Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இன்று சபையில் குற்றச்சாட்டு

Featured Replies

இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த போது, இந்தியாவில் 13 பெண்களைக் கற்பழித்து, ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற, 4 இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்ததாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இன்று சபையில் குற்றச்சாட்டு

  • தொடங்கியவர்

பத­வி­க­ளைப் பங்­கு­போ­டு­வ­தி­லேயே காலத்தை வீண் விர­யம் செய்­கி­றோம்

விக்கி மீது தவ­ராசா நேற்­றும் சாடல்

 

“கொழும்பு அரசின் வரவு –செல­வுத்­திட்­டத்­தில் உள் வாங்­கு­வ­தற்­கான எமது முன்­மொ­ழி­வு­களை வரு­டாந்­தம் ஓகஸ்ட் மாதத்­துக்கு முன்­னர் சமர்ப்­பிக்க வேண்­டும்.

இது­வரை வரவு– செல­வுத்­திட்­டத்­துக்­கான முன்­மொ­ழிவு தொடர்­பாக முத­ல­மைச்­சர் எமது உறுப்­பி­னர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்­றீர்­களா?

அல்­லது எமது கோரிக்­கை­க­ளின் நியா­யப்­பாட்டை கொழும்பு நிதி அமைச்­ச­ருக்கோ, தலைமை அமைச்­ச­ருக்கோ எடுத்­து­ரைத்­துள்­ளீர்­களா?

அதி­கா­ரி­கள் தயா­ரித்­துக் கொடுப்­பதை வைத்­துக் கொண்டு எமது கோரிக்­கை­க­ளுக்கு அமைய அரசு நிதி கொடுக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறு­வ­தனை வினைத்­தி­ற­னற்ற செயற்­பா­டென்று கூறா­மல் வேறு எப்­ப­டிக் கூறு­வது?

இத­னைச் செய்­வ­தற்­குப் பதி­லாக நாம் பத­வி­க­ளைப் பங்கு போடு­வ­தி­லேயே எமது காலத்தை வீண் விர­யம் செய்து கொண்­டி­ருக்­கின்­றோம்” இவ்­வாறு வடக்கு மாகாண சபை எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ராசா தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் அமர்வு நேற்று கைத­டி­யி­லுள்ள தலை­மைச் செய­ல­கத்­தில் இடம்­பெற்­றது. இதில் வடக்கு மாகாண சபை­யின் கடந்த கால செயற்­பா­டு­கள் தொடர்­பில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் உரைக்கு பதி­ல­ளித்து எதிர்க்­கட்­சித் தலை­வர் உரை­யாற்­றி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நான் ஏதோ ஊடக விளம்­ப­ரங்­க­ளுக்­காக மாகாண சபை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பாக சித்­த­ரித்­துக் கூறு­வ­தாக முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்­தார். அவ்­வா­றென்­றால் முன்­னர் எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­க­ளில் அத­னைச் செய்­தி­ருக்­க­லாம்.

இந்­திய தலைமை அமைச்­சர் மோடி 2016ஆம் ஆண்டு மார்ச் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­த­போது, போரால் அங்­க­வீ­னர்­க­ளாகி இன்று வாழ்­வா­தா­ரத்­துக்கு அங்­க­லாய்த்­துக் கொண்­டி­ருக்­கும் முன்­னாள் போரா­ளி­கள் தொடர்­பா­கவோ, குடும்­பத் தலை­வி­க­ளா­க­வுள்ள பல்­லா­யி­ரக் கணக்­கான பெண்­க­ளின் வாழ்­வின் விடி­ய­லுக்­கா­கவோ,

பயங்­க­ர­வா­தச் சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் அர­சி­யல் கைதி­கள் தொடர்­பா­கவோ எமது மக்­க­ளின் துயர் துடைக்­கவோ மோடி­யி­டம் வேண்­டு­கோள் விடுப்­ப­தற்­குப் பதி­லாக, சிறு­மி­கள் உட்­பட 13 இளம் பெண்­களை வன்­பு­ணர்ந்­த­மைக்­கா­க­வும் ஆச்­சி­ர­மத்­தில் வாழ்ந்த ஒரு­வ­ரைக் கொலை செய்­வ­தற்கு சதி செய்­த­தற்­கு­மாக ஆயுள் தண்­டனை அனு­ப­வித்து வரும் பிறே­மா­னந்தா சுவாமி ஆச்­சி­ர­மத்­தைச் சேர்ந்த நால்­வரை விடு­விக்­கக் கோரி அவர்­க­ளது உற­வி­னர்­க­ளால் கொடுக்­கப்­பட்ட கடி­தத்தை அந்த வழக்­குத் தவ­றா­கப் பதி­யப்­பட்­டது என்ற விட­யத்­தி­னை­யும் சுட்­டிக் காட்­டி­யமை தொடர்­பாக விமர்­ச­னங்­களை வைக்­கும்­படி அன்று ஊட­கங்­கள் கேட்­டி­ருந்­தன.

நிய­திச் சட்­டங்ளை உரு­வாக்­கு­வ­தில் உள்ள தாம­தத்­துக்­குக் கார­ணம் எமக்கு அரசு நிதி­யொ­துக்­கீடு செய்­ய­வில்லை என்று உறுப்­பி­னர்­கள் இந்­தச் சபை­யில் கூறி­யுள்­ளார்­கள். இதற்­காக வெளி­நாட்­டுத் தூத­ர­கங்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க­ளின் நிதி­யு­த­வி­யு­டன் எமக்கு உதவி செய்­வ­தற்கு எத்­த­னையோ அமைப்­பு­கள் முன்­வந்­தி­ருந்­தும் அந்­தச் சந்­தர்ப்­பங்­களை நாம் உரிய முறை­யில் பாவிக்­கத் தவறி விட்­டோம்.

முத­லீட்டு வாய்ப்­பு­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கு­ட­னான பெரும் துறை­சார் அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் எது­வும் சுகா­தார அமைச்­சைத் தவிர ஏனைய எந்த அமைச்­சு­க­ளி­னாலோ, திணைக்­க­ளங்­க­ளி­ள­னாலோ மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

புதிய வடக்கு மாகாண சபை புதிய அர­சி­யல் நாக­ரீ­கத்தை உரு­வாக்­கும் என்ற மக்­க­ளின் எதிர்­பார்ப்பு மழுங்­க­டிக்­கப்­பட்­ட­தைக் காண­மு­டி­கி­றது.

அர­சி­யல் ரீதி­யாக, வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் இணைந்த ஓர் அல­காக இருக்க வேண்­டு­மென்று நாம் எல்­லோ­ரும் கோரிக்கை விடு­கின்­றோம். ஆனால் எங்­க­ளு­டைய செயற்­பா­டு­கள் அவர்­களை எங்­க­ளு­டன் சேர்ந்து வாழ விரும்­பா­த­வர்­க­ளா­கவே மாற்­றிக் கொண்டு இருக்­கின்­றன.

முத­ல­மைச்­ச­ரின் பதில் தொடர்­பாக நான் ஏற்­க­னவே ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துக் கூறி­யி­ருந்­தேன். வட்­டுக்­கோட்­டைக்கு போகும் வழி என்ன என்­றால் துட்­டுக்கு இரண்டு கொட்­டைப் பாக்கு என்­பது போல் அமைந்­துள்­ளது அவ­ரது பதில். இதனை அன்று முத­ல­மைச்­சர் அவர்­கள் கார­சா­ர­மாக விமர்­சித்­தி­ருந்­தார்.

இந்த உவ­மா­னம் தவ­றென்­ப­தனை நான் ஏற்­றுக் கொள்­கின்­றேன். சரி­யான உவ­மா­னம் கவுண்­ட­மணி செந்­தி­லின் வாழைப்­ப­ழக் கதை. நான் ஒரு வாழைப்­ப­ழம் என்று சொல்­கின்­றேன். முத­ல­மைச்­சர் இரண்டு வாழைப்­ப­ழம் என்று கூறு­கின்­றார். நான் கூறு­வ­தொன்று, முத­ல­மைச்­சர் பதி­லில் கூறு­வது இன்­னொன்று.

பளை­யில் அமைக்­கப்­பட்ட மின்­காற்­றாலை சம்­பந்­த­மான எனது குற்­றச்­சாட்­டா­னது, சபை செய­லா­ள­ரைக் கொண்டு உடன்­ப­டிக்­கை­யைக் கையெ­ழுத்­திட வைத்­த­மை­யும், முத­லாண்டு அந் நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெற்ற கொடையை நிதி­யா­கப் பெற்று மாகாண சபை­யின் வர­வுக்­குக் கொண்­டு­வந்து சபை­யின் அங்­கீ­கா­ரத்­து­டன் செலவு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென்­பதே. இதற்கு முத­ல­மைச்­சர் பதி­ல­ளிக்­காது ஏனைய வரு­டங்­க­ளில் நடந்­தவை தொடர்­பாக விவர அறிக்கை ஒன்­றைச் சமர்ப்­பித்­துள்­ளார்.

சுன்­னா­கம் நிலத்­த­டி­நீ­ரில் தற்­போது ஒயில் கலப்பு இல்லை என பிரிட்­டன் தூது­வ­ருக்கு முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்­தது தொடர்­பாக நான் மாகாண சபை­யில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்­த­போது, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வசிக்­கும் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் ஆய்வு அறிக்­கையை வைத்தே தான் அவ்­வாறு கூறி­ய­தா­கப் பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

அந்த ஆய்வு அறிக்­கை­யில் அவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தனை அந்த அறிக்­கையை ஆதா­ர­மா­கக் காட்டி முத­ல­மைச்­சர் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றார் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தேன். இதற்­குப் பதி­ல­ளிப்­ப­த­னைத் தவிர்த்து சுன்­னா­கம் நிலத்­தடி நீரில் ஒயில் மாசு இருக்­கின்­றதா? என்­பது தொடர்­பான நீண்­ட­தொரு உரையை முத­ல­மைச்­சர் ஆற்­றி­யி­ருக்­கின்­றார்;.

வடக்கு மாகாண சபை­யில் அரச விடு­தி­கள் இல்­லாத கார­ணத்­தால் மாகாண நிதி­யி­லி­ருந்து தனி­யார் வீடு­களை வாட­கைக்­குப் பெற்­றுத் தேவை­யான செய­லா­ளர் தர உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு விடுதி, நீர், வாடகை, மின்­சார வசதி என்­பன வழங்­கப்­பட்டு, அதற்­காக 500 ரூபா அவர்­கள் சம்­ப­ளத்­தி­லி­ருந்து மாதாந்­தம் அற­வி­டப்­ப­டு­வதை நீங்­கள் ஒத்­துக் கொண்­டி­ருக்­கின்­றீர்­கள்.

இவ்­வா­றாக மாகாண சபை நிதி­யி­லி­ருந்து 9 லட்­சத்து 24 ஆயி­ரம் ரூபா வீண­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­தென்­பதே கணக்­காய்­வின் குற்­றச்­சாட்டு. செய­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட விடு­திக் கொடுப்­ப­னவு தொடர்­பாக சுற்­ற­றிக்கை இல்­லாத கார­ணத்­தால் இவ்­வாறு செயற்­பட்­ட­தா­கக் கூறி­யி­ருக்­கின்­றீர்­கள்.

திரு­ம­ண­மா­கா­த­வர்­க­ளுக்கு சம்­ப­ளத்­தில் 5 வீத­மும், திரு­ம­ண­மா­ன­வர்­க­ளுக்கு 10 வீத­மும், கண­வ­னும், மனை­வி­யும் அரச சேவை­யில் உள்­ள­வர்­க­ளா­யின் 12.5 வீதம் என­வும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதைச் செய்­ய­வில்லை என்­பதே எனது குற்­றச்­சாட்டு.

அவர்­க­ளது விடுதி, மின்­சா­ரம் மற்­றும் நீர்க் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­குச் சுற்­ற­றிக்கை இல்லை என்­ப­தற்­காக அரச பணத்­தி­லி­ருந்து செல­விட முடி­யுமா? நீங்­கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றீர்­கள் என்­ப­தனை இதி­லி­ருந்­தா­வது புரிந்து கொள்­ளுங்­கள்.

இர­ணை­மடு – யாழ்ப்­பா­ணம் குடி­தண்­ணீர் வழங்­கல் மற்­றும் யாழ். மாந­கர சபை கழிவு நீர் அகற்­றல் தொடர்­பாக இது­வரை எவ்­வித மாற்­றுத்­திட்­ட­மும் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கிக்கு முன்­வைக்­க­வில்லை.

குறிப்­பாக யாழ் மாந­கர சபை கழிவு நீர் அகற்­றல் தொடர்­பாக இர­ணை­ம­டுத் திட்­டத்­தின் கீழ் வர­வி­ருந்த பெரும் நிதி நிறுத்­தப்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்­சர் இதற்­குப் பதில் அளிக்­கும்­போது கல்­லுண்­டாய் சாக்­க­டைத் திட்­டத்­தைப் பற்­றிப் பேசு­கி­றார்-­என்­றார்.

http://newuthayan.com/story/26664.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.