Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் சான்சலர் ஆகிறார் ஏஞ்சலா மெர்கல்

Featured Replies

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் சான்சலர் ஆகிறார் ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய சான்சலர் ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் சான்சலர் ஆகிறார் ஏஞ்சலா மெர்கல்
 
 
பெர்லின்:
 
ஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து தேர்தலிகளிலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக (அரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19வது நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சான்சலர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் போட்டியில் உள்ளனர். 
 
சமூக ஜனநாயக கட்சிக்கு சில இடங்களில் ஆதரவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தேர்தலிலும் ஏஞ்சலா மெர்கெல் வெற்றி பெற்று தொடர்ந்து நான்காவது முறை சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். அதுவரை தற்போதைய அரசு பதவியில் இருக்கும். 
 
 
201709231430394982_1_germany1._L_styvpf.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/23143039/1109526/german-parliament-elections-to-be-held-tommorrow.vpf

  • தொடங்கியவர்

தொடங்கியது ஜெர்மனி அதிபர் தேர்தல்: நான்காவது முறையாக ஏஞ்சலா மெர்கல்? 

 

 
angela-merkel

 

பெர்லின்: ஜெர்மனியில் இன்று தொடங்கியுள்ள அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் தற்போதைய அதிபர் ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் ஆளும் கன்சர்வேடிவ் கூட்டணி சார்பாக ஏஞ்சலா மெர்கல் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். ஜெர்மனியில் அதிபரின் பதவி காலம் 4 வருடங்கள் ஆகும். அவரது பதவிக் காலம் தற்பொழுது முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இம்முறை அதிபர் தேர்தலில் மூன்று முறை அதிபராகாப் பதவி வகித்துள்ள ஏஞ்சலா மெர்கல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மார்டின் ஸ்கல்ஸ் களத்தில் இருக்கிறார்.

அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் மெர்கல்லின் கன்சர்வேடிவ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கின்றன. எனவே நான்காவது முறையாக அவர் அதிபராக பொறுப்பேற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.

இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது. அந்நாட்டு நேரப்படி  மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு முடிவுக்கு வரும்.

http://www.dinamani.com/world/2017/sep/24/தொடங்கியது-ஜெர்மனி-அதிபர்-தேர்தல்-நான்காவது-முறையாக-ஏஞ்சலா-மெர்கல்-2778922.html

  • தொடங்கியவர்

ஜெர்மனி பொதுத்தேர்தல்: சான்சலர் மெர்கல் வாக்குப்பதிவு செய்தார்

ஜெர்மனி பொதுத்தேர்தலில் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இன்று, கணவருடன் வந்து தனது வாக்கை பதிவுசெய்தார்

 
ஜெர்மனி பொதுத்தேர்தல்: சான்சலர் மெர்கல் வாக்குப்பதிவு செய்தார்
 
 
பெர்லின்:
 
ஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து 
தேர்தலிகளிலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 
 
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக (அரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் சான்சலர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
 
சமூக ஜனநாயக கட்சிக்கு சில இடங்களில் ஆதரவு குறைந்துள்ளதால், இந்த தேர்தலிலும் ஏஞ்சலா மெர்கெல் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் வெற்றி பெற்று ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக சான்சலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலையில், பெர்லின் நகரில் உள்ள வாக்குச்சாடியில் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் கணவர் ஜோவாசிம் சாவருடன் வந்து தனது வாக்கை பதிவுசெய்தார். முன்னதாக அந்நாட்டு குடியரசுத்தலைவர் பிராங்-வால்டர் ஸ்டெயின்மேயர் தனது வாக்கை பதிவுசெய்தார்.
 
201709241911377668_1_germany-president._

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/24191136/1109712/Merkel-casts-ballot-in-German-election.vpf

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

முதலாவது கருத்துக்கணிப்பு (வாக்களிப்பு முடிந்தபின்)

  • தொடங்கியவர்

ஜெர்மனியில் நான்காம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் மெர்கல்

ஏங்கெலா மெர்கல்படத்தின் காப்புரிமைEPA

ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏங்கெலா மெர்கலின் கன்சர்வேட்டிவ் கூட்டணியான சிடியூ/சிஎஸ்யூ 32.5% ஓட்டுகளைப் பெற்று, ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தொடந்து நீடிக்கும் என ஏஆர்டி கருத்துக்கணிக்கு தெரிவித்துள்ளது.

அவரது முன்னாள் கூட்டணிக் கட்சியான எஸ்பிடி 20% ஓட்டுகளைப் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக அமரப் போகிறது.

இந்நிலையில், வலதுசாரி தேசியவாத கட்சியும், முஸ்லிம் விரோத கட்சியுமான ஏஃப்டி 13.5% ஓட்டுகளை பெற்று, ஜெர்மனியின் மூன்றாவது வலுவான கட்சியாக உருவெடுத்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கட்சி சுமார் 88-89 இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.

ஆதரவாளர்களிடம் பேசிய மெர்கல், "சிறந்த முடிவை" எதிர்பார்த்ததாகக் கூறினார், மேலும் "அசாதாரண சவால்கள்" குறித்தும் பேசினார்.

ஏஃப்டி கட்சிக்கு ஓட்டளித்தவர்களின் "கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்" குறித்தும் தான் கேட்கவிருப்பதாக அவர் கூறினார்.

கருத்துக் கணிப்பில் எடுப்பில் வெளியான முடிவுகளை விட ஏஎஃப்டி கட்சி தற்போது சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டி கட்சி முதல் முறையாக ஜெர்மனி நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளது.

ஜெர்மனி ஒப்பிடமுடியாத,"அரசியல் நிலநடுக்கத்தை" எதிர்கொண்டுள்ளதாக வலதுசாரி கட்சியின் தலைவரான ஃப்ராக்கே பெட்ரி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி

மெர்கல் தற்போது புதிய கூட்டணியை தேட வேண்டியதிருக்கும். இதற்கான பணிகள் முடிய சில மாதங்கள் ஆகலாம்.

இதற்கு என்ன அரத்தம்?

நான்காவது முறையாக மெர்கல் ஆட்சியைப் பிடித்தாலும்,, இதுவரை பெற்ற வெற்றிகளில் மிக மோசமான வெற்றியாக இது பார்க்கப்படுவதாக பிபிசி பெர்லின் செய்தியாளர் ஜென்னி ஹில் கூறுகிறார்.

பெருமளவிலான குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்ததற்காக அவர் தண்டிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், மெர்கலின் பிரசாரக் குழு, இதை மிகவும் தாமதமாகவே உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

வாக்காளர்கள் தனக்கு ஆதரவாகத் திரள வேண்டும் என்று மெர்கல் கேட்டுக் கொண்டாலும் அது நடக்கவில்லை என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், எஃப்டிபி மற்றும் கிரீன்ஸ் ஆகிய இரு கட்சிகளுடன் மெர்கல் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தங்கள் கட்சிக்கும் மெர்கல் கூட்டணி மற்றும் எஃப்டிபி கட்சிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் இருப்பதாக கிரீன் கட்சியின் மூத்த தலைவர் விர்ஃபிரிட் ரெட்ஸ்மென் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், யாராவது ஒருவர் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

http://www.bbc.com/tamil/global-41381333

  • தொடங்கியவர்

ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி

 

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.

 
ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி
 
பெர்லின்:

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.

ஜெர்மனி நாடாளுமன்றத்தில் மொத்தம் 598 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல்  நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்தது.

201709250123326448_1_angel._L_styvpf.jpg

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

வாக்குப்பதிவுக்கு பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பில் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் நான்காவது முறையாக அதிபராக பதவி ஏற்பார் என தெரிய வந்தது.

இந்நிலையில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த வெற்றி குறித்து ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், இதைவிட அதிக சதவீதம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்றது மிகுந்த சந்தோஷமே என தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/25012330/1109725/chancellor-merkel-set-to-win.vpf

  • தொடங்கியவர்

4ஆவது முறையாக Angela Merkel ஆட்சியை கைப்பற்றுவார் ஆனால் இதுவரை பெற்ற வெற்றிகளில் மிக மோசமான வெற்றியாகலாம்:-

gr.jpg

Angela-Merkel.jpg

 ஜெர்மனியின் சான்சலர் Angela Merkel  நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Angela Merkelலின்  கன்சர்வேட்டிவ் கூட்டணியான CDU/CSU 32.5% வாக்குகளைப் பெற்று, ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தொடந்து நீடிக்கும் என ARD கருத்துக்கணிக்கு தெரிவித்துள்ளது.

அவரது முன்னாள் கூட்டணிக் கட்சியான SPD 20%  வாக்குகளைப்  பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக அமரப் போகிறது. இந்நிலையில், வலதுசாரி தேசியவாத கட்சியும், முஸ்லிம் விரோத கட்சியுமான AFD 13.5%  வாக்குகளைப் பெற்று, ஜெர்மனியின் மூன்றாவது வலுவான கட்சியாக உருவெடுத்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கட்சி சுமார் 88-89 இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.

ஆதரவாளர்களிடம் பேசிய Angela Merkel, “சிறந்த முடிவை” எதிர்பார்த்ததாகக் கூறினார், மேலும் “அசாதாரண சவால்கள்” குறித்தும் பேசினார். AFD  கட்சிக்கு வாக்களித்தவர்களின் “கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்” குறித்தும் தான் கேட்கவிருப்பதாக அவர் கூறினார்.

கருத்துக் கணிப்பில் எடுப்பில் வெளியான முடிவுகளை விட AFD கட்சி தற்போது சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் வலதுசாரி கட்சியான AFD  கட்சி முதல் முறையாக ஜெர்மனி நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளது.

ஜெர்மனி ஒப்பிடமுடியாத,”அரசியல் நிலநடுக்கத்தை” எதிர்கொண்டுள்ளதாக வலதுசாரி கட்சியின் தலைவரான ஃப்ராக்கே பெட்ரி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Angela Merkel  தற்போது புதிய கூட்டணியை தேட வேண்டியதிருக்கும். இதற்கான பணிகள் முடிய சில மாதங்கள் ஆகலாம். நான்காவது முறையாக மெர்கல் ஆட்சியைப் பிடித்தாலும்,, இதுவரை பெற்ற வெற்றிகளில் மிக மோசமான வெற்றியாக இது பார்க்கப்படுவதாக பிபிசி பெர்லின் செய்தியாளர் ஜென்னி ஹில் கூறுகிறார்.

பெருமளவிலான குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்ததற்காக அவர் தண்டிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், Angela Merkelலின் பிரசாரக் குழு, இதை மிகவும் தாமதமாகவே உணர்ந்ததாகவும் கூறுகிறார். வாக்காளர்கள் தனக்கு ஆதரவாகத் திரள வேண்டும் என்று மெர்கல் கேட்டுக் கொண்டாலும் அது நடக்கவில்லை என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், எஃப்டிபி மற்றும் கிரீன்ஸ் ஆகிய இரு கட்சிகளுடன் மெர்கல் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தங்கள் கட்சிக்கும் மெர்கல் கூட்டணி மற்றும் AFD  கட்சிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் இருப்பதாக கிரீன் கட்சியின் மூத்த தலைவர் விர்ஃபிரிட் ரெட்ஸ்மென் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், யாராவது ஒருவர் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/42426

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

AFD கட்சியின் பக்கத்திலும் பல நியாங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

 

இரு பெரும் கட்சிகள் (SPD/CDU) இனியாவது விழித்துக்கொள்ளட்டும்.

  • தொடங்கியவர்

நான்காவது தடவையாக ஜெர்மன் அதிபர் பொறுப்பு

 

ஜெர்மன் அதிபர் அஞ்செலா மெர்கல் , நேற்று ஜெர்மனியில் நடந்த வாக்கெடுப்பில் நான்காவது தடவையாக வென்றுள்ளதோடு , தேசியவாதிகள் , இந்தக் கூட்டாட்சித் தேர்தலில் , சரித்திரம் படைக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்கள் .

நான்காவது தடவையாக ஜெர்மன் அதிபர் பொறுப்பு

அதிபர் மெர்கேலின் கன்சேர்வேட்டிவ் கட்சி , கடந்த 70வருடங்களில் என்றும் இல்லாதவாறு மோசமான தேர்தல் முடிவுகளைக் கண்டிருந்தாலும் , பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக இதுவே  இருக்கும்.   ஆர்ப்பாட்டக்காரர்கள் “அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள்” என்ற சுலோகத்தை தாங்கிய அட்டைகளைப் பிடித்துக்கொண்டு,  வலது சாரிக் கட்சி அலுவலகத்துக்கு முன்பாக   கூடி நின்றுள்ளார்கள் .

நான்காவது தடவையாக ஜெர்மன் அதிபர் பொறுப்பு

கொலோன் , பிராங்க்பர்ட்  ஆகிய ஜெர்மன் நகரங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இருந்துள்ளன . கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சிக்கும் , கிறிஸ்டியன் சோஷல்  யூனியன் கட்சிக்கும் இடையிலான கூட்டிணைப்பில் , 1949க்கு பின்னர் கண்ட மிக மோசமான தேர்தல் முடிவுகள் இவை என்று சொல்லப்படுகின்றன.

https://news.ibctamil.com/ta/world-affairs/Merkel-is-elected-for-the-fourth-time-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.