Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னமரவாடி மீள்குடியேற்றத் திட்டத்திற்கு ஆதரவு தர தமிழ்க் கனடியன் நடைபவனி 2017

Featured Replies


இனக் கலவரத்தை தொடர்ந்து 1984ம் ஆண்டு பண்டைய தமிழ் கிராமமான தென்னமரவாடி அழிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தசாப்தங்களாக இடப்பெயர்ந்திருந்த இக் கிராமத்தவர் தமது பூர்விக நிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 2010 ஆண்டுதான் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வந்த சில குடும்பங்களும், தென்னமரவாடி பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்த காரணத்தால், அங்கு மீளக் குடியேறுவதிலும், அதனை மீளக் கட்டுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

“பல தசாப்தகால இடம்பெயர்வின்பின் மீளக் குடியேறி, தம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப இக் குடும்பத்தினர் பெரும் ஆர்வம் காட்டினாலும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.” என்றார் தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான புஷ்பராஜா. “பொருளாதார வாய்ப்புகள், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் இதர சேவைகள் இல்லாத காரணத்தால் கிராமத்திற்கு திரும்பிய குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் திண்டாடுகின்றன.”

2017 தமிழ்க் கனடியன் நடைபவனி மூலம் சேகரிக்கப்படும் தொகை முழுவதும் சுயதன்னிறைவு கொண்டதாகவும் பயிர்ச் செய்கை மற்றும் கால்நடைகளை கொண்டிருப்பதாயும் அமையும் 10 ஏக்கர் அளவிலமைந்த பண்ணை ஒன்றினை தென்னமரவாடியில் உருவாக்க வழி வகுக்கும். அப் பண்ணை தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் நிர்வாகிக்கப்படும்.

நிலையான இந்தப் பண்ணைத் திட்டமானது, வேலைவாய்ப்புக்களையும், இதே கிராமத்திற்கே திரும்பத்திரும்ப முதலிடக்கூடியதாய் அமையும் வருமானங்களை ஈட்டும் வழிகைளையும் உருவாக்குவது மட்டுமல்ல, இளம் வயதினர் இந்தப் பகுதியை நோக்கி வரத்தக்கவிதமாகவும், ஒரு துடிப்பான சமூகத்தை மீண்டும் கட்டமைக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார் 9 வது தமிழ் கனடியப் நடைபவனியின் இணைத் தலைவரான திரு. பிரகல் திரு.

“கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்க் கனடியன் நடைபவனி கனடாவிலும், மற்றும் தாயகத்திற்கும் தேவையான பல திட்டங்களை ஆதரிக்கும்வகையில் நிதிசேகரிப்பை செய்து காட்டியிருக்கிறது, ‘Canadian Heart and Stroke Foundation’, ‘Center for Addiction and Mental Health’, ‘சம்பூர் வீடமைப்பு’ என்பன அத்திட்டங்களில் சிலவாகும்.”என்றார் கனடிய தமிழர் பேரவையின் தலைவரான டாக்டர் வி. சாந்தகுமார். “இத்தகைய வெற்றிகரமான முன்னெடுப்புகள் மூலம், தாயகத்தின் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றொரு பயனுள்ள திட்டத்திற்கு கனடாவில் உள்ள தமிழர்கள் இன்னுமொருமுறை பங்களிக்கிறார்கள் என்று நம்புகிறோம்.”

நிகழ்வு: 9 வது ‘தமிழ்க் கனடியன் வருடாந்த நடைபவனி’ 2017

திகதி: செப்டெம்பர் 10, ஞாயிற்றுக் கிழமை

இடம்: தொம்ஸன் பார்க், (Brimley Rd. / Lawrence Ave.) ஸ்காபரோ

நேரம்: காலை 8:30 (பதிவுகள்); காலை 9:30 (நடைபவனி ஆரம்பம்)

மேலதிக விபரங்களுக்கும், உறுதிமொழிப்படிவத்தை பெறுவதற்கும் 416-240-0078 என்ற இலக்கத்தை அழைக்கவும்.

ஊடக விசாரணைகளுக்கு: பிரகல் திரு (416) 727 3430

unnamed-3-670x503.jpg

http://www.tamilcnn.lk/archives/662888.html

 

Edited by Gari

  • தொடங்கியவர்

Thennanmarapady%20%20Map%201-1_zps7vjqfn

Thennanmaravady-2_zpsutcpp6zn.png

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தென்னை மரவாடி குடியிருப்பில் வேறு  இனத்தவர்களும் தங்களின் பூர்வீக நிலம் என உரிமை கொண்டாடுகிறார்கள் 

  • தொடங்கியவர்

தென்னைமரவடி தமிழர்கள் பாரம்பரியமாக இருந்த பழமையான கிராமம் ,1984இல் இவர்கள் துரத்தப்படட பின்பு இவர்களின் வயல்களை சிங்களவர்கள் பயன்படுத்தியவர்கள் .தற்போது மீளவும் பலர் திரும்பவும் எடுத்து விவசாயம் செய்கின்றார்கள் .சில சிங்களவர்களுக்கும் காணிகள் இருக்கின்றன .ஆனால் இக்கிராம மக்கள் மீளவும் குடியமராமல் போனால் வட கிழக்கு இணைப்பே தற்போது இல்லாவிடடாலும் எதிர்காலத்தில் சிக்கலுக்குள்ளாகலாம் .இதை கருத்தில் கொண்டுதான் அந்த மக்களுக்கு தொழில் வழங்குவதட்காக 10 ஏக்கரில் பண்ணை அமைக்க முடிவெடுத்தோம் .இது வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுமானால் கனடாவில் உள்ள வேறு சில அமைப்புக்கள் , சில முதலீட் டாலர்களை கொண்டு கடல்தொழில் சார்ந்த திட்டங்களை செய்யமுடியும் என்று சொல்லியுள்ளார்கள் .

தற்போது 82  குடும்பங்கள் திரும்ப குடியேறியுள்ளார்கள் .பலர் முல்லைத்தீவில் இருக்கின்றார்கள் .தாங்கள் வந்து குடியேறினால் தங்களுக்கு வீடும் ,தொழில் வாய்ப்புகளையும் செய்து தர கோரினார்கள் ,வீட்டு வசதியை சம்பந்தன் ஐயா புனர் வாழ்வு அமைச்சு ,வீடமைப்பு அமைச்சுகளுக்கு ஊடாக செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் .வேலை வழங்குவதட்காக இந்த பண்ணையை அமைக்க உத்தேசித்தோம் .இதட்குரிய உத்தேச மதிப்பீடு 100000.00கனேடிய டொலர்கள் .இதில் கனேடிய தமிழர் பேரவை (CTC )50000.00டொலர்களையும் ,திருகோணமலை நலன்புரிச்சங்கம் (TWA )25000.00டொலர்களையும்கனடா தமிழ் தேசிய கூட் டமைப்பு (TNA )25000.00டொலர்களையும் சேகரிப்பதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.