Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி இராணுவ அழுத்தங்களை மீறி செயற்படுவாரா? : ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

Featured Replies

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

 

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்றையதினம் சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த கண்காணிப்புக் குழுவினர் தற்போது இலங்கைக்கு  பயணம்  செய்துள்ளனர்.

200 நாட்களாக   கிளிநொச்சில் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களிடம்  காணாமல் போனவர்கள் நிலைமை குறித்து கேட்டறிந்த அவர்கள்    அரசாங்கம் உரிய பதிலை துரித கதியில் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் காணாமல் போனவர்களின் ஐந்து தாய்மார் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில்   ஜனாதிபதி செயற்படுவரா? ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி

Sep 7, 2017 @ 14:06

ஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி  ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பிய போது  இல்லை   அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் உறுதியாக பதிலளித்துள்ளனர்.

இன்று (07) மாலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை சந்தித்த போதே ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்இவ்வாறு கேள்வி எழுப்பினா்.

மேலும்  காணாமல் ஆக்கப்பட்டவா்களின்  உறவினா்கள் இருநூறு நாள் தொடர் போராட்டத்தில்  ஈடுப்படுவது சாதாரண விடயமல்ல எனவும் இந்த விடயம் தொடர்பில்    அரசுக்கு தொடர் அழுத்தத்தை ஜரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் எனவும் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தங்களின் உறவுகள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டாh்கள், எப்போது  எங்கு வைத்து  ஒப்படைக்கப்பட்ட காணமல் ஆக்கப்பட்டாh்கள், இரகசிய முகாம்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தனா்.

அத்தோடு இலங்கை அரசாங்கத்திற்கு ஜநா மனித உரிமைகள் ஆணைக்குழு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியமை, ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஜிஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டமை தொடர்பில்  தங்களின் கடுமையான ஆட்சேபனையையும் தெரிவித்துக்கொண்டனா்.

IMG_1758.jpgIMG_1764.jpg

http://globaltamilnews.net/archives/40168

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜனாதிபதி இராணுவ அழுத்தங்களை மீறி செயற்படுவாரா? : ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை நேற்று மாலை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்தனர்.  

இச் சந்திப்பின் போது,

ஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவாரா? என காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வினா எழுப்பினர். 

Local_News.jpg

அதற்கு  "இல்லை, அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது" என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் உறுதியாக பதிலளித்தனா்.

குறித்த உறவுகளின் பதிலை கேட்ட பிரதிநிதிகள் குழு தொடர்ந்து,

"காணாமல் ஆக்கப்பட்டவா்களின்  உறவினா்கள் 200 நாள் தொடர் போராட்டத்தில்  ஈடுப்படுவது சாதாரண விடயமல்ல, எனவே இந்த விடயத்தில் அரசுக்கு தொடர் அழுத்தத்தை ஜரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் "  என  தெரிவித்தனா்.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் "தங்களின் உறவுகள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டாா்கள்? எப்போது?  எங்கு ? வைத்து காணாமல் ஆக்கப்பட்டாா்கள், இரகசிய முகாம்கள்" தொடர்பான விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தனா்.

IMG_1770.JPG

அத்தோடு இலங்கை அரசாங்கத்திற்கு  ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியும்  தீர்வு எட்டப்படாமை குறித்தும் , ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஜி .எஸ். பி  வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டமை குறித்தும்  தங்களின் கடுமையான ஆட்சேபனையையும் தெரிவித்தனர். 

http://www.virakesari.lk/article/24143

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகள் மீது கிடுக்குப்பிடிபோடும் மேற்கு  சிறிலங்காவுக்கு மென்போக்கைக் காட்டுவதே இன்னிலைக்குக் கரணியமாகும்.சிறிலங்கா சீனாவைக்காட்டிக் காரியம் சாதித்துக்கொண்டே போகும். தமது பொருளாதார நலனைவிடுத்து எந்தவொதரப்பும் தமிழருக்கு உதவாது. இதுகூட மக்களது போராட்டத்தினால் ஏற்பட்ட சந்திப்பேயன்றி வேறில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் தாளத்திற்கு ஆடிக் கூடிய தலைவர்கள் கிடைத்துவிட்டார்கள்.இனி ஏன் தான் மேற்குலகம் கவலை கொள்ள போகுது?

அடுத்த தலைவராக ராஜபக்சாக்கள் வர வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.