Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்

Featured Replies

சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்

 
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் சர்ரே (Surrey) அணி யோர்க்ஷையர் (Yorkshire) அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

டிவிஷன் – I அணிகளான சர்ரே மற்றும் யோர்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சர்ரே அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் மார்க் ஸ்டோன்மேன் ஆகியோர் உறுதியான அடித்தளம் ஒன்றை வழங்கினர். ஏனெனில் முதல் விக்கெட்டிற்காக 178 ஓட்டங்கள் இவர்களால் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது.

 

 

இதில் ரோரி பர்ன்ஸ் 75 ஓட்டங்களைக் குவித்து சர்ரே அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை திரும்பினார். அவருக்கு அடுத்தபடியாக மார்க் ஸ்டோன்மேனும் சதமொன்றை கடந்து 131 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி நடக்க, இன்னுமொரு விக்கெட்டையும் விரைவாக பறிகொடுத்த சர்ரே அணி நல்லதொரு ஆரம்பத்தை பெற்றிருப்பினும் சற்று தடுமாற்றத்தை வெளிக்காட்டியது.

இவ்வாறனதொரு தருணத்தில் களம் நுழைந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்ரே அணியின் விக்கெட் காப்பாளர் பென் போக்ஸ் உடன் இணைந்து தனது அழகிய துடுப்பாட்டத்தின் மூலம் சரிவுப்பாதை ஒன்றில் விழ இருந்த அணியை மீட்டெடுத்தார்.

இதனால் போட்டியின் முதல் நாள் நிறைவில், சங்காவின் அரைச் சதத்துடன் சர்ரே அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 398 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில், தமது முதல் இன்னிங்சை  மீண்டும் தொடங்கிய சர்ரே அணியில், குமார் சங்கக்கார தனது 63 ஆவது முதல்தர சதத்தை பூர்த்தி செய்தார். இதனால், மேலும் வலுவடைந்த சர்ரே அணி 500 ஓட்டங்களை எட்டியது.  

யோர்க்ஷையர் அணிக்கு மிகவும் நெருக்கடியாக காணப்பட்டிருந்த சங்கக்காரவின் விக்கெட்டை ஜேக் புருக்ஸ் கைப்பற்றியிருந்தார். அடுத்து வந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்களை ஓய்வறை அனுப்புவது யோர்க்ஷையர் கழக பந்து வீச்சாளர்களுக்கு இலகுவாக காணப்பட 137.2 ஓவர்களில் சர்ரே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 592 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்தது.

சர்ரே அணிக்காக அபார சதம் கடந்த குமார் சங்கக்கார 187 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகளை விளாசி மொத்தமாக 164 ஓட்டங்களைப் பெற்று தனது திறமையை மீண்டும் வெளிக்காட்டினார். அத்தோடு மறுமுனையில் பென் போக்ஸ் சதம் விளாசி 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டிருந்த சங்கக்கார இந்த போட்டியிலும் சதம் கடந்ததன் மூலம், இந்தப் பருவகாலத்திற்கான கவுண்டி கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த மூன்று வீரர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்காவின் விக்கெட்டைக் கைப்பற்றிய ஜேக் புருக்ஸ் 5 விக்கெட்டுகளை யோர்க்ஷையர் அணி சார்பாக கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

சர்ரே (முதல் இன்னிங்ஸ்) – 592 (137.2) – குமார் சங்கக்கார 164, மார்க் ஸ்டோன்மேன்  131, பென் போக்ஸ் 110, ஜேக் புருக்ஸ் 113/5, ஸ்டீவன் பெட்டர்சன் 120/3

யோர்க்ஷையர் (முதல் இன்னிங்ஸ்) – 171/1 (51) – ஷோன் மார்ஷ் 77*, டொம் கோஹ்லர் 78

 

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

William Shakespeare can't teach you how to write.

Michael Jackson can't teach you how to moonwalk.

But, Kumar Sangakkara can teach you how to play the cover drive.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Sportler und im Freien

  • தொடங்கியவர்

இங்கிலாந்து கவுன்டி சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக சாரே அணிக்காக   எட்டாவது சதத்தினை பதிவு செய்த சங்கக்கார!

sanga somerset 100

Published: 20th September, 2017

Kumar Sangakkara’s eighth Specsavers County Championship hundred of a remarkable final season for Surrey left Somerset in trouble after two days at the Kia Oval.

https://www.kiaoval.com/main-news/another-sanga-century-gives-surrey-day-2-lead/

http://www.espncricinfo.com/series/8052/report/1068577/day/2/

  • கருத்துக்கள உறவுகள்
On 9/15/2017 at 1:33 AM, நவீனன் said:

William Shakespeare can't teach you how to write.

Michael Jackson can't teach you how to moonwalk.

But, Kumar Sangakkara can teach you how to play the cover drive.

பொதுவாக கவர் ட்ரைவ் அடிப்பவர்கள் முன்னங்காள்கலளில்தான் கவனம் செலுத்துவார்கள்  முன் கால் முன்னோக்கி வளைந்திருத்தல் வேண்டும் 90 பாகைக்கு குறைவாக ( உடம்பிலிருந்து) இருந்த்தால் பந்து கட்டுப்பாட்டை இழந்து மேலெலுந்து செல்லும் , சங்கக்காராவின் முன் கால்கள் இயல்பாக அந்தநிலைக்கு  (முன் கால்கள் முன்னோக்கி வளைந்த்திருத்தல்) கொண்டுவருவதற்கு அவர் பயன்படுத்தும் உத்தி புதிதுதான்.

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றி vasee,

நீங்கள் நிறைய கிரிக்கெட் அறிவு, விபரம் தெரிந்தவர்.

முன்பும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது சில விடயங்கள் நீங்கள் எழுதியதாக நினைவு.

நேரம் கிடைக்கும்போது இங்கு எழுதவேண்டும் நீங்கள்.... செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

21 hours ago, vasee said:

பொதுவாக கவர் ட்ரைவ் அடிப்பவர்கள் முன்னங்காள்கலளில்தான் கவனம் செலுத்துவார்கள்  முன் கால் முன்னோக்கி வளைந்திருத்தல் வேண்டும் 90 பாகைக்கு குறைவாக ( உடம்பிலிருந்து) இருந்த்தால் பந்து கட்டுப்பாட்டை இழந்து மேலெலுந்து செல்லும் , சங்கக்காராவின் முன் கால்கள் இயல்பாக அந்தநிலைக்கு  (முன் கால்கள் முன்னோக்கி வளைந்த்திருத்தல்) கொண்டுவருவதற்கு அவர் பயன்படுத்தும் உத்தி புதிதுதான்.

 

 

Take every chance you can to watch Kumar Sangakkara beauties just like this one! 1f60d.png

நேற்றய போட்டியில்..

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.