Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வெள்ளியன்று ஹர்த்தால்

Featured Replies

வடக்கில் வெள்ளியன்று ஹர்த்தால்
 

- எஸ். நிதர்ஷன்

அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியற் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோரி, வடக்கெங்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடகில்-வெள்ளியன்று-ஹர்த்தால்/71-205279

  • தொடங்கியவர்

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் வெள்ளிக்கிழமை பூரணஹர்த்தாலும் ஆளுனர் அலுவலகம் முன் கண்டனப் போராட்டமும்

image-723x1024.jpg

அனுரபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13-10-2017) அன்று வடமாகாணம்முழுவதும் பூரண கதவடைப்புப் போராட்டமும்  காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் அசுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் நாடாளுமன்றப் பிர-திநிதிகளுக்கும் இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10.2017 வெள்ளிக்கிழமை காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆயிரமாய் அணி திரள்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வடபகுதியிலுள்ள பல பொது அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளன.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்ப்பாணபல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
இலங்கை ஆசிரியர் சங்கம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு
வடமாகாண புதிய அதிபர் சங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம்
சமூக விஞ்ஞாக ஆய்வு மையம்
கிராமி உழைப்பாளர் சங்கம்
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு
தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம்
வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு
யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி
ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி
தமிழ் சிவில் சமூக அமையம்
தமிழ்ர் விடுதலைக் கூட்டணி
அகில இலங்கை சைவ மகா சபை

http://globaltamilnews.net/archives/44671

  • தொடங்கியவர்

வெள்­ளி­யன்று வடக்­கில் முழு­மை­யான அடைப்பு

 
வெள்­ளி­யன்று வடக்­கில் முழு­மை­யான அடைப்பு
0
SHARES
 

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நாளை­ ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வட­மா­கா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள் இணைந்து கூட்­டாக இந்த அடைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளன.

அன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­தின் முன்­னால் கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போராட்­டம் தொடர்­பில் 19 அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் ஒப்­ப­மிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்­துள்­ளன.

அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்பு சட்­ட ­ரீ­தி­யான விட­யம் என்­ப­தைக் கடந்­து ­விட்­டது. நியா­யத்­தின் அடிப்­ப­டை­யில் அணு­கப்­பட வேண்­டிய ஓர் விட­ய­மாக ஆகி­விட்­டது.

ஓர் அர­சி­யல் தீர்­மா­னத்­தின் ஊடா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய அடிப்­ப­டை­யான பிரச்­சி­னை­க­ளுள் ஒன்று என்ற பரி­மா­ணத்­தை­யும் அடைந்­து­விட்­டது.

12 ஆயி­ரம் முன்­னாள் விடு­த­லைப் புலி­களை, குறு­கி­ய­கா­லத் தடுப்புக்குப் பிறகு, மீள­வும் சமூ­கத்­து­டன் இணைய வழி­வகை செய்த ஓர் அரச பொறி­மு­றை­யா­னது, வெறும் 132 பேர்­களை மட்­டும் தொடர்ந்­தும் சிறை­க­ளில் அடைத்­தி­ருப்­ப­தா­னது எவ்­வித சட்ட அர்த்­த­மும் இல்­லாத செயற்­பாடு.

எமது வாக்­கு­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­கள், அர­சின் பங்­கா­ளி­க­ளா­க­ மாறி, அனைத்து விட­யங்­க­ளி­லும் அர­சுக்கு உறு­து­ணை­யாக இருக்­கின்­றார்­கள்.

நாடா­ளு­மன்­றச் செயற்­பா­டு­கள் அனைத்­தி­லும் அரசை நியா­யப்­ப­டுத்தி ஆத­ரிக்­கின்­றார்­கள்.

ஆத­ர­வுக்­கான பிர­தி­யீ­டா­கத்­தன்­னும் – உறு­தி­யான தளம்­ப­லற்ற வார்த்­தை­க­ளால் பேசி – சிறை­க­ளில் வாடும் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்க அவர்­க­ளால் முடி­யும்.

உற­வு­கள் சிறை­க­ளில் வாடி­னா­லும் பர­வா­யில்லை, தாம் அர­சைச் சங்­க­டப்­ப­டுத்­தக்­கூ­டாது என்­ப­தற்­கா­க­வும், அர­சு­ட­னான தமது உற­வு­கள் பாதிப்­பு­றக் கூடாது என்­ப­தற்­கா­க­வும், மென்­மை­யா­கப் பேசி எமது பிர­தி­நி­தி­கள் காலத்­தைக் கடத்தி வரு­கின்­றார்­கள்.

தமது வழக்­கு­களை மீண்­டும் தமிழ்ப் பகுதி நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்­ற ­வேண்­டும் என்ற உட­ன­டிக் கோரிக்­கை­யை­யும், அவ்­வாறு மாற்­றப்­பட்­ட­தன் பின்பு, தமது வழக்­கு­க­ளைத் துரி­த­மாக விசா­ரித்து முடிவு காண­ வேண்­டும்.

அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் கால­வ­ரை­ய­றை­யற்ற உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் கோரிக்­கை­களை இழுத்­த­டிப்­பின்றி உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும்.

முழுத் தமிழ் அர­சி­யற் கைதி­க­ளை­யும் ஓர் அர­சி­யற் தீர்­மா­னத்­தி­னூ­டாக விடு­விக்­கு­மாறு அரசை வலி­யு­றுத்­தி­யும், அச­மந்­தப் போக்­கைக் கைவிட்­டும் – மழுப்­பல் பதில்­களை வழங்­கா­ம­லும் – அனைத்து தமிழ் அர­சி­யல் கைதி­க­ளை­யும் விடு­விப்­ப­தற்­கான நேரடி அழுத்­தத்­தினை அர­சுக்கு வழங்­கு­மாறு எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­களை வற்­பு­றுத்­தி­யும் வடக்கில் முழுமையான அடைப்பை நடத்தவுள்ளோம்.

எதிர்­வ­ரும் சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் வரு­கை­த­ர­வி­ருக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, தாம­த­மற்­ற­தீர்வு காண­வேண்­டிய இந்த விவ­கா­ரத்­தின் தீவி­ரத் தன்­மையை உணர்த்­து­வ­தற்­கு­மாக, நாளை­ ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டத்தை மேற்­கொள்ள தமிழ் மக்­களை உரி­மை­யு­டன் அழைக்­கின்­றோம்.

அவ­சர மருத்­துவ சேவை­கள் தவிர்ந்த ஏனைய அனைத்­துச் செயற்­பா­டு­க­ளை­யும் முழு­ம­ன­தோடு நிறுத்தி – நியா­யத்­தோ­டும் சாவோ­டும் போரா­டு­கின்ற தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு எமது ஆத்­ம­ப­லத்­தைக் கொடுப்­போம்.

தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு நிரந்­தர விடு­தலை கிடைக்­கும்­வரை நாம் ஓய­மாட்­டோம் என்ற செய்­தியை – இந்த நாட்­டின் அர­சுக்­கும், எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், இதன் பொறுப்­பு­டைய ஒவ்­வொரு தரப்­புக்­கும் உறு­தி­யா­கத் தெரி­விக்க நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கம் முன்­பாக அணி திரள்­வோம் -­என்­றுள்­ளது.

தமிழ் மக்­கள் பேரவை, யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக ஆசி­ரி­யர் சங்­கம், இலங்கை ஆசி­ரி­யர் சங்­கம், அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு, வட­மா­காண புதிய அதி­பர் சங்­கம், யாழ்ப்­பாண பல்­க­லைக்­கழ ஊழி­யர் சங்­கம், சமூக விஞ்­ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்­பா­ளர் சங்­கம், சமூக நீதிக்­கான வெகு­சன அமைப்பு, தமிழ் மக்­கள் வாழ்­வு­ரி­மைக்­கான செயற்­பாட்டு மையம், வலி. வடக்கு மீள்­கு­டி­யேற்ற மற்­றும் புனர்­வாழ்­வுக் குழு, யாழ்ப்­பாண பொரு­ளி­ய­லா­ளர் சங்­கம், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி, புதிய சன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்சி, சன­நா­யக மக்­கள் விடு­தலை முன்­னணி, தமிழ் சிவில் சமூக அமை­யம், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய 19 அமைப்­புக்­க­ளுமே முழு அடைப்­புப் போராட்­ட­துக்­கான அழைப்பை விடுத்­துள்­ளன.

http://newuthayan.com/story/35804.html

  • தொடங்கியவர்

எல்­லோ­ரும் ஒத்­து­ழை­யுங்­கள் அர­சி­யல் கைதி­கள் உருக்­கம்

 
எல்­லோ­ரும் ஒத்­து­ழை­யுங்­கள் அர­சி­யல் கைதி­கள் உருக்­கம்
0
SHARES
 

எங்­கள் நியா­ய­மான கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கும் எமக்கு நீதி கிடைப்­ப­தற்­கு­மாக நாளை வெள்­ளிக் கிழமை வடக்­கில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் முழு அடைப்­புப் போராட்­டத்துக்கு எல்­லோ­ரும் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும் என்று உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அவர்­கள் தமது உற­வி­னர்­கள் ஊடாக நேற்­றி­ரவு விடுத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளாகி நாங்­கள் அர­சி­டம் எமது வழக்­கு­கள் தொடர்­பாக சில கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றோம்.

2009ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு தொடர்ச்­சி­யாக 4 வரு­டங்­கள் எந்­த­வித வழக்கு விசா­ர­ணை­க­ளு­மின்றி கொழும்பு 6ஆம் மாடி, பூசா போன்ற சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தோம்.

2013ஆம் ஆண்டு எமக்­கெ­தி­ராக வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்டு 2017ஆம் ஆண்டு வரை 58 தட­வை­கள் வழக்­கிற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தோம்.

வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட எமது வழக்கை சாட்­சி­க­ளுக்கு உயி­ரா­பத்து இருப்­ப­தா­கக் கூறி அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றி­யுள்­ள­னர்.

அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றத்­தில் எமது வழக்­குத் தொட­ரப்­ப­டு­மா­யின் மொழிப் பிரச்­சி­னையை எதிர்­கொள்ள நேரி­டு­வ­தோடு அங்கு எமது தரப்­பில் ஒரு சட்­டத்­த­ர­ணி­யை­யும் நிய­மிக்க செய்ய முடி­யாது.

இவ்­வா­றான பல பிரச்­சி­னை­க­ளுக்­கும் மத்­தி­யில் எமது வழக்கை மாற்­றி­யி­ருப்­பது எமக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட அநீ­தி­யா­கவே நாம் கரு­து­கின்­றோம்.

அநீ­தியை எதிர்த்து எமது வழக்கை தொடர்ந்­தும் வவு­னியா நீதி­மன்­றத்­தி­லேயே நடத்­து­மா­றும் துரி­த­மாக வழக்­குக்கு முடி­வைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரி­யும் நாம் இன்று (நேற்று) 17ஆவது நாளாக உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளோம்.

எமது உணவு ஒறுப்­புப் போராட்­டத்­திற்கு ஆத­ர­வா­கப் பல கவ­ன­வீர்ப்பு போராட்­டங்­களை நடத்­திய சகல பொது அமைப்­புக்­க­ளும் நன்­றி­யைத் தெரி­விக்­கின்­றோம்.

நாளை வெள்­ளிக்­கி­ழமை வடக்­கில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் முழு அடைப்­புப் போராட்­டத்­திற்­கும் எல்­லோ­ரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும் என்று இரந்து கேட்­டுக் கொள்­கின்­றோம் – என்­றுள்­ளது.

http://newuthayan.com/story/36107.html

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் மாற்றம் அல்லது விடுவிப்பு நடந்தால் சந்தோஷமே 

  • தொடங்கியவர்

முழு ஆத­ரவு அளிப்­போம்

 

அர­சி­யல் கைதி­க­ளின் பிரச்­சினை மீண்­டும் விஸ்­வ­ரூ­பம் எடுத்­துள்­ளது. அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் மூன்று கைதி­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டு­வ­ரு­வதை அடுத்து அவர்­க­ளின் நிலை மோச­மா­கி­யுள்ள நிலை­யில் இந்­தப் பிரச்­சினை மீண்­டும் மக்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

வடக்கு முழு­வ­தும் நாளைய தினம் முழு­ மை­யான கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட் டுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறிசேன, நாளை மறு­தி­னம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தர­வுள்ள நிலை­யில், அர­சி­யல் கைதி­கள் தொடர்­பில் தமிழ்ச் சமூ­கத்­தின் உறு­தி­யான செய்­தி­யைச் சொல்­லும் வகை­யில் இந்­தக் கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது .

இந்­தக் கைதி­கள் மூவர் தொடர்­பி­லும் அரச தலை­வர் ஏற்­க­னவே வழங்­கிய வாக்­கு­று­தி­களை அவர் நிறை­வேற்­ற­வில்லை என்­கி­ற­போது இந்­தப் போராட்­டம் முக்­கி­ய­மா­ன­து­தான்.

இந்த வாக்­கு­றுதி என்று மட்­டு­மல்ல இது­போன்ற பல வாக்­கு­று­தி­ களை அரச தலை­வர் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கி­விட்டு மறந்­து­போய்­விட்­டார். அதில் புகழ்­பெற்­றது, வலி. வடக்கு மக்­களை 6 மாதங்­க­ளில் சொந்த இடங்­க­ளில் குடி­ய­மர்த்­துவேன் என்று அவர் வழங்­கிய வாக்­கு­றுதி. அவர்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் இன்­ன­மும்­கூட சொந்த இடங்­க­ளுக்­குத் திரும்­பா­ம­லேயே இருக்­கின்­ற­னர்.

இந்த மூன்று அர­சி­யல் கைதி­க­ளி­ன­தும் தற்­போ­தைய கோரிக்கை பார­தூ­ர­மா­ன­தன்று. தமது வழக்­கு­க­ளைத் தமக்­குத் தெரிந்த மொழி­யில் நடத்­து­வ­தற்கு வச­தி­யாக அவை ஏற்­க­னவே விசா­ரிக்­கப்­பட்டு வந்த வவு­னியா நீதி­மன்­றத்தி­ லேயே தொடர்ந்­தும் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­கி­றார்­கள்.

அந்த வழக்­கின் சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டது என்ற கார­ணத்­தைக்­கூ­றியே இந்த வழக்கை சட்ட மா அதி­பர் திணைக்­க­ளம் வவு­னி­யா­வில் இருந்து அனு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றி­யுள்­ளது.

விடு­த­லைப் புலி­கள் இயக்க முன்­னாள் போரா­ளி­களே சாட்­சி­கள் என்­ப­த­னால் அவர்­கள் தமிழ்ப் பகுதி நீதி­மன்­றங்­க­ளுக்கு வந்து சாட்சி சொல்­வ­தற்கு அச்­சப்­ப­டு­கி­றார்­கள் என்று பொலிஸ் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போர்க் காலங்­க­ளில் விடு­த­லைப் புலி­க­ளால் பிடிக்­கப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அரச படை­யி­னரை போரின் இறுதி நாள்­க­ளில் கொன்று எரித்­தார்­கள் என்­பதே இவர்­கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு. அதனை அவர்­கள் செய்­தார்­கள் என்­ப­தற்­கான சாட்­சி­க­ளாக முன்­னாள் புலி­கள் இரு­வரே பொலி­ஸா­ரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். அவர்­க­ளி­லும் ஒரு­வர் வெளி­நாடு சென்­று­விட்­டார்.

எஞ்­சி­யுள்ள ஒரு­வ­ருக்கே அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது என்று பொலி­ஸார் இப்­போது கூறு­கின்­ற­னர். சர­ண­டைந்த விடு­த­லைப் புலி­கள் இயக்­கப் போரா­ளி­க­ளைக் கொன்­றார்­கள் என்று அரச படை­யி­னர் மீது சுமத்­தப்­ப­டும் போர்க்­குற்­றத்­திற்கு நிக­ரான ஒரு குற்­றச்­சாட்டே, இந்­தக் கைதி­கள் மீதும் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அரச படை­யி­னர் மீதான அத்­த­கைய குற்­றச்­சாட்டை விசா­ரிப்­ப­தற்­கான நீதிப் பொறி­மு­றை­யைக்­கூட உரு­வாக்­கு­வ­தற்கு முன்­வ­ராத இந்த அரசு, அதி­கா­ரம் தன் வசம் இருப்­ப­தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு புலி­கள் தரப்­பில் இழைக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் அதே­போன்ற குற்­றத்தை விசா­ரணை செய்ய முற்­பட்­டி­ருப்­ப­தும், அத­னை­யும் தமக்­குச் சாத­க­மான வகை­யில் விசா­ரணை செய்ய முற்­பட்­டி­ருப்­ப­தும் ஏற்­பு­டை­ய­தன்று.

இந்த வழக்­கில் சாட்­சி­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள், தடுப்­பில் இருந்து அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நிபந்­தனை­யாகவே அரச சாட்­சி­க­ளாக மாற இணங்­கி­னார்­கள் என்­றும் சொல்­லப்­ப­டு­கி­றது. இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு தக­வல் இல்­லை­யா­யி­னும், இலங்­கை­யின் பொலிஸ் மற்­றும் விசா­ர­ணைப் பொறி­மு­றை­யில் அப்­ப­டி­யொன்று நடக்­கவே முடி­யாது என்று நிரா­க­ரித்­து­வி­ட­வும் முடி­யாது.

எப்­ப­டிப் பார்த்­தா­லும், இலங்­கை­யின் அரச நீதி சிங்­க­ளத் தரப்­பின் பக்­க­மா­கவே சாய்ந்து நிற்­கின்­ற­மையை இந்த வழக்கு உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. அப்­ப­டிப்­பட்ட சிங்­கள நீதி­யையே தமிழ்ச் சமூ­கம் எதிர்க்­கின்­றது.

அதே­நே­ரம், 1-0 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட முன்­னாள் புலி­களை மறு­வாழ்வு வழங்கி விடு­வித்­த­தா­கக் கூறிக்­கொள்­ளும் இந்த அரசு, போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் உள்­ளிட்ட சில நூறு பேரை மட்­டும் தொடர்ந்­தும் தடுத்து வைத்­தி­ருப்­ப­தும் நீதி­யான செயல் அல்ல.

எனவே, பட்­டி­னிப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள கைதி­க­ளின் வழக்­கு­களை உடன் வவு­னி­யா­வுக்கு மாற்ற வலி­யு­றுத்­தி­யும், தமிழ் அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் விடு­விக்க வலி­யு­றுத்­தி­யும் நாளை அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள அடைப்­புக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தும் ஆளு­நர் அலு­வ­ல­கம் முன்­பாக நடக்க இருக்­கும் ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கேற்­ப­தும் தமி­ழர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ர­தும் தலை­யாய கடமை.

நாம் போராட மறுத்­தால் இன்று அவர்­க­ளுக்கு நடப்­பது நாளை எமக்­கும் நடக்­கும் என்­பதை நினை­வில் வைத்­தி­ருப்­போம்.

கடை­ய­டைப்­புக்­கள் எமது பொரு­ளா­தா­ரத்­தையே பாதிப்­பவை என்­ப­தால், ஆர்ப்­பாட்­டம் நடக்­கக்­கூ­டிய அரை நாளுக்கு மட்­டும் கடை­களை மூடி மாலை­யில் அவற்­றைத் திறப்­ப­தற்கு அனு­ம­திப்­பது குறித்­துப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­த­வர்­க­ளும் சிந்திப்பது சிறந்­தது.

http://newuthayan.com/story/36149.html

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

முழு ஆத­ரவு அளிப்­போம்

கடை­ய­டைப்­புக்­கள் எமது பொரு­ளா­தா­ரத்­தையே பாதிப்­பவை என்­ப­தால், ஆர்ப்­பாட்­டம் நடக்­கக்­கூ­டிய அரை நாளுக்கு மட்­டும் கடை­களை மூடி மாலை­யில் அவற்­றைத் திறப்­ப­தற்கு அனு­ம­திப்­பது குறித்­துப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­த­வர்­க­ளும் சிந்திப்பது சிறந்­தது.

http://newuthayan.com/story/36149.html

கடைகளை மூடுவது, திறப்பதுபற்றியெல்லாம், போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அதன் உரிமையாளர்கள் சிந்திக்கவேண்டியதை.... புதியஉதயன் ஏன் சிந்திக்கின்றது. ?? புதியஉதயன் மாலையில் வெளியாகும் பத்திரிகையா.... ??   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.