Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் 10 ஊடகவியலாளர் உட்பட 44 பேருக்கு இரத்தின தீப விருது வழங்கி வைப்பு

Featured Replies

வவுனியாவில் 10 ஊடகவியலாளர் உட்பட 44 பேருக்கு இரத்தின தீப விருது வழங்கி வைப்பு

வவுனியாவில் 10 ஊடகவியலாளர் உட்பட 44 பேருக்கு இரத்தின தீப விருது வழங்கி வைப்பு

வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (21) வடக்கு ஊடக கல்வி கல்லூரியின் நிறுவனர் அ. நபீஸ் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

மலையக கலைகலாசார சங்கம் வழங்கிவரும் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகள் ‘வடக்கு ஊடக கல்வி கல்லூரியின்’ ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தில் சமூக நலன்கொண்டு ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம், ந.கபில்நாத், சு.வரதகுமார், கே.வசந்தரூபன், எம்.ஜி.ரட்ணகாந்தன், எஸ்.கஜேந்திரகுமார் மற்றும் சிங்கள ஊடகங்களில் கடமையாற்றும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட 10 ஊடகவியலாளர்களுக்கும், சமூக சேவைகள் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றியவர்களுமாக 44 பேருக்கு இரத்தின தீப விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டு இரத்தின தீப விருதுகளை வழங்கி வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஊடகவியலாளர்கள் தனிப்பட்டவர்களை தாக்கி எழுதக்கூடாது எமது நாடு இன்று முப்பது வருடங்களாக யுத்த்தில் சிக்கி சீரழிந்துள்ளது மக்கள் இடம் பெயர்ந்துகொண்டுள்ளார்கள் நாங்கள் ஒருங்கிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

 

http://www.samakalam.com

  • தொடங்கியவர்

தென்பகுதி தலைவர்களாலேயே புலிகளின் தலைவர் தனித் தமிழீழம் கோரி எழுச்சிப் போராட்டத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது! அமைச்சர் றிசாட்

 

 

தென்பகுதி தலைவர்களாலேயே புலிகளின் தலைவர் தனித் தமிழீழம் கோரி எழுச்சிப் போராட்டத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது! அமைச்சர் றிசாட்

மொழிக் கொள்கை, தரப்படுத்தல் போன்ற பாரபட்ச நடைமுறைகளை தென்பகுதி பெரும்பான்மையின தலைவர்கள் கொண்டு வந்ததனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் தனித் தமிழீழம் கோரி பாரிய எழுச்சிப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு நிலைமை மாறி இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற இரத்தின தீப விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது,

பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளும் அவர்களின் செயற்பாடுகளுமே இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரழிவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணம். இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது.

மொழிக் கொள்கை, தரப்படுத்தல் போன்ற பாரபட்ச நடைமுறைகளை அவர்கள் கொண்டு வந்ததனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் தனித் தமிழீழம் கோரி பாரிய எழுச்சிப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு நிலைமை மாறி இருந்தது. அதன் பின்னர் முஸ்லிம்களுக்கென தனிக்கட்சி அமைத்து மர்ஹூம் அஷ்ரப் தமது சமூக உரிமை காக்க போராடினார். இவைகள் கடந்த கால வரலாறு.

ஊடகவியலாளர்கள் ஊடக தருமத்தையும் நெறிமுறைகளையும் பின்பற்றுவதே ஆரோக்கியமானது. எழுத்திலே நேர்மையும் உண்மைத் தன்மையும் இருக்க வேண்டும். அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கக் கூடாது. தனிப்பட்டவர்களின் கோபதாபங்களை தீர்த்துக் கொள்வதற்காக ஊடகங்களை பயன்படுத்துவது தர்மமும் ஆகாது.

இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் ஏற்பட்ட பிரச்சினைகளும் சந்தேகங்களுமே இன்று நமது நாடு அகதிகளைச் சுமக்கும் நாடாக, அகதிகளை உருவாக்கும் நாடாக, அகதிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக, துன்ப துயரங்களை சுமந்து வேதனையில் தத்தளிக்கும் நாடாக மாறியமைக்கு பிரதான காரணம். இதனால்தான் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி கண்ணீருடன் அலைந்து திரியும் காட்சியும், சிறைக்கைதிகளை விடுவிக்குமாறு நடக்கும் ஜனநாயக போராட்டங்களும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறனவற்றுக்கு நாங்கள் முடிவு கட்ட வேண்டாமா? இந்த நாட்டில் அனைத்து இனங்களும் நிம்மதியாக வாழ வேண்டாமா? நமது நாட்டிலே சமாதானமும் நல்லுறவும் தழைக்க ஊடகவியலாளர்களின் பங்கே காத்திரமாக அமைகின்றது என கூறினார்.

http://www.samakalam.com

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நவீனன் said:

தென்பகுதி தலைவர்களாலேயே புலிகளின் தலைவர் தனித் தமிழீழம் கோரி எழுச்சிப் போராட்டத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது! அமைச்சர் றிசாட்

 

 

தென்பகுதி தலைவர்களாலேயே புலிகளின் தலைவர் தனித் தமிழீழம் கோரி எழுச்சிப் போராட்டத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது! அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களுக்கென தனிக்கட்சி அமைத்து மர்ஹூம் அஷ்ரப் தமது சமூக உரிமை காக்க போராடினார்.

இவர்கள் போராடினார்களா...? எங்கே...? எப்போது....? எந்த உலகில்....? எதற்காக....??

தந்தை செல்வா அவர்களே தனித் தமிழீழம் கோரினார். மேதகு பிரபாகரன் அவர்கள் அதனைச் செயல்படுத்த முனைந்தார்.  

நானாவின் கதையைப் பார்த்தால் விரைவில் தேர்தல் வரபோகுது போல, அதான் பிரபாகரன் தலைவர் ஆகிறார் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.