Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் அமைப்பும் மக்கள் ஆணையும்

Featured Replies

புதிய அரசியல் அமைப்பும் மக்கள் ஆணையும்

 

நிறை­வேற்று அதி­காரம் என்ற கருத்து எழ ஆரம்­பித்த காலத்தில் இருந்தே முரண்­பா­டு­களும் எழ ஆரம்­பித்­தன. இலங்­கையின் இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­பி­லி­ருந்து கிடைத்த மிக முக்­கி­ய­மான ஒரு படிப்­பினை என்­ன­வெனில் நாட்டின் மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­படும் ஒரு நபர் தனது சொந்த முக்­கி­யத்­துவம், சட்­ட­பூர்வத் தன்மை மற்றும் அதி­காரம் என்­பன தொடர்­பான மிகை அள­வி­லான ஓர் எண்­ணத்தை கொண்­டி­ருக்க முடியும் என்­ப­தாகும். 1970களின் தொடக்­கத்தின் போதே ஜனா­தி­பதி ஆட்சி முறை குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதேபோல் நடை­மு­றையில் உள்ள தேர்தல் முறைமை தொடர்­பிலும் ஆரம்பம் முதற்­கொண்டு குழப்­ப­கரமான நிலைமை நிலவி வரு­கின்­றது. அதேபோல் அதி­கார பர­வலாக்கல் இந்த நாட்டின் ஒற்­று­மையில் மிகப்­பெ­ரிய சிக்­கலை உரு­வாக்­கி­யுள்­ளது.

ஆகவே பிர­தா­ன­மான இந்த மூன்று விட­யங்­களில் மாற்­றங்­களை கொண்­டு­வ­ரு­வதன் மூல­மாக நாட்டின் ஜன­நா­ய­கத்­தையும் ஐக்­கி­யத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கியே கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்­தது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படல், புதிய தேர்தல் முறைமை ஒன்று உரு­வாக்­கப்­படல்,அதி­கார பர­வ­லாக்கல் மூலம் நீண­ட­கால தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதை அடிப்­ப­டை­யாக வைத்து புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ர­ிபால சிறி­சேன வாக்­கு­று­தி­களை கொடுத்து நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சியை உரு­வாக்­கினார்.

இன்று புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்கும் பாதையில் சகல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டு வரும் நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ர­ிபால சிறி­சேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் பாதையை தடுக்கும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்க முடி­யாது, சர்­வ­தேச வாக்­கெ­டுப்பு இல்­லாத அர­சியல் அமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும் என்ற புதிய குழப்­பத்தை உரு­வாக்­கி­ வ­ரு­கின்­றது.

புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­குவேன் என மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி கொடுத்து ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி தன்னை நிரா­க­ரித்த அணி­யுடன் இணைந்து அவர்­களை திருப்­திப்­ப­டுத்த புதிய அர­சியல் அமைப்பை நிரா­க­ரிப்­பாரா அல்­லது மக்கள் வரத்­திற்கு அமைய செயற்­ப­டு­வாரா என்­பது இன்று சகல தரப்­பி­ன­ரதும் கேள்­வி­யாக அமைந்­துள்­ளது.

இந்­நி­லையில் புதிய அர­சியல் அமைப்பும் மக்கள் ஆணையும் என்ற தலைப்பில் ஜன­நா­யகம் மற்றும் சமூக நீதிக்­கான அமைப்­பினால் ஏற்­பாடு செய்­தி­ருந்த கருத்­த­ரங்கு நேற்று முன்­தினம் கொழும்பில் இடம்­பெற்­றி­ருந்­தது. இதில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் புதிய அர­சியல் அமைப்பு குறித்து தமது நிலைப்­பாட்டை முன்­வைத்­தி­ருந்­தனர். 

புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க மக்­களின் நம்­பிக்கை அவ­சியம்
ஐ.தே.க.வின் உறுப்­பினர் அஜித் பெரேரா  

தேசிய பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும் என்ற நிலை­ப்பாட்டில் ஐக்­கிய தேசியக் கட்சி உள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாற்று நிலை­ப்பாட்டில் இருந்து செயற்­ப­டு­வதை போலவே ஐக்­கிய தேசிய கட்­சியின் ஒரு சிலரும் முரண்­பாட்டுக் கருத்­தினை கொண்ட நிலை­பாட்டில் உள்­ளனர். கடந்த பார­ாளு­மன்ற தேர்தலின் போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்கை பிர­க­ட­னத்தை நோக்க வேண்டும். நாட்டின் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் வகையில் நாட்டின் சகல செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்து மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தி மக்கள் மத்­தியில் இணக்­கப்­பாட்டை உரு­வாக்கி சம­வு­ரி­மையை பலப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க வேண்டும் என்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பா­டாகும். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து கட்­சி­க­ளுடன் இணைந்து செயற்­ப­டுவோம் என நாம் ஆரம்­பத்தில் தெரி­வித்­துள்ளோம்.  

ஆனால் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க யார் அதி­காரம் கொடுத்­தது என்ற கேள்­வியை இன்று சிலர் கேட்­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மக்கள் அங்­கீ­காரம் உண்டு. இன்று அர­சாங்­கத்தில் பிர­தான கட்­சி­யாக உள்ள கட்­சி­யா­கவும் அர­சாங்­கத்தை கொண்டு நடத்தும் கட்­சி­யா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியே உள்­ளது. நாம் தனித்த பெரும்­பான்­மையை பெறாத போதிலும் அதிக பலம் எம்­மிடம் உள்­ளது. மக்கள் எமக்கு இந்த வரத்தை கொடுத்­துள்­ளனர். புதிய அர­சியல் அமைப்பு வேண்டும் என்ற எமது நிலைப்­பாட்டை போலவே செயற்­படும் ஏனைய கட்­சி­க­ளையும் இணைத்­துக்­கொண்டால் பெரும்­பான்மை பலம், மக்கள் அங்­கீ­காரம் எமக்கு கிடைத்­து­விடும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட கட்­சி­களின் ஆத­ரவு உள்­ளது. ஆகவே எண்­ணிக்கை அடிப்­ப­டையில் பார்த்­தாலும் யதா­ர்த்­த­மாக இந்த விட­யத்தை பார்த்­தாலும் மக்கள் அங்­கீ­காரம் எமக்கு உள்­ளது.

இந்த நாட்­டில்­ தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்கு சம அந்­தஸ்து உள்­ளது. இந்த நாட்டில் சக­லரும் வாழக்­கூ­டிய உரிமை உண்டு. இதை மாற்­றி­ய­மைக்க எவ­ராலும் முடி­யாது. இருக்கும் அர­சியல் அமைப்பில் திருத்­தங்கள் செய்­வதில் ஐக்­கிய தேசியக் கட்சி இணங்­க­வில்லை. நாம் புதிய அர­சியல் அமைப்­பையே கேட்­கின்றோம். இந்த விட­யத்தில் அர­சியல் சுய­ந­லத்தை கருத்தில் கொண்டு செயற்­பட முடி­யாது. ஒற்றை ஆட்­சியின் கீழ் அனைத்து தரப்­பி­னதும் இணக்­கப்­பாட்டை கொண்டு அதி­யுச்ச அதி­கா­ரங்­களை பகி­ர­வேண்டும் என்­பதை நாம் தெளி­வாக கூறி­யுள்ளோம். எமது நாட்டின் யதார்த்­த­மாக அதி­கார பகிர்­வையும், அனைத்து தரப்­பாலும் ஏற்­றுக்­கொள்ள கூடிய அதி­கார பகிர்வுக்கு நாம் செல்ல வேண்டும்.

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் மூல­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத அர­சியல் அமைப்பை ஏற்­று­க்கொள்ள நாம் விரும்­ப­வில்லை என எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். இதை சிங்­கள தலைவர் ஒருவர் கூறு­வது முக்­கியம் அல்ல. தமிழ் மக்­களை தலைவர் அவ்­வாறு ஒரு வார்த்தை கூறு­வதை தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். சிங்கள, முஸ்லிம் மக்­களும் தெளி­வாக விளங்­கிக்­கொண்டு அதி­கார பகி­வுக்கு வாருங்கள் என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாகும். ஆகவே நாம் இப்­போது யதார்த்­தத்தை விளங்­கிக்­கொள்ள வேண்டும். அதேபோல் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வதை விரை­வு­ப­டுத்த வேண்டும்.

நாமும் பல்­வேறு சந்­தர்ப்­பத்தில் தவ­றி­ழைத்து விட்டோம். நாட்டில் பல இலட்சம் உயிர்கள் கொல்­லப்­பட நாமும் கார­ண­மாக அமைந்­துள்ளோம். உலகில் அமை­தி­யான நாடாக மாற்றும் சந்­தர்ப்­பத்தை நாம் நழு­வ­விட்டோம். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க முன்­வைத்த அர­சியல் அமைப்பு தீர்வு திட்­டத்தை நாம் கிழித்­தெ­றிந்தோம். நாமும் பல தவ­று­களை செய்தோம். ஆகவே இப்­போதும் புதிய அர­சியல் அமைப்பு நிரா­க­ரிக்­கப்­பட காரணம் இந்த வரைபின் மீதான முரண்­பாட்­டினால் அல்ல, இந்த அர­சாங்கம் ஊழல், கொள்­ளை­களை கண்­டு­கொள்­ளாது மக்­களின் வெறுப்பை பெற்­றுள்ள கார­ணத்­தினால் மட்­டு­மே­யாகும் என அண்­மையில் சுமந்­திரன் பார­ாளு­மன்­றத்தில் தெரி­வித்தார். இந்த கருத்தை நான் ஏற்­று­க்கொள்­கின்றேன்.

மக்­களின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்ள முன்­வைக்கும் திட்­டத்தை விடவும் அதை யார் முன்­வைக்­கின்­றனர் என்­ப­தையே மக்கள் பிர­தா­ன­மாக அவ­தா­னிப்­பார்கள். ஆகவே மக்­களின் நம்­பிக்­கையை பெற்­றுக்­கொண்ட பின்­னரே நாம் இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடியும். புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க பாரா­ளு­மன்­றத்தில் நாம் என்ன முயற்­சி­களை எடுத்­தாலும் மக்­களின் ஆத­ர­வுடன் இதனை நிறை­வேற்ற வேண்டும் என்றால் முதலில் அர­சாங்கம் மக்­களின் நம்­பிக்­கையை பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

ஜனா­தி­பதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மீதான மக்­களின் நம்­பிக்­கையை பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதேபோல் பிர­தமர் மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேலைத்­திட்­டங்கள் குறித்து மக்­களின் நம்­பிக்­கையை பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதன் பின்­னரே நாம் இதனை நிறை­வேற்ற முடியும். இப்­போ­தி­ருக்கும் மிகப்­பெ­ரிய சவால் இது­வே­யாகும். ஆகவே இப்­போதும் காலம் உள்­ளது. மக்­களின் நம்­பிக்­கையை பெற சந்­தர்ப்பம் உள்­ளது. இன­வாத, மத­வாத கொள்­கை­களை தோற்­க­டித்து ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்த இப்­போதும் நல்ல சந்­தர்ப்பம் காத்­துள்­ளது. அதில் அர­சாங்கம் சரி­யாக செயற்­பட வேண்டும்.

இந்த நாட்டில் இலஞ்ச ஊழல் தொடர்பில் இறு­தி­யான தீர்வு ஒன்றை எடுக்க இரண்டு ஆண்­டுகள் கடந்தும் எம்மால் முடி­யாது உள்­ளது. குற்­ற­வா­ளிகள் குறித்து அறிக்­கைகள் தயா­ரிக்­கப்­பட்ட போதிலும் ஒரு குற்­ற­வா­ளியை கூட சிறையில் அடைக்க முடி­யாது போயுள்­ளது. சுமத்­தப்­பட்ட குற்­றங்­களை சரி­யாக நிரூபிக்க எம்மால் முடி­யாது போயுள்­ளது. இந்த ஆட்­சியை உரு­வாக்­கிய மத்­திய வர்க்க மக்கள் இன்று தமது பொறு­மையை இழந்­துள்­ளனர். அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­து­விடும் நிலை­மைக்கு வந்­துள்­ளனர்.

இதில் அர­சாங்­கத்தை மாத்­திரம் குறை­கூற முடி­யாது. குற்­ற­வா­ளிகள் குறித்து அறிக்­கை­களை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்தும் எவரும் இன்­று­வ­ரையில் நட­வ­டிக்­கைகள் எடுக்­காது உள்­ளனர். சில விசா­ர­ணை­கள் முடி­வ­டைந்­துள்­ளது. சில விசா­ர­ணைகள் முடி­வ­டையும் நிலையில் உள்­ளன. ஆனால் இந்த அனைத்து விட­யங்­க­ளையும் இழுத்­த­டிப்பு செய்து ஆட்சி முடியும் வரையில் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றனர். ஆகவே இன்று நாமும் நடப்­பதை வேடிக்கை பார்க்­க­வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. இதுதான் நாம் முகங்­கொ­டுக்கும் சவா­லாக உள்­ளது. இப்­போது முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் எதுவும் இந்த அர­சாங்கம் முடியும் வரையில் தீர்­வு­கா­ணப்­ப­டாது. தீர்­வு­காண இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது. நீதி­மன்றம், நீதி அமைச்சு அனைத்தும் சரி­யாக செயற்­பட வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. மக்கள் எதிர்­பார்க்கும் நியாயம் நிலை­நாட்­டப்­பட்டால் மட்­டுமே மக்­களின் பூரண ஒத்­து­ழைப்­புடன் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க முடியும். இல்­லா­விட்டால் ஒரு­போதும் இதனை முன்­னெ­டுக்க முடி­யாது. ஜனா­தி­பதி தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தை சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும். பிர­தமர் நடை­மு­றையில் நியா­யத்தை நிலை­நாட்ட வேண்டும். வெறும் வார்த்­தை­களில் மாத்­திரம் அல்ல செயலில் இவற்றை காட்­ட­வேண்டும்.

 

புதிய அர­சியல் அமைப்பு ஒன்று மட்­டுமே நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தும்
த.தே.கூ.வின் உறுப்­பினர் சுமந்­திரன் 

இந்த ஆட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்தே புதிய அர­சியல் அமைப்பு ஒன்று கொண்­டு­வர வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. ஆரம்பம் முதலே புதிய அர­சியல் அமைப்பு குறித்து நாம் பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வந்த போதிலும் அவை தடங்­க­லா­கவே அமைந்து வந்­துள்­ளது. இப்போது நாம் திட­சங்­கற்­ப­மான ஒரு நிலையில் செயற்­பட்டு வரு­கின்றோம். புதிய அர­சியல் அமைப்பு ஒன்று மட்­டுமே நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தும் அடிப்­ப­டை­யாக உள்­ளது. இதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. அதனை ஒரு சிலர் மறுத்­தாலும் அதுதான் உண்­மை­யாகும்.

நாட்டில் பல இனத்து மக்கள் வாழ்ந்த போதிலும் ஐக்­கிய இலங்­கைக்குள் நாம் அனை­வரும் ஒன்­றென உணர்ந்து செயற்­பட வேண்டும் என்றால் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கி­யா­க ­வேண்டும். அதேபோல் இந்த நாடு தற்­போது முகங்­கொ­டுத்து வரும் சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வும் இந்த ஒரு விட­யத்தில் உள்­ளது. நாட்டில் மேலும் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. பொரு­ளா­தார ரீதியில் பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆனால் அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வதே நாட்டின் ஐக்­கி­யத்தை பலப்­ப­டுத்தும் வகை­யிலும் சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணும் வகை­யிலும் அமையும். கடந்த முப்­பது ஆண்­டு­கால யுத்­தத்தின் பின்னர் நாட்­டினை ஐக்­கி­ய­மாக கொண்­டு­செல்ல இதனை நாம் செய்­ய­வேண்டும். அதன் கார­ண­மா­கவே ஏனைய பிரச்­சி­னை­களை விடவும் அடிப்­படை தேவை­யாக இதனை நாம் கரு­து­கின்றோம்.

புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வதில் சகல கட்­சி­களும் ஒரு நிலைப்­பாட்டை எட்­டி­யுள்­ளன. அர­சியல் அமைப்பு சபை உரு­வாக்­கப்­பட்டு இந்த விடயம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதில் சில மாற்றுக் கருத்­துக்கள் இருந்த போதிலும் விரைவில் பொது­வான இணக்­கப்­பாடு எட்­டப்­படும் என நம்­பு­கின்றோம். அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தில் முழு­மை­யாக ஈடு­பட்டு வரு­கிறனர். எமது மக்­களும் ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்வு என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்­ளனர். மக்­களின் நிலை­ப்பாட்டை கொண்டு நாமும் பாரா­ளு­மன்­றத்தில் தெளி­வாக தெரி­வித்து வரு­கின்றோம். ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்வு என்­பதில் நாம் தெளி­வாக உள்ளோம். தமிழ் மக்­களும் நாட்டில் சம உரி­மை­யு­டனும் அங்­கீ­கா­ரத்­து­டனும் வாழ வேண்டும். ஆகவே புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்கி நாட்டை முன்­னோக்கி கொண்­டு­செல்ல அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும்.

 

அர­சியல் அதி­கார பேராசை கார­ண­மா­கவே அர­சியல் அமைப்பு  தவ­ற­வி­டப்­ப­டு­கின்­றது 
ஸ்ரீல.சு.க.வின் முன்னாள் அமைச்சர் அதா­வுத சென­வி­ரத்ன  

புதிய பாதையில் அர­சாங்கம் நாட்டை முன்­னெ­டுத்து செல்ல வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ள­தென்றால் புதிய அர­சியல் அமைப்பு மூல­மா­கவே அதனை செயற்­ப­டுத்த முடியும். கடந்த காலத்தில் நாம் தவ­ற­விட்ட பல சந்­தர்ப்­பங்­களை சிந்­தித்து பார்த்து இப்­போது சரி­யான தீர்­மானம் எடுக்க வேண்டும். 1956 ஆம் ஆண்டு அப்­போ­தைய பிர­தமர் ஜோன் கொத்­த­லா­வல வடக்­குக்கு சென்று சிங்­களம் மற்றும் தமிழ் மொழிகள் தேசிய மொழி­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என கூறிய போது அந்தக் கருத்து நாட்டில் மிகப்­பெ­ரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

பாரிய போராட்­டங்கள் கிளர்­தெழுந்­தன. இதன் கார­ண­மாக 24 மணித்­தி­யா­லத்தில் சிங்­கள மொழி மட்­டுமே அரச மொழி என்ற சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அன்றில் இருந்து நாட்டில் இன­வாத கொள்கை உரு­வாக ஆரம்­பித்­தது. இதனை வாய்ப்­பாக பயன்­ப­டுத்­திய ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தனி சிங்­கள கொள்கை என்ற கருத்தை முன்­வைக்க ஐக்­கிய தேசியக் கட்­சியும் கள­னியில் நடத்­திய கூட்­டத்தில் தனி சிங்­கள கொள்­கையை தெரி­வித்­தனர். அதன் பின்னர் இன்று வரையில் இந்த இன­வாத கொள்­கை­யி­லான அர­சியல் செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மக்­களும் அந்த நிலைப்­பாட்டை பழ­கிக்­கொண்­டுள்­ளனர்.

அர­சியல் அதி­கார பேராசை கார­ண­மா­கவே நாடு இவ்­வா­றான மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டது. புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்க முன்­வந்த சகல சந்­தப்­பங்­க­ளிலும் தமது அர­சியல் சுய­நலம் கார­ண­மா­கவே வாய்ப்­புக்கள் கைந­ழு­விப்­போ­னது. சிங்­கள, தமிழ் மொழிகள் இரண்­டையும் ஒரு நாட்டின் தேசிய மொழி என்ற நிலைப்­பாட்டில் ஏற்­று­க்கொள்ள இவர்கள் தயா­ராக இருக்­க­வில்லை. இப்­போதும் இந்த நிலைப்­பாடுதான் உள்­ளது. ஆனால் இந்த பிரச்­சி­னை­களை தீர்ப்­பது மிகவும் இல­கு­வான காரி­ய­மாகும். இன­வாதம், மத­வாதம் இல்­லாது பொது நிலைப்­பாடு ஒன்றை எட்­டு­வது மிகவும் இல­கு­வான விடய­மாகும். ஆனால் அதனை செய்ய யாரும் தயா­ராக இல்­லா­த­மையே பிரச்­சி­னைகள் மேலும் விரி­ச­ல­டைய கார­ண­மாக அமை­கின்­றது.

ஆகவே இந்த நிலைப்­பாட்டை மாற்ற வேண்டும் என்றால் வடக்கு மக்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து இணக்­கப்­பாட்­டுடன் கூடிய புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வதே சிறந்த தீர்­வாக அமையும். மக்­களை தெளி­வு­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்ள வேண்டும். வடக்கில் தமிழ் மக்­களின் மனங்­களில் உள்ள எண்ணம், தெற்கில் சிங்­கள மக்­களின் மனங்­களில் உள்ள கருத்­துக்கள் எவ்­வா­றா­னது என்­பதை சரி­யாக அடை­யாளம் கண்டு இரண்டு மக்­களின் பொது­வான இணக்­கப்­பா­டு­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கும் வகையில் செயற்­பட வேண்டும்.

புதிய அர­சியல் அமைப்பு என்­ப­தற்­காக அதில் அனைத்­துமே புதிய விட­யங்கள் அல்ல. அதி­க­ளவில் பழைய தன்­மைகள் தான் கையா­ளப்­பட வேண்டும். ஆனால் பிர­தா­ன­மாக தேசிய பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்­டிய விட­யங்கள் மட்­டுமே மாற்­றப்­படும். ஆகவே புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்க இப்­போது வாய்ப்­புகள் உள்­ளது. அர­சாங்கம் வெற்­றி­க­ர­மான பய­ணத்தை கொண்டு செல்­கின்­றது. இந்த ஆட்­சியில் மாற்­றங்­களை மேற்­கொள்ள முடியும். ஆகவே வாய்ப்­புகள் இப்­போது உரு­வா­கி­யுள்­ளன. இப்­போது இந்த பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்­வதே சிறந்த வழி­மு­றை­யாகும். இரண்டு கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­கின்­றன. ஏனைய சிறிய கட்­சிகள் மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் ஆத­ரவு தெரி­வி­க்கின்­றன. இப்­போது இந்த பிரச்­சி­னையை நாம் தீர்க்­காது போனால் அடுத்த கட்­ட­மாக ஐக்­கிய நாடுகள் சபை­யிடம் சென்றே இந்த பிரச்­சினை தீர்க்­கப்­படும் நிலைமை உரு­வாகும். இனியும் காலம் கடத்த முடி­யாது. மக்கள் மத்­தியில் இந்த விடயம் முழு­மை­யாக கொண்­டு­செல்­லப்­பட வேண்டும். வடக்கு மற்றும் தெற்கின் சகல அர­சியல் கட்­சி­க­ளுக்கும் இந்த பொறுப்பு உள்­ளது.

 

அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முழு­மை­யான மக்கள் ஆத­ரவு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது
கலா­நிதி ஜெயம்­பதி விக்­ர­ம­ரத்ன  

மக்கள் ஆணைக்கு அமைய புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­குவோம் என்ற வாக்­கு­று­தி­யையே நாம் கொடுத்தோம். ஆனால் மக்கள் ஆணை இன்று உள்­ளதா என்று சிலர் கேட்கும் நிலைமை இன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது அர­சாங்­கத்தின் மிகப்­பெ­ரிய வீழ்ச்சி என்றே கருத வேண்டும். இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வர முன்னர் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டுதல், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­குதல் என்ற வாக்­கு­று­தியை கொடுத்­தனர். ஆட்­சிக்கு வந்­த­வுடன் இதே வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டது. நூறு நாட்­க­ளுக்குள் இந்த மாற்­றத்தை செய்யும் ஆரம்­ப­க்கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது மற்றும் அதன் பின்னர் முழு­மை­யாக மக்கள் ஆத­ர­வுடன் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­படும் என்­பதே பிர­தான கருத்­தாக அமைந்­தது. ஆனால் இன்று கருத்­துக்­களை முழு­மை­யாக மாற்றும் வகையில் சிலர் நடந்­து­கொள்­கின்­றனர்.

ஆனால் அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முழு­மை­யான மக்கள் ஆத­ரவு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­படும் என்ற வாக்­கு­று­தியை கொடுத்து மக்­களின் வாக்­கு­களை பெற்ற வீதம் அதி­க­மாகும். ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஒரு பகுதி என அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டால் 56 வீதம் வாக்­குகள் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்கும் பணிகளுக்கு சாதகமாக உள்­ளது. எனவே மக்­களின் ஆணை­யுடன் எம்மால் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்க முடியும்.

 1955 ஆம் ஆண்டு இரண்­டு­நாடு ஒரு மொழி, ஒரு மொழி இரண்டு நாடு என்று கூறிய கொல்வின் ஆர்.டி.சில்வா பின்னர் தனி சிங்­கள சட்­டத்தை கொண்­டு­வந்­தது ஏன் என்ற கேள்வி பல்­வேறு தரப்­பினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யாகும். சிங்­களம் மட்­டுமே அர­ச­க­ரும மொழி என்­பதை அப்­போதே நாம் தெரி­வித்­தி­ருக்க வேண்டும். ஆனால் நாம் அன்று தெரி­விக்­காது விட்­டு­விட்டோம்.அதுதான் நாம் செய்த பெரிய தவ­றாகும்.

தொகுப்பு : ஆர். யசி

திங்கட்கிழமை தொடரும்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-05#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.