Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலாவது பெண் நீதி அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.!

Featured Replies

முதலாவது பெண் நீதி அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.!

இலங்கை வரலாற்றின் முதலாவது பெண் நீதி அமைச்சராக சட்டத்தரணி தலதா அதுகோரல இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2134208858Thalatha_Athukorala.jpg

இந்த நிகழ்வு இன்று காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/23824

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் பெண்கள் தலைமைக்கு வருவது ஒன்றும் அதிசயமல்ல. நீதியே இல்லாத நாட்டில் ஒருவர் நீதி அமைச்சராக வருவதுதான் அதிசயம். அதனையும்விட சிங்கள அரசில்.... நீதி நிறைந்த ஒருவர் நீதி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதுவே உலகமகா அதிசயம். :shocked: 

சொறிலங்கா அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தப் பெண்களும் உருப்படியாக எதையும் சாதித்த வரலாறு இல்லை!

இவர் என்ன செய்யப்போகிறார் என்று கொஞ்ச காலத்தில் தெரிந்துவிடும்.

  • தொடங்கியவர்

குழப்பங்களுக்கு மத்தியிலேயே கடமைகளை பொறுப்பேற்கிறேன்

p17-92805ac0e396ad4f88324ffffba92cd4619590c8.jpg

 

புதிய நீதியமைச்சர் தலதா

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பல்­வேறு குழப்­பங்­க­ளுக்கு மத்தி­யிலேயே கட­மையை பொறுப்­பேற்­கின்றேன். வழக்­குகள் தாம­திப்­பது தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன. இவ்­வி­டயம் குறித்தும் நான் அவ­தானம் செலுத்­துவேன். குற்­றச்­சாட்­டுக்­களில் எந்­த­ள­விற்கு உண்மை உள்­ளது என்­பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.  

புதிய நீதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட தலதா அத்­து­கோ­ரள, தனது கட­மை­களை நேற்று நீதி­அ­மைச்சில் பொறுப்­பேற்­ற­பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அத்­துடன் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் தாமதம் இருப்­பது தொடர்­பாக குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. அதற்­காக விஜே­தாச ராஜபக்ஷ் நீக்­கப்­ப­ட­வில்லை. மாறாக அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­ய­மை­யாலே அவர் நீக்­கப்­பட்டார் எனவும் தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில், நாட்டு மக்கள் அனை­வ­ரதும் உரி­மை­களை பாது­காக்கும் வகை­யிலும் யாருக்கும் அநீதி ஏற்­ப­டா­த­வ­கை­யிலும் எனது கட­மையை மேற்­கொள்ள எதிர்­பார்க்­கின்றேன். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் என்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கையில் பாரி­ய­தொரு பொறுப்பை தந்­துள்­ளனர். அவர்­க­ளது நம்­பிக்­கையை பாது­காக்கும் வகையில் எனது கட­மையை மேற்­கொள்ள முயற்­சிப்பேன். அத்­துடன் குழப்­ப­மா­ன­தொரு பின்­ன­ணி­யிலே இந்த அமைச்சு பொறுப்பை எனக்கு ஏற்­றுக்­கொள்­ள­வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. என்­றாலும் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தி நீதி­மன்ற சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காக்கும் வகையில் எனது பொறுப்பை நிறை­வேற்ற முயற்­சிப்பேன். 

கேள்வி, கடந்த சில கால­மாக அனை­வ­ராலும் பேசப்­பட்ட இந்த அமைச்சில் எவ்­வா­றான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளீர்கள்?

பதில், நீதித்­து­றைக்குள் இருக்கும் நிர்­வாக சேவை­களை மேற்­கொள்­வதே எமது கடமை. வழக்­குகள் தாம­திப்­பது தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. அமைச்சு என்­ற­வ­கையில் வழங்­கக்­கூ­டிய ஒத்­து­ழைப்­புகள் மற்றும் வச­தி­களை நீதி­மன்­றங்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க எதிர்­பார்க்­கின்றேன்.

கேள்வி, சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு எதி­ராக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வாறு கையாள நினைக்­கின்­றீர்கள்?

பதில், குற்­றச்­சாட்டு தெரி­விக்க அனை­வ­ருக்கும் உரிமை உண்டு. அந்த குற்­றச்­சாட்­டுக்கள் எந்­த­ள­வுக்கு உண்­மை­யா­னது என்­பது தொடர்­பாக இதன் பின்­னர்தான் தேடிப்­பார்க்­க­வேண்டும்.

கேள்வி, நீதி அமைச்­ச­ராக இருந்த விஜே­தாச ராஜபக்ஷ் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறினார் என்றும் கடந்த கால ஊழல் மோச­டி­கா­ரர்­களின் வழக்­கு­களை தாம­தப்­ப­டுத்­தினார் என்றும் குற்றம் சுமத்­தியே விலக்­கப்­பட்டார். இது தொடர்­பாக நீங்கள் நீதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் அவ­ருடன் கதைத்­தி­ருக்­கின்­றீர்­களா?

பதில், இல்லை. அவ­ருடன் இது தொடர்­பாக கதைக்க தேவை இருக்­க­வில்லை. கதைக்­கவும் இல்லை. எனக்கு அவரை நீண்­ட­கா­ல­மாக தெரியும். நாங்கள் ஒன்­றாக இருந்­த­வர்கள். அதனால் அவ­ரிடம் கேட்டு அறி­வ­தற்கு எனக்கு ஒன்றும் இருக்­க­வில்லை.

கேள்வி, அப்­ப­டி­யாயின் அவர் மீது தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

பதில், அவ்­வாறு ஒரே­த­ட­வையில் தெரி­விக்க முடி­யாது. அர­சாங்கம் என்­ற­வ­கையில் அனை­வரும் கூட்­டுப்­பொ­றுப்­புடன் வேலை­செய்­யும்­போது. அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை கடைப்­பி­டிப்­பது அனை­வ­ரதும் கடமை. அதனால் அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்டால் அது­தொ­டர்­பாக நாங்கள் தனிப்­பட்ட நிலைப்­பாட்­டுக்கு வர­மு­டி­யாது. வர­வும்­மாட்டோம்.

கேள்வி, ராஜபக்ஷ் குடும்­பத்தின் ஊழல் மோச­டிகள் மற்றும் அந்த அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரான மோச­டி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அர­சாங்கம் ஆட்­சிக்கு வர­முன்னர் தெரி­வித்­தது. ஆனால் 2வரு­டங்கள் கடந்தும் ஒன்றும் இடம்­பெ­ற­வில்லை என்ற குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. அப்­ப­டி­யாயின் தேர்தல் காலத்தில் பொய்­யையா தெரி­வித்­தீர்கள்?

பதில், இல்லை. இது­தொ­டர்­பாக எனக்கு உடனே பதில் அளிக்க முடி­யாது. இன்­றுதான் (நேற்று) கட­மையை ஏற்­றுள்ளேன். இந்த விட­யங்கள் தொடர்­பாக தேடிப்­பார்த்து வழங்­குகள் தாம­திப்­ப­தற்­கான காரணம் என்ன என்­பதை ஆரா­ய­வேண்டும். அது­சம்­பந்­த­மாக நான் கவனம் எடுப்பேன்.

பொது­வாக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் தாமதம் இருப்­பது தொடர்­பாக குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. மோசடி குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக ஆரம்­ப­மாக பொலிஸார் விசா­ர­ணை­களை முடித்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு ஒப்­ப­டைத்த பின்­னர்தான் அது­தொ­டர்­பாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு செயற்­ப­ட­மு­டியும். சட்­டமா அதிபர் திணைக்­களம் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக தீவி­ர­மாக ஆராய்ந்த பின்­னரே வழக்கு தொட­ர­மு­டியும். அவ்­வா­றில்­லாமல் நினைத்­த­வாறு வழக்­கு­தொ­டர முடி­யாது.

கேள்வி, அப்­ப­டி­யாயின் ராஜ­பக்ஷ்­வி­ன­ருக்கு எதி­ரான வழக்­கு­களை தாம­தப்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டில் விஜே­தாச ராஜக்ஷ்வை ஏன் இந்த பத­வியில் இருந்து நீக்­கி­னார்கள்?

பதில், விஜே­தாச ராஜபக்ஷ் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி செயற்­பட்டார் என்­ப­தற்கே நீக்­கப்­பட்டார் என்­ப­துதான் எனக்கு தெரியும். மாறாக ஊட­கங்­களும் ஏனைய அர­சியல் நிலைப்­பா­டு­களில் இருப்­ப­வர்கள் தெரி­விப்­ப­து­தொ­டர்­பாக எங்­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­மு­டி­யாது. அவர் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறினார் என்­பது அனை­வரும் அறிந்த விடயம். அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்தை சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­களை பெற்றே மேற்­கொண்டோம். இந்த விட­யத்தை அவர் பகி­ரங்­க­மா­கவே எதிர்த்­து­வந்தார். அதனால் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு அவர்­மீது இருந்த நம்­பிக்கை இல்­லாமல் போனது.

கேள்வி, சட்­டமா அதிபர் திணைக்­கள நட­வ­டிக்­கை­களில் தலை­யி­ட­வில்லை என்­ப­தற்­கா­கவும் மத்­திய வங்கி பிணை­முறி விசா­ர­ணையை மறைப்­ப­தற்­கா­க­வுமே விஜே­தாச ராஜபக்ஷ் நீக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு யாருக்கும் குற்­றச்­சாட்டு தெரி­விக்­கலாம். அது­தொ­டர்­பாக ஆராய்ந்து அதனை ஏற்­றுக்­கொள்­வதா இல்­லையா என்­பதை நான் தீர்­மா­னிப்பேன். அத்­துடன் விஜே­தாச ராஜபக்ஷ் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் தலை­யிட்­டாரா என்­ப­து­தொ­டர்­பாக எனக்கு தெரி­யாது. அது­தொ­டர்­பாக தேடிப்­பாக்­க­வேண்டும். அத்­துடன் பிணை­முறி தொடர்­பான விசா­ரணை விசேட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் கீழ் நடத்­தப்­ப­டு­கின்­றது. அதனை யாரு­டைய தேவைக்­கா­கவும் மறைக்­கவும் முடி­யாது. வெளியில் எடுக்­கவும் முடி­யாது.

கேள்வி, 82வழக்கு விசா­ர­ணை­களை தாம­தப்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டு விஜே­தாச ராஜபக்ஷ் மீது தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில், அவ்­வா­றான குற்­றச்­சாட்டு தொடர்­பாக ஜனா­தி­பதி அல்­லது பிர­தமர் தெரி­வித்­தி­ருந்தால் எனக்கு பதி­ல­ளிக்க முடியும். வேறு யாரா­வது தெரி­விப்­ப­தற்கு என்னால் பதி­ல­ளிக்க முடி­யாது.

கேள்வி, ஊழல் மோச­டி­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக வேறு நீதி­மன்றம் அமைத்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில், அது என்னால் இடம்­பெ­றக்­கூ­டி­ய­தொன்­றல்ல. பிர­தம நீதி­ய­ரசர் உட்­பட சிலரால் மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­தாகும். அதன் பிர­காரம் அது இடம்­பெறும். சட்­டமா அதிபர் திணைக்­களம் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக தனி தீர்­மானம் எடுத்த காலம் இருந்­தது. தற்­போது அது தொடர்பில் யாருக்கும் நினை­வில்லை. நீதி­மன்­றத்­தையும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும் ஒரே­நே­ரத்தில் இயற்­றி­ய­தொரு காலம் நாட்டில் இருந்­தது. அப்­போது யாரும் கதைக்­க­வில்லை. வர­லாற்றில் ஒரு­போதும் இல்­லா­த­வ­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ்வின் கீழே சட்­டமா அதிபர் திணைக்­களம் இருந்­தது. அப்­போது யாரும் கதைக்­க­வில்லை.

ஆனால் இன்று நீதி­மன்ற அதி­கா­ரங்கள் உட்­பட அனைத்து நிறு­வ­னங்­களும் சுதந்­தி­ர­மாக செயற்­படும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். ஊட­கங்கள் சுதந்­தி­ர­மாக செயற்ட, கதைப்­ப­தற்கு, ஆர்ப்­பாட்டம் செய்­வ­தற்கு என அனைத்து விட­யங்­க­ளுக்கும் பூரண சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இது­வ­ரை­கா­லமும் நிறை­வேற்று அதி­கா­ரியின் கீழ் இருந்த சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை சுயா­தீ­ன­மாக செயற்­படும் நிலைக்கு கொண்­டு­வந்­தது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் என்­பதை மறக்­கக்­கூ­டாது.

கேள்வி, முன்னாள் அமைச்­சர்கள் 10பேரை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு நீங்கள் இணக்கம் தெரி­வித்தே இந்த பொறுப்பை ஏற்­றுள்­ள­தாக விமல் வீர­வன்ச தெரி­விக்­கி­றாரே?

பதில், விமல் வீர­வன்ச செய்­த­வற்­றையே தற்­போது கூறு­கிறார். கடந்த அர­சாங்­கத்­தின்­போது, யாரை கடத்­து­வது, எந்த ஊடக நிறு­வ­னத்­துக்கு தீவைப்­ப­துபோன் தீர்­மா­னங்­களை எடுத்­தது அவர்­கள்தான். அதே­போன்று நீதி­ப­தி­க­ளுடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­யது அவர்­க­ளது தலை­வர்­க­ளாகும். நாங்கள் அல்ல. அதனால் இந்த திருடர்கள் எப்போதும் ஏனைவர்கள் அரசியல் செய்வதும் திருடுவதற்கு என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

கேள்வி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உங்களது வேலைத்திட்டங்களை அவதானிப்பதாக தெரிவித்துள்ளாரே?

பதில், எனது வேலைத்திட்டங்களை அவதானிப்பதாக அல்ல. என்னை நோக்கி பார்த்துக்கொண்டுடிருப்தாகவே எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் என்னை நோக்கி பார்த்துக்கொண்டிருப்பதென்றால் அதில் எனக்கு மிகவும் விருப்பம்.

கேள்வி யுத்தக்குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தப்போவதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில், நாட்டின் இறையான்மை மற்றும் அரசாங்கத்தை பாதுகாக்கும் எவரையும் எந்த நீதிமன்றத்திலும் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். உயிர் நீத்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை நாங்கள் பாதுகாப்பது அரசியல் லாபம் தேடுவதற்கல்ல. பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்றவகையில் அவர்களை பாதுகாப்பது எமது கடமை என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.