Jump to content

வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினி


Recommended Posts

பதியப்பட்டது

வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினி

 


வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினி
 

தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார்.

_97572580_mediaitem97572579

இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம் தெரிவிக்கப்படுகின்றது.

மோடம் போன்ற வடிவம் கொண்டுள்ள,` கொனிகு கோர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், எதிர்கால இயந்திர மனிதர்களுக்கு மூளையாக கூட செயற்படலாம்.

ஆனால், இதுபோன்ற சாதனங்களை, வெகுஜன சந்தைகளுக்கு ஏற்ப தயாரிப்பது சவாலானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித மூளையை எடுத்துக்காட்டாக கொண்டு, செயற்கை நுண்ணறிவை உருவாக்க மைக்ரோசொப்ட் மற்றும் கூகுள் போன்ற பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றன.

சிக்கலான கணித சமன்பாடுகளை செய்வதில் மனிதனை விட கணினிகள் சிறப்பாக செயல்பட்டாலும், பல அறிவாற்றல் செயல்பாடுகளில் கணினியை விட மனித மூளைகள் மேம்பட்டவையாக உள்ளன.வாசனைகளை மோப்பம் பிடிப்பதற்கு கணினிகளுக்கு பயிற்சியளிக்க,மகத்தான அளவிலான சக்தியும், கணக்கீடும் தேவைப்படும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள ஓசி அகபி, தனது `கொனிகு` என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு துவங்கினார்.

தன்னுடைய நிறுவனத்திற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டிய அவர், பாதுகாப்புத் துறையில் தன்னுடைய நிறுவனம், ஏற்கனவே 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை லாபம் சம்பாதிப்பதாக தெரிவித்திருந்தார்.

கோனிகு கோர் என்பது நுகர்வுத் திறனுடன் வாழக்கூடிய நியூரான்கள் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் கலவையாகும், அடிப்படையில் சென்சார் அமைப்பை கொண்டுள்ள இது, வாசனை கண்டறிவது மட்டுமல்லாமல் அவற்றை நுகர்ந்து பார்க்கும் தன்மையுடையது.

எதிர்காலத்தில் இது போன்ற சாதனங்களை நேரடியாக அல்லாமல், விமான நிலையத்தில் நிற்கும் நீண்ட வரிசையை குறைக்கும் வகையில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தலாம்.

மேலும் இதன் மூலம் வெடிகுண்டுகளை கண்டறியவும், காற்றில் உள்ள மூலக்கூறுகளை நுகர்ந்து அந்த இடத்தில் இருக்கும் நபருக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தும் கண்டறியவும் பயன்படுத்த முடியும்.

இந்த முன்மாதிரி சாதனம் குறித்த தகவலை , டெட் குளோபல் மாநாட்டில் வெளியிட்ட அகபி, அது குறித்த புகைப்படங்களை தற்போது வெளியிட முடியாது என தெரிவித்தார்.

மேலும் நியூரான்களை தொடர்ந்து உயிர்ப்புடன் வைப்பதில், தாங்கள் சந்தித்து வந்த மிகப்பெரிய சவால்களில் ஒன்றுக்கு தற்போது தீர்வு கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால், இந்த சிலிக்கான் முயற்சி வெற்றியடையுமா என்பது குறித்து சந்தேகம் தெரிவிக்கும் அகபி, ` நியூரானைப் போன்ற சிலிக்கானை உருவாக்குவது மிகக் கடினம்` எனவும் `அவற்றை அளவிட முடியும் எனவும் தான் நினைக்கவில்லை` எனவும் தெரிவித்துள்ளார்.

Source:BBC

http://newsfirst.lk/tamil/2017/08/வெடிகுண்டுகளின்-வாசனையை/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.