Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம்

Featured Replies

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம்

 

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம்
 

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணியளவில் வெடிப்புச்சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடற்கரையை அண்மித்த பல பகுதிகளில் பிரகாசமான வௌிச்சத்தினை அவதானிக்க முடிந்ததாகவும் சிலர் கூறினர்.

இது குறித்து மேலதிகத் தகவல்களை எதிர்பாருங்கள்…

 

http://newsfirst.lk/tamil/2017/10/தென்-மாகாணத்தின்-சில-பகு/

 

 

தென்னிலங்கை வானில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு; பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்!

 

இலங்கையின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய வெளிச்சத்துடனான சத்தமொன்று கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் பதறித்துடித்து வீடுகளுக்குள்ளும் கட்டடங்களுக்குள்ளும் ஓடியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

தென்னிலங்கை வானில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு; பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்!

இது ஒரு வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்கள் பிரவேசிப்பதற்கான முன்னாயத்தமாக இருக்கலாம் என அங்குள்ள மக்கள் கருதுகின்றனர். இதனால் குறித்த பகுதிகளில் அமைதியின்மை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிபிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்கையில், குறித்த சம்பவம் வேற்று கிரகவாசிகளின் பிரவேசமா அல்லது வேறு ஏதேனும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-fire-appeared-in-the-sky

 

Meteor explosion cause for bright light, sound in SP - Prof. Jayaratne

image_1508352238-c27c97768d.jpgColombo University Physical Science Department Prof. Chandana Jayaratne confirmed that the bright light and sound which was heard from the Southern Province (SP) this evening was because of an explosion caused by a meteor.

Speaking to the Daily Mirror he said the explosion was known as a 'fireball explosion' and occurs after an astroid enters the earth’s atmosphere.

“The astroid could be a size of 50 centimetres. Every astroid enters the earth’s photosphere at a speed of 65 kilometers per second. With that speed one side of the astroid gets heated up due to friction and the other side does not, therefore causing an explosion,” Prof Jayaratne said.

“People who saw the asteroid entering our atmosphere at about 8.30p.m, saw different colour lights. Most of it was green and yellow due to its elements reacting to the heat,” he said.

“The explosion could have caused damage, but fortunately it broke into small pieces. People should not touch parts of the astroid because those astroid can contain radiation which cause harm to the human body and my contains unknown bacteria,” he warned.

The light of the astroid was seen in several parts of the country including the Southern Province.

Military Spokesman and Army Media Director Roshan Seneviratne, said they were yet to detect any incidents caused by the light. The Sri Lanka Navy and Air Force also confirmed that they did not detect any incidents. (Chaturanga Pradeep)

 

 

 

http://www.dailymirror.lk/article/Meteor-explosion-cause-for-bright-light-sound-in-SP-Prof-Jayaratne-138768.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பயமாய் இருக்கு நாளைக்கு இதை வைச்சு நம்ம அரைகுறை கொப்பி பேஸ்ட் செய்தி  கூட்டம்  cnn effectக்கு கதை அடிக்கப்போறதை நினைத்து  .

  • தொடங்கியவர்

காரணம் வெளியாகியது ! தெற்கில் பாரிய சத்தத்துடன் வெடித்த மர்மப்பொருள் என்ன ?

 

 

இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் நேற்றையதினம் இரவுவேளையில் பிரகாசமான ஒளியுடன் பாரிய சத்தமொன்று கேட்டதாக அப்பகுதி மக்கள் பலரும் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சத்தத்திற்கும் வெளிச்சத்திற்கும் காரணத்தை ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

meteor-explosion.jpg

விண்கல் ஒன்றின் பாகம் எனக் கருதப்படும் மர்மப்பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.  

 

இதுதொடர்பில் விளக்கமளித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, குறித்த பிரகாசமான ஒளியும் பாரிய சத்தமும் எரிகற்களின் வீழ்ச்சியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு மர்மப்பொருள் வானில் இருந்து வீழ்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். 

விண்ணில் இருந்து ஏதேனும் ஒரு பொருள் புமியை நோக்கி விழும் போது வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.45 முதல் 9 மணி வரையில் இந்த சத்தம் ஒளியும் தென்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனை காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானித்துள்ளனர்.

தென் கடற்பரப்பிற்கு அருகில் வசிக்கும் மக்கள் வானில் இருந்து மர்மமான ஒளி ஒன்று வீழ்வதை அவதானித்துள்னர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உறுதிசெய்துள்ள, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம், காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறிய அளவான நில அதிர்வையும் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, புவியின் வளிமண்டலத்தில் திடீரென நுழைந்த விண்கல் ஒன்றின் பாகம் எனக் கருதப்படும் மர்மப்பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளது.

 

குறித்த எரிகல்லை பொது மக்கள் அணுக முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி தகவல் தெரிவிக்க 0714800800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவலை வழங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

http://www.virakesari.lk/article/25975

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி கொண்டாடியிருப்பார் இராவணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.