Jump to content

நெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்!


Recommended Posts

நெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்!

 

 

பெங்களூரில் வசிக்கும் சுகுணா வினோத், `www.kannammacooks.com’ என்ற வலைதளத்தை நிர்வகிக்கும் தமிழ்ப் பெண். கொங்குநாட்டு ஸ்பெஷல் சமையல் குறிப்புகளைப் பதிவிட்டு இரண்டாண்டுகளுக்குள் எக்கச்சக்கமானவர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவரது வலைதளத்தைப் பார்வையிடுகிறார்கள். தன் சமையல் ஆர்வம் பற்றி  பேசுகிறார் சுகுணா...

p110a.jpg

``கொங்கு நாட்டுக்கே உரிய பாரம்பர்ய சமையலில் கைதேர்ந்தவர் என் அம்மா. என் அப்பா, அலுவலக வேலை காரணமாக பல நாடுகளுக்கும் பயணம் செய்வது வழக்கம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வித்தியாசமான ரெசிப்பிகளை அறிந்து அவற்றை வீட்டில் செய்து பரிமாறுவார். கத்தியை லாகவத்துடன் கையாண்டு ரசனையுடன் சமைக்கும் கலையை என் அப்பாவிடம் கற்றேன். கல்லூரியில் படிக்கும்போது பத்திரிகைகளில் பிரசுரமான சமையல் குறிப்புகளைச் செய்து பார்க்க ஊக்குவித்தார் என் அம்மா. எம்.பி.ஏ படிப்பை முடித்தபின் பல வருடங்கள் வங்கியில் பணிபுரிந்தேன்.

திருமணத்துக்குப்பின் அமெரிக்காவில் வசித்தபோது மகன் பிறந்தான். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திக் கொண்டே, சாண்டியாகோ நகரில் ஒரு நண்பரின் பேக்கரியில் பேக்கிங் கலையைக் கற்றுக்கொண்டேன். தாய்நாடு திரும்பி சிறிய பேக்கரியைத் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் திறம்பட நிர்வகித்தேன். உடல்நிலை காரணமாக பேக்கரியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

p110b.jpg

கொங்குநாடு சமையல் குறிப்புகள் சற்றே வித்தியாசமானவை; அபூர்வமானவை. இவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் இணையத்தில் பதிவிட ஆலோசனை கூறினார் என் கணவர். வீட்டில் என் செல்லப்பெயர் கண்ணம்மா. அந்தப் பெயரிலேயே வலைதளத்தை ஆரம்பித்துக் கொடுத்தார் கணவர். உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களிடம் கொங்குநாட்டு பாரம்பர்ய சமையல் குறிப்புகளைக் கேட்டுப்பெற்றுச் சமைத்துப் பார்த்து பின்னர் பதிவிடுகிறேன். எனவே, என் வலைதளத்தை கூட்டுமுயற்சி என்றே சொல்லலாம். சமையல் செய்து பழக்கம் இல்லாதவர்கள்கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் `ஸ்டெப் பை ஸ்டெப்’ போட்டோக்களுடன் விரிவாகப் பதிவிடுகிறேன். யூடியூப் வீடியோக்களிலும் கவனம் செலுத்துகிறேன்.

ஒவ்வொரு சீஸனிலும் மலிவாகக் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த உதவுவதே என் வெற்றியின் ரகசியம்!’’

- உற்சாகமாக சொல்கிறார் சுகுணா வினோத். அவருடைய ஸ்பெஷல் ரெசிப்பிகள் பார்க்கும்போதே சுவையைக் கூட்டுகின்றன.

முருங்கைக்கீரை சூப்

தேவையானவை:

சுத்தம் செய்த முருங்கை இலைகள்  – அரை கப்
பாசிப்பருப்பு – 1/3 கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கறுப்பு மிளகு – ஒரு டீஸ்பூன்
கிராம்பு, ஏலக்காய் – 2
மராட்டி மொக்கு - ஒன்று
கல் பாசி – ஒரு இன்ச் அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
பூண்டுப் பல் - 6
தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
தண்ணீர் – 2 கப்

p110c.jpg

கொதிக்கவைக்க:

நெய் – ஒரு டீஸ்பூன்
மிளகு – கால் டீஸ்பூன் (பொடிக்கவும்)
உப்பு – முக்கால் டீஸ்பூன்
தண்ணீர் – ஒன்று முதல் ஒன்றரை கப்

தாளிக்க:

நெய் – 2 டீஸ்பூன்
முருங்கைக்கீரை – 2 டீஸ்பூன்

செய்முறை:

கழுவிய பாசிப்பருப்பு, சீரகம், வெந்தயம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், மராட்டி மொக்கு, கல்பாசி ஆகியவற்றை குக்கரில் சேர்க்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். சூடு ஆறிய பின் குக்கரைத் திறந்து பருப்புக் கலவையை நன்கு மசித்து பெரிய கண் கொண்ட வடிகட்டியில் வடிகட்டவும் (சிறிய கண் கொண்ட வடிகட்டியைப் பயன்படுத்த வேண்டாம்). பிறகு, முருங்கைக் கீரையை அரைத்து,  விழுதை வடிகட்டி எடுக்கவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி... வடிகட்டிய பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள்  சேர்த்து சிறு தீயில் வைத்து 3 - 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

வாணலியில் நெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ள முருங்கைக் கீரையைச் சேர்த்து மொறுமொறுவென பொரித்தெடுக்கவும். சூப்பை பரிமாறும்போது பொரித்த முருங்கைக் கீரையை மேலே தூவிப் பரிமாறவும்.
உங்கள் கவனத்துக்கு...

முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. உலகளவில் பெரும்பாலான பெண்களுக்கு இன்று ரத்தச்சோகை மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.  நமது அன்றாட உணவில் தினமும் முருங்கைக்கீரையைச் சேர்த்துக்கொள்வதன்மூலம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தைப் பெறலாம்.

பொதுவாக முருங்கைக் கீரையில் கண்ணுக்குத் தெரியாத மண், தூசுகள் படிந்திருக்கும். ஆகவே, நாம் கீரையைப் பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவ வேண்டும். தண்ணீரின் மேலே மிதக்கும் கீரையை கழுவி கைகளால் எடுக்கவும். எப்போதும் கீரை வகைகளைத் தண்ணீரில் போட்டு கழுவும்போது வடிகட்டக் கூடாது. ஏனெனில், அதில் இருக்கும் மண், தூசிகள் தண்ணீரின் அடியில் படிந்திருக்கும்.

சமைக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை:

இயற்கையாகவே முருங்கைக்கீரை கசப்புத்தன்மை கொண்டது. அதனால் முதல் முறை தயாரிக்கும் போது அரை கப் கீரையை பயன்படுத்தி செய்து பார்க்கவும்.  முதலில் முருங்கைக்கீரையை குச்சிகள் இல்லாமல் ஆய்ந்து எடுக்கவும். கீரையில் ஒட்டியிருக்கும் சிறிய குச்சிகள் ஒன்றிரண்டு  இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். பயப்படத் தேவையில்லை.

மட்டன் பிரியாணி

பிரியாணி மசாலா செய்யத் தேவையானவை:

மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
மிளகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பட்டை – சிறிய துண்டு
லவங்கம் – ஒன்று
(மசாலா செய்ய கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து ஆறிய பின் மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும்.)

p110d.jpg

பிரியாணி செய்யத் தேவையானவை:

பாசுமதி அரிசி – 400 கிராம்
கடலை எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 6 – 10 (இரண்டாகக் கீறவும்)
புதினா இலைகள் – கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்

அரைக்க:

பூண்டு – 10 பல்
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – 12
ஊறவைக்க:
மட்டன் – 600 கிராம்
தயிர் – அரை கப்
உப்பு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை – 3
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தைத் தனியாக, விழுதாக அரைத்து எடுக்கவும். ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் கடலை எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் புதினா இலைகள், கொத்தமல்லித்தழை, அரைத்த இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலாப் பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறவைத்த மட்டன், அரை கப் தண்ணீர்  ஊற்றி, குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கர் சூடு ஆறிய பின் திறந்து மட்டன் வெந்துவிட்டதா என பார்க்கவும். நன்கு வேகாமல் இருந்தால் மீண்டும் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும்.

இந்த மட்டன் கிரேவியை அளக்கவும். 400 மில்லி வரும். ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் அல்லது திரவம் சேர்க்க வேண்டும். மீண்டும் குக்கரில் நெய்விட்டு 400 மில்லி மட்டன் கிரேவி, 400 மில்லி தண்ணீர், அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மீடியமான தீயில் மூடி ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மூடி, ஒரு விசில் விட்டு இறக்கவும். குக்கர் ஆறிய பிறகு  திறந்து பிரியாணியைச் சூடாகப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

இந்த பிரியாணி சுவையாக இருப்பதன் ரகசியம் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைப் பயன்படுத்தியதே ஆகும். 

இந்த மசாலாவை நாம் வீட்டில் தயாரிக்கும் மற்ற அசைவ உணவுகளுக்கும் பயன்படுத்தலாம். 

இந்த மசாலா உணவுக்கு அதிக சுவையும் நறுமணத்தையும் தரும்.

டிப்ஸ்:

* மட்டன் நன்கு மிருதுவாக, சமைக்கும்போது சிறிதளவு  பப்பாளிக்காயின் விழுது சேர்க்கலாம்.  அதிகம் சேர்த்தால் குழைந்துவிடும்.

* பிரியாணி செய்வதற்கு பழைய அரிசியைப் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும். அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து சேர்த்தால் அதிக அளவு பிரியாணி கிடைக்கும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
    • சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024   சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர், தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன். இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.   https://www.battinatham.com/2024/11/blog-post_28.html
    • இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁
    • Tamils in US: கவலையா or நம்பிக்கையா? Trump வெற்றி குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் சொல்வதென்ன? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்பின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது குடியேற்றம் தான். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்பு அமைப்பேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? பிபிசிக்காக அமெரிக்காவில் இருந்து விஷ்ணு வி ராஜா மற்றும் அய்யப்பன் கோதண்டராமன்   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.