Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி துப்பாக்கியுடன் எஸ்.எப் கைது

Featured Replies

புலி துப்பாக்கியுடன் எஸ்.எப் கைது
 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற, இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சார்ஜன்ட், கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டுத் தயாரிப்பான எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிப் போர் இடம்பெற்ற, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவத்தின் தாக்குதலில் மரணமடைந்த, புலி உறுப்பினரின் சடலத்துக்கு அண்மையில் விழுந்து கிடந்த நிலையிலேயே இந்த கைத்துப்பாக்கியையும் ரவைகளையும் தான் மீட்டதாகவும், அதனை, ஒப்படைக்காமல் வீட்டில் மறைத்துவைத்திருந்தேன் என்றும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.  

ஞாயிற்றுக்கிழமை (13) மாலை கைதுசெய்யப்பட்ட சார்ஜன்ட், சூதாட்டம் மற்றும் பணம் பந்தயத்தில் அடிமையாகியிருந்ததாக அறியமுடிகிறது. ஆகையால், பல இலட்சம் ரூபாய், கடன்பட்டிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

அந்த ஆயுதத்தை விற்பனை செய்வதற்கு, தன்னுடைய நண்பர்கள் ஊடாக, விலைபேசி கொண்டிருந்த வேளையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.  

அதனையடுத்து, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, வேடமிட்டுக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்ற பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரி, அவரைக் கைதுசெய்துள்ளார்.  

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சாஜன்ட், வவுனியாவில் உள்ள இராணு முகாமில் கடமையாற்றுபவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/புலி-துப்பாக்கியுடன்-எஸ்-எப்-கைது/175-202372

  • தொடங்கியவர்

புலி­களின் கைத்­துப்­பாக்­கியை விற்­க முயன்ற இரா­ணுவ வீரர் கைது

 

 

தமி­ழீழ விடு­தலைப்புலிகள் செயற்­பட்ட காலப்­ப­கு­தியில் அதன் தலை­வர்­களில் ஒருவர் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் வெளி­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட  எம்.எம்.9 மில்­லி­மீற்றர் கைத் துப்­பாக்­கியை விற்­பனை  செய்ய முயன்ற இரா­ணுவ வீரர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

இரா­ணு­வத்தின் விசேட படைப்பிரிவின் (எஸ்.எப்.) ஸ்டாப் சார்ஜன்ட் தர அதி­காரி ஒரு­வரே இவ்­வாறு பேலி­ய­கொடை குற்றத் தடுப்பு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ராகம - மத்­து­ம­கல பகு­தியில் வைத்து துப்­பாக்­கி­யையும் 6 தோட்­டாக்­க­ளையும் இரண்­டரை இலட்சம் ரூபா­வுக்கு கொள்­வ­னவு செய்யும் போர்­வையில், பாதாள உலக குழு­வொன்று என தம்மை காட்டிக் கொண்டு சென்ற பொலி­ஸாரே அந்த இரா­ணுவ வீரரைக் கைது செய்­த­தாக பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

குறித்த ஸ்டாப் சார்­ஜன்ட்­டுக்கு மேல­தி­க­மாக அவ­ருடன் இருந்த முன்னாள் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ரையும் இதன் போது பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது கொல்­லப்­பட்ட புலி­களின் முக்­கிய தலைவர் ஒரு­வரின் அருகில் இருந்து இந்த கைத்­துப்­பாக்­கி­யையும் 6 தோட்­டாக்­க­ளையும் குறித்த  இரா­ணுவ வீரர் மீட்­டுள்­ள­துடன் அதனை உயர் அதி­கா­ரி­யிடம் கைய­ளிக்­காமல் வீட்­டுக்கு கொண்­டு­வந்து பாது­காத்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

 சூது கார­ண­மாக பெரும் தொகை பணத்தை இழந்து கட­னா­ளி­யாக இருந்­துள்ள குறித்த இரா­ணுவ ஸ்டாப் சார்ஜன்ட், கடனை அடைக்க துப்­பாக்­கியை விற்­பனை  செய்ய தீர்­மா­னித்­துள்ளார். அதன்­ப­டியே தான் பாது­காத்து வந்த புலித் தலை­வர்­களில் ஒரு­வ­ரது துப்­பாக்­கியை விற்­பனை  செய்ய தீர்­மா­னித்து அதற்கு இரண்­டரை இலட்சம் ரூபா விலை நிர்­ண­யித்து பல­ரிடம் கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் பொலிஸ் விசேட படை­ய­ணியின் களனி பிரி­வுக்கு அது தொடர்பில் தகவல் கிடைக்­கவே,  பேலி­ய­கொடை குற்­றத் ­த­டுப்பு பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்­தி­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய பாதாள உலக குழு உறுப்பினர்களாக தம்மை அடையாளப்படுத்தி கொண்டு பொலிஸார் அந்த துப்பாக்கியை கொள்வனவு  செய்வதை போன்று சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

http://www.virakesari.lk/article/23159

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரால்   பயன்படுத்தியதாகக் கூறப்படும், கைத்துப்பாக்கியை விற்பதற்கு முயன்ற, இராணுவத்தின் விசேட படையணியின் சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வெளிநாட்டுத் தயாரிப்பான  9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரால்   பயன்படுத்தியதாகக் கூறப்படும், கைத்துப்பாக்கியை விற்பதற்கு முயன்ற, இராணுவத்தின் விசேட படையணியின் சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வெளிநாட்டுத் தயாரிப்பான  9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரால் பயன்படுத்தியதாகக் கூறப்படும், கைத்துப்பாக்கியை விற்பதற்கு முயன்ற, இராணுவத்தின் விசேட படையணியின் சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுத் தயாரிப்பான 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

   
பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதிப் போர் இடம்பெற்ற, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவத்தின் தாக்குதலில் மரணமடைந்த, புலி உறுப்பினரின் சடலத்துக்கு அண்மையில் கிடந்த கைத்துப்பாக்கியையும் ரவைகளையும் தான் மீட்டதாகவும், அதனை, ஒப்படைக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தேன் என்றும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட சார்ஜன்ட், சூதாட்டம் மற்றும் பணம் பந்தயத்தில் அடிமையாகியிருந்ததாக அறியமுடிகிறது. ஆகையால், பல இலட்சம் ரூபாய், கடன்பட்டிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்த ஆயுதத்தை விற்பனை செய்வதற்கு, தன்னுடைய நண்பர்கள் ஊடாக, விலைபேசி கொண்டிருந்த வேளையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, வேடமிட்டுக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்ற பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரி, அவரைக் கைதுசெய்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ விசேட படையணியின் சாஜன்ட், வவுனியாவில் உள்ள இராணு முகாமில் கடமையாற்றுபவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=188320&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.