Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை

Featured Replies

ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை

 

ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை

 

 
 
அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வௌியிடப்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். எனினும் அவரது நண்பர் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தார் என, அந்த தீவிலுள்ள மற்றுமொரு அகதி கூறியுள்ளார்.

மேலும், குறித்த வைத்தியசாலையில் போதுமான வைத்திய ஆதரவு கிடைக்காமையினால், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உறுதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாம் எமது மற்றுமொரு சகோதரரை இழந்து விட்டோம் என, பிறிதொரு அகதி, சமூக வலைத் தலங்களில் கருத்து வௌியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் பப்புவா நியூ கினி பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை தோல்வியடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கடல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மனுஸ் தீவில் இதுவரையில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மற்றுமொரு தீவான நவ்று தீவுகளில் குறைந்தது மூன்று பேர் இதுபோன்று பலியாகியுள்ளதாகவும், தகவல்கள் வௌியாகியுள்ளன.

http://tamil.adaderana.lk/news.php?nid=96024

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் 32 வயதுடைய இலங்கைத் தமிழரான ஆண் ஒருவர், மருத்துவமனையில் மரணமானார் என்று பபுவா நியூகினியா காவல்துறை தலைவர் டொமினிக் ககாஸ், உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் லொரென்கு மருத்துவமனையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அகதிகள் நடவடிக்கை கூட்டணியைச் சேர்ந்த இயன் ரின்ரோல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் சமையல் கூடம் அருகே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனுஸ் தீவு முகாமில், இரண்டு மாதங்களில் இடம்பெற்றுள்ள இரண்டாவது உயிர் மாய்ப்பு மரணம் இது என்றும் அவர் கூறினார்.

Manus Island detention centre

கிழக்கு லோரென்கு இடைத்தங்கல் நிலையத்தில் குறிப்பிட்ட நபர் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொண்ட சம்பவத்தை அடுத்து, மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மனுஸ் தீவு முகாமில், சிறிலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுளுக்கு முன்னர் இந்த மகாம் திறக்கப்பட்ட பின்னர், இடம்பெற்றுள்ள ஆறாவது மரணம் இதுவாகும்.

http://www.puthinappalakai.net/2017/10/02/news/26360

  • தொடங்கியவர்
இலங்கை அகதி தொடர்பில் அவுஸ்திரேலியாவிடமிருந்து சாதகமான பதில் இல்லை
 

image_9f429f8958.jpg

அவுஸ்திரேலியாவின், பபுவா நியூகினியாவில் உள்ள மனூஸ் தீவில் உயிரிழந்த, இலங்கை அகதியை, தாய்நாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

மனூஸ் தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 32 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை (02) உயிரிழந்தார். எனினும் அவரது சடலத்தினை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“கிளிநொச்சியில் உள்ள அவரது உறவினர்களுடன் நாம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளோம். உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு 7 ஆயிரத்து 500 அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு, உறவினர்களிடத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உயிரிழந்தவரின் சடலம் மனூஸ் தீவில், பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-அகதி-தொடர்பில்-அவுஸ்திரேலியாவிடமிருந்து-சாதகமான-பதில்-இல்லை/175-204975

  • தொடங்கியவர்

ராஜீவ் ராஜேந்திரன் மரணம் குறித்து தவறான தகவல்கள்; ஆஸி. தூதரகம் விளக்கம்

 

 

பப்புவா நியூகினியின் மனுஸ் தீவில் அண்மையில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் பூதவுடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம் பணம் கோரியதாக ஊடகங்களில் எழுந்த தகவல்களை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்திருக்கிறது.

6_Rajiv.JPG

உண்மைக்குப் புறம்பான செய்தி என இதைக் குறிப்பிட்டிருக்கும் தூதரகம், இது பற்றிய விளக்கம் ஒன்றையும் விடுத்துள்ளது.

“மனுஸ் தீவில் மரணமடைந்த இலங்கைத் தமிழர் ராஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக அவரது உறவினர்களிடம் பணம் கேட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

“ராஜீவின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டுவர நிதியளித்து உதவுமாறு அவரது உறவினர்கள் அவுஸ்திரேலிய அரசையோ, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தையோ அணுகவில்லை.

“மேலும், ராஜீவ் பப்புவா நியூகினியில் மரணமடைந்ததால் அவரது உடலைத் திருப்பியனுப்புவது அந்நாட்டின் பொறுப்பாகும்.”

இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25311

  • கருத்துக்கள உறவுகள்

கைவிரித்தது அவுஸ்ரேலிய தூதரகம்

 

Rajeev Rajendranமனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய அரசின் தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடலை சிறிலங்காவுக்கு அனுப்பும் வேலை தம்முடையது அல்ல என்றும் அதனை பபுவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

மனுஸ்தீவு முகாமில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அவுஸ்ரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போது, 9 ஆயிரம் டொலர் செலுத்துமாறு கேட்கப்பட்டதாக இறந்தவரின் உறவினரான மதி என்பவரை மேற்கோள்காட்டி அவுஸ்ரேலிய அகதிகள் பேரவை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்து கொழும்பில் அவுஸ்ரேலிய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மனுஸ் தீவில் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் உடலை கொண்டு வருவதற்கு உறவினர்களிடம் அவுஸ்ரேலிய தூதரகம் பணம் கேட்டதாக வெளியான செய்திகள் பொய் என்று கூறியுள்ளது.

ரஜீவ் ராஜேந்திரனின் உடலை கொண்டு வருவது தொடர்பாக,  அவுஸ்ரேலிய அரசாங்கத்துடனோ, கொழும்பில் உள்ள தூதரகத்துடனோ, அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ளவோ, கோரிக்கை விடுக்கவோ இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பபுவா நியூகினியாவிலேயே ரஜீவ் ராஜேந்திரன் இறந்தார் என்பதால், சடலத்தை திருப்பி அனுப்புப் பணிகளை பபுவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய தூதரகம் கைவிரித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய ரஜீவ் ராஜேந்திரனை அவுஸ்ரேலிய அரசாங்கமே, பபுவா நியூகினியாவில் அமைத்துள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ரஜீவ் ராஜேந்திரனின் சடலத்தை கொழும்புக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அவுஸ்ரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய போதும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவுஸ்ரேலிய அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2017/10/05/news/26411

  • தொடங்கியவர்
’பணம் கோரப்படவில்லை’
 

பபுவா நியூகினியாவின் மனூஸ் தீவில் உயிரிழந்த இலங்கை அகதியின் சடலத்தை, நாட்டுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பணம் கோரியதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

மனூஸ் தீவில், கடந்த திங்கட்கிழமை, இலங்கை அகதியான ரஜீவ் ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்தை, இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பணம் கோரப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பணம்-கோரப்படவில்லை/175-205021

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியாவில் யாழ் இளைஞன் தற்கொலை : தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்..!

 

அவுஸ்திரேலியாவில் யாழ் இளைஞன் தற்கொலை : தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்..!

அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 வயதான ரஜீவ் ராஜேந்திரன் என்ற இளைஞன் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் அவரின் உடலை ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வருவதற்கு 9000 அமெரிக்க டொலர் உறவினர்களிடம் கோரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், இதற்க்கு கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரஜீவ் ராஜேந்திரனின் உடலை ஸ்ரீலங்காவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், உயிருடன், தனது மகனை பார்க்க முடியாவிட்டாலும், உயிரிழந்த தனது மகனுடைய உடலையேனும் பார்க்க வேண்டும் என ரஜீவ் ராஜேந்திரனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தன்னுடன் தொலைபேசி வாயிலாக கதைத்தார். விரைவில் உங்களை பார்க்க வந்து விடுவேன் என்று தெரிவித்தார்.

இன்று அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியே எங்கள் காதுகளுக்கு வந்து கிடைத்துள்ளது. உயிருடன் எனது மகனை பார்க்க முடியாவிட்டாலும், உயிரிழந்த தனது மகனுடைய உடலையேனும் பார்க்க வேண்டும் என ரஜீவ் ராஜேந்திரனின் தாயார் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/srilanka-youth-dead-in-manus-island

  • தொடங்கியவர்

மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

 

Rajeev-Rajendran.jpg
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இது குறித்து   ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியதன் பயனாக, இதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் சடலம் நாளைய தினம் (14) கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற இவர், அவுஸ்திரேலிய அரசினால் மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் 09 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு கோரியிருந்ததாக மேற்படி இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/45170

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • தொடங்கியவர்

பப்புவா நியூகினியா தடுப்பு முகாமில் உயிரிழந்தவரின் சடலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது

 

பப்புவா நியூகினியா தடுப்பு முகாமில் உயிரிழந்தவரின் சடலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது
 

பப்புவா நியூகினியாவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த புகலிடக்கோரிக்கையாளர் இராஜேந்திரன் ரஜீவின் சடலம் இன்று நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் – மீசாலையைச் சேர்ந்த 32 வயதான இராஜேந்திரன் ரஜீவ் என்பவர் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பப்புவா நியூகினியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

விமானத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட அவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திலின வனிகசேகர குறிப்பிட்டார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உதவியுடன் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் பப்புவா நியூகினியா முகாமை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த முகாமில் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/10/பப்புவா-நியூகினியா-தடுப்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.