Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு அவசியம்; பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு

Featured Replies

புதிய அரசியலமைப்பு அவசியம்; பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு

 

 

Mahanayake_04102017_SPM_CMY.jpg

 

அதிகாரப் பரவலாக்கத்துடன் ஆனால் நாட்டைக் கூறு போடாத அரசியலமைப்பொன்றே நாட்டுக்குத் தேவை என மல்வத்தை மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தெரிவித்தார்.

‘62 இலட்சம் மக்கள் அமைப்பு’ (ஜனதா சம்முதிய) கண்டியில் நேற்று முன்தினம் (03) நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக மல்வத்தை மகாநாயக்க தேரரை தெளிவுபடுத்தும் வகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கத்திற்கு சிலர் நாடு இரண்டாகப் பிரிவதாக அர்த்தம் கொடுக்கின்றனர். அதிகாரப் பரவலாக்கம் என்பது வேறு. நாட்டை துண்டாடுவது வேறு என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்தார்.

இங்கு தேரரிடம் கருத்துத் தெரிவித்த குழுவினர் குறிப்பிட்டதாவது,

புதிய அரசியலமைப்பை துரிதமாக முன் எடுக்க வேண்டும். அதற்காக நாடுதழுவிய ரீதியில் ஆா்பாட்டங்கள், சத்தியாகிரகங்கள் மேற்கொள்ளப்படும். முதலாவது கொழும்பிலும் அதன்பின்பு கண்டியிலுமாக இது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் ஏற்பாட்டாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தேரரிடம் தெரிவித்தார்.

எனவே புதிய அரசியல் யாப்பைத் துரிதப்படுத்துவதில் சிலர் மேற்கொள்ளும் தவறான பிரசாரம் பாரிய தடையாக இருப்பதாகவும் கூறினார்.யாப்பு சீர்திருத்தம் ஊடாக நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்துகொள்ள முடியும். பெளத்த சமயத்திற்கான இடம் இல்லாது போகும் என்ற பிரசாரமும் அதிலொன்றாகும். நிச்சயம் அப்படி நடக்காது. ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிகாலத்தில் கூட பெளத்த துறவிகள் உருவாக்கம் இடம் பெற்றது. டொரிங்டன் பிரபு காலத்தில் இடம்பெற்ற பாணதுறை கொள்கை பற்றியும் அவர் நினைவுபடுத்தினார்.

புதிய அரசியலமைப்பு தொடா்பான தேசிய வேலைத்திட்டத்தின் ஏற்பாட்டளர் காமினி வியங்கொடை கருத்து வெளியிடும் போது,

நல்லாட்சி அரசு வழங்கிய உறுதிமொழிகளைத் துரிதப்படுத்துவதே தமது அமைப்பின் இலக்காகும். அதில் முக்கியமானது அரசியலமைப்பு சீா்திருத்தமாகும். அதனை மாற்றாது எதனையும் சரியாக முன்னெடுக்க முடியாது. எனவே புதிய அரசியலமைப்பு பற்றியே தமது அமைப்பு கூடிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி அரசியலமைப்பு தொடர்பாக துணை அறிக்கைகள் பிரேரணைகள் என்பன அதிகளவில் கிடைத்துள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் போது ஒரு சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். முக்கியமாக பெளத்த மதத்திற்கான உரிய இடம் இல்லாமல் போவதாகவும் அதிகாரப் பரவலை நாட்டை துண்டு போடுவதாக மேற்கொள்ளும் பிரசாரமும் பொது மக்களுக்கு மத்தியிலும் குழப்பம் ஏற்படுத்தும் விசம கருத்துக்களாகி உள்ளன. இது மக்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களில் சிலர் சபையில் தமது கருத்துக்களை முன்வைக்காது வெளியே வந்து தவறான கருத்தைப் பரப்புகின்றனர் என்றார். இன்னும் பலர் இதன்போது கருத்துக்களை முன்வைத்தனர். அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வண. மகாநாயக்கத் தேரா் இறுதியில் தெரிவித்ததாவது,

அதிகாரப் பரவலாக்கத்திற்கு சிலர் நாடு இரண்டாகப் பிரிவதாக அர்த்தம் கொடுக்கின்றனர். அதிகாரப் பரவலாக்கம் என்பது வேறு. நாட்டை துண்டாடுவது வேறு என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பரவலாக்கத்துடன் ஆனால் நாட்டைக் கூறு போடாத அரசியலமைப்பொன்றே நாட்டுக்குத் தேவை என்றார்.

http://www.thinakaran.lk/2017/10/05/உள்நாடு/20321

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.