Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா?

Featured Replies

இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா?

 
 
 
 
இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா?

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருப்பதால், எது நடந்தாலும் இராணுவத்தின் ஒத்துழைப்பைக் கேட்கக் கூடாது என்று அர்த்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முப்படையினரையும் களத்தில் இறக்கப்போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தர நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து வினவியபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


முப்படையினரையும் களமிறக்கப்போவதாக பொலிஸ்மா அதிபர் கூறவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர், பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினரையும் இராணுவத்தையும், மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்கவிருப்பதாக கூறியதாக குறிப்பிட்டார்.

அவர்கள் தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளதுடன், யார் வேண்டுமானாலும் குற்றச்செயல்கள் பற்றி தமக்கு முறைப்பாடு செய்யலாம் எனவும் தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர்,

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை தான் இப்பொழுதும் கோருவதாகவும், ஆனால் குற்றங்கள் நடைபெறும்போது அவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நேற்றைய கூட்டத்தின்போது இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகவும்,

குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எல்லா வளங்களையும் உள்ளீர்த்து அவற்றைத் தடுக்கவோ உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும் எனவும், பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை.

அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும். மேலும் இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்கக் கூடாது, அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என கேட்பவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பார்கள் என்றும் தான் குறிப்பிட்டதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Criminal-inquiries-should-be-solved-soon

  • தொடங்கியவர்
‘குற்றச்செயல்களைத் தடுக்க இராணுவம் வேண்டும்’
 

image_20e44213aa.jpgஎஸ்.நிதர்ஷன்

“வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்ற கொள்கையை நாம் கொண்டிருந்தாலும், இராணுவத்தை அவசரத் தேவைக்கும் அழைக்கக் கூடாதெனக் கூறுவது, குற்றச் செயல்களுக்கு சாதக நிலையை உருவாக்கும்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில், வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார். 

இது குறித்து, நேற்று (02) கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “முப்படையினரையும் களமிறக்கப்போவதாக, பொலிஸ்மா அதிபர் கூறவில்லை. பொலிஸாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினரையும் இராணுவத்தையும், மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்கவிருப்பதாகவே கூறினார். அவருடன் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் தந்து வைத்தார். யார் வேண்டுமானாலும் குற்றச்செயல்கள் பற்றி தமக்கு முறைப்பாடு செய்யலாம் எனத் தெரிவித்தார். 

“வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன். ஆனால், குற்றங்கள் இடம்பெறும் போது அவற்றைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/குற்றச்செயல்களைத்-தடுக்க-இராணுவம்-வேண்டும்/71-201749

  • தொடங்கியவர்

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முதலமைச்சர்!

வடக்கில் பாதுகாப்பு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முப்படைகளையும் விசேட அதிரடிப் படையினரையும் களமிறக்குவோம் என்று எச்சரித்த பொலிஸ் மா அதிபரைக் காப்பாற்றப் போய் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொறியில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.

பொலிஸ்மா அதிபர் முப்படையினரையும் களமிறக்குவோம் என்று கூறவில்லை. விசேட அதிரப் படையினரையும் இராணுவத்தையும் மக்கள் விரும்பினால் களமிறக்குவோம் என்று தான் கூறினார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம் கொடுத்திருந்தார்.

இத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தப்பியிருப்பார்.

அதற்குமப்பால் போன அவர் வடக்கில் போர்ப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பதற்கு வாய்ப்புள்ளது என்று முன்னாள் போராளிகளைக் குறிப்பிடும் வகையிலும் இராணுவத்தினரைக் களமிறக்குவதற்குச் சாதகமான வகையிலும் கருத்துக்களை வெளியிட்டு வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தல் மேடையிலும் சரி அதற்குப் பிந்திய அரசியல் அரங்கிலும் சரி விடுதலைப் புலிப் போராளிகளைப் புகழ்ந்திருந்தாலும் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் கருத்து அதற்கு நேர்மாறானது.

இராணுவத்திலிருந்து தப்பியோடி தெற்கில் குற்றமிழைப்பவர்களுடன் வடக்கில் போர்ப் பயிற்சி பெற்ற போராளிகளை அவர் ஒப்பிடத் துணிந்துள்ளார்.

ஏற்கனவே தொட்டதற்கெல்லாம் முன்னாள் போராளிகள் என்று சரியான ஆதாரங்களை முன்வைக்காமல் அரசாங்கமும் பொலிஸாரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்ற ஒரு சூழலில் தான் முதலமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.

அண்மைய வடக்கு அரசியல் குழப்பங்களின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பலரையும் இந்தக் கருத்து அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

முதலமைச்சரின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல ஊடகங்கள் அவரது இந்தக் கருத்தை சுய தணிக்கை செய்து கொண்டதையும் காண முடிந்தது.

வடக்கில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் முன்னாள் போராளிகள் மீது பழியைப் போடுவது அபத்தம். அது போலவே போர்ப் பயிற்சி பெற்றவர் குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்புள்ளது என்பதும் முற்றிலும் அபத்தமான கருத்தே.

தெற்கில் தப்பி ஓடிய படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் தான். இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு நடக்க முடியாதவர்கள் தான் பெரும்பாலும் படையை விட்டு தப்பியோடுகின்றனர்.

அவர்கள் தலைமறைவாக வாழ்கின்றனர். அதனால் அவர்களால் சட்டரீதியாக தொழில் செய்ய முடியாத நிலையில் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இத்தகைய ஒரு பிரிவினருடன் வடக்கில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை முதலமைச்சர் ஒப்பீடு செய்ய முனைந்தமை பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

வடக்கில் முன்னாள் போராளிகள் சிலரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைதாகியிருக்கின்றனர் என்பது உண்மை தான். ஆனால் அத்தகைய நிலைக்கு அவர்களைத் தூண்டிவிட்டது யார்? என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

வடக்கின் அண்மைய குற்றங்கள் அதிகரிப்புக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்புக்கூற வேண்டும். என்றும் முன்னாள் போராளிகளுக்கும் இளைஞர்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்காதது மாகாண சபையின் குற்றமே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சில நாட்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் போராளிகள் தவறிழைத்திருந்தால் அதற்கு காரணம் யார்? பொறுப்பு யார்? என்பதைக் கண்டறியாமலேயே ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றமிழைக்க வாய்ப்புள்ளது என்று அபாண்டமான பழியைப் போடுவது ஒரு முன்னாள் நீதியரசரான முதலமைச்சருக்கு அழகல்ல.

போர்ப் பயிற்சிகளின் போது முதலில் ஒழுக்கம் தான் கற்பிக்கப்படும். அதுவும் உலகிலேயே மிகச் சிறந்த ஒழுக்கமான அமைப்பு என்ற பெயர் எடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை அவர்களை மோசமான பயங்கரவாதிகள் என்று கூறும் எந்தவொரு இராணுவ அதிகாரியும் கூட கேள்விக்குட்படுத்தியதில்லை.

எனவே வடக்கில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களுக்கும் குற்றங்களுக்கும் தொடர்பை உருவாக்க முனையக்கூடாது. 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முடித்து வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் ஒருசிலர் தான் சிக்கல்களில் மாட்டியிருக்கிறார்கள்.

அதனை மாத்திரம் வைத்துக்கொண்டு ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பொதுவான மதிப்பீட்டை முதலமைச்சர் பொது அரங்கில் முன்வைத்திருக்கக் கூடாது.

முதலமைச்சர் ஏற்கனவே ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை மட்டமாகவே பேசி வந்தவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அவர் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சராகவே நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு ஈபிஆர்எல்எவ் இனால் முன்வைக்கப்பட்டது.

அப்போது முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து செயற்பட முடியாது என்று பகிரங்கமாகவே கூறியவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

ஆனால் அண்மையில் வடக்கு அரசியலில் குழப்பங்கள் ஏற்பட்ட போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியினால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அதே ஆயுதக் குழுக்கள் தான் அவரைக் காப்பாற்றின.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னொரு விடயத்தையும் கூறியிருக்கிறார். வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி வந்தாலும் தேவைப்பட்டால் வன்முறைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பதற்கும் எதிர்ப்புக்காட்டப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக அதனைச் செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருப்பதுதான் வேடிக்கை. சட்டம் ஒழுங்கு அமைச்சராக முதலமைச்சர் இதுவரையில் வடக்கின் நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

அவசரத்திற்கும் இராணுவத்தை அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பவர்களாகவே இருப்பார்கள். என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் இராணுவத்தைக் களமிறக்குவதை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர் குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பவர்களாக அடையாளப்படுத்த முனைகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மிகவலுவான ஒரு பொலிஸ் படை இலங்கையில் இருக்கும் போதும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணை இராணுவப் பிரிவான விசேட அதிரடிப் படையும் இருக்கும் போதும் வாள்வெட்டு போன்ற சிறியளவிலான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாதா?

தேவையான அளவு பொலிஸாரைக் களமிறக்கி வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல் இராணுவத்தை இறக்குவது பற்றிப் பேசுவதும் நியாயப் படுத்துவதும் தற்போதைய சூழலில் அவசியம் தானா?

பொலிஸாரைக் களமிறக்கி சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைளை யாருமே குறைகூற முடியாது. ஆனால் அவசர நிலைமை என்றோ வன்முறைகள் கட்டுமீறி விட்டன என்றோ இராணுவத்தைக் களமிறக்குவதற்கு துணை போவது பாரதூரமானது.

அதற்கு தமிழ் தலைமைகள் கூட தலையாட்டுவதற்கு தயாராக இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனென்றால் இப்போது வடக்கில் நடக்கின்ற வன்முறைகள் இராணுவத்தைப் பெருமளவில் நிறுத்தி வைப்பதை நியாயப் படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்குமோ என்று கூட தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருக்கின்றன.

நிலைமை கட்டுமீறிச் சென்றுவிட்டது. இராணுவத்தைக் களமிறக்கி கட்டுப்படுத்துங்கள் என்று கேட்கின்ற நிலை ஒருமுறை ஏற்படுத்தப்பட்டால் அதுவே நிரந்தரமாகி விடும் ஆபத்தும் உள்ளது.

இராணுவத்தினரைக் கொண்டு இத்தகைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முனைந்தால் அது 1980களின் தொடக்கத்திற்குத்தான் கொண்டுபோய் விடும்.

கண்மூடித்தனமான கைதுகள், காணாமல் போதல்கள், கொலைகள் என்று எல்லாமே மலிந்து போகும் நிலை உருவாகலாம். அத்தகைய அடக்குமுறைகளே தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் ஏந்துகின்ற நிலைக்கும் கொண்டு செல்லக்கூடும்.

இப்படிப் பல தொடர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இராணுவத்தின் களமிறக்கத்தை மிகச் சாதாரணமானதொரு விடயமாக எடுத்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். குற்றங்களைக் கட்டுப்படுத்துவது தான் முக்கியமாக இருக்கிறதே தவிர அதனை யார் செய்வது என்பது அவருக்கு முக்கியமான காரியமாகத் தெரியவில்லை.

இராணுவத்தை இத்தகைய செயல்களில் ஈடுபடுத்த முனையும் போது ஏற்படக்கூடிய விளைவுகளை அவர் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பதற்கு வாயப்புகள் உள்ளன என்று கூறும் முதலமைச்சருக்கு இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் எப்படி மறந்து போனது என்று தெரியவில்லை.

 

http://www.tamilwin.com/politics/01/154298

  • தொடங்கியவர்

போர் பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து இயங்கியவர்களை தான் கண்டித்தேன். முன்னாள் போராளிகளை அல்ல. – சி.வி:-

vikki.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். காரணமில்லாமல் முன்னைய போராளிகளைப் பொலிசார் கைதுசெய்வதையும் நாம் கண்டிக்கின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட கணித போட்டி பரீட்சையின் பரிசளிப்பு விழா வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
வெளிநாட்டு பணத்தை இளையோர் வீண் விரயம் செய்கின்றனர்.
 
இளைய தலைமுறையினரின் இன்றைய போக்கு மனவருத்தத்திற்குரியது. இதற்கு வலுவான காரணமாக அமைவது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே என்பது எமது தீர்க்கமான முடிவாக அமைந்துள்ளது.
 
தமது உறவுகளின் வாழ்வு நிலைமட்டங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்ல சிந்தனையில் தமது உடலை வருத்தி வெளிநாடுகளில் உழைத்த பணத்தின் ஒரு பகுதியினை தமது உறவுகளுக்கு எம்மவர்கள் அனுப்பி வைக்கின்றார்கள்.
 
அவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற பணம் எங்கள் இளைஞர் யுவதிகளுக்கு உழைத்துப் பெறாத பணம். அதனால் அவர்களுக்கு உழைப்பின் வலி தெரிவதில்லை. இங்குள்ள பெரியோர்கள் முதல் இளைஞர், யுவதிகள், குழந்தைகள் வரை இலவசமாகக் கிடைக்கும் பணத்தை வீணே விரயம் செய்கிறார்கள்.
 
எதிர்கால சிந்தனை இல்லை.
 
அவர்களுக்குத் தமது எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லை. முன்பு பெண்ணைப் பெற்றவர்கள் பொத்திப் பொத்தி அவர்களை வளர்ப்பார்கள். புகுந்த வீட்டில் எம் மகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஒழுக்கம், சீர்வரிசை, நகைநட்டு என எந்தக் குறையும் வைக்காது வளர்க்க எத்தனிப்பார்கள்.  அன்றெல்லாம் குழந்தை பிறந்த தினத்தில் இருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
 
இன்று பெற்றோர்களுக்கு அந்தக் கவலை இல்லை என்றே கூற வேண்டும். திருமண வயதை அடைந்துவிட்ட பெண் பிள்ளைகளை வெளிநாடுகளில் வசிக்கின்ற இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றார்கள்.
 
அவ்வாறான திருமணங்களின் போது சீதனம், சீர்வரிசை என்று எதுவும் பேசப்படுவதில்லை. வெளிநாடுகளுக்கு போன பின்பும் பெற்றோர்களுக்கு அவ்வப்போது உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இதனால் உழைப்பின் வலி சிறுவயதிலும் உணரப்படுவதில்லை; வளர்ந்த பின்பும் உணரப்படுவதில்லை. தெய்வாதீனமாகப் பல பிள்ளைகள் நன்றாக வாழ்கின்றார்கள். அதே நேரம் சில பிள்ளைகளின் வாழ்வு கேள்விக் குறியாகவும் மாறிவிடுகின்றது.
 
யுத்தத்தில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு உதவுதல் அவசியம். 
 
கடந்த 30 ஆண்டுகளாக தொடர் யுத்தத்தின் காரணமாக பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பங்களின்; வாழ்வு நிலைகள் கருத்தில் கொள்ளப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு எம்மாலான உதவிகளைப் புரிவது அவசியம். அதை நாம் செய்தும் வருகின்றோம்.
 
ஆனால் அதே நேரம் எதுவித எதிர்கால சிந்தனையும் இன்றி தறிகெட்டுத் திரிகின்ற ஒரு கூட்டத்தை நல்வழிப்படுத்தி சமுதாய நீரோட்டத்தில் மீள இணைத்துக் கொள்ள வேண்டியதும் எமது கடமையாகும். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை துன்புறுத்துவதோ அல்லது உயிர்பிரியச் செய்வதோ பாவச் செயல் என அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.
 
ஆனால் இன்று மனிதர்கள் மந்தைகளுக்கு ஒப்பாக வெட்டிச் சாய்க்கப்படுகின்றார்கள். வன்மமும்; வன்முறையும் சிலரிடம் தலைக்கேறிவிட்டது. போதைப்பொருட்கள் அதற்கு புத்துயிர் அளிக்கின்றன.
 
ஆயுத பயிற்சி பெற்றவர்கள் என்று விடுதலைபுலிகளை குறிப்பிடவில்லை. 
 
நான் அண்மைக்காலங்களில் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பது சம்பந்தமாகப் பேசப்போய் எமது விடுதலை வீரர்களை நான் குறிப்பிட்டதாக சிரேஸ்ட அரசியல் வாதிகள் கூட தமது கருத்துக்களை பிழையாக வெளியிட்;டமை கவலைக்குரியது. நான் புலிகள் இயக்கப்போராளிகள் பற்றிக் குறிப்பிடவில்லை. விடுதலைப்புலிகள் என்ற சொல்லே என்னால் பாவிக்கப்படவில்லை.
போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள்.
 
காரணமில்லாமல் முன்னைய போராளிகளைப் பொலிசார் கைதுசெய்வதையும் நாம் கண்டிக்கின்றோம். பயிற்சிகள் பெற்றுவிட்டு பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் நாம் கண்டிக்கின்றோம்.
 
மேற்படி வன்முறைகளினால் அப்பாவி வயோதிபர்களும் குடும்பங்களும் உடல் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து நடைப்பிணங்களாக மாறியிருப்பதை எத்தனை இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்?  அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும். இளைஞர்கள் சற்று அழமாகச் சிந்திக்கத் தொடங்கினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்டும்.
 
குற்ற செயல்களுக்கு பெற்றோர்களும் காரணம். 
 
இன்றைய குற்றச் செயல்களுக்கு பல பெற்றோர்களும் காரணமாகிவிடுகின்றார்கள். தமது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், எவருடன் பழகுகிறார்கள் என்பதை அவர்கள் கண்டறிவதில்லை. நடுச்சாமத்தில், விடியற்காலையில் தமது பிள்ளைகள் கொண்டுவருகின்ற பணம், நகை நட்டு ஆகியவற்றை எங்கிருந்து எடுத்துவந்தார்கள் என்பதை அறியமுற்படுவதில்லை.
 
இத் தேட்டங்கள் முறையாக தேடப்பட்டனவா அல்லது முறைதவறிய தேட்டமா? இவ்வாறான கேள்விகள் எத்தனை பெற்றோர்களின் மனதில் உதித்திருக்கின்றன?
 
இவற்றுக்கெல்லாம் விடை காணப்படவேண்டுமாயின் சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டும். சமூக ஒற்றுமை மேலோங்க வேண்டும். எம்மைப்போல் பிறரையும் நேசிக்கும் தன்மை வளரவேண்டும். போதுமென்ற மனத்துடன் வருவாய்க்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
 
அப்போதுதான்  வன்முறைகளுக்கும் முறையற்ற பொருள் தேடல்களுக்கும் முடிவு காலம் வரும். அதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/35722

விக்னேஸ்வரன் முதலே தெளிவாக கூறியிருக்க வேண்டும்! இதில் அவர் அடி சறுக்கியதை மறைக்கத் தேவையில்லை.

குறிப்பாக சிங்கள-பௌத்த அரச பாதுகாப்புப் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட ஆயுத குழுக்களில் உள்ளவர்களாலேயே இந்தப் பிரச்சினை என்று தெளிவாக கூறியிருக்க வேண்டும்!

இலட்சத்தில் ஓர் உண்மையாக சிங்கள-பௌத்த அரசே ஒத்துக்கொண்ட உண்மை - ஆவா குழுக்களை உருவாக்கியது முன்னைய சிங்கள-பௌத்த அரசு என்று.

  • கருத்துக்கள உறவுகள்

7_1bg.jpg

போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். ஆயுத பயிற்சி பெற்றவர்கள் என்று நான் புலிகள் இயக்கப்போராளிகளை  குறிப்பிடவில்லை. ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பது சம்பந்தமாகப் பேசப்போய் எமது விடுதலை வீரர்களை நான் குறிப்பிட்டதாக சிரேஸ்ட அரசியல் வாதிகள் கூட தமது கருத்துக்களை பிழையாக வெளியிட்டமை கவலைக்குரியது என்று  வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட கணித போட்டி பரீட்சையின் பரிசளிப்பு விழா  நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

இதன் பொழுது அவர்  மேலும் தெரிவிக்கையில்,"வெளிநாட்டு பணத்தை இளையோர் வீண் விரயம் செய்கின்றனர். இளைய தலைமுறையினரின் இன்றைய போக்கு மனவருத்தத்திற்குரியது. இதற்கு வலுவான காரணமாக அமைவது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே என்பது எமது தீர்க்கமான முடிவாக அமைந்துள்ளது.

தமது உறவுகளின் வாழ்வு நிலைமட்டங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்ல சிந்தனையில் தமது உடலை வருத்தி வெளிநாடுகளில் உழைத்த பணத்தின் ஒரு பகுதியினை தமது உறவுகளுக்கு எம்மவர்கள் அனுப்பி வைக்கின்றார்கள்.

அவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற பணம் எங்கள் இளைஞர் யுவதிகளுக்கு உழைத்துப் பெறாத பணம். அதனால் அவர்களுக்கு உழைப்பின் வலி தெரிவதில்லை. இங்குள்ள பெரியோர்கள் முதல் இளைஞர், யுவதிகள், குழந்தைகள் வரை இலவசமாகக் கிடைக்கும் பணத்தை வீணே விரயம் செய்கிறார்கள்.

அவர்களுக்குத் தமது எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லை. முன்பு பெண்ணைப் பெற்றவர்கள் பொத்திப் பொத்தி அவர்களை வளர்ப்பார்கள். புகுந்த வீட்டில் எம் மகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஒழுக்கம், சீர்வரிசை, நகைநட்டு என எந்தக் குறையும் வைக்காது வளர்க்க எத்தனிப்பார்கள்.  அன்றெல்லாம் குழந்தை பிறந்த தினத்தில் இருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இன்று பெற்றோர்களுக்கு அந்தக் கவலை இல்லை என்றே கூற வேண்டும். திருமண வயதை அடைந்துவிட்ட பெண் பிள்ளைகளை வெளிநாடுகளில் வசிக்கின்ற இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றார்கள்.

அவ்வாறான திருமணங்களின் போது சீதனம், சீர்வரிசை என்று எதுவும் பேசப்படுவதில்லை. வெளிநாடுகளுக்கு போன பின்பும் பெற்றோர்களுக்கு அவ்வப்போது உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இதனால் உழைப்பின் வலி சிறுவயதிலும் உணரப்படுவதில்லை; வளர்ந்த பின்பும் உணரப்படுவதில்லை. தெய்வாதீனமாகப் பல பிள்ளைகள் நன்றாக வாழ்கின்றார்கள். அதே நேரம் சில பிள்ளைகளின் வாழ்வு கேள்விக் குறியாகவும் மாறிவிடுகின்றது.
யுத்தத்தில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு உதவுதல் அவசியம்.

கடந்த 30 ஆண்டுகளாக தொடர் யுத்தத்தின் காரணமாக பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பங்களின்; வாழ்வு நிலைகள் கருத்தில் கொள்ளப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு எம்மாலான உதவிகளைப் புரிவது அவசியம். அதை நாம் செய்தும் வருகின்றோம்.

ஆனால் அதே நேரம் எதுவித எதிர்கால சிந்தனையும் இன்றி தறிகெட்டுத் திரிகின்ற ஒரு கூட்டத்தை நல்வழிப்படுத்தி சமுதாய நீரோட்டத்தில் மீள இணைத்துக் கொள்ள வேண்டியதும் எமது கடமையாகும். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை துன்புறுத்துவதோ அல்லது உயிர்பிரியச் செய்வதோ பாவச் செயல் என அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.

ஆனால் இன்று மனிதர்கள் மந்தைகளுக்கு ஒப்பாக வெட்டிச் சாய்க்கப்படுகின்றார்கள். வன்மமும், வன்முறையும் சிலரிடம் தலைக்கேறிவிட்டது. போதைப்பொருட்கள் அதற்கு புத்துயிர் அளிக்கின்றன. ஆயுத பயிற்சி பெற்றவர்கள் என்று விடுதலைபுலிகளை குறிப்பிடவில்லை.

நான் அண்மைக்காலங்களில் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பது சம்பந்தமாகப் பேசப்போய் எமது விடுதலை வீரர்களை நான் குறிப்பிட்டதாக சிரேஸ்ட அரசியல் வாதிகள் கூட தமது கருத்துக்களை பிழையாக வெளியிட்டமை கவலைக்குரியது. நான் புலிகள் இயக்கப்போராளிகள் பற்றிக் குறிப்பிடவில்லை. விடுதலைப்புலிகள் என்ற சொல்லே என்னால் பாவிக்கப்படவில்லை.

போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள்.
காரணமில்லாமல் முன்னைய போராளிகளைப் பொலிசார் கைதுசெய்வதையும் நாம் கண்டிக்கின்றோம். பயிற்சிகள் பெற்றுவிட்டு பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் நாம் கண்டிக்கின்றோம்.

மேற்படி வன்முறைகளினால் அப்பாவி வயோதிபர்களும் குடும்பங்களும் உடல் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து நடைப்பிணங்களாக மாறியிருப்பதை எத்தனை இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்?  அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும். இளைஞர்கள் சற்று அழமாகச் சிந்திக்கத் தொடங்கினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்டும்.

இன்றைய குற்றச் செயல்களுக்கு பல பெற்றோர்களும் காரணமாகிவிடுகின்றார்கள். தமது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், எவருடன் பழகுகிறார்கள் என்பதை அவர்கள் கண்டறிவதில்லை. நடுச்சாமத்தில், விடியற்காலையில் தமது பிள்ளைகள் கொண்டுவருகின்ற பணம், நகை நட்டு ஆகியவற்றை எங்கிருந்து எடுத்துவந்தார்கள் என்பதை அறியமுற்படுவதில்லை.

இத் தேட்டங்கள் முறையாக தேடப்பட்டனவா அல்லது முறைதவறிய தேட்டமா? இவ்வாறான கேள்விகள் எத்தனை பெற்றோர்களின் மனதில் உதித்திருக்கின்றன?

இவற்றுக்கெல்லாம் விடை காணப்படவேண்டுமாயின் சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டும். சமூக ஒற்றுமை மேலோங்க வேண்டும். எம்மைப்போல் பிறரையும் நேசிக்கும் தன்மை வளரவேண்டும். போதுமென்ற மனத்துடன் வருவாய்க்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான்  வன்முறைகளுக்கும் முறையற்ற பொருள் தேடல்களுக்கும் முடிவு காலம் வரும். அதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும்." என  தெரிவித்தார்.

 

http://indosri.com/home/srilanka/87044.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.