Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சிக்கு பாதிப்பு வராது அதற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு : பிரதமர் ரணில்

Featured Replies

ஒற்றையாட்சிக்கு பாதிப்பு வராது

A17-0090cecf2b55025f29f477bb43f3266870341ed1.jpg

 

அதற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு :  பிரதமர் ரணில்
(ஆர்.யசி)

உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இலங்­கையின் ஒற்­றை­யாட்­சிக்கு எந்த விதத்­திலும் பாதிப்பு ஏற்படாது. அதற்கு ஏற்ற வகை­யி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரங்­களை வழங்குவதற்கு நாம் தயா­ராக உள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.  

கடந்த 20 ஆண்­டு­களில் அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள் நாட்டை சரி­யாக வழி­ந­டத்த தவ­றிய நிலையில் மீண்டும் அவர்­க­ளுக்கு அதி­கா­ரத்தை கொடுக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அனு­ரா­த­பு­ரத்தில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் இன­வாதம் மத முரண்­பா­டுகள் இல்­லாது நாட்டை முன்­னெ­டுத்து செல்ல வேண்டும் என்­பது குறித்தே அர­சாங்கம் சிந்­தித்து நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை, அதேபோல் ஏனைய மதங்­க­ளையும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். இதுவே எமது பிர­தான நோக்­க­மாகும். அதற்­கான நகர்­வு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து செல்­கின்­றது. இவ்­வா­றன பிர­தான பிரச்­சி­னை­களை தீர்க்­கவே புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்க முயட்­சிக்­கின்றோம்.

இதற்­கா­கவே வழி நடத்தல் குழு­வினை உரு­வாக்கி ஒரு ஆண்டு கால­மாக இந்த வழி­ந­டத்தல் குழு­வி­னூ­டாக வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இப்­போது புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்கும் விட­யத்தில் அனை­வரும் ஒரு பொது உடன்­பாட்­டிற்கு வந்­துள்­ள­துடன் ஒரு அடிப்­ப­டை­யினை கொண்­டுள்ளோம். சிலர் பொய்­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

எனினும் இலங்­கையில் ஒற்­றை­யாட்­சிக்கு எந்த விதத்­திலும் பாதிப்பு வராத வகை­யி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதை நான் உறு­திப்­ப­டுத்­து­கின்றேன். ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரங்­களை வழங்­கவும் நாம் தயா­ராக உள்ளோம். இது இரண்­டுமே புதிய அர­சியல் அமைப்பில் உள்­ளன.

குறிப்­பாக மாகாண, பிர­தேச சபை செயற்­பா­டுகள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­துடன் அர­சாங்­க­மாக முழு செயற்­பா­டு­க­ளையும் கையாள்­வ­தையும் கவ­னத்தில் கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம். மாகா­ண­சபை சுயா­தீ­ன­மாக செயற்­பட வேண்டும்.

 இப்­போதும் எமது ஆட்­சியில் 13 ஆம் திருத்­த­திற்கு அமைய மாகா­ண­ச­பைகள் சுயா­தீ­ன­மாக செயற்­பட்டு வரு­கின்­றன. அதேபோல் உய­ரிய ரீதியில் அர­சாங்கம் அனைத்­தையும் கையாளும் வகையில் செயற்­படல் வேண்டும்.

தேசிய அர­சாங்­க­மாக நாம் அதையே இலக்­கு­வைத்து செயற்­பட்டு வரு­கின்றோம். மத்­திய அர­சாங்­கமும் மாகா­ண­ச­பை­களும் இணைந்து நாட்டை சரி­யாக கொண்­டு­செல்லும் வகையில் அமைய வேண்டும்.

ஒற்­றை­யாட்சி என்­பதை உறு­தி­யாக முன்­வைக்க வேண்டும். 1972 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பில் ஐக்­கியம் என்ற பதமே உள்­ளது. இது ஒற்­றை­யாட்சி என்ற பதம் அல்ல. இது அதி­கார பர­வ­லாக்கல் என்­ப­தையே குறிப்­பிட்­டுள்­ளது.

எனினும் இலங்கை ஒற்­றை­யாட்சி என்ற கொள்­கைக்கு மாற்­றப்­பட்டு அதற்­க­மைய செயற்­பட்ட போதிலும் அர­சியல் அமைப்பில் 13 ஆம் திருத்தம் மூல­மாக அதி­கார பகிர்வும் உள்­ளது.

இப்­போதும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் சிங்­கள மற்றும் தமிழ் பதங்கள் ஒற்­றை­யாட்சி என்­ப­தையே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதில் எந்த மாற்­றங்­களும் இல்லை. எனினும் ஆங்­கி­லத்தில் "யுனி­டறி" என்ற வார்த்தை உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை விவா­திக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது குறித்து நாட்டில் சகல தரப்­பு­டனும் கலந்­து­ரை­யாட வேண்­டிய அவ­சியம் உள்­ளது. அதற்­கான கால அவ­காசம் உள்­ளது.

இதே­வேளை, கடந்த 20 வரு­டங்­க­ளாக கடந்த அர­சாங்கம் மேற்­கொண்ட தவ­றான செயல்­பா­டுகள் தொடர்­பிலும் தற்­போ­தைய அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரும் விட­யங்கள் தொடர்­பா­கவும் மக்­களை தெளி­வூட்டும் வகையில் பிறி­தொரு நூல் வெளி­யிட வேண்டும். இதன் மூலம் மக்கள் அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டுகள் குறித்த விப­ரங்­களை பெற்­றுக்­கொள்ள முடியும்.

எதிர்­வரும் உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் போட்­டி­யிட அனைத்து கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அடி மட்­டத்தில் இருந்து கட்­சி­யினை பலப்­ப­டுத்தி அதன் மூல­மாக மாற்­றத்­தினை உரு­வாக்க வேண்­டு­டிய தேவை உள்­ளது.

கடந்த 20 ஆண்­டுகள் ஆட்சி நடத்­தி­ய­வர்கள் எத­னையும் செய்­யாத நிலையில் மீண்டும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு அவர்­க­ளுக்கு ஆட்சியை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆகவே இன்னும் அவகாசம் வழங்க முடியாது. பத்து ரூபாய்க்கு வேலை செய்து நூறு ரூபாய்க்கு கணக்குகளை காட்டும் அரசாங்கம் ஒன்றே கடந்த காலத்தில் இருந்தது.

எனவே அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்பட உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான தகுதியான நபர்களை நிறுத்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.