Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் சமூகமும், கூட்டமைப்பும் அரசின் பாதுகாவலர்கள்;தினேஷ் சாடல்

Featured Replies

புலம்பெயர் சமூகமும், கூட்டமைப்பும் அரசின் பாதுகாவலர்கள்;தினேஷ் சாடல்

 

புலம்பெயர் சமூகமும், கூட்டமைப்பும் அரசின் பாதுகாவலர்கள்;தினேஷ் சாடல்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருமே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக இந்த இரண்டு பிரிவினருமே செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளினதும் யோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்று இன்றைய தினம் மல்வத்துப்பீட மகாநாயகக்கரிடம் கையளிக்கப்பட்டது.

சமஷ்டி கோரிக்கைக்கு முன்பிலிருந்தே எதிர்ப்பு வெளியிட்டுவரும் பிரிவினரில் முக்கியமான கட்சியான ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மல்வத்துப்பீட மகாநாயகக்கரிடம் தங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் விடயங்கள் இதன்போது நீண்டநேரம் தெளிவுபடுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மகாநாயக்க தேரரிடம் கலந்துரையாடப்பட விடயங்களை ஊடகங்களுக்கு முன்பாகவும் தெளிவுபடுத்தினார்.

 “ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இப்போது செயற்படுவதைப் பார்த்தால் எந்தவொரு பயங்கரமான பிரிவுகளைக்கூட நிறைவேற்றும் வகையில் காணப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை யோசிக்க வேண்டும். புலம்பெயர் தமிழ் சமூகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்புமே இதற்குப் பின்னணியில் இருந்து செயற்படுகின்றன. எங்களுக்கு எதிராக மேற்குலகில் செயற்படுகின்ற மற்றும் சமஷ்டியை கோருகின்ற பிரிவினரே நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். அதனால்தான் இப்படியான விடயங்கள் இடம்பெறுகின்றன. ஒற்றையாட்சியை பாதுகாக்கும் எண்ணம் என்ற விடயம் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒருமித்த நாடு என்றும் கூறுகிறார்கள். இந்த வார்த்தையை பார்த்தால் அது 78களில் இருந்த சொல் அல்ல. இதனை எதிர்த்து நாங்கள் பல விடயங்களை தெளிவுபடுத்தினாலும் அனைத்தையும் இவர்கள் நிராகரிக்கின்றனர். ஒற்றையாட்சியை மாற்றுவதற்கும், 9ஆவது பிரிவை மாற்றவும் முயற்சி இடம்பெறுவதாக நான் கடந்த சில வாரங்களாக சபையிலும், வெளியிலும் கூறிவந்தேன். எனினும் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள விடயங்களை பிரதமரும், ஜனாதிபதியும் நன்றாக படிக்கவில்லை. இதனால்தான் அண்மையில் ஜனாதிபதி, சமஷ்டி என்ற ஒன்று புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்று கூறியிருக்கின்றார்” என்று கூறினார்.

இதேவேளை இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, புதிய அரசியலமைப்பொன்றை சர்வஜன வாக்கெடுப்பின்றி உருவாக்கப்பட முடியாது என்றும் கூறினார்.

“புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஒருபோதும் ஆணையளிக்கவில்லை. ஜனாதிபதிக்கு கிடைத்த மக்கள் ஆணை என்னவென்றால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாயின், சர்வஜன வாக்களிப்பிற்கு செல்லாமல் உருவாக்கும்படியே தெளிவாகின்றது. ஆனால் புதிய அரசியலமைப்பொன்றை பொதுமக்கள் கருத்துக் கணிப்பிற்குச் செல்லாமல் ஒருபோதும் உருவாக்க முடியாது” என்றார்.

https://www.youtube.com/watch?v=jhVPmyuit2Y

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Dinesh-Gunawardane-comment-on-Gov-and-diaspora-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.