Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 கேள்விகளும் இவ்வாறே கசிந்தன; பொத்தானில் கமெரா, காலில் சுவிட்ச்;

Featured Replies

3 கேள்விகளும் இவ்வாறே கசிந்தன; பொத்தானில் கமெரா, காலில் சுவிட்ச்;
 

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில், இரசாயனவியல் பரீட்சையின் போது, கேள்விகள் மூன்று கசிந்த விவகாரம், பொலிஸ் விசாரணைகளின் ஊடாக அம்பலமாகியுள்ளது.   

கேள்விகளைக் கசியவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்தியான மாணவனுக்கு, இரசாயனவியல் பாடத்துக்கு மேலதிக வகுப்புகளை எடுக்கும் ஆசிரியரே உதவிசெய்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

பாதத்திலிருந்து தொழிற்படும் இயந்திர உபகரணத்தின் உதவியுடனேயே, அந்த கேள்விக்கான புகைப்படத்தை, தன்னுடைய வீட்டிலிருக்கும் கணினிக்கு, மாணவன் அனுப்பிவைத்துள்ளான்.   

தன்னுடைய சட்டையின் பொத்தானில் பொருத்தப்பட்டிருந்த கமெராவின் ஊடாகவே, அந்த வினாத்தாளின் புகைப்படத்தை அம்மாணவன் அனுப்பிவைத்துள்ளான்.   

மாணவனின் வீட்டிலிருந்த இரசாயனவியல் பாட மேலதிக வகுப்பாசிரியரும் மற்றும் உயிரியல் விஞ்ஞான பாட மேலதிக வகுப்பாசிரியரும் அந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லிக் கொடுத்துள்ளனர்.   

அந்த விடைகளை, தன்னுடைய காதில் பொருத்தியிருந்த கேட்கும் கருவியின் ஊடாகக் கேட்டு, கேள்விகளுக்கு மாணவன் பதிலளித்துள்ளான் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

அந்த உபகரணங்கள் 900 அமெரிக்க டொலருக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன (இலங்கை ரூபாய் பெறுமதியில் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 700) ஆகும் என்றும் அறியமுடிகிறது.   

மாணவனின் தந்தை, பொலிஸ் வைத்தியசாலையில் வைத்தியர் என்றும், தன்னுடைய கடனட்டையின் ஊடாகவே, அதற்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. எனினும், அந்த உபகரணங்களை இன்னும் தேடி கண்டுப்பிடிக்க முடியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

அந்தப் பரீட்சைக்கு முன்னர், மேலதிக வகுப்பாசிரியர்கள் இருவரும், பொரளை கொட்டா வீதியில் உள்ள வைத்தியரின் வீட்டுக்கு வந்து, இந்தச் செயற்பாடு தொடர்பில் பயிற்சிகளை எடுத்து செய்து பார்த்துள்ளனர்.   

மாணவன், அந்த வீட்டின் மேல் மாடிக்குச் சென்று, ஒத்திகையாக, கேள்வித் தாளொன்றுக்கு விடையளித்துள்ளார். அதாவது, அந்த உபகரணங்களை பயன்படுத்தி, கீழ்மாடியில் உள்ள தன்னுடைய வீட்டுக் கணினிக்கு, வினாத்தாளின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.   

கீழ்மாடியிலிருந்த மேலதிக வகுப்பாசிரியர்கள் இருவரும், அந்த கேள்விகளுக்கான பதில்களை சொல்லிக்கொடுத்து, அந்த உபகரணங்களின் செயற்பாடுகள் தொடர்பில், இரண்டுடொரு நாட்கள் பயிற்சியெடுத்துள்ளனர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

பரீட்சையின் போது, மாணவனுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுப்பதற்காக இரசாயனவியல் பாடத்துக்கான மேலதிக வகுப்பாசிரியருக்கு, 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில், 9 இலட்சத்துக்கு 90 ஆயிரம் ரூபாய், அவருடைய வீட்டிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இரசாயனவியல் மேலதிக வகுப்பாசிரியரின் தந்தை, சகோதரர் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களைத் தயாரித்து அச்சடித்தார் என்று கூறப்படும் நபர் மற்றும் கொழும்பு பிரதான பாடசாலையின் மாணவன் மற்றும் மாணவனின் தந்தை ஆகியோர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான இரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சை கடந்த 19ஆம் திகதியன்று நடைபெற்றது. அதில், பகுதி 2க்கான வினாக்கள் சிலவற்றை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள், பரீட்சை நிறைவடைவதற்கு முன்னரே, கம்பஹாவில் விநியோகிக்கப்பட்டன.  

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை, எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/3-கேள்விகளும்-இவ்வாறே-கசிந்தன-பொத்தானில்-கமெரா-காலில்-சுவிட்ச்/175-202978

  • தொடங்கியவர்

சினிமா பாணியில் பரீட்சை எழுதிய உயர்தரப் மாணவன் : சி.ஐ.டி வெளிப்படுத்திய திடுக்கிடும் தகவல்கள்.!

 

thumb_large_Local_News.jpg

பரீட்­சைகள் இடம்­பெறும் போது சாத­ர­ண­மாக பார்த்து எழு­துதல்,  குறிப்­புக்­களை உடன் வைத்து எழு­துதல் போன்ற சின்னச் சின்ன மோச­டி­கள் தொடர்பில் நாம் பர­வ­லா­கவே கேள்விப்படு­வ­துண்டு. ஆனால் முழு வினாப்பத்­தி­ரத்­துக்கும் ஒவ்­வொரு கேள்­வி­யாக வெளியில் இருந்து ஒரு ஆசி­ரியர் தொழில்நுட்ப உத­வி­யுடன் விடையை சொல்லிக் கொடுக்க, மாணவன் ஒருவன் அதனை எழு­து­வது போன்ற மிஷன் இம்­பொ­ஷிபல் பாணி­யி­லான மோச­டி­களை நாம் இது­வரை நடைமுறையில் கண்­ட­தில்லை.

பொது­வா­கவே இவ்­வா­றான தொழில்நுட்­பங்­க­ளுடன் கூடிய மோச­டி­களை சினிமா படங்­களில் நாம் அவ­தா­னித்­தி­ருக்­கலாம். ஆனால் நடைமுறையில் அவை பெரி­தாக இலங்கை போன்ற மூன்றாம் மண்­டல நாடு­களில் அவ­தா­னிப்­பது கடினம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் தாய்­லாந்தின் பிர­பல மருத்­துவ கல்­லூ­ரி­யொன்றில் மாண­வர்கள் சிலர் நவீன உளவு கெம­ராக்­களை பயன்­ப­டுத்தி பரீட்சை மோசடி செய்­தமை கண்­ட­றி­யப்­பட்­டமை தொடர்பில் நாம் ஊடகங்கள் வாயி­லாக கேள்­விப்­பட்­டி­ருக்­கலாம்.

தாய்­லாந்தின் ரங்சிட் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நுழைவு தேர்­வு­களின் போது மருத்­துவ பீடத்தை சேர்ந்த 3 மாண­வர்கள் அதி நவீன உளவு கெம­ராக்­களை (ஸ்பை கெமரா) பயன்­ப­டுத்தி மோசடி செய்­தி­ருந்­தனர்.

இம் மாண­வர்கள் அணிந்­தி­ருந்த மூக்கு கண்­ணா­டிக்குள் உளவு கெம­ராக்கள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த, கைக் கடி­கார வடி­வி­லான ஸ்மார்ட் போன்­க­ளையும் இவர்கள் அணிந்­தி­ருந்­தனர். 

 இச் சாத­னங்­களின் உத­வி­யுடன் வெளி­யி­லி­ருந்த குழு­வொன்­றுடன் மேற்­படி மாண­வர்கள்  தொடர்­பு­ கொண்டு பரீட்சை விடை எழு­து­வதில் மோசடி செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இதனை ஒத்த ஒரு  பரீட்சை மோச­டியே  நாட்டில் தற்­போது நடைபெற்று வரும்  கல்விப் பொதுத் தரா­தர உயர்தரப் பரீட்­சை­களின் போதும் பதி­வா­கி­யுள்­ளது. இந்த மோச­டி­யான ஒப்­பந்த அடிப்­ப­டையில் ஆசி­ரி­யர்­க­ளையும் தொடர்புபடுத்தி இந்த மோசடி முன்­னெ­டுக்­கப்பட்­டி­ருப்­பது தான் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

கடந்த 19 ஆம் திகதி சனிக்­கி­ழமை உயர் தரப் பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் பாடத்­துக்­கான பரீட்­சைகள் இடம்­பெற்­றன. பகுதி 2 இற்­கான  பரீட்­சைகள் இவ்­வாறு இடம்­பெற்ற நிலையில் இர­சா­ய­ன­வியல் பகுதி 2 இன் மூன்று  கேள்­வி­களை உள்­ள­டக்­கிய துண்டுப்பிர­சு­ரங்கள் கம்­பஹா பகு­தியில் பிர­பல பெண்கள் பாட­சாலை ஒன்­றுக்கு முன்­பாக விநி­யோ­கிக்­கப்பட்­டுள்­ளன.

 இம்­முறை தான் அனு­மா­னித்த கேள்­விகள் பரீட்­சைக்கு வந்­துள்­ள­தா­கவும் எனவே வெற்­றியை உறுதி செய்ய தமது தனியார் கல்வி நிறு­வ­னத்தில் மேல­திக வகுப்­பு­க­ளுக்­காக மாண­வர்­களை அழைக்கும் வித­மா­கவே இந்த துண்டுப் பிர­சுரம் தயார் செய்­யப்பட்டு பரீட்­சையை எழு­தி­விட்டு வெளியில் வந்த மாண­வர்­க­ளுக்கு கொடுக்­கப்பட்­டுள்­ளது. அந்த துண்டுப் பிர­சு­ரத்தில் உயர்தரப் பரீட்­சையின் போது கேட்­கப்பட்­டி­ருந்த மூன்று பிர­தான வினாக்கள் அப்­ப­டியே அச்­சொட்­டாக உள்­ள­டக்­கப்பட்­டி­ருந்­தன. வினாக்கள் அப்­ப­டியே பரீட்சை வினாத் ­தாளிலிருந்­ததை அவ­தா­னித்­துள்ள மாண­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள நிலையில் வினா பத்­திரம் ஏற்­க­னவே வெளி­யா­கி­விட்­டதா என்ற சந்­தே­கத்தில் பெற்­றோ­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.  அது தொடர்பில் பெற்றோர் ஊடாக பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­ வந்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே பரீட்­சைகள் ஆணை­யாளர் விட­யத்தை  பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்ளார்.

 இத­னை­ய­டுத்து கம்­பஹா பகு­தியில்  துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கிக்­கப்பட்­டதால் விசா­ர­ணைகள் கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­ல­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­லவின் கீழ் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரீ லால் பெரேரா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் பரீட்­சைக்கு முன்னர் வினாத்தாள் வெளி­யா­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது. எனினும் பரீட்­சையின் இடை நடுவே யாரோ ஒருவர் அந்த கேள்­வி­களை மேல­திக வகுப்பு ஆசி­ரியர் ஒரு­வ­ருக்கு ஏதோ ஒரு வகையில் வழங்­கி­யுள்ளார் என்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

 இத­னை­ய­டுத்து அது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலிஸார் குறித்த துண்டுப் பிர­சுரத்தை விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் கந்­தான, பட்­ட­கம பகு­தியைச் சேர்ந்த இரு­வரை முதலில் கைது செய்­தனர்.

 துண்டுப்பிர­சு­ரத்தில் குறிப்­பி­டப்பட்­டி­ருந்த இர­சா­ய­ன­வியல் மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரின் 67 வய­தான தந்­தையும் 29 வய­தான சகோ­த­ர­ருமே இவ்­வாறு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.  குறித்த இரு­வ­ரி­டமும் கம்­பஹா உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ஸ்ரீ லால் பெரேரா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய கம்­பஹா - பண்­டா­ர­நா­யக்க மாவத்தை பகு­தியில் அச்­சகம் ஒன்­றினை நடத்தும் 42 வய­தான நபர் ஒரு­வரை, குறித்த  துண்டுப்பிர­சு­ரங்­களை அச்­சிட்­டமை தொடர்பில் பொலிஸார் கைது செய்­தனர்.

இம் ­மூ­வ­ரி­டமும் விசா­ரணை செய்­ததில் பல அதிர்ச்­சிகள் வெளியே வந்த நிலையில், இந்த மோச­டியின் பின்­ன­ணியில் 10 இலட்சம் ரூபா ஒப்­பந்தம் ஒன்று உள்­ள­மையும், பரீட்­சையின் இடை நடுவே கொழும்பு பிர­பல பாட­சாலை மாணவன் ஒருவன் ஊடா­கவே பரீட்சை வினாத் தாள் வெளியில் வந்­துள்­ள­மையும்  கண்­ட­றி­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து இந்த மோச­டியின் அனைத்து விட­யங்­க­ளையும் வெளிப்­ப­டுத்தி ­கொள்ளும் பொறுப்பு குற்றப் புல­ன­ய்வு பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்பட்­டது. குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத்  நாக­ஹ­முல்ல ஆகி­யோரின்  மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. 

பிர­பல குற்ற விசா­ர­ணை­யா­ள­ரான குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­க­ரவின் கட்­டுப்­பாட்டில் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரால் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டன.

இதன் போது முதலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் வைத்­தி­ய­சா­லையின் பல் வைத்­தி­ய­ரையும் அவ­ரது மக­னையும் கைது செய்­தனர். காரணம், குறித்த வைத்­தி­யரின் மகனே வினாப் பத்­தி­ரத்தை வெளியே கசிய விட்­ட­வ­ராவார். அத்­துடன் தனது மக­னுக்கு விடை சொல்லி கொடுக்க மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா­வினை வைத்­தியர் செலுத்­தி­யுள்ளார் என்­பதும் விசா­ர­ணையில் தெரி­ய­வ­ரவே அவரும் உட­ன­டி­யாக கைது செய்­யப்பட்­டி­ருந்தார்.

 இந்த கைது­களின் பின்னர் இடம்­பெற்ற விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்பட்ட தக­வல்­களே மிஷன் இம்­பொ­ஷிபல் பாணி  மோசடி நட­வ­டிக்­கை­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது.

ஆம், கமல் ( பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) கொழும்பு பிர­பல பாட­சாலை உயர் தர விஞ்­ஞான மாணவன். தொழில் நுட்ப விட­யங்­களில் திறமை வாய்ந்த அவ­னுக்கு, அவ­னது திறமை கார­ண­மாக கன­டாவில் புலமைப் பரிசில் ஒன்று கூட கிடைத்­துள்­ளதாம். எனினும் கமலின் தந்­தை­யான பொலிஸ் வைத்­தி­ய­சா­லையின் பல் வைத்­தி­ய­ருக்கு தனது மகன் வைத்­தியர் ஆக வேண்டும் என ஆசை.

 இத­னாலோ என்­னவோ கமலை  உயர் தரத்தில் விஞ்­ஞான பிரிவில் கல்வி கற்கச் செய்­துள்ளார். இந் நிலை­யி­லேயே அப்­பி­ரிவில் கல்வி கற்று பரீட்­சைக்கு தோற்­றிய கமல் தனக்கு தெரிந்த தொழில் நுட்ப அறி­வினை பயன்­ப­டுத்தி மோசடி செய்து பரீட்சை எழு­தவும் தயங்­க­வில்லை. காரணம் எப்­ப­டி­யேனும் வைத்­தி­ய­ரா­கி­ விட வேண்டும் என்ற தந்தை, மோசடி செய்­யவும் உறு­து­ணை­யாக இருந்­த­மையே.

  குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள  தக­வல்­க­ளுக்கு அமைய விட­யங்­களை நாம் தரு­கின்றோம்.

கமல் உயர்தரப் பரீட்­சையில் எப்­ப­டி­யேனும் சித்­தி­ய­டைய வேண்டும் என்­ப­தற்­காக பாரிய திட்டம் வகுக்­கப்பட்­டுள்­ளது. இந்த திட்­ட­மா­னது பொரளை கொட்டா வீதியில் உள்ள பொலிஸ் வைத்­தி­ய­சாலை வைத்­தி­யரின் மாடி வீட்­டி­லேயே தீட்­டப்பட்­டுள்­ளது. முதலில் பரீட்­சைக்கு விடை­ய­ளிக்க கமல் தனது தொழில் நுட்ப அறிவை பயன்­ப­டுத்தி கரு­வி­களை கொள்­வ­னவு செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளார். அதன்­படி இணையம் ஊடாக சிறிய ஸ்கேனிங் கெமரா, புளூடூத் உப­க­ரணம் உள்­ளிட்­ட­வற்றை கமல் சீனாவில் இருந்து கொள்­வ­னவு செய்­துள்ளார். அதன் பெறு­மதி 900 அமெ­ரிக்க டொலர்கள் என அறிய முடி­கின்­றது. இதற்­கான பணம் தந்­தை­யான பொலிஸ் வைத்­தி­ய­சாலை வைத்­தி­யரின் பெயரில் உள்ள கடன் அட்­டை­யினால் செலுத்­தப்பட்­டுள்­ளது.

குறித்த கெமரா சிறிய கெம­ரா­வாகும். பாட­சாலை சீரு­டையின் பொத்தான் போன்று உள்ள அந்த கெம­ராவை, பொத்­தா­னாக பயன்­ப­டுத்­தியே கமல் மோச­டியில் ஈடு­பட்­டுள்ளார். அந்த கம­ராவை இயக்கும் சுவிட்ச் காலில் சப்­பாத்­தினுள் சூட்­சு­ம­மாக மறைத்து வைக்க முடி­யு­மா­னது. அந்த சுவிட்ச்­களை விரல்­க­ளினால் இயக்கும் போது பொத்தான் வடிவில் உள்ள கமரா வினா­பத்­தி­ரத்தை பட­மெ­டுத்து, மற்­றொரு சுவிட்ச்சை அழுத்தும் போது மெசஞ்ஞர் ஊடாக கமலின் பேஸ் புக் உள் பெட்­டிக்கு செல்ல முடி­யு­மா­ன­தாக வடி­வ­மைக்­கப்பட்­டுள்­ளது. 

அதன் பின்னர் கமலின் பொரளை வீட்டில் இருக்கும் மேல­திக வகுப்பு ஆசி­ரியர் வினா­க்­களை பார்த்­து­ விட்டு, விடையை மெசஞ்ஞர் அழைப்பு ஊடாக கம­லுக்கு சொல்லி கொடுத்­துள்ளார். மெசஞ்ஞர் அழைப்பு ஏற்­ப­டுத்தி பதிலை சொல்லிக் கொடுக்கும் போது அதனை கிர­கிப்­ப­தற்­கான புளூடூத் உப­க­ரணம் கமலின் காது­க­ளுக்குள் இருந்­துள்­ளது. இதுவும் யாரும் கண்­ட­றிய முடி­யா­த­தான, காந்தம் கொண்ட கடி­கார மின்­க­லன்­களின் அள­வினை கொண்ட புளூடூத் உப­க­ர­ண­மாகும்.

இந்த தொழில் நுட்­பங்கள் ஊடாக கமல் ஏற்­க­னவே உயி­ரியல் பாடத்­துக்கும் விடை எழு­தி­யுள்ள போதும் அவன் சிக்­க­வில்லை. அதற்­காக உயி­ரியல் பாட மேல­திக ஆசி­ரியர் ஒருவர் விடை­யினை சொல்லிக் கொடுத்­துள்ளார். அதன் பின்னர் இர­சா­ய­ன­வியல் பரீட்­சையின் போதும் இதே பாணியில் விடை எழு­தி­யுள்ளார். அதன் போதும் சிக்­க­வில்லை. எனினும் அந்த வினாப்பத்­தி­ரத்­துக்கு விடை சொல்லிக் கொடுத்த ஆசி­ரியர் மேல­திக பண மோகத்தில் வடி­வ­மைத்த துண்டுப் பிர­சு­ரத்­தினால் பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இவை­ய­னைத்தும் மாட்டி வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

 இதில் இன்­னொரு விடயம் என்­ன­வென்றால் பரீட்­சைக்கு முன்னர் இந்த மோசடி தொடர்பில் ஒத்­தி­கையும் பார்க்­கப்பட்­டுள்­ளது. பொரளை கொட்டா வீதியில் உள்ள கமலின் வீட்டில் மேல் மாடியில் கமல் மாதிரி வினா­ப் பத்­திரம் ஒன்­றுக்கு விடை­ய­ளிக்கும் போது இதே தொழில் நுட்­பத்தில் மாதிரி வினாப் பத்திரம் ஒன்றுக்கு விடையளிக்கும் போது இதே தொழில் நுட்பத்தில் கீழ் மாடியில் இருந்து ஆசிரியர்கள் விடை சொல்லிக் கொடுத்து இந்த ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

 இந் நிலையில் தற்போது, கமலுக்கு உதவிய அல்லது ஒப்பந்த அடிப்படையில் உதவிய மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு பொலிஸ் குழு ஒன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று சட்டத்தரணியூ டாக இரசாயனவியல் ஆசிரியர் கம்பஹா நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போது அவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பரீட்சை மோசடி தொடர்பில், இரசாயனவியல் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அவரது வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுவரை இரசாயன வியல் ஆசிரியருக்கு மேலதிகமாக அவரது தந்தை, சகோதரர், கம்பஹா அச்சக உரிமையாளர், கமல் மற்றும் கமலின் தந்தையான வைத்தியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாளை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் உயிரியல் ஆசிரியரை தேடிய வேட்டையை புலனாய்வுப் பிரிவினர் முன் னெடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/23728

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்டவர் உண்மையில் திறமைசாலி என்றே சொல்வேன்.

இவரது தந்தை ஓர் பல்வைத்தியர். தனயனுக்கு மருத்துவம் படிக்க விருப்பம் இல்லை என தெரிந்தும் அவரை படிக்க வைத்துள்ளார். தொழில் நுட்பத்தில் திறமை உள்ள ஒருவர், அதிலும் கனடாவில் ஒர் புலமை பரிசில் கிடைத்தும் உள்ளது. 

தனயனுக்கு வழிகாட்ட வேண்டிய தந்தை விட்ட பிழை 

  • தொடங்கியவர்

மாணவரின் குழப்பத்தை முதலில் தீர்த்து வையுங்கள்!

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பாடத்துக்குத் தோற்றிய மாணவர் மத்தியில் குழப்ப நிலைமை இன்னுமே தீரவில்லை. இம்மாணவர்கள் இரசாயனவியல் பரீட்சைக்குத் தோற்றி இன்றுடன் பத்து நாட்களாகி விட்டன.

இரசாயனவியல் பாடப் பரீட்சையில் மாணவர்களுக்கு இம்முறை இரண்டு விதமான குழப்பங்கள்!

வகுப்பில் அதிகூடிய திறமை மிக்க மாணவர்களாக இருந்தோரால் கூட, இரசாயனவியல் பரீட்சையை இம்முறை திருப்திகரமாக எழுத முடியாமல் போய் விட்டது. வினாக்கள் மிகவும் கடினமானவை என்பதல்ல மாணவர்களின் குழப்பம்.

இரசாயனவியல் இரண்டாம் பாகத்துக்குரிய வினாக்கள் அனைத்துமே இம்முறை மயக்கம் தருவனவாக தயாரிக்கப்பட்டிருந்தமையே மாணவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்! வகுப்பில் இரசாயனவியல் பாடத்தில் அதிகூடிய மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவர்களாலும் திருப்திகரமாக பரீட்சையை எழுத முடியாமல் போயுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மாத்திரமன்றி, கற்பித்த ஆசிரியர்களும் இதனையே கூறுகின்றனர்.

‘பல்கலைக்கழகங்களில் வருடம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியும். ஆகவே ஒரு மாணவனின் மதிப்பெண்களை எவ்வாறு குறைக்க முடியுமோ, அதற்கேற்றவாறு பாடங்களின் வினாக்களை ஒவ்வொரு வருடமும் மிகக் கடினமான முறையில் தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் முன்னொரு தடவை கூறியது இங்கே ஞாபகத்தில் வருகின்றது.

அதாவது வினாக்களின் கட்டமைப்பு இம்முறை மாற்றப்பட்டிருக்கிறது. வினாத்தாள் திருத்தத்தின் போது, புள்ளித் திட்டம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை வைத்தே மாணவர்களின் பெறுபேறுகள் தீர்மானிக்கப்படப் போகின்றன.

இவ்வாறான கடினத்துடன் இரசாயனவியல் பரீட்சையை எழுதியுள்ள மாணவர்களுக்கு ஓரிரு தினங்களில் அடுத்த பேரிடி காத்திருந்தது. இரசாயனவியல் பரீட்சைக்கான இரண்டாம் பாகத்தின் வினாக்கள் முன்கூட்டியே வெளியில் கசிந்து விட்டதாக வெளியான தகவல்களே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்!

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாத்திரமன்றி பரீட்சைத் திணைக்களத்துக்கும் இவ்விடயம் பெரும் குழப்பமாகப் போயிருந்தது.

இரசாயனவியல் பரீட்சை வினாக்கள் முன்கூட்டியே வெளியே கசிந்தனவா என்பதை பரீட்சைகள் ஆணையாளராலேயே உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

“விசாரணைகள் நடைபெறுகின்றன. விசாரணைகளின் முடிவு வரை எதனையுமே கூற முடியாதிருக்கின்றது” என்றார் பரீட்சைகள் ஆணையாளர்.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்கள் மத்தியிலான குழப்பம் இன்னுமே தீர்க்கப்படாதிருக்கின்றது.

கல்வியமைச்சோ அல்லது பரீட்சைகள் திணைக்களமோ இவ்விடயம் தொடர்பான வதந்திகளுக்கான விளக்கத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் கல்வியமைச்சுத் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவராததால், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழப்பம் தீராமலேயே இன்னும் உள்ளனர்.

இரசாயனவியல் இரண்டாம் பாகத்தின் வினாக்கள் முன்கூட்டியே வெளியே கசிந்தது உண்மையா? எங்கோவொரு பரீட்சை நிலையத்திலிருந்து இரசாயனவியல் பாடத்தின் இரண்டாம் பாகத்துக்குரிய வினாத்தாளொன்று காணாமல் போனதாக பத்திரிகைகளில் வெளியான செய்தி உண்மையானதா? இச்செய்திகளின் உண்மைத்தன்மை என்ன? வினாக்கள் முன்கூட்டியே வெளியாகியிருந்தால், இரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சையை மீண்டும் நடத்தப் போகின்றார்களா?

இவ்வாறு எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாதவர்களாக மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போய் இருக்கின்றார்கள். மாணவர்களுக்குப் பித்துப் பிடிக்க வைப்பது போல, இவ்விவகாரம் குறித்து நாளாந்தம் ஊடகங்களில் பலவிதமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இறுதியாக வெளியான செய்தியின்படி, கம்பஹா பிரதேச பரீட்சை நிலையமொன்றில் வைத்து பரீட்சார்த்தி ஒருவர் ‘blue tooth’ சாதனத்தை தன்வசம் மறைத்து வைத்தபடி வினாக்களை ரியூஷன் ஆசிரியரொருவருக்குத் தெரியப்படுத்தி, விடைகளை எழுதிக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அம்மாணவனின் தந்தையான வைத்தியரே இதற்கெல்லாம் உடந்தையாக இருந்ததாகவும், விடைகளை எழுதுவதற்காக ரியூஷன் ஆசிரியரின் உதவி பெறப்பட்டதாகவும் பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. இத்தகைய உதவிக்காக ரியூஷன் ஆசிரியருக்கு அம்மாணவனின் தந்தை பெரும் பணத்தை வழங்கியதாகவும் அச்செய்தி கூறுகின்றது.

இவையெல்லாம் விசாரணைகளில் வெளியான தகவல்களே தவிர, உத்தியோகபூர்வ தகவல்கள் அல்ல. கல்விப்பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சர்ச்சை தொடர்பில் கல்வியமைச்சோ அல்லது பரீட்சைத் திணைக்களமோ இன்னும் மௌனம் காப்பது முறையல்ல. கலக்கத்தில் மூழ்கியிருக்கும் மாணவர்களின் குழப்பத்தைத் தீர்த்து வைப்பது முக்கியம்.

http://www.thinakaran.lk/2017/08/29/ஆசிரியர்-தலைப்பு/19581

சொறிலங்கா சிங்கள பொலிஸாரின் சமூகவிரோத செயல்கள் பல ரூபங்களில் அரங்கேறுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.