Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

வித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 

 

வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

DSC_1724.JPG

இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

DSC_1711.JPG

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர்  “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC_1684.JPG

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

DSC_1675.JPG

தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_1664.JPG

DSC_1662.JPG

http://www.virakesari.lk/article/23584

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை : கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

 
 
59a01490f2a68-IBCTAMIL.jpg
59a01490a8ad5-IBCTAMIL.jpg
 
 
 
 
599fcd08b8e16-IBCTAMIL.jpg
59a01490a8ad5-IBCTAMIL.jpg
59a01490f2a68-IBCTAMIL.jpg

சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகளின் கிளை அலுவலகம் முன்பாக இன்றைய தினம் பகல் நடத்தப்பட்டது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் சந்தேக நபராக சுவிஸ் குமாரை விடுவிக்க முயற்சி செய்ததாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், இதுகுறித்து ஐக்கிய நாடுகள் தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் கிளை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி, நீதிக்கான பெண்கள் அமைப்பு உள்ளிட்ட மகளிர் அமைப்புக்கள் இணைந்துகொண்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐ.நா அலுவலகப் பிரதிநிதியிடம் குறித்த மகளிர் அமைப்புக்கள் இணைந்து தயாரித்த மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவி சாமிலா கோணவெல, இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

 “வித்தியா மாணவியின் படுகொலைக்கு சம்பந்தப்பட்டதாக தெரிவித்து டி.ஐ.ஜி ஜயசிங்க இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் அமைச்சர் விஜயகலா தொடர்பில் இதுவரை சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது சந்தேகத்திற்குரியதாகும். எனவே இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை குறித்த விசாரணை நிறைவுபெறும் வரை பதவியிலிருந்து நீக்குமாறு அரசாங்கத்திடமும் நாங்கள் கேட்கின்றோம். அப்படி இடம்பெறாததினால் எமது நாட்டு மனித உரிமைகள் குறித்து ஆழமாக அவதானித்துவரும் ஐ.நாவிடம் இன்று வந்து எமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தோம். அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் விஜயதாஸ ஆகியோரை விலக்கியிருப்பதால் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவையும் அவ்வாறு நீக்க வேண்டும்.  அப்படி இல்லாத பட்சத்தில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Vithya-Massacre-Demand-justice-demonstration

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது சமகால அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “இதுவா நல்லாட்சி”, “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைது செய்”, “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/156347?ref=home-feed

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, போல் said:

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “இதுவா நல்லாட்சி”, “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைது செய்”, “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவை இரண்டுபேரும் எவன் காலிலையும் விழ தயாராக இருக்கும் போது!!!!!!!
எப்பிடி? எங்கை? எவர்? ஆரை?என்னெண்டு?எதை வைச்சு குற்றவாளியை உள்ளுக்கை தூக்கி போடுறது???

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் எல்லாருக்கும் விளங்குது இந்த வழக்கு விடயத்தில் என்ன நடக்குது என்று நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே .

அதுசரி விஜகலாவை பிடிச்சு உள்ள தள்ளினால் உள்ள சுவீஸ்குமார் கமராவேடை நிப்பான் என்று தெரிந்துதான் தேசிய மகளிர் அணி குசும்பு பண்ணுதோ தெரியலை .

  • தொடங்கியவர்

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

 

 

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு
 

துறைசார் மற்றும் புத்திஜீவிகள் பெண்களுக்கான அமைப்பு, மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மகஜர் ஒன்றை கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளித்தது.

மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சு, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஒப்புதல் வழங்குகின்றதா, என்ற கேள்வியுடன் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தாம் அதிகம் கரிசனை கொள்வதாகவும் அந்த அமைப்பு கையளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான பால் சமநிலைத்துவம் பேணப்படுவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறைகள் , பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் உட்பட சட்டங்களை வலுவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் குறித்த மகஜரில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் இயற்கை நீதிகளுக்கு அமைவாக, வித்தியா படுகொலைக்கு நியாயம் இன்னமும் கிடைக்கப்பெறாமை தொடர்பில் தமது அவதானத்தை குறித்த அமைப்பு வௌியிட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கின் 9 ஆம் இலக்க சந்தேகநபரான சுவிஸ் குமாரை காப்பாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்பு தொடர்பிலும் இந்த மகஜரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதிகாரப்போர்வை மற்றும் சந்தர்ப்பவாதத்துவம் வித்தியாவிற்கான நீதியைப் புறந்தள்ளும் வாய்ப்புள்ளதாக இந்த மகஜரில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/08/109662/

  • கருத்துக்கள உறவுகள்

தானியங்கி செய்தி இணைத்தல்  மூலம் இங்கு யாழில் ஒரே குழப்பமா இருக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.