Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள்

Featured Replies

ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள்

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் குறித்து இப்­போது அதி­க­ளவில் பேசப்­பட்டு வரு­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களை காலம் தாழ்த்­தாது வெகு­வி­ரைவில் நடத்த வேண்­டு­மென அர­சியல் கட்­சி­களும் அமைப்­பு­களும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தென்­பது ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான செய­லா­கு­மென்றும் கட்­சி­களும், அமைப்­பு­களும் தெரி­வித்து வரு­கின்­றன. இந்­நி­லையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அதி­க­ரிக்க தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யி­லி­ருந்து கோரிக்­கை­க­ளுக்கு அனு­மதி கிடைத்­தி­ருப்­ப­தாக கூட்­டணி மார்­தட்டி கொள்­கின்­றது. இது மகிழ்ச்­சி­யான செய்­தியே என்­ற­போதும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் சேவைகள் முழு­மை­யாக உரி­ய­வாறு மலை­யக மக்­களை சென்­ற­டைய வழி­வ­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பது பெரும்­பா­லா­னோரின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

உள்ளூர் அதி­கார நிறு­வ­னங்கள் என்ற நிலையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றன. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஊடாக பிர­வே­சித்த சிலர் அர­சி­யலில் உயர் நிலைக்கு சென்ற வர­லா­று­களும் இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் நகர்ப்­புற மற்றும் கிரா­மப்­புற மக்­க­ளுக்கு பல்­வேறு சேவை­களை வழங்­கு­கின்­ற­போதும் மலை­யகப் பெருந்­தோட்ட மக்கள் தொடர்பில் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யி­லேயே செயற்­பட்­டு­ வ­ரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். இதனால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு பிர­தி­நி­தி­களை தெரிவு செய்து அனுப்­பிய போதும் உரிய பயனை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் பெருந்­தோட்ட மக்கள் இருந்து வரு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் முக்­கி­யத்­துவம்

கீழ் மட்ட மக்­களின் நெருக்­க­மான அர­சியல் பங்­கேற்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் விளங்­கு­கின்­றன. அவர்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி மற்றும் சமு­தாய மேம்­பாட்டு தேவை­களை அவர்­களே திட்­ட­மிட்டு தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்­ப­தனை அடிப்­ப­டை­யாக கொண்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் எஸ்.விஜ­ய­சந்­திரன் தெரி­விக்­கின்றார். உயர் மட்­டத்தில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் அடி­மட்­டத்­திலும் இடம் பெறு­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உத­வு­கின்­றன. இது ஜன­நா­யக தன்­மை­ மிக்க ஒரு நிறு­வ­ன­மா­கவும் பெயர் பெற்­றுள்­ளது. மக்கள் தமக்கு அறி­மு­க­மா­ன­வர்­களை பிர­தி­நி­தி­க­ளாக தெரிவு செய்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு அனுப்­பு­வதன் ஊடாக அபி­வி­ருத்­திக்கு பாதை அமைத்துக் கொள்­கின்­றனர். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஊடாக நிர்­வாக ஒழுங்­க­மைப்பு நிலை­மை­யையும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. உல­கத்தில் அதி­க­மான நாடு­களில் ஒரு முக்­கி­ய­மான அமைப்­பாக இது காணப்­ப­டு­கின்­றது. கொள்கை உரு­வாக்கம் என்­கிற நிலையில் பாரா­ளு­மன்றம் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றது. மாகாண சபைகள் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கின்­றன. இந்த வகையில் கிராம மட்­டத்­தி­லான மேம்­பாட்­டிற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் துணை புரி­கின்­றன. நகர சபைகள், மாந­கர சபைகள் பிர­தேச சபைகள் என்­பன இவ்­வி­ட­யத்தில் முக்­கிய செய­லாற்­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இளை­ஞர்­க­ளாக இணைந்து பலர் அர­சியல் நடை­மு­றை­க­ளையும் அர­சியல் அனு­ப­வங்­க­ளையும் பெற்­றுக்­கொள்­கின்­றனர். இது பிற்­கா­லத்தில் அவர்கள் அர­சி­யலில் முக்­கியப் பத­வி­களில் அமர்ந்து மக்­க­ளுக்­கான சிறந்த சேவையை ஆற்­று­வ­தற்கு ஒரு களத்தை ஏற்­ப­டுத்தி கொடுக்­கின்­றது. நாட்­டுக்கு தேவை­யான சிறந்த தலை­வர்­களை உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உரு­வாக்­கு­கின்­றன.

கிரா­மங்­களில் செறிந்து வாழும் மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் மாகாண சபை அல்­லது பாரா­ளு­மன்­றத்தில் இல்­லாமல் போகக்­கூ­டிய வாய்ப்­புகள் அதி­க­முள்­ளன. எனவே இத்­த­கையோர் தமது பிர­தி­நி­தித்­து­வத்­தினை ஓர­ள­வா­வது உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் பெரிதும் உத­வு­கின்­றன. சிறு­பான்மை மக்­களை பொறுத்­த­வ­ரையில் இது ஒரு முக்­கிய விட­ய­மாக அமைந்­துள்­ளது. பல்­லின மக்கள் வாழு­கின்ற ஒரு சமூ­கத்தில் முக்­கி­ய­மான ஒரு அர­சியல் நிறு­வ­ன­மா­கவும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அமைந்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

எட்­டாக்­கனி

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக கரு­தப்­ப­டு­கின்ற போதும் இம்­மன்­றங்­களின் ஊடான சேவை­களை எம்­ம­வர்கள் பெற்றுக் கொள்­வதில் சில இடர்­பா­டு­களும் இருக்­கத்தான் செய்­கின்­றன. 1987 ஆம் ஆண்டு பிர­தேச சபைகள் சட்­டத்தின் 15 ஆம் இலக்க 33 ஆவது சரத்­தா­னது பிர­தேச சபையின் நிதி­யினை பெருந்­தோட்­டங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு முட்­டுக்­கட்­டை­யாக உள்­ளது. தோட்டப் பிர­தேச குடி­யி­ருப்­புகள் தனி­யாரின் உடை­மை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன. உள்­ளூ­ராட்சி சபை­களின் நேரடி நிதி மூலம் தோட்­டப்­பு­றங்­க­ளுக்கு சேவை­யாற்ற முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. உட­ப­ளாத்த பிர­தேச சபை ஏற்­க­னவே கலைக்­கப்­பட்­ட­தற்கு நிதிப் பயன்­பாடும் முக்­கிய கார­ண­மாக அமைந்­தது. பெருந்­தோட்­டங்கள் தனியார் உடை­மை­க­ளாக கரு­தப்­ப­டு­வதன் கார­ண­மாக மேலும் பல சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. பெருந்­தோட்ட மக்கள் மிகவும் விருப்­பு­டனும் ஈடு­பாட்­டு­டனும் பிர­தேச சபை தேர்­தல்­களில் வாக்­க­ளிப்­ப­தனை எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. எனினும், வாக்­க­ளித்து உரிய பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்து அர­சி­ய­லுக்கு அனுப்­பிய போதும் உரிய பயன் மற்றும் அபி­வி­ருத்­திகள் கிடைக்­காத போது அம்­மக்­களின் முயற்சி பய­னற்றுப் போகின்­றது. இந்­நி­லை­யா­னது, பெருந்­தோட்ட மக்­களின் மனதில் தாக்க நிலை­மை­யினை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது. எனவே பெருந்­தோட்­டங்­களின் அபி­வி­ருத்­திக்கு தடைக்­கல்­லாக உள்ள சரத்­துகள் நீக்­கப்­ப­டு­வது மிக­வும்­அ­வ­சி­ய­மாக உள்­ளது. இச்­ச­ரத்­துகள் நீக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்­தினை அர­சி­யல்­வா­திகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இக்­கோ­ரிக்­கைகள் கவ­னத்தில் கொள்­ளப்­பட்டு உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வது மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.

எவ்­வா­றெ­னினும், மலை­யக மக்­களின் அர­சியல் எழுச்­சிக்­கான ஒரு உந்­து­சக்­தி­யினை பிர­தேச சபைகள் உள்­ளிட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஏற்­ப­டுத்தி இருக்­கின்றன என்றால் அது மிகை­யில்லை. அர­சியல் எழுச்­சியின் முக்­கிய பங்­கா­ளி­க­ளாக உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் விளங்­கு­கின்­றன.

 

பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீடு

இலங்­கையில் சுமார் 52 சத­வீ­த­மா­ன­வர்­க­ளாக பெண்கள் காணப்­ப­டு­கின்­றனர். நாட்டின் அபி­வி­ருத்­தியை பொறுத்­த­வ­ரையில் பெண்­களின் பங்­க­ளிப்பு என்­பது அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. மலை­யக பெண்­களும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. ஆடைத் தொழிற்­சா­லையில் மலை­யக பெண்கள் பலர் பணி­பு­ரி­கின்­றனர். பாட­சாலைக் கல்­வி­யினை முடித்து கொண்ட யுவ­தி­களில் பலர் ஆடை தொழிற்­று­றையை தெரிவு செய்து உழைப்பில் மூழ்கி வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். இது­போன்றே தேயிலை தொழிற்­து­றையில் பல பெண்கள் பணி­யாற்­று­கின்­றனர். இன்னும் பல மலை­யக பெண்கள் மத்­திய கிழக்கு நாடு­களில் வீட்டுப் பணிப் பெண்­க­ளாக பணி­பு­ரிந்து நாட்­டிற்கு பண­ம­னுப்­பு­கின்­றனர். எனவே இலங்­கையின் வரு­மா­னத்தில் மலை­யக பெண்­களின் பங்­க­ளிப்பு என்­பது அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­ற­னமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பெண்கள் முக்­கி­யத்­துவம் மிக்­க­வர்­க­ளா­கவும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுப்­ப­வர்­க­ளா­கவும் இருந்­த­போதும் அர­சியல் துறை­களில் பெண்­களின் வகி­பாகம் போது­மா­ன­தாக இல்லை. தீர்­மானம் மேற்­கொள்ளும் இடங்­களில் பெண்­களின் பங்­க­ளிப்பு என்­பது மிக மிக குறை­வா­கவே உள்­ளது. பல இடங்­களில் பெண்கள் புறந்­தள்­ளப்­ப­டு­கின்ற நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் பெண்­களின் அர­சியல் ரீதி­யான பங்­கேற்­பினை அதி­க­ரிக்கும் நோக்கில் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் பெண்­க­ளுக்­கென்று 25 சத­வீத இட ஒதுக்­கீடு வழங்­கப்­பட உள்­ள­தாக செய்­திகள் வலி­யு­றுத்தி இருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். இந்த வாய்ப்­பினை மலை­யகப் பெருந்­தோட்ட பெண்­க­ளுக்கும் உரி­ய­வாறு பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர்.

இதே­வேளை இலங்கை பாரா­ளு­மன்­றத் தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் பெண் உறுப்­பி­னர்­களின் சத­வீதம் 5.8 ஆக உள்­ள­தா­கவும், மாகாண சபையில் 3.9 சத­வீ­த­மா­கவும், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 1.8 சத­வீ­த­மா­கவும் இது காணப்­ப­டு­வ­தா­கவும், மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் இணைப்­பாளர் எம்.கீர்த்­திகா அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். 1978 அர­சி­ய­ல­மைப்பு முதல் தற்­போ­தைய பாராளு­மன்றம் வரையில் இலங்­கையில் பாரா­ளு­மன்ற பெண் பிர­தி­நி­தி­களின் பங்­க­ளிப்­பா­னது ஆறு சத­வீ­தத்­துக்கு குறை­வா­ன­தா­கவே இருந்­துள்­ளது. பாராளு­மன்­றங்­க­ளுக்கு இடை­யி­லான தரப்­ப­டுத்­தலின் அடிப்­ப­டையில் 138 நாடு­களின் பட்­டி­யலில் 128 ஆவது இடத்­தி­லேயே இலங்கை உள்­ளது. தெற்­கா­சிய வல­யத்தில் ஆணா­திக்க சமூக முறைமை காணப்­ப­டு­கின்ற அதே­வேளை, சமூகம் பெண்­க­ளுக்கு கட­மை­க­ளையே வழங்கி இருப்­ப­தா­கவும் தக­வல்கள் வலி­யு­றுத்­து­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதே­வேளை, பெண்கள் அர­சியல் போன்ற துறை­களில் பங்­க­ளிப்பு செய்­வ­தா­னது மேலைத்­தேய நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் குறைந்த மட்­டத்தில் காணப்­ப­டினும் இலங்கை மற்றும் மாலை­தீவு போன்ற நாடு­களைத் தவிர வல­யத்தின் ஏனைய நாடுகள் குறிப்­பி­டத்­தக்க அள­வி­லான பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கலப்பு முறையில் தேர்தல்

இம்­முறை இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் விகி­தா­சார மற்றும் தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­துவ முறை­மைகள் இணைந்த கலப்பு முறையில் இடம்­பெற உள்­ளது. விகி­தா­சார தேர்தல் முறையின் கீழ் பல்­வேறு குறை­பா­டுகள் காணப்­பட்­டன. உட்­கட்சி பூசல்கள் அதி­க­ரிப்பு, அதிக செல­வுகள், பிர­தி­நி­திக்கும் மக்­க­ளுக்கும் இடையே குறைந்த தொடர்­புகள் காணப்­பட்­டமை என்று பல்­வேறு குறை­பா­டுகள் விகி­தா­சார தேர்தல் முறைமை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தலைக் கலப்பு முறையில் நடத்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இத­ன­டிப்­ப­டையில் புதிய முறை­மையின் கீழ் இத்­தேர்தல் இடம் பெறு­கின்­றது.

உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில் 55 இற்கும் மேற்­பட்ட திருத்­தங்கள் உள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்தார். உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள திருத்­தங்­களில் சிக்கல் நிலை இருப்­ப­தாக மக்கள் விடு­தலை முன்­னணி போன்ற கட்­சிகள் சுட்­டிக்­காட்டி இருந்­தன. எனினும், பின்னர் மக்கள் விடு­தலை முன்­னணி உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்தச் சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தி­ருந்­தது. இவற்­றோடு ஐக்­கிய தேசிய கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அரச ஆத­ரவு அணி­யினர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்சி என்­ப­னவும் ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தி­ருந்­த­மையும் தெரிந்த விட­ய­மே­யாகும்.

 

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­க­ரிப்பு  

மலை­யக பகு­தி­களில் பிர­தேச சபைகள் மற்றும் பிர­தேச செய­ல­கங்கள் என்­பன அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று மலை­யக மக்கள் முன்­னணி தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில் மலை­யக மக்கள் முன்­ன­ணி­யுடன் இணைந்து தொழி­லாளர் தேசிய சங்கம், ஜன­நா­யக மக்கள் முன்­னணி என்­பன தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் ஊடாக இக்­கோ­ரிக்­கைக்கு வலுச் சேர்த்­தி­ருக்­கின்­றன. மலை­யக பகு­தி­களில் பிர­தேச சபை­களில் அதி­க­ரிக்­கப்­படும் பட்­சத்தில் மலை­யக மக்­க­ளுக்­கான மாவட்டம் மற்றும் மாகாணம் என்­ப­வற்றை நோக்கி நகர்­வ­தற்கு இது உந்து சக்­தியா அமையும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. மேலும், தனி­யான அதி­கார அலகு போன்­ற­வற்றை பெற்­றுக் ­கொள்­ளவும் இந்­நிலை வலுச்­சேர்க்கும் என்றும் கருத்­துக்கள் பலவும் முன்­வைக்­கப்­பட்­ட­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த மக்கள் கருத்­த­றியும் குழு­வி­டமும் மலை­யக மக்­க­ளுக்­கான தனி­யான அதி­கார அலகு மற்றும் தனி­யான மாவட்டம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­ததும் தெரிந்­ததே.

நாட்டில் பத்­தா­யிரம் அல்­லது அதற்கும் குறைந்த மக்­களை கொண்ட பிரி­வுகள் பிர­தேச சபை­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருகின்­றன. எனினும் இரண்டு இலட்­சத்­துக்கு அதி­க­மான சனத்­தொ­கையைக் கொண்ட அம்­ப­க­முவ மற்றும் நுவ­ரெ­லியா ஆகி­ய­வற்­றுக்கு தலா ஒரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. இதனால் உரிய அபி­வி­ருத்­தியை மலை­யக மக்­க­ளிடம் கொண்டு செல்ல முடி­யாது என்று தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்தி இருந்­தது. இந்­நி­லையில் தாம் விடுத்த கோரிக்­கையை ஏற்று நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக தமிழ் முற்­போக்குக் கூட்­டணி மார்­தட்டி கொண்­டி­ருக்­கின்­றது. இது மலை­யக மக்­க­ளுக்கு பெரும் பக்­க­ப­ல­மாகும் என்றும், அத்­துடன் இது ஜன­நா­ய­கத்­திற்கு கிடைத்த பாரிய வெற்றி என்றும் முன்­னணி மேலும் தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

 

உண்­மையில் பிர­தேச சபைகள் உள்­ளிட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் கீழ் மட்ட மக்­க­ளுக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மாகும் என்­ப­தனை மறுப்­ப­தற்­கில்லை. இந்த வகையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­க­ரிப்பு என்­பது மகிழ்ச்­சிக்­கு­ரிய ஒரு விட­ய­மாகும். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 05 ஆக இருக்கும் பிர­தேச சபை­களின் எண்­ணிக்­கையை12 ஆக உயர்த்த இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. அம்­ப­க­முவ பிர­தேச சபை­யா­னது நோர்வூட், மஸ்­கெ­லியா, அம்­ப­க­முவ என்ற மூன்று சபை­க­ளா­கவும், நுவ­ரெ­லியா பிர­தேச சபை­யா­னது தல­வாக்­கலை, அக்­க­ரப்­பத்­தனை, நுவ­ரெ­லியா என்று மூன்று சபை­க­ளா­கவும் வலப்­பனை பிர­தேச சபை­யா­னது நில்­தண்­டா­ஹிள்­ளன, வலப்­பனை என்­கிற இரண்டு சபை­க­ளா­கவும், கொத்­த­மலை பிர­தேச சபை­யா­னது கொத்­மலை மேற்கு மற்றும் கொத்­மலை கிழக்கு என்ற இரண்டு சபை­க­ளா­கவும், ஹங்­கு­ரான்­கெத்த பிர­தேச சபை­யா­னது மது­ரட்ட, ஹங்­கு­ரான்­கெத்த என்ற இரண்டு சபை­க­ளா­கவும் மாற்­று­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்தை அர­சாங்கம் வழங்கி இருப்­ப­தாக தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் செய்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன.

இந்­நி­லையில் பிர­தேச சபைகள் அதி­க­ரிக்­கப்­பட்டால் அர­சியல் ரீதி­யான போட்­டி­களும் அதி­க­ரிக்கும் சாத்­தியம் உரு­வாகும். ஆனால், பிர­தேச செய­ல­கங்கள் அதி­க­ரிக்­கப்­பட்டால் மக்­களின் சேவைகள் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வது மட்­டு­மல்­லாது புதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வாக்­கப்­படும். மலை­யக பட்­ட­தாரி இளை­ஞர்கள் அதற்குள் உள்­வாங்­கப்­ப­டுவர் என்று சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். அர­சி­யல்­வா­தி­களா? அதி­கா­ரி­களா? எமக்கு அவ­சியம் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்­கின்றார்.

இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி மற்றும் மலை­யக மக்கள் முன்­னணி என்­ப­வற்றின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் பின்­வ­ரு­மாறு தனது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தினார். உள்­ளூ­ராட்சி தேர்­தல்கள் விரைவில் இடம்­பெற உள்­ளன. இதனால் பிர­தேச சபை­யினை நாங்கள் முன்­னிலைப்படுத்­தி­யி­ருக்­கின்றோம். பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்கும் நோக்­கி­லேயே பிர­தேச செய­ல­கங்­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்றோம். இதற்­கான ஏற்­பா­டுகள் இப்­போது இடம் பெற்று வரு­கின்­றன. பொது நிர்­வாக உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு பிர­தேச செய­லக உரு­வாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. பிர­தேச சபை, பிர­தேச செய­லகம் இரண்டும் சாத்­தி­யப்­படும் அதி­க­மான பிர­தேச செய­ல­கங்­களே பிர­தேச சபைகள் சில இடங்­களில் இரண்டு பிர­தேச செய­ல­கங்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு ஒரு பிர­தேச சபை உரு­வாகி இருக்­கின்­றது. அதி­க­மான இடங்­களில் ஒரு பிர­தேச செய­ல­கத்­திற்கு ஒரு பிர­தேச சபை என்றே காணப்­ப­டு­கின்­றது. பிர­தேச சபை­களை இலக்கு வைத்தே எமது முன்­னோக்­கிய நகர்வு இடம்­பெ­று­கின்­றது. பிர­தேச சபையின் ஊடாக அர­சியல் அதி­கா­ரமும் தேவை­யாகும். இதனை யாரும் மறுக்க முடி­யாது. இதே­வேளை, நிர்­வாக அதி­கா­ரமும் அவ­சி­ய­மாகும். ஒரு சமூ­கத்­துக்கு கிடைக்கும் அர­சியல் அதி­கா­ரத்தை இல்­லாமல் செய்­து­விட முடி­யாது என்­ப­தையும் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாக்­கு­ப­லத்தின் ஊடாக உரி­ய­வர்­களை அர­சி­ய­லுக்கு தெரிவு செய்ய வேண்டும். இது அவர்­களின் கட­மை­யாகும் என்றார்.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தொகை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் மகிழ்ச்சி தெரி­வித்­துள்ள சிலர் நுவ­ரெ­லியா மாவட்­டத்­திற்கு வெளியில் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் அதி­க­மாக வாழ்­வ­தா­கவும் இவர்­களின் நலன் கரு­தியும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென்றும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் சுமார் ஒன்­றரை இலட்சம் பேரும், கேகாலை மாவட்­டத்தில் 75 பேரும், பதுளை மாவட்­டத்தில் இரண்டு இலட்சம் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரும் உள்­ளனர். கொழும்பு, களுத்­துரை, கிளி­நொச்சி, வவு­னியா போன்ற மாவட்­டங்­க­ளிலும் இந்­திய வம்­சா­வளி மக்கள் கணி­ச­மாக வாழ்ந்து வரு­கின்­றனர். இத்­த­கைய மாவட்­டங்­க­ளிலும் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் நலன் கருதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். உள்­ளூரில் அர­சியல் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள இது வாய்ப்­ப­ளிக்கும்.

 

கீழி­ருந்து மேல்­நோக்­கிய திட்­ட­மிடல்

திட்­ட­மிடல் என்­பது பல வகை­களை கொண்­ட­தாகும். அவற்றுள் கீழி­ருந்து மேல் நோக்­கிய திட்­ட­மிடல் என்­பது முக்­கி­ய­மாகும். இதனை கீழ் மட்ட கிரா­மங்­களே மேற்­கொள்ள வேண்டும். உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இதற்கு உந்­து­சக்­தி­யாக அமை­கின்­றன என்­கிறார் பேரா­சி­ரயர் சோ.சந்­தி­ர­சே­கரன். இது­பற்றி அவர் மேலும் கூறு­கையில், மேல்­மட்ட அதி­கார வர்க்கம் கீழ் மட்ட மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கலாம் என்­பது பழைய கோட்­பா­டாகும். 1950, 70 களில் இத்­த­கைய நிலை அதி­க­மாக காணப்­பட்­டது. கீழ் மட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் பற்றி கீழ் மட்ட மக்­க­ளுக்கே அதிகமாக தெரியும் என்கிற சிந்தனை இன்று வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவே பொறுத்தமானதுமாகும். மக்கள் பிரச்சினைகளை அறிந்தவர்கள், தீர்வும் தெரிந்தவர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். உள்ளூராட்சி மன்றங்கள் அந்த சிந்தனையையும் பிரதிபலிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவில் பஞ்சா யத்து முறை காணப்படுகின்றது. பத்து பஞ்சாயத் தினை இணைத்து பஞ்சாயத்து ஒன்றி யங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காந்திய டிகள் கிராம இராஜ்ஜியங்களை வலியுறுத் தினார். இதன் மூலம் வெற்றியடையலாம் என்ற எண்ணக்கருவை அவர் கொண்டி ருந்தார். மாநிலங்களை அடிப்படையாக வைத்து கிராமங்களை அபிவிருத்திசெய்ய முடியாது. பஞ்சாயத்து மூலமாக இங்கு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உள்ளூராட்சி ஏற்பாடுகள் இந்தியாவில் சிறப்பாக உள்ளன. இந்தி யாவில் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கின் றது. உள்ளூராட்சி அமைப்புக்களின் ஊடாக ஜனநாயகம் வாழ்வதனைக் காட்டு கின்றது. கீழ் மட்ட குடியரசுக ளுக்கு இந்தியா வழங்கியுள்ள முக்கியத் துவத்தையும் உணர் த்துகின்றது. மக்களுக்கு அருகேயுள்ள நிறுவனங்களே உள்ளூராட்சி மன்றங்களா கும். மக்களின் பங்களிப்பை இவை உறுதி செய்கின்றன. அரசியல் கல்வியை உள்ளூ ராட்சி மன்றங்கள் வழங்குகின்றன. அபிவிருத்தி குறித்து பேசுகையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முன்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேசிய வருமானம், மொத்த தேசிய உற்ப த்தி என்றெல்லாம் பேசப்பட்டது. இன்று அரசியல் அபிவிருத்தி பற்றி பேசப்படு கின்றது.  

இதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் உதவும். ஜனநாயகத்தின் சின்னங்கள் இவை யேயாகும். மக்களாட்சி மலர்வ தற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் வலுப்படுத் தப்பட வேண்டும். குடியரசு என்ற கருத்தை நன்றாக நிறுவக் கூடிய உள்ளூராட்சி நிறுவனங்களே மன்னராட்சி காலத்திலும் இத்தகைய முறையிலேயே இருந்துள்ளன. இங்கிலாந்தில் உள்ளூராட்சி சபைகளிடம் கல்வி இருந்தது. 

கல்வித்துறையை கவனி க்கும் அளவிற்கு இங்கிலாந்தில் உள்ளூராட்சி முறை வளர்ந்துள்ளது. பிரித்தானியர் இலங் கையில் கல்வி முறையை உள்ளூராட்சி நிறுவனங்களிடம் ஒப்படைக்க முனைந் தார்கள். இது சாத்தியமாகவில்லை. உள்ளூ ராட்சி நிறுவனங்கள் இலங்கையில் வறுமை யில் இருந்தன. நீண்ட கால பாரம்பரியம் உள்ளூராட்சி முறையில் இருக்கவில்லை. இதனால் சில தோல்விகள் ஏற்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் முக்கியத்து வத் தினை உணர்ந்து செயற்படுவோம்.  

துரை­சாமி நட­ராஜா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.