Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில்

Featured Replies

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில்

 

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில்

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த இடைக்கால அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உருவாக்கப்பட்ட அறிக்கை எனவும் இந்த இடைக்கால அறிக்கையில் அரசியல் கட்சிகளின் எழுத்து மூல கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த இடைக்கால அறிக்கைக்கு அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் இரண்டும் அனுமதி வழங்கினால் அடுத்த கட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/new-constitution-s-interim-report-released-on-21st

  • தொடங்கியவர்

20 ஆம் திருத்தம் அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைதான்

 

20 ஆம் திருத்தம் அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைதான்

 

 
 
20 வது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்ணியிருப்பதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவருமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (11) மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 20 ஆம் திருத்த சட்டத்தின் இடைக்கால அறிக்கை இந்த மாதம் 20 ஆம் திகதி வெளிவரவுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட அறிக்கை. சிற்சில மாற்றங்கள் இருந்தாலும், அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தான் வெளிவரப் போகின்றது.

சில கட்சிகள் தமது நிலைப்பாடு என்ன என்பது பற்றி அறிக்கைகள் கொடுத்துள்ளார்கள்.

அவற்றினையும் இடைக்கால அறிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடுவது என வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.

பிரதான அறிக்கையாகவும், மேலதிகமாகவும் சில கட்சிகளின் நிலைப்பாடுகளும் வெளிவரும்.

ஐக்கிய தேசியக்கட்சி தமது நிலைப்பாடு என வேறு எந்த நிலைப்பாட்டினையும் கொண்டு வரவில்லை.

பிரதான அறிக்கையில் பிரதான பகுதிகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டினை அறிக்கையில் கொடுத்துள்ளார்கள்.

வழிநடத்தல் குழுவில் இருப்பவர்களும் தமது நிலைப்பாட்டினை கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் சம்பந்தனும் தானும் வழி நடத்தல் குழுவிற்கு எமது நிலைப்பாட்டினையும் கொடுத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதில் எமது அடிப்படைக் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளோம்.

நாட்டின் சுபாவம் சமஷ்டி அமைப்பாகவும், மதச் சார்பற்றதாகவும், வடகிழக்கு இணைந்த ஒரு அலகாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பௌத்த மதத்திற்கு விசேட இடம்கொடுப்பதை மறுக்கவில்லை.

ஆனால், அனைத்து மதத்தினைச் சேர்ந்தவர்களும் சமமாக நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளோம்.

இடைக்கால அறிக்கையின் பிரதான அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கி வருவார்களாக இருந்தால், அதில் உள்ளவற்றினைப் போன்று இணக்கப்பாட்டினை பரிசீலிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவையில் முன்வைக்கப்படும்.

அதன்பின்னர், முழு நாட்டிற்கும் அந்த அறிக்கையின் விடயங்கள் வெளியிடப்படும்.

ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புப் பேரவையில் விவாதம் ஒன்று நடக்கும். அதில் தீர்மானம் ஒன்றும் எடுக்கப்படமாட்டாது.

நாட்டிலும் இவை தொடர்பான வாத விவாதங்கள் நடைபெறுமென்றும் எதிர்பார்க்கின்றோம்.

மீண்டும் வழிநடத்தல்குழு கூடி, அரசியலமைப்பின் வரைபு ஒன்றினை செய்ய ஆரம்பிப்போம். விவாத்தில் சொல்லப்படும் கருத்துக்களையும் உள்ளடக்கி இறுதி வரைபினை செய்யும் பணி ஆரம்பிக்கப்படும்.

அந்த வரைபு வெளிவந்த பிறகு, உரிய தரப்புக்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=95275

 

  • கருத்துக்கள உறவுகள்

20ஆம் திருத்தச் சட்டத்தின் முக்கிய இரண்டு திருத்தங்கள்

 
sri_lanka_parliament_march_2016-3.jpg

20ஆம் திருத்தச் சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி மாகாண சபைகளின் அதிகாரக் காலம் நிறைவடைந்தப் பின்னர், அதனை 2 வருடங்களுக்கு நீடிக்காமல்இ நீடிப்புக் காலத்தை ஒரு வருடத்துக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண சபைகளின் தேர்தல் தினத்தை நாடாளுமன்றம் அல்லாமல், தேர்தல் ஆணைக்குழுவே (சட்ட அடிப்படையில்) தீர்மானம் செய்யும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏதேனும் காரணத்துக்காக மாகாண சபை கலைக்கப்படும் பட்சத்தில், 18 மாதங்களுக்கு குறைவான அதிகாரம் கொண்டிருந்தால் அதனை ஆளுநர் கட்டுப்படுத்துவார் என்றும், அல்லாத பட்சத்தில் இடைத்தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

– பிராந்தியச் செய்தியாளர் –

http://ttnnews.com/2017/09/12/20ஆம்-திருத்தச்-சட்டத்தின/

  • தொடங்கியவர்

திருத்திய 20தையும் ஏற்க முடியாது! – சுரேஸ் கூறுகிறார்

 

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட வரைவையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இன்று கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசு நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தது. அதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அரசு அதில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்திருந்தது. நேற்று கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்ட வரைவையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

http://newuthayan.com/story/28072.html

  • தொடங்கியவர்

20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஈ.பி.ஆர.எல்.எவ். கண்டனம்

  • தொடங்கியவர்

தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளும்

 

 
 
20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது.

அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில்,

நேற்றய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 20 வது திருத்தச் சட்டத்தை தாம் ஆதரிக்கப் போவதாக கூறியிருக்கின்றார். அதற்கு அவர் கூறியிருந்த முக்கியமான காரணம் 20 வது திருத்தச் சட்டத்தில் தாங்கள் கூறியிருந்த சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதேயாகும்.

அதாவது 20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி 20 வது திருத்தச் சட்டத்தில் அரசாங்கம் செய்யவுள்ளதாக கூறப்படும் சில திருத்தங்களை சட்டமா அதிபர் நீதிமன்றில் கூறியுள்ளார். அந்த திருத்தங்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆதரவை வழங்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைக்கின்றது.

அதன்படி இலங்கையில் ஏதாவது ஒரு மாகாணசபை உரிய காலத்திற்கு முன்னர் கலைக்கப்பட்டால் மிகுதி காலம் 18 மாதங்களுக்கு அதிகமாக இருந்தால் இடைத்தேர்தலை நடத்துவதென்பது ஒரு திருத்தமாம். நாங்கள் கேட்கிறோம் மிகுதி சொற்ப காலத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு யார் வருவார்கள்? எவரும் வரமாட்டார்கள் காரணம் பெருமளவு பணம் தேவைப்படும்.

இது ஒரு புறமிருக்க 18 மாதங்களுக்கு குறைவாக மாகாணசபையின் மிகுதி காலம் இருந்தால் அந்த காலப்பகுதிக்கான ஆட்சி ஆளுநரிடம் கையளிக்கப்படும். நாங்கள் கேட்கிறோம் இந்த 18 மாதங்களின் ஆட்சியை ஆளுநரிடம் வழங்கினால் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் கொண்டுவரப்படும்.

பௌத்த மயமாக்கல் சுதந்திரமாக நடக்கும், அரச திணைக்களங்களில் அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் களமிறக்கப்படுவார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பாதகமான பல செயற்பாடுகளை அரசாங்கம் செய்யும். எனவே இவ்வாறான நிலையில் 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது.

மேலும் 18 மாதங்களுக்கு அதிகமான காலம் உள்ள நிலையில் மாகாணசபை கலைக்கப்பட்டால் இடைத்தேர்தல் நடத்துவதென்ற தீர்மானம் சிறீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழரசு கட்சி போன்ற பெரிய கட்சிகளுக்கு மட்டுமே பொருத்தமா னதாக அமையும். அவ்வாறான நிலையில் பெரிய கட்சிகளின் இருப்பை நிலை நிறுத்தவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம் என கூறும் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் தீர்மானம் எடுத்திருப்பது ஜனநாயகம், அதிகாரபகடிர்வு பற்றி பேசகூடியவர்களுக்கு அழகானது அல்ல.

இவ்வாறான நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது ஆதரிக்கிறோம் என கூறுவது மிக வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது. எனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், படாவிட்டாலும் 20 வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=95314

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.