Jump to content

இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

                                                                          இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி தேர்வு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடப் போகும் ஒருநாள் போட்டிக்கு 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

பிசிசிஐ

 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேறகொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதையொட்டி, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியலில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அஜிங்கியே ரஹானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவ்னேஷ்வர் குமார் மற்றும் ஷர்தல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய தொடரின் போது அணியில் இருந்த கே.எல்.ராகுல், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஷிகர் தவான், தாக்கூர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/105030-indian-squad-for-new-zealand-odi-series-selected.html

Link to comment
Share on other sites

3 ஒருநாள் போட்டி,மூன்று T20 ஓவர்: நியூசிலாந்து அணி இந்தியா வந்தது

 

3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 ஓவர் ஆட்டத்தில் விளையாட நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.

3 ஒருநாள் போட்டி,மூன்று T20 ஓவர்: நியூசிலாந்து அணி இந்தியா வந்தது
 

மும்பை:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

இதற்காக நியூசிலாந்து வீரர்கள் நேற்று இந்தியா வந்தனர். முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் இந்தியா வந்துள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

நியூசிலாந்து ‘ஏ’ அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இதில் உள்ள 6 வீரர்கள் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் நியூசிலாந்து அணியோடு இணைந்து கொள்வார்கள்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 22-ந்தேதி மும்பையில் நடக்கிறது. 29-ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது.

முதல் 20 ஓவர் ஆட்டம் நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. 7-ந்தேதியுடன் நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம் முடிகிறது.

ஒருநாள் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் இந்த பயிற்சி ஆட்டம் நடக்கிறது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒருநாள் தொடரை (ஜிம்பாப்வே, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா) வென்று இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் வென்று 7 ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/14145934/1123039/3-one-day-match-20-over-play-New-Zealand-team-came.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதிலையும் அஷ்வின் இல்லையா:unsure:

Link to comment
Share on other sites

அஸ்வின் ஜடேஜா இருவரையும் மீண்டும் சேர்க்கவில்லை.

இதில் கொஹ்லின் பங்கு நிறையவே இருக்கு.

கேதார் ஜாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ்  இவர்கள் மூவரும் சிறப்பாக சுழல் பந்து வீசுவதால் அஸ்வின்யை ஒதுக்குகிறார்கள்.

அஸ்வின், ஜடேஜா, ரெயினா இவர்கள் டோனியின் செல்லபிள்ளைகள்..tw_blush:

10 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப இதிலையும் அஷ்வின் இல்லையா:unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாலு மச் தொடர்ந்து தோற்க்க பிராத்திப்பதை வேறு வழி இல்லை.tw_angry:பாவம் கால்த்திக் பான்டியா.:unsure:

Link to comment
Share on other sites

நியூஸிலாந்து தொடரிலும் அஸ்வின், ஜடேஜா புறக்கணிப்பு: தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு

 

 
15CHPMUASHWIN

ரவீந்திர ஜடேஜா, அஸ்வின்.   -  THE HINDU

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடாத தொடக்க வீரரான ஷிகர் தவண் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 32 வயதான தினேஷ் கார்த்திக், சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் இடம் பிடித்திருந்த போதும் விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கைத் தொடரில் அறிமுக வீரராக இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், உமேஷ் யாதவுக்கு பதிலாக தேர்வாகி உள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், அக்சர் படேல் இடம் பெற்றுள்ளனர்.

அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தற்போது ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடி வருகிறன்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற யோ-யோ தேர்வில் அஸ்வின் தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால் நியூஸிலாந்து தொடரில் அவர் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.

http://tamil.thehindu.com/sports/article19865352.ece

Link to comment
Share on other sites

ஓம் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தார்கள் என்றால் மீண்டும் அஸ்வின் ஜடேஜா என்று போவார்கள்.

அதே நேரம் தினேஷ் கார்திக்கை இம்முறை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். அவருக்கு விளையாடும் 11 பேரில் இடம் கொடுக்கவேண்டும் என்றால் தோனியை அணியில் இருந்து நீக்குவார்கள்.

23 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப நாலு மச் தொடர்ந்து தோற்க்க பிராத்திப்பதை வேறு வழி இல்லை.tw_angry:பாவம் கால்த்திக் பான்டியா.:unsure:

 

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 போட்டிகள்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

 

 
nz1

 

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் அக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவுள்ளன. ஒருநாள் போட்டிகள் மும்பை, புணே, கான்பூர் ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் டெல்லி, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்கர்.

டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், டாம் ப்ரூஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், இஷ் சோதி, டிம் செளதி.

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/14/phillips-and-astle-picked-in-updated-new-zealand-squad-2790278.html

Link to comment
Share on other sites

குல்தீப், சாஹலின் பந்து வீச்சு சவாலாக இருக்கும்: வில்லியம்சன்

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலை சமாளிப்பது மிகவும் கடினமான சவாலாக இருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் கூறியுள்ளார்.

 
குல்தீப், சாஹலின் பந்து வீச்சு சவாலாக இருக்கும்: வில்லியம்சன்
 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பையில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் திறமையான வீரர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர்.

இருவரும் அண்மைகாலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை சமாளிப்பது மிகவும் கடினமான சவால் என்பதை அறிவோம். ஆனால் அதற்கு தயாராக இருக்கிறோம். இங்குள்ள சூழலுக்கும், வித்தியாசமான ஆடுகளங்களுக்கும் ஏற்ப அணுகுமுறையை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியமாகும்’ என்றார்.

நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் கூறும் போது, ‘எங்கள் அணியில் நிறைய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொண்டு இருக்கிறார்கள். சிலர் அவருடன் ஒரே அணியில் இணைந்து விளையாடி உள்ளனர். இந்த அனுபவம் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/16094422/1123280/Kuldeep-Yuzvendra-Chahal-bowling-will-be-a-challenge.vpf

Link to comment
Share on other sites

இந்தியா, நியூஸிலாந்து முதல் போட்டி: வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை

 

 
virat

 

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் மதியம் 2.30 மணிக்குத் துவங்கி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ல் தேல்வியும் சந்தித்துள்ளது. நியூஸிலாந்து 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 438 ரன்களைக் குவித்தது.

மேலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்தில் பாதிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் நாளன்று மழை பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

உத்தேச அணி விவரம்:

இந்தியா:

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே (அ) தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசூவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.

நியூஸிலாந்து:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிக்கோல்ஸ் (அ) கிளென் ஃபிலிப்ஸ், காலின் டி கிராண்ட்ஹோமி, மிட்செல் சான்டனர், இஷ் சோதி, ட்ரென்ட் போல்ட், டிம் சௌத்தி.

 

இந்தியா, நியூஸிலாந்து சில சுவாரஸ்யத் தகவல்கள்:

இன்னும் 98 ரன்கள் அடித்தால் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 1,000 ரன்களைக் கடந்தவர் என்ற மைல்கல்லை ரோஹித் ஷர்மா எட்டுவார்.

இத்தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்க முடியும்.

நியூஸிலாந்து வீரர் காலின் முன்ரோ இதுவரை ஆடிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒன்றில் கூட துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியது இல்லை. ஆனால் இந்தியாவுடனான இத்தொடரில் இதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இப்போட்டியின் மூலம் தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கவுள்ளார். அவர் இதுவரை விளையாடிய 199 போட்டிகளில் 8,767 ரன்கள் குவித்துள்ளார். இது எந்த வீரரும் செய்யாத சாதனையாகும்.

இன்னும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-ஆவது இந்தியர் என்ற சாதனைப் படைப்பார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் 23 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஆசிய மைதானங்களில் மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் மார்டின் கப்டில் சராசரி 26.03 ஆகும். அதிகபட்சமாக 86* ரன்கள் எடுத்துள்ளார்.

நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்தியாவுடன் ஆடிய 7 ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

IndvsNZ: இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பல்!

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளனர். 

ட்ரென்ட் போல்ட் 

 
 

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்றார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் முறையே 20 மற்றும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருவரையும், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் பெவிலியன் அனுப்பினார். தற்போது கேப்டன் விராட் கோலியும், கேதார் ஜாதவ்வும் களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 54/2 என்ற நிலையில் ஆடி வருகிறது. 

http://www.vikatan.com

 
114/3 (24/50 ov)
 
Link to comment
Share on other sites

ரஹானேவை மிடில் வரிசையில் இறக்க விரும்பவில்லை: விராட் கோலி

 

ரஹானேவை மிடில் வரிசையில் இறக்கி குழப்பம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

 
ரஹானேவை மிடில் வரிசையில் இறக்க விரும்பவில்லை: விராட் கோலி
 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ரஹானே நிச்சயமாக 3-வது தொடக்க ஆட்டக்காரருக்கான வாய்ப்பை பெறுவார். லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரருக்கான போட்டியில் இருக்கிறார். இருப்பினும் ரஹானே தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்படுவதால் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை அவர் பெறுவார்.
 
ஒரு இடத்துக்கு 4 வீரர்கள் இருப்பது அணிக்கு சிறப்பான விஷயமாகும். ஆனால் ஆடும் லெவனில் 2 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது.
 
ரஹானேவை மிடில் வரிசையில் இறக்கி குழப்பம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களில் யாருக்காவது காயம் அல்லது நல்ல பார்ம் இல்லாதபட்சத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
 
இந்த போட்டி தொடரில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் ஆடிய அனுபவம் கொண்டவர். அணியில் வீரர்கள் கலவை நன்றாக அமைய வேண்டியது அவசியமானதாகும். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதை வைத்து வீரர்களுக்கு அணியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சிறப்பான பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக குறுகிய ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார். 
 
201710220918274917_1_Kane._L_styvpf.jpg
 
நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணி மிகவும் சிறப்பான சாதனைகளை படைத்து இருக்கிறது. குறிப்பாக சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது கடினமான காரியம் என்பது எங்களுக்கு தெரியும்.
 
உலகின் வலுவான அணியில் இந்தியா ஒன்றாகும். இங்கு விளையாடுவது என்பது சவாலான விஷயமாகும். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. இங்கு நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
 
கடந்த போட்டி தொடரில் நாங்கள் 2-2 என்ற கணக்கில் இருந்து கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தோம். இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி எங்களை தகவமைத்து கொள்ள வேண்டும். இந்த போட்டி தொடரில் முந்தைய தொடரை விட சிறப்பாக செயல்படுவோம்’ என்று தெரிவித்தார்.
 
238/6 (45.3/50 ov)
 
Link to comment
Share on other sites

277/3 (47.4/50 ov, target 281)
 
New Zealand require another 4 runs with 7 wickets and 14 balls remaining
 
 
On 14.10.2017 at 9:32 PM, சுவைப்பிரியன் said:

அப்ப நாலு மச் தொடர்ந்து தோற்க்க பிராத்திப்பதை வேறு வழி இல்லை.tw_angry:பாவம் கால்த்திக் பான்டியா.:unsure:

 

உங்கள் ஆசை நிறைவேறுகிறது..tw_blush:

Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து! #IndvsNZ

 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

Tom Latham

 
 

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். அவர் 125 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது கோலியின் 200-வது போட்டியும் ஆகும். மேலும், அவர் அடிக்கும் 31-வது சதமும் இதுவாகும். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க வீரக்ள மார்டின் கப்டில் மற்றும் காலின் மன்ரோ நிதானமான ஆட்டத்தைக் கையாண்டு, சேசிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர். கப்டில் மற்றும் மன்றோ முறையே 32 மற்றும் 28 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால், அதன்பின் இறங்கிய ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரை சதங்களை கடந்த பின்னரும் தொடர்ச்சியாக ரன் குவித்தனர். லேதம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். ராஸ் டெய்லர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 49-வது ஓவரிலேயே நியூசிலாயநு எட்டிப்பிடித்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

http://www.vikatan.com/news/sports/105599-nz-won-the-first-odi-against-india.html

Link to comment
Share on other sites

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: லாதம், டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றி

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாம் லாதம், ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
மும்பை ஒருநாள் கிரிக்கெட்: லாதம், டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றி
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் கப்தில், முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது கொலின் முன்றோ 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 6 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

நியூசிலாந்து 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது நியூசிலாந்து வெற்றிக்கு 196 பந்தில் 201 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் ராஸ் டெய்லருடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒன்றிரண்டு ரன்னாக எடுத்து குல்தீப் யாதவ், சாஹல் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.

201710222149250708_1_10latham-s._L_styvpf.jpg

இந்த ஜோடியை பிரித்து விட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் இந்தியா விளையாடியது. ஆனால் இருவரும் இந்தியாவிற்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்கவில்லை. இதனால் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

201710222149250708_2_10rosstaylor-s._L_styvpf.jpg

45 ஓவர் முடிவில் நியூசிலாந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அடுத்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து டாம் லாதம் சதம் அடித்தார்.

அணியின் வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 49-வது ஓவரின் 5-வது பந்தில் டெய்லர் 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் களம் இறங்கினார். இவர் 49-வது கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

201710222149250708_3_10Kohli001-s._L_styvpf.jpg

நியூசிலாந்து அணி 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் 25-ந்தேதி நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/22214921/1124381/Mumbai-ODI-new-Zealand-Beats-india-by-6-wicket-Kohli.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி:)

கோலி தோனியிடம் சரனடைந்தது மேலும் மகிழ்ச்சி.:unsure::)

Link to comment
Share on other sites

இந்திய மண்ணில் சிறந்த விரட்டல் கூட்டணி; லேதம், டெய்லர் சாதனை; நியூஸி. அபார வெற்றி

 

 
latham

நூறு அடித்த நாயகன் டாம் லேதமை பாராட்டும் கேப்டன் விராட் கோலி. அருகில் ஷிகர் தவண்.   -  படம். | ஏ.எஃப்.பி.

மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியில் விராட் கோலி தன் 31-வது சதத்தை எடுக்க 280 ரன்களை 8 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது இந்திய அணி. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் டாம் லேதம் (103 நாட் அவுட்), ராஸ் டெய்லர் (95) ஆகியோர் அபாரமாக ஆடி இந்திய மண்ணில் விரட்டலில் 200 ரன்கள் கூட்டணி அமைத்து சாதனை படைத்ததோடு வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 49 ஓவர்களில் 284/4 என்று நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று, எப்போதும் புகழ்ந்து தள்ளப்படும் இந்தியப் பந்து வீச்சு மீது ஒரு கேள்விக்குறி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் 31 சதங்களுடன் இடம்பெற்றுள்ளார். ஆல் டைம் பட்டியலில் கோலிக்கு இரண்டாவது இடம். கோலியின் இந்த நாளை லேதம், டெய்லர் கூட்டணியினர் தங்கள் நாளாக மாற்றினர்.

இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக இலக்கை விரட்டும் போது எதிரணியினர் அமைத்த அதிகபட்ச ரன் கூட்டணிக்கான ஒரு அரிய சாதனையை டாம் லேதம், ராஸ் டெய்லர் கூட்டணி மேற்கொண்டது. 80/3 என்ற நிலையிலிருந்து 280/3 என்பது வரை வெற்றிக்கூட்டணி அமைத்தனர் லேதம், ராஸ் டெய்லர்.

விராட் கோலியின் 121 ரன்களுக்கு அடுத்த இந்திய பேட்ஸ்மெனின் அதிகபட்ச ஸ்கோர் இந்த இன்னிங்சில் தினேஷ் கார்த்திக் எடுத்த 37 ரன்களே. கோலிக்கும் மற்ற வீரர்களுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளிக்கான அடையாளம் ஆகும் இது.

நியூஸிலாந்து அணி இந்திய அணி போல் அல்லாமல் தொடக்கத்தில் கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆடியது. கொலின் மன்ரோ ரிஸ்க் எடுத்து ஆடி ரன்களைச் சேர்த்தார். முதல் ஓவரிலேயே 2-வது பந்தில் மார்டின் கப்தில் அருமையான நேர் டிரைவ் பவுண்டரியையும் லாங் ஆனில் இன்னொரு பவுண்டரியையும் அடுத்தடுத்து அடித்தார். பிறகு புவனேஷ் பந்து ஒன்றிற்கு முன் கூட்டியே ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்த மன்ரோ ஸ்கொயர் லெக்கில் அற்புதமான பிளிக் மூலம் சிக்ஸ் விளாசினார். ஆனால் அடுத்த பந்தே பவுல்டு ஆகியிருப்பார் தப்பினார்.

மீண்டும் பும்ராவின் பந்தை பிளிக் ஆடிய மன்ரோவுக்கு ஸ்கொயர்லெக்கில் அதிர்ஷ்டம் காத்திருந்தது, கேதார் ஜாதவ் கேட்சை விட்டார். அது பவுண்டரியுமானது. 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் மன்ரோ, பும்ராவின் வேகம் குறைந்த ஆஃப் கட்டர் பந்தை பிளிக் செய்கிறேன் பேர்வழி என்று கவர் பாயிண்டில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 9.3 ஓவர்களில் நியூஸிலாந்து 48/1.

கேன் வில்லியம்சன் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் திட்டமிட்டு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வைடாக வீச அவர் டிரைவ் ஆடினார், உடலிலிருந்து தள்ளி ஆடியதால் பந்து ஆஃப் திசையில் மேலெழும்பிய பந்தை ஜாதவ் பிடித்தார். கடந்த 21 ஒருநாள் போட்டிகளில் கேன் வில்லியம்சன் முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்கிறார்.

பிறகு 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த மார்டின் கப்தில் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட பந்து சரியாகச் சிக்காமல் எழும்பியது அதனை தினேஷ் கார்த்திக் ஓடி வந்து அருமையாகப் பிடித்தார், நியூஸிலாந்து 80/3 என்று ஆனது.

அதன் பிறகு லேதம், டெய்லர் இணைந்தனர், லேதம் ஸ்பின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டார், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்று இந்த ஷாட்களிலேயே சுமார் 30-35 ரன்களை அடித்திருப்பார் லேதம். டெய்லரும் நிதானப் போக்கைக் கடைபிடித்தார், ஸ்பின்னர்கள் அவ்வப்போது பீட்டன் ஆனார்கள் ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு சாஹல், குல்தீப் அச்சுறுத்தல் இல்லை. அப்படியும் 2 பிற வாய்ப்புகள் ஏற்பட்டன 31-வது ஓவரில் டெய்லரை தோனி ரன் அவுட் செய்திருக்கலாம் ஆனால் அந்த வாய்ப்பு நழுவியது. தோனி த்ரோ செய்தார் ரன்னர் முனையில் பவுலர் சாஹல் பந்தைச் சேகரிக்கும் இடத்தில் இல்லை. பிறகு கோலியின் நேரடி த்ரோ ஒன்று ஸ்டம்பை மிஸ் செய்ய அப்போதும் டெய்லர் தப்பினார்.

விராட் கோலி வேகப்பந்து வீச்சுக்கு மாறினார் ஒன்றும் பயனில்லை, பிறகு மீண்டும் ஸ்பின் பந்து வீச்சாளர்களிடம் வந்தார், ஆனால் அப்போது நியூஸிலாந்து வெற்றிக்குத் தேவை 60க்கும் கொஞ்சம் கூடுதல் ரன்களே. கடைசியில் ராஸ் டெய்லர் 95 ரன்களில் ஸ்கோர் 280ஆக இருக்கும் போது ஆட்டமிழந்தார். ஆனால் லேதம் 102 பந்துகலில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். குல்தீப் யாதவ், சாஹல் 20 ஓவர்களில் 115 ரன்களை கொடுக்க மற்றொரு விதந்தோதப்படும் பந்துவீச்சுக் கூட்டணியான பும்ரா-புவனேஷ் 19 ஓவர்களில் 112 ரன்களைக் கொடுத்தனர். கேதார் ஜாதவ் பிரேக் த்ரூ பவுலர் ஆனால் அவரைக் கொண்டு வராமல் விராட் கோலி ஆடியது புரியவில்லை. ஆட்ட நாயகனாக டாம் லேதம் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article19904281.ece?homepage=true

Link to comment
Share on other sites

கேதார் ஜாதவுக்கு ஏன் பவுலிங் கொடுக்கவில்லை? - விராட் கோலி விளக்கம்

 

 
kohli

விராட் கோலி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

விராட் கோலி தனது 200வது ஒருநாள் போட்டியில் நேற்று 31-வது சதம் எடுத்து அணியை நல்ல ஸ்கோருக்கு முன்னேற்றினாலும், மற்றவர்களிடமிருந்து ஒரு அரைசதம் கூட வராத நிலையில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கான காரணம் குறித்து ஆட்டம் முடிந்த பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

தொடக்கத்திலேயே நியூஸிலாந்து அணி எங்களை நெருக்கடிக்குள்ளாக்கியதே காரணம். 275 நல்ல ஸ்கோர் என்றே கருதினோம், ஆனால் டாம் லேதம், ராஸ் டெய்லர் பிரமாதம். அங்கொன்றும் இங்கொன்றும் ஓரிரு ரன் அவுட் வாய்ப்புகளைத் தவிர வேறு வாய்ப்புகளை இவர்கள் வழங்கவில்லை.

மேலும் 200 ரன் கூட்டணி அமைத்தால் அந்த அணியே வெற்றிக்குத் தகுதி பெற்ற அணியாகும். கடைசி 13-14 ஓவர்களில் 20-30 ரன்கள் குறைவாக எடுத்தோம். இன்னும் ஓரிருவர் நன்றாக பேட்டிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், நல்ல பேட்டிங்கை எதிர்நோக்குகிறோம். இன்னும் ஓரிருவர் ரன்கள் எடுத்திருந்தால் 30-40 ரன்கள் கூடுதலாக வந்திருக்கும்.

நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் நம் ஸ்பின்னர்களை சரியாகக் கையாண்டனர். டாம் லேதம், ராஸ் டெய்லரைப் பாராட்டுகிறேன். அதே போல் டிரெண்ட் போல்ட் பந்து வீச்சில் சிறப்பாக வீசினார்.

முதல் நிலை ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு பிட்சில் பந்துகள் திரும்பும் நிலையே காணப்பட்டது. நியூஸிலாந்தின் பின் கள வீரர்கள் இறங்கியிருந்தால் கேதார் ஜாதவ்வை பயன்படுத்தியிருப்பேன். ஹர்திக் நன்றாக வீசியதால் கேதாரை கொண்டு வர வேண்டிய தேவையை உணரவில்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article19904415.ece?homepage=true

Link to comment
Share on other sites

இந்திய சுழல் கூட்டணியை தகர்த்தது எப்படி?- நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் விளக்கம்

 

 
24CHPMUTAYLOR

ராஸ் டெய்லர்   -  THE HINDU

சமீப காலமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானித்து வரும் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் சுழற் கூட்டணியை முறியடிக்க ஸ்வீப் ஷாட்களைப் பயன்படுத்தியதாக நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. 281 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய நிலையில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து அணி ராஸ் டெய்லர், டாம் லேதம் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது.

லேதம் 103 ரன்களும், டெய்லர் 95 ரன்களும் விளாசினர். இந்த கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய மண்ணில் விரட்டலின் போது 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. டெய்லர், லேதம் கூட்டணியின் சாதனை விரட்டலால் விராட் கோலியின் 31-வது சாதனை சதம் வீணானது. இந்த கூட்டணிக்கு எந்த ஒரு வகையிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அச்சுறுத்தல் அளிக்கவில்லை. இவர்கள் இருவரும் கூட்டாக 20 ஓவர்களை வீசி 125 ரன்களை விட்டுக்கொடுத்தனர். குல்தீப் யாதவ் மட்டுமே ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணியை வீழ்த்தியது குறித்து ராஸ் டெய்லர் கூறியதாவது:

ஸ்வீப் ஷாட்கள் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். இதனால் அவர்கள் வீசும் அளவை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். லேதம் இதனை தனித் திறமையுடன் நடத்திக் காட்டினார். ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். இதன்படி அவரும் தொடர்ந்து ஸ்வீப் செய்து கொண்டிருந்தார்.

மூன்றரை மணி நேரம் கடும் உஷ்ணத்தில் பீல்டிங் செய்ததால் பேட்டிங்கில் நல்ல தொடக்கம் அமைவது அவசியம் என்பதை உணர்ந்தோம். நல்ல தொடக்கம் அமையும் பட்சத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறந்த முறையில் கையாள முடியும் என்று நினைத்தோம். முன்பெல்லாம் நியூஸிலாந்து அணி இங்கு வந்து திணறியதையே பார்த்திருக்கிறேன். மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ கூட்டணி அருமையாகத் தொடங்க நானும் லேதமும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தோம். அதன் பிறகே வெற்றிக்கு அருகில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்.

கடந்த காலங்களில் நடு ஓவர்களில் அதிக அளவிலான பந்துகளை ரன் சேர்க்காமல் வீணாக்கினோம். இதனால் கிரீஸில் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஒரு சில ஷாட்களை மேற்கொண்டு ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். பயிற்சி ஆட்டத்தில் லேதமும் நானும் சிறப்பாக ரன்கள் எடுத்தோம். அங்கிருந்து அந்த ஆட்டத்தை முதல் போட்டிக்கும் எடுத்து வந்தது திருப்தி அளிக்கிறது.

டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசினார், இந்திய அணி அடுத்த போட்டியில் இன்னும் கடினமாக எங்களை அணுகும். ஒரு வெற்றி எங்களுக்கு தொடரை கொடுத்து விடும். ஆனால் புனே ஆடுகளம் கடினமானது என்று நாங்கள் அறிவோம். இந்த வெற்றியிலேயே தங்கி விடாமல் அடுத்த போட்டியையும் நன்றாகத் தொடங்க வேண்டும். இவ்வாறு ராஸ் டெய்லர் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article19910717.ece

Link to comment
Share on other sites

மிஸ்ட்ரி பிட்ச், மிடில் ஆர்டர் இம்சை, பிளாக் கேப்ஸின் வியூகம்... கோலி படை சமாளிக்குமா? #INDvNZ

 
 
Chennai: 

மும்பையிலிருந்து புனேவுக்குப் பயணித்துள்ளது கிரிக்கெட் புயல். சமீபத்தில் ஒவ்வொரு ஒருநாள் தொடரையும் வெற்றியோடு தொடங்கிய இந்திய அணிக்கு, அதிர்ச்சி அளித்துள்ளது நியூசிலாந்து. இந்தத் தோல்வியை மகாராஷ்ட்ராவிலேயே துரத்திவிட்டு, வெற்றிப்பயணத்தைத் தொடங்கக் காத்திருக்கிறது கோலி அண்ட் கோ. ஆடுகளம் சாதகமாக அமையுமா? மிடில் ஆர்டர் பிரச்னைகளைச் சரிசெய்யுமா? மீண்டும் விக்கெட் வேட்டை நடத்துவார்களா நம் ஸ்பின்னர்கள்? #INDvNZ

INDvNZ

 

புனே மைதானம் எப்படி? 

போட்டி நடக்கும் புனேவின், மகாராஸ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானம் கணிக்க முடியாத ஒன்று. ஆஸ்திரேலிய அணியுடன் பிப்ரவரி மாதம் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, படுதோல்வியடைந்தது. முதல் நாளில் இருந்தே ஆடுகளும் சுழலுக்கு உதவ, போட்டி மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்தது. சுழல் ஜாம்பவான் வார்னே "இந்த மைதானம் முதல் நாளில் இருந்தே, எட்டாவது நாள் ஆடுகளம் போல் இருந்தது" என்று குற்றம்சாட்டினார். அவர் மட்டுமல்ல, மொத்த மீடியாவும் அந்த ஆடுகளத்தைக் குறை கூறின. ஸ்பின்னர்கள் மட்டும் 29 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆனால், ஒரு மாதம் முன்பு ஜனவரியில் நடந்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது. 38 ஓவர்கள் வீசிய இரண்டு அணிகளின் ஸ்பின்னர்களாலும் சேர்ந்து 1 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஒருநாள் போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கும் ஆடுகளத்தை தயார் செய்வதில் வித்தியாசம் உண்டு. ஆனாலும் இந்த அளவுக்கு மாறுபட்ட அளவில் நடந்துகொள்ளும் பிட்சை நன்கு ஆய்வு செய்வது அவசியம். "ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியைப் போல் இல்லாமல், ஆடுகளம் இம்முறை நன்றாக இருக்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம்" என்கிறார் புனே ஆடுகளப் பராமரிப்பாளர் பாண்டுரங் சால்கோன்கர். புனே மைதானத்தில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, தலா 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான கடைசிப் போட்டியில், 350 ரன் டார்கெட்டை 11 பந்துகள் மீதமிருக்கையில் அற்புதமாக சேஸ் செய்தது இந்திய அணி.

புனே

இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதை ரசிகர்களால் நம்ப முடியவில்லை. ஆஸி அணியை மிரட்டிய நம் பவுலர்களும், மும்பையில் சோடை போயினர். கோலியைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. மிடில் ஆர்டர் சோகம் இன்னும் தொடர்கிறது. ஜாதவை 4, 5 என பொசிஷன் மாற்றி மாற்றி இறக்குகிறார் கோலி. ஆனால், பலன் இல்லை. அதனால், அவரை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், 'பார்ட் டைம்' பவுலிங் ஆப்ஷன் இல்லை என்பதால், கோலி அவ்வளவு சீக்கிரம் ஜாதவை நீக்கமாட்டார்.  இங்கிலாந்துடன் இந்த மைதானத்தில்தான் அவர் சதம் அடித்து, இந்திய அணியில் தன் இடத்தை உறுதி செய்தார். இந்தப் போட்டியிலும் அப்படியொரு பெர்ஃபாமென்ஸை அவர் கொடுப்பது அவசியம். 

மனீஷ் பாண்டேவுக்குப் பதிலாகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஓரளவு நன்றாக ஆடினார். பிரஷரை ஃபீல் செய்யாமல் இந்தத் தொடரில் முத்திரை பதித்தால், இந்திய அணியின் வோர்ல்ட் கப் பிளானில் இடம்பெறலாம். இங்கிலாந்துடனான அந்த அற்புத சேஸிங்கில், ஜாதவுக்கு முன்பாக சதமடித்து ஆட்டத்தை நம் பக்கம் கொண்டுவந்தவர், 'சேஸ் மாஸ்டர்' கோலி. கடந்த போட்டியிலும் சதமடித்து ரன் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் மிடில் ஆர்டர் செட் ஆகாத நிலையில், ஜாதவை அடிக்கடி பொசிஷன் மாற்றுவதையும் கோலி தவிர்க்க வேண்டும். கார்த்திக்கை நான்காவது வீரராகவும், ஜாதவை ஐந்தாவதாகவும் இறக்குவதே அவர்கள் இருவரின் கேம்களுக்கும் செட்டாகும். 

ரஹானே

மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளைப் பந்தாடிய சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி நியூசிலாந்துக்கு எதிராக ஜொலிக்கத் தவறியது. லாதம், டெய்லர் கூட்டணியைப் பிரிக்க முடியாமல் இவர்கள் தடுமாற, வேகப்பந்துவீச்சாளர்களாலும் சோபிக்க முடியவில்லை. அஷ்வின், ஜடேஜா எனும் மாபெரும் கூட்டணியை ரீப்ளேஸ் செய்திருப்பதால், ஒரு போட்டியில் சோபிக்காவிட்டாலும், நெகடிவ் ரிவ்யூக்களைச் சந்திக்க நேரிடும். அதனால், புனேவில் அவர்கள் விக்கெட் வேட்டை நடத்த வேண்டியது அவசியம். பாண்டியா சிக்கனமாகப் பந்துவீசியது அணிக்கு நம்பிக்கை. அதேசமயம். அவர் பேட்டிங்கில் கொஞ்சம் பொறுமை அவசியம்.

பிளாக் கேப்ஸ் படு ஸ்ட்ராங்!

இந்தியா வந்து விளையாடிய அணிகளில், நல்ல பிளானோடு வந்து விளையாடிய அணி நியூசிலாந்துதான். இந்திய பேட்ஸ்மேன்களில் இருந்து, ஸ்பின்னர்கள் வரை, எப்படி எதிர்கொள்வது என்று பிளான் போட்டு அடித்தனர். போல்ட்டின் அசுர வேகமும், அக்யூரசியும் இந்திய பேட்ஸ்மேன்களை அலறவைத்தது. சௌதியும் நல்ல ஃபார்மில் இருப்பது நம்பிக்கை. வில்லியம்ஸன் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே நன்றாகவே விளையாடினர். மிகவும் சிக்கல் தரக்கூடிய ஸ்பின்னர்களைக் கையாண்ட விதத்திலேயே, இந்தத் தொடருக்கு அவர்கள் எவ்வளவு தயாராக வந்துள்ளனர் என்பது தெரிந்தது. ஆனால், நியூசிலாந்து அணியின் கேப்டனும் அடிக்கடி சொதப்ப மாட்டார். கோலிக்குச் சளைத்தவர் இல்லையே அவர். அதனால் இந்தப் போட்டியில் தன் தரத்தை நிரூபிக்க கம்பேக் கொடுப்பார். இந்திய வீரர்கள், அவரை மிகவும் கவனமாக எதிர்கொள்வது அவசியம். மொத்தத்தில் நியூசிலாந்து அணி அதிக நம்பிக்கையோடு களம் காண்கிறது.

நியூசிலாந்து

 

இரண்டு அணிகளும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. காலின் கிராந்தோமை வேண்டுமானால் நியூசி அணி மாற்றலாம். ஆட்டம் பகல் 1.30 மணிக்குத் தொடங்கும். நியூசிலாந்து அணியின் நம்பிக்கையைக் குலைத்து, இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்க, இந்திய அணி முதல் பந்தில் இருந்தே அவர்களை டாமினேட் செய்ய வேண்டும். தங்களின் வழக்கமான திட்டங்களை மாற்றி, ஏதேனும் ஆச்சர்யம் தந்தால் 'பிளாக் கேப்ஸ்' அணியை எளிதாய் வீழ்த்தலாம்.

http://www.vikatan.com/news/sports/105821-will-india-overcome-the-loss-of-first-odi-against-the-black-caps.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ் Published By: VISHNU 26 MAY, 2024 | 10:46 PM   இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது. கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். https://www.virakesari.lk/article/184561
    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.