Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை பிளவுபடுத்தும் அரசியலால் சாதிக்க போவதென்ன?

Featured Replies

தமிழர்களை பிளவுபடுத்தும் அரசியலால் சாதிக்க போவதென்ன?

 
 
தமிழர்களை பிளவுபடுத்தும் அரசியலால் சாதிக்க போவதென்ன?
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வடக்கு மற்­றும் கிழக்கு மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் அடுத்த ஆண்டு இடம்­பெ­று ­மெ­னத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாண சபை­யின் பத­விக்­கா­லம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண சபை­யின் பத­விக்­கா­லம் அடுத்த ஆண்டு செப்­ரெம்­பர் மாத­ம் பூர்த்­தி­ய­டை­ய­ வுள்ளது. இரண்டு மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே திக­தி­யில் தேர்­தல் இடம்­பெ­ற­ மெ­னத் தெரி­கின்­றது.

வடக்கு மற்­றும் கிழக்கு மாகாணங்­கள் ஒன்­றாக இணைந்து கொள்­வது தொடர்­பாக அர­ச­மைப்­புச் சபை­யின் வழிப்­ப­டுத்­தும் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட் டு¦ள்­ளது. ஆனால் இணை­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டு­கள் மிகக் குறை­வா­கவே உள்­ளன. அந்த வகையில் அடுத்த மாகா­ண­ச­பைத் தேர்­தல்­கள் வடக்­கி­லும் கிழக்­கி­லும் தனித்­த­னியே இடம்­பெ­று­மென்­பது உறு­தி­யா­கி­விட்­டது.

ஈழத் தமிழர்களது ஏகப் பிரதிநிதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே

வடக்­கி­லும் கிழக்­கி­லும் வாழ்­கின்ற தமி­ழர்­க­ளின் ஏகப் பிர­தி­நிதி என்ற அசைக்க முடி­யாத அந்­தஸ்து தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­புக்கே உள்­ளது. கூட்­ட­மைப்பு கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வடக்கு கிழக்கில் அதிக இடங்­க­ளைக் கைப்பற்றி நாடாளு மன்றத்தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யை­யும் பெற்­றுக்கொண்­டுள்­ளது.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கியபோதி­லும், தேர்­தல்க­ளில் வெற்­றி­களை ஈட்ட முடி­யா­மல் விரக்தி நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். இதன் வெளிப்­பா­டாக எதற்­கெ­டுத்­தா­லும் கூட்­ட­மைப்பை விமர்­ச­னம் செய்­வ­தையே இவர்­கள் தொழி­லா­கக் கொண்­டுள்­ள­னர்.

வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கத் தமிழ் அரசுக் கட்சி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்தபோது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய மூன்று கட்­சி­க­ளும் முத­ ல­மைச்­ச­ருக்­குத் தமது ஆத­ரவை வழங்­கின. கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளும் முத­ல­மைச்­ச­ரின் பின்­னால் நின்­ற­னர். அப்­போதே கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணி­யொன்றை உரு­வாக்கு­வது தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது. இந்த யோச­னை­யின் மையப் புள்­ளி­யாக சி.வி.விக்­னேஸ்­வ­ரன் காணப் பட்­டார்.

தற்­போது அடுத்­த­மாத இறு­திக்­குள் மாற்று அணி உரு­வாக்­கப்­பட்­டு­வி­டு­மென்ற செய்தி கசிந்­துள்­ளது. கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அனை­வ­ரும் இந்த அணி­யில் இணைந்து கொள்­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யும். கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கின்ற சில கட்­சி­கள் கூட மாற்று அணிக்கு மாறக்­கூ­டிய வாய்ப்­புக்களும் உள்­ளன.

தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு
தௌிவற்ற நிலையில்

தமிழ் மக்­கள் பேர­வை­யில் கூட்­ட­மைப்­புக்­கு எதி ரான கருத்­துக்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் அங்­கம் வசிக்­கின்­றமை இர­க­சி­ய­மா­ன­தொரு விட­ய­மல்ல. சந்­தர்ப்­பத்­தைப் பொறுத்து இது­வொரு அர­சி­யல் அமைப்­பாக மாற்­றம் பெறு­மென்ற கணிப்பு இது ஆரம்­பிக்­கப்­பட்­ட­போதே பல­ரி­டத்­தி­லும் காணப்­பட்­டது.

ஆனால் இது மறு­த­லிக்­கப்­பட்­டது. மாற்று அணி­யொன்று உரு­வாக்­கப்­ப­டும்போது தமிழ் மக்­கள் பேர­வை­யும் அதில் சங்­க­ம­மா­கி­வி­டு­மென எதிர்­பார்க்க முடி­யும். முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன்கூட இதில் தம்மை இணைத்­துக் கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­முள்­ளன.

இந்த நிலை­யில் உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகா­ண­ச­பைத் தேர்­தல்­கள் இடம்­பெ­றும்போது தமி­ழர் பகு­தி­கள் அர­சி­யல் போர்க்­க­ளமாக மாறி­வி­டப் போகின்­றன. பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இலங் கைத் தமி­ழ் அரசுக் கட்­சி­யும் அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் தேர்­தல்­கள் இடம் பெ­றும் வேளைகளில் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக மேடை கள் அமைத்து ஒரு­ தரப்பினரை மறு தரப்பினர் தரக்­கு­றை­வாக விமர்­சித்து பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட்ட நிகழ்வுகள் மீண்­டு­மொரு தடவை அரங்­கேறப் போகின்­றன.

மக்­க­ளி­டையே பகை­யு­ணர்­வும் வன்­ம­மும், உரு­வா­கப் போகின்­றன. ஆனால் பதவி ஒன்­றையே குறி­யா­கக் கொண்டு செயற்­ப­டு­கின்ற சுய­ந­ல­வா­தி­கள் அர­சி­யல் களத்­தில் சமர் ஆடப் போகின்­ற­னர்.

இது இன­வா­தி­க­ளுக்­கும், அவர்­க­ளு­டன் இணைந்து செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்­கும் வாய்ப்­பாக அமைந்­து­வி­டப் போகின்­றது. தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த அர­சி­யல் கட்­சி­கள் தமி­ழர் பகு­தி­க­ளில் முழு­மூச் சு­டன் செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பை­யும் இது வழங்­கப் போகின்­றது. குளத்­தைக் கலக்­கிப் பருந்­துக்கு விருந்து படைத்த கதை போன்று இங்­கும் இடம்­பெ­றப் போகின்­றது.

நல்லவர்களை இனம்காணும் பொறுப்பு
பொதுமக்களுக்கு உண்டு

தமிழ் மக்­கள் தமது உணர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்திச் சிந்­தித்துச் செயற்பட வேண்­டிய தரு­ணம் இது.

போலி­க­ளை­யும், சந்­தர்ப்­ப­வா­தி­க­ளை­யும், சுய­ந­ல­வா­தி­க­ளையும் அவர்­கள் இனம்­கண்டுகொள்ள வேண்­டும். தமது சிந்­த­னைக்கு வேலை கொடுக்கவேண்­டும். தமது இனத்­தின் விடு­த­லைக்­கா­கப் போராடி வர­லாறு காணாத அவ­லங்­களை எதிர்­கொண்ட ஈழத்­த­மி­ழி­னம் தமக்­குள்­ளேயே முரண்பட்டுப் போரா­டத் துணிந்­தமை மிகப் பெரி­ய­தொரு வர­லாற்­றுத் தவ­றா­கும்.

கடந்த 70 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தாம் வகித்த பத­வி­க­ளால் மக்­க­ளுக்கு எதைச் சாதித்­துக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்?அவர்­கள் பத­வி­வழி வந்த சுகங்­களை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்க, அப்­பா­வித் தமிழ் மக்­கள் நடு­வீ­தி­யில் நின்று துய­ரங்­க­ளு­டன் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். பத­விக்­கா­கப் போரா­டு­வதே தமி­ழர்­க­ளின் வேலை­யா­கிப் போய்­விட்­டது. இந்த நிலை நீடிக்­கு­மா­னால், தமி­ழர்­க­ளின் தலை­வி­தியை எவ­ரா­லும் மாற்­றி­விட முடி­யாது.

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ஆழமாகச் சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்­ப­தற்கு இன்­ன­மும் அவ­கா­சம் உள்­ளது.

தமி­ழர்­க­ளின் ஒற்­று­மை­யைக் குலைக்­காத வகை­யில் நல்­ல­தொரு முடிவை அவர்­கள் எட்ட வேண்­டும். வீணான அர­சி­யல் போட்­டி­க­ளைத் தவிர்த்து ஆரோக்­கி­ய­மா­ன­தும் மக்­க­ளுக்கு நன்மை பயப்­ப­து­மான அர­சி­யல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும்.

http://newuthayan.com/story/34086.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.