Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதியை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்துவோம்

Featured Replies

நிதியை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்துவோம்

 

போரால் பாதிக்கப்பட்ட பகுதி என்ற அடிப்படையில் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கீட்டைக் கொழும்பு அரசு செய்யவேண்டும் என்று வடக்கு மாகாண சபை எதிர்பார்க்கின்றது.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் அதுவே இருக்கின்றது. போரின் பாதிப்புகளில் இருந்து மீள எழுவதற்கு, வடக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த அதிகரித்த ஒதுக்கீடு தேவை என்பது நியாயமான கோரிக்கையே.

எனினும் மேலதிக நிதியைக் கோருவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பொருத்தமான வகையில் மேற் கொள்ளப்படுகின்றனவா என்கிற மீளாய்வு ஒன்று வடக்கில் செய்யப்படவேண்டியது அவசியம் என்று உணரப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் பொதுச் சந்தைக் கட்டடத்தில் அமைக்கப்பட்ட மீன் சந்தை பயன்படுத்துவோர் இன்றி வீணாகிக் கிடக்கின்றது என்று செய்தி வெளியாவதைப் பார்க்கும்போதும், அபிவிருத்திக்கான திட்டமிடலின் வினைத் திறன் என்ன என்கிற கேள்வி எழுகிறது. பொதுச் சந்தையின் ஒரு பகுதியாக இந்த மீன் சந்தை அமைக்கப்பட்டது.

நெல்சிப் திட்டத்தின் கீழ் சந்தைத் தொகுதியை அமைக்க 18.72 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. 2014ஆம் ஆண்டில் திறந்து வைக்கப் பட்டது. ஆனால், இன்று வரையில் அந்த மீன் சந்தையைப் பயன்படுத்துவோர் எவரும் கிடையாது.

இது மிகப் பிந்திய உதாரணம் மட்டுமே. இதுபோன்ற பல பொதுக் கட்டடங்கள் மில்லியன் கணக்கான ரூபா செலவில் அமைக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பயன்பாடின்றிக் கிடக்கின்றன.

பொதுக் கட்டடங்கள் மட்டுமல்ல, வீட்டுத் திட்டங்கள் பலவற்றில் வழங்கப்பட்ட பல வீடுகளும்கூட இப்படிப் பயன்பாடற்றுக் கிடக்கின்றன. அதேநேரத்தில் வீடு கட்டாயம் தேவை என்கிற நிலையிலும் பலர் சமூகத்தில் காத்திருக்கின்றனர்.

இப்படி வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பலவற்றிலும் சறுக்கல்கள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டு களையப்படவேண்டும்.

அதில் வினைத்திறனான செயற் பாட்டை வடக்கு மாகாண சபை ஆற்றவேண்டும். ஆனால், அதற்கான முனைப்பு எதுவும் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

தத்தம் பகுதிகளை முன்னேற்றுவதற்காக அரசியல்வாதிகள் அபிவிருத்தித் திட்டங்களைத் தமது இடங்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தவறில்லை. ஆனால், தமது பகுதிக்கும் மக்களுக்கும் தேவையான அபிவிருத்திகளை அவர்கள் பெற்றுக்கொடுப்பதே அவர்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.

திட்டம் இருக்கின்றது என்பதற்காக பொருத்தமற்ற அபிவிருத்திகளை மேற்கொள்வதால் எவருக்கும் பயன் கிடைக்கப்போவதில்லை.

எனவே மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பூர்வாங்கத் தேவை மதிப்பீடுகளைச் செய்து, அந்த அபிவிருத்தியால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் மதிப்பீடு செய்த பின்னர், திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றை வடக்கு மாகாண சபை ஏற்படுத்தவேண்டும்.

பிரதேச அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் மக்கள் பங்களிப்புடன் முன்மொழியப்பட்ட தேவைகளில் மக்கள் தத்தமது வீதிகளை அபிவிருத்தி செய்வதையே மிகப்பெரியளவில் முன்வைத்தனர்.

ஆனால், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து அத்தகைய வீதி அபிவிருத்திப் பணிகளை மட்டுப்படுத்தி பிரதேச சபை களுக்கு வருமானத்தைத் தேடித் தரக்கூடிய நிரந்தரக் கட்டடங் களில் அந்தப் பணத்தை முதலிடுவதில் ஆர்வம் காட்டினர்.

அத்தகைய திட்டங்களை முன்மொழிய மக்களை நிர்ப்பந்திக் கவும் செய்தனர்.
நீண்டகால நோக்கில் சிந்தித்து அவர்கள் அத்தகைய திட்டங்க ளைச் செயற்படுத்த எண்ணினரே தவிர, அவற்றால் மக்கள் உடனடிப் பயனை அனுபவிக்க முடியுமா என்பதை ஆராயத் தவறிவிட்டனர்.

சந்தைக் கட்டடத் தொகுதிகள், கடைத் தொகுதிகள் என்று பலவும் இவ்வாறே தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்டன. ஆனால், அவை மக்களால் உடனடியாகப் பயன்படுத்தப்படுபவையாக இல்லை. அதனால் அந்த அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் வீணாகிக் கிடக்கின்றன.

என்றாவது ஒருநாள் அவை பயன்தரும் என்று அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சொல்லக்கூடும். ஆனால், அத்தகைய காலத்தில் இந்தக் கட்டங்கள் வலுவிழந்தவையாகவும் நவீனத்துடன் ஒத்துப்போகாதவையாகவும் இடைஞ்சல் செய்துகொண்டிருக்கவும் சாத்தியங்கள் உண்டு.

எனவே ஒவ்வொரு கிராமத்தினதும் உடனடித் தேவை, நீண்ட காலத் தேவை என்பவை, மக்களின் பங்களிப்புடன் நிபுணத்துவ ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்று ஒருபுறத்தில் தேவை அதிகம் இருக்கும்போது உடனடி அவசியமற்ற அபிவிருத்திக்கு நிதி வீணடிக்கப்படுவது தடுக்கப்படும். மாகாண சபை இது பற்றிச் சிந்திக்குமா?

http://newuthayan.com/story/38977.html

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கும் அபிவிருத்திக்கும் வெகு துரம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

வடமாகாண அபிவிருத்தித்திட்டங்களென்பது  சரியான திட்டமிடலின்றி இன்றல்ல பல தசாப்தங்களாகவே இப்படித்தான் போகிறது. எடுத்தக்காட்டிற்காக ஒரு விடயம்; கிளிநொச்சிக்கான ஒரு புதிய சந்தைத் தொகுதியை திரு குமாரசூரியர் தொலைத்தொடர்பு அமைச்சராக  இருந்த காலத்தில்  கிளிநொச்சி முற்றவெளியின் பின்பகுதியிலே தொடங்கி குளத்தின் பின்பகுதிலைத் தொட்டவாறு  கட்டிமுடித்தார். அந்தக்கட்டிடங்கள் தனித்தனியாக அறுங்கோணவடிவத்தில்(என்றொரு நினைவு)  நிறுவப்பபட்டது. பொருத்தமற்ற இடத்தெரிவோடு,  கிளிநொச்சிக்குவரும் வர்த்தக விவசாய நோக்கங்களைக் கருத்திலெடுக்காத திட்டமிடலாக இருந்தது.

இதிலொரு கூட்டணியின் விகடமும் சிறிதுகாலம் ஓடியது. அதாவது அந்தக்கட்டிடம்  பெளத்தபாணியில் அமைந்திருப்பதால் திறக்கவிடமாட்டோம் என்று இழுபட்டு திறக்கவேயிலலை. அதன்பின் இடப்பெயர்வு பாதுகாப்புவளையமென்று  அலங்கோலப்பட்டதுதான் மிச்சம்.  

இன்றைய  இலகுபொறிமுறைகளைப் பயன்படுத்தவதோடு பொருத்தமான விடயங்களை செய்ய  ஆட்சித்தலைமையிலிருந்து  அமுலாக்கும் ஊழியர்கள் நிறுவனங்கள் யாவரும் சிந்தித்துச் செயலாற்றுவதே வளங்களையும் தேவைகளையும் சரியான பயனாக்கமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.