியின் கவனத்தையும் இழுக்கும்.

இதில்.. தமிழர் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை.. போர்க்குற்றங்கள்.. நீதிக்கான விசாரணைகள் என்று சர்வதேசம் முன்மொழித்தவற்றோடு எமது திடமான நிலைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து.. நாம் எமக்குச் சாதகமான தலையீடுகளை நோக்கி ஒரு சூழலை எமது மண்ணில் உருவாக்கும் போது.. எமது மண்ணில் எமது அரசியலுக்கான ஆணித்திரத்தினை எமது மக்கள் வாக்கு பலத்தினூடு நிறுவி நிற்கும் போது.. இந்த உலகில் நிலை எடுத்திருக்கும் இரண்டு போட்டி அணிகளும் எம்மை அணுகியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கின்.. அதுவே ராஜதந்திர வெற்றியாக தமிழர்களுக்கு அமைய முடியும்.

புலிகள் அழிக்கப்பாட்டர்கள் என்று வெட்டிப் புளகாங்கிதம் அடைவதில் எந்த அர்த்தமும் இல்லை. அது எதிரிக்கு தான் சார்ப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். மாறாக விடுதலைப் புலிகள் இருந்தாலோ இல்லையோ.. தமிழர்களின்  சுயநிர்ணய சுயாட்சிக்கான.. அரசியல் கோரிக்கையுடன் கூடிய ஒற்றுமையான அரசியல் முன்னெடுக்கப்படின்.... தமிழர்களின் நில எல்லைகளும் காத்திரமாகப் பேணப்படின்..  எமக்கு சார்ப்பான சூழல்களை உலக அரங்கில் ஏற்படுத்தலாம்.

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பலமும்.. தமிழ் நாடு உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் பலமும்.. குரலும் ஒன்றிணைக்கப்பட்டால்.. நிச்சயம்... தமிழர்களால்.. சிங்களவர்களை விட.. உலகில் இன்று தோன்றி இருக்கும் இரண்டு போட்டி அணிகளையும் வைத்து தமக்குச் சாதகமான நன்மைகளை பெற அதிகம் முயற்சிக்க முடியும்.

அதனை விடுத்து.. மாவீரர்களை பயங்கரவாதிகள் ஆக்குவதாலும்.. புலிகளை இகழ்ந்து பேசுவதாலும்... நிலத்தை.. எமது மக்களின் தமிழர் தாயக அபிலாசைகளை கைவிடுவதாலும்.. எமது மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள்.. இனச்சுத்திகரிப்புக்கள்.. போர்க்குற்றங்களை மன்னிப்போம்.. மறப்போம் என்பதாலும்.. சிங்கள - இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களுக்கு எமது நிலத்தை எமது எல்லைகளை இழப்பதாலும்.. நாம் நிச்சயமாக.. இந்தப் பிராந்தியத்தில் எமது வலுவான இருப்பை உலகுக்கு நினைவுறுத்தவோ.. உறுத்திப்படுத்தவோ முடியாத சூழலே தோன்றும்.

நாம் யுத்தம் ஒன்றில்.. சர்வதேசத்தின் நலன்களை புறக்கணித்து எமது சொந்த மண்ணின் மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு நின்றதால்.. தோற்றோம். அதில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு.. எமது மண் மக்கள் சார்ந்து சோரம்போகாத வகைக்கு... அவை சார்ந்த அரசியலை வலுப்படுத்திக் கொண்டு.. சர்வதேசத்தின் நலன்களிலும் எமக்குச் சாதகமான தலையீடுகளுக்கு வழிவகுத்துச் செல்வதன் ஊடாகவே சர்வதேசத் தலையீட்டை நாம் உள்வாங்க முடியும். அன்றில். அது சாதாரணமாக அமையாது. இதில்.. மீண்டும்.. ஹிந்தியாவுக்கு முன்னுரிமை கொடுத்து அது ஏதாவது செய்யும் என்று வாழாதிருந்தோம் என்றால்.. அதுபோல் முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

முள்ளிவாய்க்கால்.. புதிய உலகச் சூழலுக்குரிய.. நல்ல ஒரு தொடக்கத்தை எமக்கு வழங்கிச் சென்றிருக்கிறது. அங்கு சிந்தப்பட்ட இரத்தமும் இழக்கப்பட்ட ஆன்மாக்களின் கனவும் ஈடோறோனும் என்றால்.. நாம்.. பரந்து.. ஒற்றுமையாக.. எமது மண் மக்களின் நலனில் உண்மையான அக்கறையோடு சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும்.

இந்தச் சூழலை சிலர் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் இன்னும் குழம்பி அல்லது குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இதனை நோக்கி கொண்டு வர வேண்டும். ஆனால் குறுக்கால போவர்களை பற்றி அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல்..  எம்  மக்கள் பற்றிய சிந்தனையில் ஒரு நேச எண்ணங்களைக் கொண்டவர்கள் எல்லோரும் நெருங்கிச் செயற்படுதல் என்பதே இன்றைய தேவையாகும்.. அது தாயகம்.. புலம்பெயர் தேசங்கள்.. தமிழ்நாடு.. மற்றும் இதர உலகமாக இருக்காலம்.

தமிழ் நாட்டில்.. தமிழர் ஆட்சி அமைவதும்.. இதுக்கு வலுச் சேர்க்கும்... அல்லது தமிழர் ஆட்சி அமைய இடம் கொடுத்திருவோமோ என்று திராவிட ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யக் கூடிய சூழலை வலுப்படுத்த வேண்டும். அதனையும் நாம் சமாந்திரமாக நகர்த்திச் செல்ல வேண்டும். tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.