Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சென்னை மின்சார ரயிலில், கத்தி பொல்லுகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறிஞர்  அண்ணாதுரை  போன்றவர்கள் கல்வி கற்ற கல்லூரி. அதற்கு... அவர்களை சொல்லி குற்றமில்லை. 
அவர்களின்... திராவிட வாரிசுகள்... மூலைக்கு  மூலை... திறந்து வைத்திருக்கும், 
"டாஸ் மார்க்"  மதுபான கடைகளே... போதுமானது.  
ஜெயலலிதா போயாச்சு, கருணா நிதி  " அவுட் ஒவ் ஆர்டர்"....  இனியாவது திருந்துங்க...  போலி திராவிடக் கட்சிகளே... 

உங்களுக்கு... புண்ணியமாவது  கிடைக்கும். வீரம் செறிந்த, தமிழகத்தை... இனியும்... புண்ணாக்க  வேண்டாம்.

Posted

https://www.youtube.com/watch?v=UVNXzzj_0fc

https://www.youtube.com/watch?v=R5-x-rCFxmg

 

இளம் கன்று பயமறியாது என்பது போல் இது எல்லா நாட்டிலும் வளமை. சூழ்நிலைக்கு ஏற்ப அட்டகாசம் வேறுபடும். காரில் ரேஸ் ஓடுவார்கள். வம்புக்கு இழுப்பார்கள். கண்ணாடி பஸ்தரிப்பிடங்களை உடைப்பார்கள். கஞ்சா அடிப்பார்கள். வயதும் ஆர்வமும் கேர்மோன்களும் என தன்னை ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமானவானா சமூகத்திற்கு காட்டவும் பிறரின் கவனத்தை தன்பக்கம் இழுக்கவும் செய்வார்கள். பெண்களின் கவர்ச்சி உடைகளும் மேக்கப்புகளும் இவ்வாறானது தான். இந்த உந்து சக்தியை சிலர் விளையாட்டின் பக்கம் திருப்புவார்கள் ஏதோ ஒரு கண்டுபிடிப்பு சார்ந்து திருப்புவார்கள். சரியான வழிநடத்தல் தான் காரணம். இருந்தும் இந்த மாணவர்கள் தமது சக்தியை அவ்வப்போது சமூக நீதிக்கான போராட்டங்களின் பக்கம் திருப்புகின்றார்கள். அந்தவகையில் இவர்கள் அட்டகாசங்களை பெரிதுபடுத்த முடியாது...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

7 minutes ago, சண்டமாருதன் said:

இளம் கன்று பயமறியாது என்பது போல் இது எல்லா நாட்டிலும் வளமை. சூழ்நிலைக்கு ஏற்ப அட்டகாசம் வேறுபடும். காரில் ரேஸ் ஓடுவார்கள். வம்புக்கு இழுப்பார்கள். கண்ணாடி பஸ்தரிப்பிடங்களை உடைப்பார்கள். கஞ்சா அடிப்பார்கள். வயதும் ஆர்வமும் கேர்மோன்களும் என தன்னை ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமானவானா சமூகத்திற்கு காட்டவும் பிறரின் கவனத்தை தன்பக்கம் இழுக்கவும் செய்வார்கள். பெண்களின் கவர்ச்சி உடைகளும் மேக்கப்புகளும் இவ்வாறானது தான். இந்த உந்து சக்தியை சிலர் விளையாட்டின் பக்கம் திருப்புவார்கள் ஏதோ ஒரு கண்டுபிடிப்பு சார்ந்து திருப்புவார்கள். சரியான வழிநடத்தல் தான் காரணம். இருந்தும் இந்த மாணவர்கள் தமது சக்தியை அவ்வப்போது சமூக நீதிக்கான போராட்டங்களின் பக்கம் திருப்புகின்றார்கள். அந்தவகையில் இவர்கள் அட்டகாசங்களை பெரிதுபடுத்த முடியாது...

மன்னிக்கவும்.. இப்படியொரு நியாப்படுத்துதலை எதிர்பார்க்கவில்லை.. !

எப்படிப்பட்ட ஹார்மோன்களும் கட்டுக்குள் இருக்க வேண்டும், அவரவர் வீட்டிற்குள் அதை வைத்துக்கொள்ள வேண்டும், பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் யாரும் நடக்க அனுமதிக்கக் கூடாது.. இதில் வயது வித்தியாசம் ஏன்? பொது மக்களுக்கு சட்டம் ஒழுங்கு மீது நம்பிக்கை இருக்க வேண்டுமெனில் இம்மாதிரியான பொறுக்கித்தனத்தை வயது தாட்சன்யமில்லாமல் அடக்கி ஒடுக்க வேண்டும்..

 

Posted
11 minutes ago, ராசவன்னியன் said:

மன்னிக்கவும்.. இப்படியொரு நியாப்படுத்துதலை எதிர்பார்க்கவில்லை.. !

எப்படிப்பட்ட ஹார்மோன்களும் கட்டுக்குள் இருக்க வேண்டும், அவரவர் வீட்டிற்குள் அதை வைத்துக்கொள்ள வேண்டும், பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் யாரும் நடக்க அனுமதிக்கக் கூடாது.. இதில் வயது வித்தியாசம் ஏன்? பொது மக்களுக்கு சட்டம் ஒழுங்கு மீது நம்பிக்கை இருக்க வேண்டுமெனில் இம்மாதிரியான பொறுக்கித்தனத்தை வயது தாட்சன்யமில்லாமல் அடக்கி ஒடுக்க வேண்டும்..

 

ஏற்கனவே மது விலக்குப் போராட்டத்தில் கவல்துறை இவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரணமாக பஸ் ரயில்களில் தொங்கிக்கொண்டு போகின்றவர்களை கத்தி கொண்டு போகும் நிலைக்கு நகர்த்தியது என்னவென்பதை ஆராய்வதே சிறந்தது. தயவு தாட்சன்யமில்லாமல் ஒடுக்க முற்பட்டால் இது என்னும் வேற லெவலுக்கு போகும் தவிர இதை தணிக்க முடியாது. காவல்துறையும் பொறுக்கித்தனம் செய்கின்றது அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பொறுக்கித்தனம் செய்கின்றது. இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு உருவாகும் எதிர்வினைகள். உணர்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக அணுகவேண்டியவை. எக்காலத்திலும் இளைஞர்களின் துடிப்பை சரியான வழிக்கு திசை திருப்பவேண்டுமே தவிர அதை ஒடுக்கி முடக்குவது அவர்கள் வாழ்வை அழிப்பதற்கு சமம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, சண்டமாருதன் said:

ஏற்கனவே மது விலக்குப் போராட்டத்தில் கவல்துறை இவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரணமாக பஸ் ரயில்களில் தொங்கிக்கொண்டு போகின்றவர்களை கத்தி கொண்டு போகும் நிலைக்கு நகர்த்தியது என்னவென்பதை ஆராய்வதே சிறந்தது. தயவு தாட்சன்யமில்லாமல் ஒடுக்க முற்பட்டால் இது என்னும் வேற லெவலுக்கு போகும் தவிர இதை தணிக்க முடியாது. காவல்துறையும் பொறுக்கித்தனம் செய்கின்றது அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பொறுக்கித்தனம் செய்கின்றது. இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு உருவாகும் எதிர்வினைகள். உணர்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக அணுகவேண்டியவை. எக்காலத்திலும் இளைஞர்களின் துடிப்பை சரியான வழிக்கு திசை திருப்பவேண்டுமே தவிர அதை ஒடுக்கி முடக்குவது அவர்கள் வாழ்வை அழிப்பதற்கு சமம். 

இதற்கு ஒரே வழி குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், அதும் உடனடியாக நிறைவேற்றப்படவும் வேண்டும்..

'பயம்..பயம்..' இது ஒன்றே அனைவரையும் தவறுகளிலிருந்து விலத்தி வைக்கும்..

மத்திய கிழக்கு நாடுகளிலும் குற்றங்கள் உண்டு..ஆனால் அதற்கான தண்டனைகள் கடுமையாக, உடனடியாக நிறைவேற்றப்படுவதால் பயத்தின் காரணமாக அதிக குற்றங்கள் நிகழ்வதில்லை. தாங்கள் நியாயம் கற்பிக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரந்தாலும், அவை நீர்த்து சுருண்டுவிடும் ஐயா.

சின்ன உதாரணமாக, நாடு திரும்பும் ஆசிய நாட்டவர்களின் நடத்தையை சொல்லலாம்..

விமான நிலைய 'செக் இன் கவுண்டர்'கள் முதல் விமானத்தில் அமரும் வரை வாலை சுருட்டிக்கொண்டிருப்பார்கள், அதே பயணிகள், தம் சொந்த நாட்டில் தரையை தொட்டவுடன் தன் புத்திய காட்டத் தொடங்கிவிடுவார்கள்.. ஏன்..?

கட்டுப்பாடில்லாத, தண்டனை குறைவான தாமதிக்கும்,/எதற்கும் தப்பிக்க வழியிருக்கும் சனநாயக நாடு என்றபடியால் தானே இந்த அலட்சியப் போக்கு..? திமிர்..?

Posted
13 minutes ago, ராசவன்னியன் said:

இதற்கு ஒரே வழி குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், அதும் உடனடியாக நிறைவேற்றப்படவும் வேண்டும்..

'பயம்..பயம்..' இது ஒன்றே அனைவரையும் தவறுகளிலிருந்து விலத்தி வைக்கும்..

மத்திய கிழக்கு நாடுகளிலும் குற்றங்கள் உண்டு..ஆனால் அதற்கான தண்டனைகள் கடுமையாக, உடனடியாக நிறைவேற்றப்படுவதால் பயத்தின் காரணமாக அதிக குற்றங்கள் நிகழ்வதில்லை. தாங்கள் நியாயம் கற்பிக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரந்தாலும், அவை நீர்த்து சுருண்டுவிடும் ஐயா.

சின்ன உதாரணமாக, நாடு திரும்பும் ஆசிய நாட்டவர்களின் நடத்தையை சொல்லலாம்..

விமான நிலைய 'செக் இன் கவுண்டர்'கள் முதல் விமானத்தில் அமரும் வரை வாலை சுருட்டிக்கொண்டிருப்பார்கள், அதே பயணிகள், தம் சொந்த நாட்டில் தரையை தொட்டவுடன் தன் புத்திய காட்டத் தொடங்கிவிடுவார்கள்.. ஏன்..?

கட்டுப்பாடில்லாத, தண்டனை குறைவான தாமதிக்கும்,/எதற்கும் தப்பிக்க வழியிருக்கும் சனநாயக நாடு என்றபடியால் தானே இந்த அலட்சியப் போக்கு..? திமிர்..?

 

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.

அரபு நாடும் தமிழ்நாடும் ஈழமும் ஒன்றல்ல. தண்டனை கொடுப்பவர்கள் யோக்கியமாக முதல் இருக்கவேண்டுமே !! பொதுவான அரச இயந்திரமே பிரச்சனைக்குரியதாக இருக்கும் போது அதில் இருந்து தண்டனை வழங்குவது தீர்வாக அமையாது. 

குறிப்பாக சாதிய மத முரண்பாடுகள் உள்ள சமூகத்தில் இறுக்கமான தண்டனைகள் குற்றத்திற்கான தண்டனையாக மட்டும் புரிந்துகெள்ளப்பட மாட்டது. அவைகள் விரைவில் வேறு எல்லைகளை தொட்டுவிடும். புதிய பிரச்சனைகளைள கிளப்பி விடும். ஈழத்தில் போராட்டம் பின்னடைவில் இந்த அம்சமும் பெரும் பங்கு வகிக்கின்றது.

உதாரணமாக காவல் துறையின் தண்டனை சார் நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டால் அவர் தலித் அல்லது வேறு சாதி சார்ந்தவராக அணுகப்படலாம் அல்லது இந்து பிஜபி அல்லது இஸ்லாமியராக அணுகப்படலாம். வேறு மாநிலத்தவராக அணுகப்படலாம் திமுக அதிமுக வாக அணுகப்படலாம். பிரச்சனைகள் வேறு திசைகளுக்குச் செல்லும். மேலும் காவல் துறையே குடிசைகளை கொழுத்துகின்றது பெண்களை தாக்குகின்றது பெண்கள் மீது அத்துமீறல்களை செய்கின்றது. அவர்கள் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அதிகார சக்திகளின் கட்சிகளின் அடியாட்களாக பார்க்கப் படுகின்றார்கள். அவர்கள் மாணவர் என்ற சக்தியின் மீது அதிக தண்டனையை பிரயோகித்து அவர்களை ஒழுக்கப்படுத்துவது நடமுறைக்கு சாத்தியம் இல்லை. அதற்குரிய அரசியல் தளமும் இல்லை என்பதே கசப்பான உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, சண்டமாருதன் said:

... உதாரணமாக காவல் துறையின் தண்டனை சார் நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டால் அவர் தலித் அல்லது வேறு சாதி சார்ந்தவராக அணுகப்படலாம் அல்லது இந்து பிஜபி அல்லது இஸ்லாமியராக அணுகப்படலாம். வேறு மாநிலத்தவராக அணுகப்படலாம் திமுக அதிமுக வாக அணுகப்படலாம். பிரச்சனைகள் வேறு திசைகளுக்குச் செல்லும். மேலும் காவல் துறையே குடிசைகளை கொழுத்துகின்றது பெண்களை தாக்குகின்றது பெண்கள் மீது அத்துமீறல்களை செய்கின்றது. அவர்கள் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அதிகார சக்திகளின் கட்சிகளின் அடியாட்களாக பார்க்கப் படுகின்றார்கள். அவர்கள் மாணவர் என்ற சக்தியின் மீது அதிக தண்டனையை பிரயோகித்து அவர்களை ஒழுக்கப்படுத்துவது நடமுறைக்கு சாத்தியம் இல்லை. அதற்குரிய அரசியல் தளமும் இல்லை என்பதே கசப்பான உண்மை. 

ஆயிரம் சமூக, சட்ட ஓட்டைகளை காரணம் சொன்னாலும், இப்படி அப்பட்டமான தார்மீக ஒழுங்கு மீறல்களை குறைந்தபட்சம் கண்டிக்கலாம், ஆனால் சமூக காரணங்களைக் கூறி அவர்களின் பிறழ்வுகளுக்கு நியாயம் கற்பித்தல் சரியன்று. இது அவர்களின் செயலை ஊக்குவித்தலாக முடியும்.

இப்படி அத்துமீறும் மாணவர்களை பொறுப்புடன் கண்டிக்கவில்லையெனில் அடுத்து பெண்கள், மாணவிகள் கல்லூரிகளில்/தெருவில் நடமாட முடியுமா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புத்தியை தீட்டாமல், கத்தியுடன் திரிந்த

சென்னை கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

 

சென்னை: சென்னை மின்சார ரயிலில், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் பயணிப்பது போன்ற வீடியோ ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் ரயில் மீது ஏறுவது போன்ற வீடியோவும், ரயில் நிலையத்தில் மாணவர்கள் பட்டாசுகளையும் வெடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டதும் போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது. பயணிகளை அச்சுறுத்தும் வகையிலான இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

 

10-1507615405-students-arrest-3.jpg10-1507615395-students-arrest555.jpgx10-1507615425-4-students-were-arrested-
 

மாணவர்கள் கலாட்டா

மாணவர்களின் இதுபோன்ற செயலால் அச்சம் அடைந்த அங்கிருந்த மக்கள் கூறுகையில், "மாணவர்கள் மதுபோதையில் இருந்தனர். அவர்கள் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியதும் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.."

நல்ல வேளை

"குடிபோதையில் இருந்ததாலும், ஆயுதங்களை வைத்திருந்ததாலும் ஏதேனும் விபரீதம் நடைபெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை."

பெற்றோருக்கு மன உளைச்சல்

"படிக்கும் வயதில் இதுபோன்று மாணவர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டதால், பெற்றோருக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களை போலீஸார் நல்வழிப்படுத்த வேண்டும்" என்றனர்.

4 பேர் கைது

இதனிடையே வீடியோவில் அடையாளம் தெரிந்த 4 மாணவர்களை பட்டாபிராம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சென்னை மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, தியாகராயாக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இவர்கள்

விசாரணையில் திருநின்றவூரைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், திருவள்ளூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் உள்ளிட்டோரா ஆவர். இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்ஸ்தமிழ்

 

கத்தியுடன் ரயில் பயணிகளை அச்சுறுத்திய 4 கல்லூரி மாணவர்கள் கைது: மேலும் சிலருக்கு போலீஸ் வலை

 

 

download

 

திருவள்ளூர், ஆவடி, சென்னை ரயில் பாதையில் கையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் சென்னை இடையே புறநகர் ரயில் சேவை உள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். இதில் யார் பெரியவர் (ரூட் தல) என்ற போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.

முன்பு பேருந்துகளில் (ரூட் தல) என்று மாணவர்கள் மோதிக்கொள்வார்கள். ”பஸ் டே” என்று சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பயணிகள் தான்.

இதே போல் சென்னை ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாண்வர்கள் அந்தந்த கல்லூரி சார்பில் யார் பெரியவர் என்ற போட்டியில் ஈடுபடுவது தொடர் கதையாகி தற்போது யார் ரூட்  தல என்ற மோதல் வரை இட்டுச் சென்றுள்ளது.

இதில் நேற்று முன் தினம் சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பயங்கர ஆயுதங்களை வைத்து ரயில் பயணிகளை அச்சுறுத்தியபடி மாணவர்கள் பயணம் செய்தனர்.

எப்போதும் கைகளால் அடித்துக் கொல்லும் மாணவர்கள் சமீப காலமாக கத்தியை கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டி கொள்வதில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 7 மாதம் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையம் இடையே ஓடும் ரயிலில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் மாநில கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ஆனாலும் இந்த இரு கல்லூரி மாணவர்களின் மோதல் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாநில கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் தரையில் தேய்த்தப்படி சென்றனர்.

இதனை சக ரயில் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் உத்தரவின் பேரில் ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையை துவக்கிய சில மணி நேரங்களிலிலேயே சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஓடும் ரயில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.பிடிபட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் சம்பவத்தில் ஈடுபட்டது திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜகதீஸ்வரன் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது ஆயுதங்கள் வைத்திருந்தது, பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

தி இந்து

 

Edited by ராசவன்னியன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அனுரா தரப்பு உடனடியாக  தன்னையறியாமல் இப்படி சொன்னார் "உங்களை சுற்றியுள்ளவர்களின் பேச்சை கேட்க வேண்டாம் என்று" அதாவ்து தமிழரசு கட்சியை கேட்க வேண்டாம் என்ற அர்த்தத்தில்
    • காணோளி பற்றிய என் கருத்தை தான் அங்கே பதிந்திருந்தேன், நுணாவிலான்.  இதே போலவே தான் விக்கினேஸ்வரன் ஐயாவும் முதலாவது உரையை ஆற்றியிருந்தார் என்பதன் மூலம் இவை எல்லாம் கேட்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காகவே எழுதி வாசிக்கப்படும் உரைகள் என்று சொல்லியிருந்தேன். இவர்கள் போன்றவர்கள் எந்த காத்திரமான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்று நான் நம்பவில்லை என்பதும் அதன் பொருள். அது தான் நாம் அறிந்த வரலாறும். இன்னும் இன்னும் அகலமாக தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் அகதிகள், வெளிநாடுகளில் ஒற்றைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள், உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தவர்கள் என்று ஒரு பரந்த பார்வை இருப்பது போல கூட இந்த உரை தெரியலாம். ஆனால் பாரளுமன்றத்தில் ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளிலேயே அர்ச்சுனா தன்னை மட்டுமே சுற்றி வரும் ஒருவர் என்பது தான் மீண்டும் மீண்டும் தெரிகின்றது. நித்தியின் அல்லது ஜக்கியின் ஒரு பேச்சை கேட்டீர்கள் என்றால், அவையும் அசத்தலாகவே இருக்கும். எல்லாவற்றையும் தொகுத்து, அந்த மனிதர்களையும் சேர்த்துப் பார்த்தால், இவை எல்லாம் வெறும் ஏமாற்றுகளாகவே தெரியும், முடியும். 'ஒருவரின் கருத்து அவரைத் தாண்டிப் போவதில்லை.................' என்று ஒரு வரி இருக்கின்றது. ஒரு மனிதனின் நடவடிக்கைகளை தாண்டி, அவர் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பேதும் இல்லை என்று இதைப் பொருள் கொள்ளலாம்.     
    • 2009 க்கு பின்னர் எனது எழுத்துகளை மீண்டும் மீண்டும் உங்கள் சமீபத்திய கருத்துரைகள் ஞாபகப் படுத்துகின்றன.  புலி முகம் குத்திய நான் பின்னால் நிற்கிறேன் மற்ற எல்லோரையும் அரவணைத்து ஏதாவது செய்ய எவராவது முன் வருவீர்களா என்று கத்தாத நாளில்லை. வேண்டாத கடவுளில்லை. காலில் விழாத குறை தான் இங்கு.  இன்று நீங்கள் அதை செய்கிறீர்கள். பார்க்கலாம். 
    • எனக்குத்தெரிந்த சிலரும் கடனுக்குப் புகையிலையைக் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள்
    • மிக சரியான பார்வை. மாவாட்டும் சபை….மன்னிக்கவும் மாவட்ட சபைதான் கிடைக்கப்போகிறது. அதையே டில்வின் போன்றோர் எதிர்க்க எதிர்க்க, மீட்பர் அனுர பிரான் பெரும் பிரயத்தனப்பட்டு வழங்கினார்  என முடிப்பார்கள். எங்க பிரிகேட்டுகளும்…மாவட்டம் தந்த மஹா பிரபு என அனுர காலில் விழுந்து பிரளுவார்கள். தேசிய இனம் என்பதோ, காணி உரிமை என்பதோ எவரும் கேட்காதபடி, ஒரே இலங்கையர் கோசம் காதை பிளக்கும். இப்படி எம்மை மட்டகளப்பு, யாழ்பாணம் தேர்தல் தொகுதிக்குள் அடக்கிய பின், குடியேற்றம் அரச, தனியார் முறைகளில் துரிதப்படுத்த பட்டு, இந்த மாவட்டங்களுக்குள் நாம் முடக்கப்படுவோம். யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.