Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனும் ஹக்கீமும் ஒன்றாக தேநீர் அருந்தி பேசினாலும் அடிமட்ட ரீதியில் பிரச்சினைகள் புரையோடிப் போயுள்ளன!

Featured Replies

சம்பந்தனும் ஹக்கீமும் ஒன்றாக தேநீர் அருந்தி பேசினாலும் அடிமட்ட ரீதியில் பிரச்சினைகள் புரையோடிப் போயுள்ளன!

(கல்குடா நிருபர்)

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக் கூடிய கடமைப்பாடு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

Ali-zaheer-maulana.jpg

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் தனது 2017 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் சிறுபான்மை இன மக்களாக வாழும் எமக்குள்ளேயே ஒரு உடன்பாடில்லாத நிலைமை காணப்படுகின்றது. எமது மக்களிடத்தில் காணிப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.  இவ்வாறான பிரச்சினைகனை புரிந்துணர்வுடன் தீர்ப்பதற்கு முடியாத நிலையில் வடக்கும் கிழக்கும் இணைவது எவ்வாறு சாத்தியமாகும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஏனைய தலைவர்களும் ஒன்றாக தேநீர் அருந்திக் கொண்டு பேசினாலும், எங்கள் மத்தியில் அடிமட்ட ரீதியில் பல பிரச்சினைகள் புரையோடிப் போய் காணப்படுகின்றன.
இவ்வாறான பிரச்சினைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக் கூடிய கடமைப்பாடு இருக்கின்றது. எனவே, ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சி செய்து வருகின்றோம் என்றார்.

http://metronews.lk/?p=15173

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für milk baby gif  Bildergebnis für சம்பந்தன்

எங்களை... இனியும், சோதிக்க வேண்டாம் என்று.....
சம்பந்தனின் ....  வாயுக்குள் இப்ப, பால் தான் ஊத்த வேணும்.

50 வருட அரசியல் வாழ்க்கையில்,  ஒரு  ராசதந்திரமும்,  கற்காத... "பால் குடி பேபி"  தான்...  இந்தச்  சம்பந்தன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆளு எதிர்கட்சி தலைவரா இருக்காரே அது இராஜதந்திரமில்லையா?
எஜமானருக்கு விசுவாசமா அவங்க காலைசுத்தி வாராரே அதிலை இராஜதந்திரமில்லாமலா? 
இணக்க அரசியல்செய்து எல்லாத்தையும் தக்கவைக்கிறது அதுவும் இராஜதந்திரம்தானே?
தன் குடும்பத்தை வெளிநாட்டில் வைக்கிறது இராஜதந்திரமில்லாமல் வேறென்ன?
அந்நிய சக்திகளின் நிகழ்ச்சிநிரலை  ஏற்று நடப்பது ஐயாவுக்கு என்ன அவ்வளவு இலேசுப்பட்ட காரியமா அதிலை இராஜதந்திரம் தெரியலையா? இதைல்லாம் விடுங்க தமிழருக்கு கொடுத்தவாக்கை காற்றோட போகவிட்டு உப்புச்சப்பில்லா தீர்வுத்திட்டத்தை ஆதரிக்க முன்வர்றாரே அங்கையிருக்கு நம்ம ஆளுட உச்சகட்ட இராஜதந்திரம் - இவங்கல்லாம் அந்தாளுமுன்னாலை பிச்சை வாங்கணும் .
அந்தாளு காதிலைவிழுந்துதென்னு வெச்சிக்குமே அந்தாளு ஓங்கியடிச்சா ஒண்ணரை தொன்னு வெயிட்டு பாக்கிரியா! பாக்கிரியா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.