Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல்

Featured Replies

ரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல்

 
ரஷ்யா: 500 டன் தங்கப்புதையல்படத்தின் காப்புரிமைDEA PICTURE LIBRARY/GETTY IMAGES

பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது. கொத்தான சொத்துக்களைப் பற்றிய கதைகளை கேட்பதும் சொல்வதும் அனைவருக்கும் விருப்பமானதே.

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில், உலகின் ஆழமான ஏரியான பைகால் ஏரிக்கு அருகில் மிகப் பெரிய புதையல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அணுக முடியாத தொலைதூரத்தில் அமைந்துள்ள இர்குட்ஸ்க் நகரமே புதையலின் களம்.

ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி நடைபெற்ற காலத்தில் நடைபெற்றது இந்த புதையல் கதை. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி உருவானது. லெனின் மற்றும் அவரது தளபதி லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள், ரஷ்ய பேரரசர் இரண்டாம் ஜார் நிக்கோலஸின் படைகளை தோற்கடித்திருந்த காலகட்டம் அது.

1918 ஜூலை 17, போல்ஷ்விக்குகள் மன்னர் இரண்டாம் ஜார் நிக்கோலசுக்கு மரண தண்டனை விதித்தனர்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image caption1918 ஜூலை 17, போல்ஷ்விக்குகள் மன்னர் இரண்டாம் ஜார் நிக்கோலசுக்கு மரண தண்டனை விதித்தனர்

லெனினின் தளபதி

ரஷ்யாவின் மேற்குப் பகுதிகளில் பெரும்பகுதியை இடதுசாரி புரட்சியாளர்கள் ஆக்கிரமித்தனர். தலைநகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மேற்குப் பகுதிக்கு அரசின் கருவூலத்தில் உள்ள தங்கத்தை அனுப்பிவிடலாம் என்று ரஷ்ய மன்னர் இரண்டாம் ஜார் நிக்கோலசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாபெரும் செல்வப்புதையல் புரட்சியாளர்களின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அரசரின் ஆலோசகர்கள் ஆலோசனை கூறினார்கள். ஏனெனில், அந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்து அதிக அளவிலான தங்கத்தை வைத்திருந்தது ரஷ்யாதான்.

ரஷ்ய மன்னரின் வெண்சேனை, கிட்டத்தட்ட ஐநூறு டன் தங்கத்தை ஒரு ரயிலில் ஏற்றி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கிழக்கு பகுதியில் உள்ள கஜான் நகருக்கு அனுப்பின.

புதையல் அனுப்பும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், லெனினின் தளபதியான லியோன் ட்ரொட்ஸ்கிக்கு புதையல் அனுப்புவது பற்றிய துப்பு கிடைத்துவிட்டது.

ரஷ்யா: 500 டன் தங்கப்புதையல்படத்தின் காப்புரிமைMAARTEN UDEMA/ALAMY

கஜான் நகரம்

இந்த புதையலை கைப்பறினால் வெற்றி கைவசப்படும் என்று கருதிய ட்ரொட்ஸ்கி, கஜான் நகரை சென்றடைந்தார். அவரது படைகள் அரசரின் படைகளை தோற்கடித்தது. வெற்றிபெற்ற தளபதி நகரத்திற்கு சென்றபோது தங்கத்தை எங்கும் காணமுடியவில்லை.

புதையலை பூதம் காவல் காக்கும் என்று சொல்லப்படுவதும் உண்மையோ என்று வியக்கும்படி புதையல் கண்ணுக்கு சிக்கவில்லை.

புதையல் கஜான் நகரில் இருந்து மேலும் கிழக்கு நோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று அனுமானித்த ட்ரொட்ஸ்கி, ரயிலில் சென்ற புதையலை தேடி ரயிலிலேயே பயணித்தார்.

அந்தகாலகட்டதில் ரஷ்யா, அதிக முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. புதையலை தேடிய பயணம் சில மாதங்கள் தொடர்ந்தது., சைபீரியப் பகுதியில், ரஷ்ய மன்னரின் புதிய தளபதி அலெக்ஸாண்டர் கோல்சாக் தங்கப்புதையல் இருந்த ரயிலை தனது வசம் கொண்டுவந்தார்.

ரஷ்யா: 500 டன் தங்கப்புதையல்படத்தின் காப்புரிமைTUUL & BRUNO MORANDI/GETTY IMAGES

பொக்கிஷ ரயில்

புதையல் ரயிலை சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகருக்கு சென்றார் கோல்சாக். பைகால் ஏரிக்கு அருகாமையில் உள்ள சிறிய நகரம் இர்குட்ஸ்க். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத அந்த நகரம் இன்றும் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை.

புதையல் ரயிலை செக் ராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். முதல் உலகப்போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் இந்த செக் வீரர்கள். முதல் உலகப்போரின்போதுதான் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது.

எனவே செக் நாட்டு வீரர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டார்கள். தங்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்ற பேராவலில் காத்துக் கொண்டிருந்த படைவீரர்களின் கையில் சிக்கியது பொக்கிஷ ரயில்.

ரஷ்யா: 500 டன் தங்கப்புதையல்படத்தின் காப்புரிமைLUCILLE KANZAWA/GETTY IMAGES

கம்யூனிஸ்ட் புரட்சி

கோல்சாக்கை கைது செய்து அவரிடமிருந்து ரயிலை கைப்பற்றிய அவர்கள், கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். பொக்கிஷ ரயிலுக்கு பதிலீடாக தாயகத்திற்கு திரும்ப செக் வீரர்கள் அனுமதிகிடைத்தது.

அவர்கள் ரஷ்யாவின் கிழக்கு துறைமுகமான விளாதிவோஸ்டோக் வழியாக கடல்மார்க்கமாக தாயகத்திற்கு கிளம்பினார்கள். பிறகு ரஷ்ய அரசரின் தளபதி கோல்சோக் சுட்டுக் கொல்லப்பட்டு, புதையல் மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கிடையில் சுமார் 200 டன் தங்கம் புதையலில் இருந்து கடத்தப்பட்டுவிட்டதாகவும், அது என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யா: 500 டன் தங்கப்புதையல்

நூறாண்டுகளாக தொடரும் புதையல் ரகசியம்

இந்த சம்பவம் நடைபெற்று நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான புதையலை பற்றிய பல்வேறுவிதமான ஊகங்களும், அனுமானங்களும் உலாவருகின்றன.

ரஷ்யாவின் இந்த பகுதிக்கு செல்வதற்கு நீங்கள் டிரான்ஸ் சைபீரியன் ரயிலில் பயணிக்கவேண்டும். ரஷ்யாவின் பெரும்பகுதியில் பயணிக்கும் இந்த ரயில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரைவரை செல்கிறது.

நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், ரயிலில் ஏ.சி, கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. பிபிசி செய்தியாளர் லினா ஜெல்டோவிச் ரஷ்யாவில் வசிக்கிறார். அவரது குடும்பம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கிலிருந்து ரஷ்யாவில் குடியேறியது. அவரது குடும்பம் கஸான் பகுதிக்கு அருகே வசித்துவந்தனர்.

ரஷ்யா: 500 டன் தங்கப்புதையல்படத்தின் காப்புரிமைANNAPURNA MELLOR/GETTY IMAGES

டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே

கோல்சாக்கின் புதையல் மாயமான கதையை லினா கேள்விப்பட்டார். புதையல் ரகசியத்தை பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்வதற்காக டிரான்ஸ் சைபீரியன் இரயில்வேயில் நீண்ட பயணத்தை மேற்கொண்டார் லினா. ரயில் பயணத்தின்போது, சக பயணிகளில் பலர் புதையலை பற்றி பேசியதை கேட்டார்.

ரஷ்யா: 500 டன் தங்கப்புதையல்படத்தின் காப்புரிமைWEI CAO/ALAMY

இயற்கைப் புதையல்

புத்தகத்தில் எழுதப்பட்டவற்றை உண்மையாக நினைத்துக்கொண்டு இந்த பயணத்தை லினா மேற்கொண்டதாக பலரும் கேலி செய்கிறார்கள்.

ஆனால் புதையல் என்பது பண மதிப்புக் கொண்டதாகத்தான் இருக்கவேண்டுமா என்ன? உண்மையை அறியும், கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் பயணமாகவும் இருக்கலாம்.

புதையல் கதைகளின் உண்மையை தேடி புறப்பட்ட லினாவுக்கு இயற்கையின் மறைக்கப்படாத அழகுப் புதையல்கள் நேரில் காணகிடைத்தது.

கஸான், சைபீரியா ஆகியவை இன்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகவே உள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம் அதிகம் இல்லாத பகுதிகள் இவை. கடுமையான குளிர், பனி உறைந்த நிலப்பரப்பு என இயற்கை, அழகுப்புதையலை வெளிப்படையாக கடைவிரித்திருக்கிறது.

கட்டமைப்பு வசதிகள் மேம்படாததால், மெதுவாக பயணிக்கும் ரயிலும், நிலையாக நிற்கும் தெரு விளக்குகளும் தொழில்நுட்பம் முன்னேறவில்லை என்பதற்கு சாட்சியாக உள்ளன.

நூறு ஆண்டுகள் பழமையான கோல்சாக் புதையல் கதையைப் பற்றி லினா உள்ளூர் மக்களிடம் பேசினார். புதையல் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக சிலரும், புதையலின் பெரும் பகுதி கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பலரும் சொன்னார்கள்.

1903இல் டிரான்ஸ்-சைபீரியன் ரயில் இருப்புப்பாதைபடத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES Image caption1903இல் டிரான்ஸ்-சைபீரியன் ரயில் இருப்புப்பாதை

நிலக்கரி எஞ்சின்

புதையல் இருந்த ரயில் பைகால் ஏரியில் மூழ்கிவிட்டதாகவும், அங்கிருந்து அதை வெளியே எடுக்கவே முடியவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, லினா நிலக்கரி என்ஜினால் இயங்கும் ரயிலில் பைகால் ஏரி பகுதியில் பயணம் மேற்கொண்டார்.

மெதுவாக செல்லும் இந்த ரயில், ஏரியை ஓட்டி பயணிக்கும்போது, சற்று இடறினாலும் ஏரிக்குள்ளே விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை லினா உணர்ந்தார். அன்று இந்த ரயில் தற்போது செல்வதைவிட இன்னும் மந்தமாகவே இயங்கியிருக்கும். ரயில் ஓட்டுனர்களிடம் பேசிய லினாவுக்கு புதையல் தொடர்பான மற்றொரு தகவல் தெரியவந்தது.

போல்ஷிவிக் புரட்சியை முன்னெடுத்த சோவியத் அரசின் முதல் தலைவர் லெனின்படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES Image captionபோல்ஷிவிக் புரட்சியை முன்னெடுத்த சோவியத் அரசின் முதல் தலைவர் லெனின்

ஐநூறு டன் தங்கம்

ஐநூறு டன் தங்கத்தை செக் வீரர்கள் ட்ரொட்ஸ்கியிடம் கொடுக்கவில்லை என்று கூறும் இந்த ரயில் ஓட்டுனர்கள், அவர்கள் 200 டன் தங்கத்தை தாங்கள் சென்ற கப்பலில் எடுத்துச் செல்வதற்காக மற்றொரு ரயிலில் கொண்டு சென்றார்கள் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இந்த ரயிலும் தனது இலக்கை சென்றடையவில்லை என்பதே ஆச்சரியம். அப்படியானால் அந்த ரயில் எங்கே சென்றது? என்னவானது?

காணமல்போன ஒரு ரயிலில் இருந்த புதையல் பற்றிய ரகசியத்தை தெரிந்துக் கொள்ள பயணம் மேற்கொண்டால், அது இரண்டாக பிரிந்து ரகசியத்தையும் இரட்டிப்பாக்கினால் என்ன சொல்வது?

பைகால் ஏரியின் புதையல் இருந்த ரயில் விழுந்த கதைகளை இன்றும் சில உள்ளூர் மக்களின் உதடுகள் உச்சரிப்பதை கேட்க முடிகிறது. பைகால் ஏரி இருக்கும் பகுதியில் இயங்கும் ரயில் அன்றுபோலவே இன்றும் இர்குட்ஸ்கைத் தொட்டே செல்கிறது. நிலக்கரியால் இயங்கும் எஞ்சின் கொண்ட அந்த ரயிலில் இரண்டு ரயில் பெட்டிகள் மட்டுமே உள்ளன.

போல்ஷிவிக் புரட்சியை முன்னெடுத்த சோவியத் அரசின் முதல் தலைவர் லெனின்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

பைகால் ஏரியின் ஆழம்

இந்த ரயிலில் பயணிக்கும்போது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் வசிப்பதுபோல் நீங்கள் உணருவீர்கள். இந்த ரயில் பயணிக்கும் பாதையில் பைகால் ஏரியில் இருந்து பிடிக்கப்படும் ஓமுல் மீனை உள்ளூர் மக்கள் விற்பனை செய்வதை பார்க்கலாம், சுவைக்கலாம் ரொட்டியுடன். அற்புதமான சுவை! பனியால் உறைந்துபோன பைகால் ஏரியை சுற்றியுள்ள மக்கள் உள்ளூரில் விளையும் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர்..

மிகவும் ஆழமான பைகால் ஏரிக்குள் மூழ்கிய புதையல் ரயிலை கண்டுபிடிக்க 2009ஆம் ஆண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீரில் மூழ்குபவர்கள் மேற்கொண்ட புதையலை தேடும் வேட்டையில், சில ரயில் பெட்டிகள் மற்றும் சில ஒளிரும் பொருட்கள் காணக்கிடைத்தன.

ஆனால் அவற்றை ஏரியில் இருந்து வெளியே கொண்டு வரமுடியவில்லை. ஒளிரும் பொருட்கள் ஏரியின் ஆழத்தில் சிக்கியிருந்ததால், அவற்றை அணுகமுடியவில்லை, வெளியிலும் எடுக்க முடியவில்லை.

இர்குட்ஸ்கில் கோல்சாக்கின் பிரம்மாண்ட சிலைபடத்தின் காப்புரிமைWOLFGANG KAEHLER/GETTY IMAGES Image captionஇர்குட்ஸ்கில் கோல்சாக்கின் பிரம்மாண்ட சிலை

அரசத் தளபதி கோல்சா

பைகால் ஏரி தன்னிடம் வந்த பொருட்களை ஒருபோதும் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை. பைகால் ஏரியில் விழுந்த புதையலையோ ரயிலையோ ஒருபோதும் வெளியில் கொண்டுவரமுடியாது என்ற மக்களின் நம்பிக்கை, புதையல் கதையை அமரக்கதையாக்கிவிட்டது.

கடந்த நூறு ஆண்டுகளில், இர்குட்ஸ்க் மாறிவிட்டதா இல்லையா என்று அனுமானிப்பதும் கடினமாகவே இருக்கிறது. அரசரின் தளபதியாக பணியாற்றிய கோல்சாக் ரஷ்யாவின் வில்லனாகவும் பார்க்கப்பட்டார்.

"மக்களின் எதிரியான கோல்சாக் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்பதே சோவியத் ரஷ்யாவின் வரலாற்று புத்தகங்களில் 70 ஆண்டுகளாக காணப்பட்ட தகவல்.

வெள்ளைப் படைகளின் தளபதி அலெக்சாண்டர் கோல்சாக்கை கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொன்றார்கள்.

ஆனால் இன்று அவருடைய பிரம்மாண்ட உருவச்சிலை இர்குட்ஸ்கில் நிறுவப்பட்டுள்ளது. அதில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த கோல்சாக் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் வீரர் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கோல்சாக்கை வில்லனாக சித்தரித்து அந்த 70 ஆண்டுகளில் எழுதப்பட்ட பல புத்தகங்களை மாற்றியமைப்பது என்பது, எல்லையில்லா அதிகாரம் பெற்ற ஆட்சியாளர்களால்கூட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

அதேபோல, ஐநூறு டன் தங்கப் புதையல் பற்றி மக்களிடையே உலாவிவரும் கதைகள் உண்மையா கட்டுக்கதையா என்பதை யாராலும் உறுதியாக அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் நிதர்சனமான உண்மை தானே?

http://www.bbc.com/tamil/global-41797457

  • தொடங்கியவர்

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறிது காலம் சுதந்திரம் கொடுத்த ரஷ்ய புரட்சி

ஓல்கா கொரோஷிவிலோசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில தொழில்துறை தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்
1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோகிராட் நகரில் நடைபெற்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண விழாபடத்தின் காப்புரிமைOLGA KHOROSHILOVA Image caption1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோகிராட் நகரில் நடைபெற்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண விழா

1921-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்ய பால்டிக் கடற்படை வீரர் அஃபானாஸ் ஷோர் பெட்ரோகிராடில் ஒரு அசாதாரணமான ஆண் ஓரினச்சேர்கையாளர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

95 முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ராணுவம் மற்றும் கடற்படையின் கீழ்நிலை உறுப்பினர்கள் மற்றும் ஆண் ஆடையை அணிந்த பெண் ஆகியோர் விருந்தினர்களாக இருந்தனர்.

இதுபோன்ற ஒரு நிகழ்வை அந்நகரம் அதுவரை கண்டதில்லை.

ஷோர் எல்லா தடைகளையும் கடந்தார். விருந்தினர்கள் வரமாட்டார்கள் என்று அவர் நினைத்தார்.

ஆனால் அவர் எதிர்பார்க்காத விதமாக ரஷ்ய பாரம்பரியதுடன், பிரட் மற்றும் உப்பு, பெற்றோர்களிடமிருந்து ஒரு வாழ்த்து மற்றும் அதனைத் தொடர்ந்து இசை கச்சேரி என்று தவிர்க்க முடியாத எல்லா வகையான ஏற்பாடுகளுடன் சரியான முறையில் திருமணத்தை நடத்தினார்.

அந்நேரத்தில் ரஷ்யாவின் ஆண் ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் சகிப்புத்தன்மையை ஓரளவுக்கு அனுபவித்தது.

போல்ஷெவிக்குகள் அக்டோபர் புரட்சிக்கு பின்பு நாட்டின் சட்டத்தை செல்லாததாக்கி, மீண்டும் புதியதாக எழுதினார்கள். அவர்கள் 1922 மற்றும் 1926-ல் இயற்றிய இரண்டு தண்டனை சட்டங்களிலும் ஆண் ஓரினச்சேர்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு சேர்க்கப்படவில்லை.

1916 ஆம் ஆண்டு பெண்கள் ஆடைகளில் அணிந்திருந்த இளைஞர்களுடன் ரஷ்ய மாலுமிகள்படத்தின் காப்புரிமைCENTRAL STATE LIBRARY OF ST PETERSBURG Image caption1916 ஆம் ஆண்டு பெண்கள் ஆடைகளில் அணிந்திருந்த இளைஞர்களுடன் ரஷ்ய மாலுமிகள்

ஆனால், பெட்ரோகிராடில் நடந்த திருமணம் அதுபோன்று தோன்றவில்லை.

அஃபானாஸ் ஷோர் ஒரு ரகசிய காவல்துறை அதிகாரியாக இருந்தபோதிலும், கொண்டாட்டத்தின் இறுதியில் அனைத்து விருந்தினர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த முழு நிகழ்வும் ஷோர் தனது உயரதிகாரிகளுளுக்கு உதவுவதற்காக செய்யப்பட்டது என்பது பிறகு தெரியவந்தது. அதில் கலந்து கொண்டவர்களை, இந்த முன்னாள் இராணுவ வீரர்கள் 'சிவப்பு இராணுவத்தை' உள்ளே இருந்துகொண்டே அகற்ற விரும்பிய எதிர்ப்புரட்சியாளர்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஷார்ரின் முயற்சிகள் இருந்தபோதிலும் குற்றச்சாட்டுகள் உறுதியாக இல்லையென்பதால் இந்த வழக்கு இறுதியாக முடித்து வைக்கப்பட்டது. இதனால், 'எதிர்ப் புரட்சியாளர்களுக்கு' ஒரு பயத்தைவிட வேறெந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விட்டது.

தங்களை போன்றவர்களை அடையாளம் காண்பதெப்படி?

ரஷ்ய புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்னரே ரஷ்யாவில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு தனித்த சமூகமாக வாழ்ந்து வந்தனர். மேலும், அவர்கள் பாணியில் 'இரகசிய மொழியால்' ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டனர்.

1920களின் புகழ்பெற்று விளங்கிய பெர்லினை சேர்ந்த ஹான்சி ஸ்டர்ம்.படத்தின் காப்புரிமைOLGA KHOROSHILOVA Image caption1920களின் புகழ்பெற்று விளங்கிய பெர்லினை சேர்ந்த ஹான்சி ஸ்டர்ம்.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில், சிலர் சிவப்பு சட்டைகளையோ அல்லது சிவப்பு சால்வைகளையோ அணிந்துகொண்டு அதன் காற்சட்டையின் பின்புற பாக்கெட்டுகளை தைத்திருப்பர்.

மற்றவர்கள் அவர்களின் முகங்களில் பவுடர் மற்றும் அதிகளவிலான மஸ்காராவையும் போட்டிருப்பர்.

புரட்சிக்கு பிறகு, பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய 'மௌனமான திரைப்பட நட்சத்திர தோற்றம்' இளம் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெறும் பேஷனாக மட்டுமல்லாமல், முக்கியப்போக்காகவும் ஆகிவிட்டது.

புரட்சி மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் கிளர்ச்சி ரஷ்யாவிற்கும், அங்குள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் கடுமையான நேரத்தை கொண்டு வந்தது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள சில ஓரினச்சேர்க்கையாளர்களால் விரும்பப்பட்ட ஆடம்பர ஆடைகள் மற்றும் ஆடம்பர ஆபரணங்களுடன் ஒப்பிட முடியாத நிலையேற்பட்டது.

NEP சகாப்தத்தின் பேஷன் சின்னங்களான அப்பெஷா மற்றும் அப்ஷ்கா, லெனின்கிராட், 1920களின் நடுப்பகுதிபடத்தின் காப்புரிமைOLGA KHOROSHILOVA Image captionNEP சகாப்தத்தின் பேஷன் சின்னங்களான அப்பெஷா மற்றும் அப்ஷ்கா, லெனின்கிராட், 1920களின் நடுப்பகுதி

சட்டப்பூர்வமானாலும் தொடரும் அச்சறுத்தல்

போல்ஷெவிக்குகள் பெர்லினில் பாலியலுக்கான நிறுவனத்தை ஆரம்பித்த ஜெர்மன் அறிவியலாளரான மாக்னஸ் ஹிர்ஷபெல்ட் என்பவரால் மறைமுகமாக கவரப்பட்டனர்.

ஓரினச்சேர்க்கை என்பது ஒரு நோயல்ல, ஆனால் மனிதனின் இயற்கையான பாலியல் வெளிப்பாடு என்று பொதுவெளியில் ஹிர்ஷபெல்ட் அடிக்கடி பேசினார்.

1920களில் குற்றவியல் சட்டங்களில் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு சட்டப்பிரிவும் இல்லை என்றாலும், ஓரினச்சேர்கையாளர்கள் சமூகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆண் ஓரினச்சேர்கையாளர்கள் பெரும்பாலும் தாக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர் அல்லது தங்களது வேலைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

மனநல மருத்துவர் விளாடிமிர் பெக்டெரெவிர்கை தங்களது கடைசி நம்பிக்கையாக கருதி அவருக்கு இதயப்பூர்வமான கடிதங்களை எழுதினர். அதில் அவர்கள் மனப்பூர்வமாக கருத்துத் தெரிவித்ததுடன், மனச்சோர்வை சமாளிக்கவும், "தங்கள் நோயை குணப்படுத்த" அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் நம்பமுடியாத அளவுக்கு துணிச்சலானவர்கள் என்பதை இந்த கடிதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் காட்டுகின்றன. சிலர் பெண்களின் ஆடைகள், நெருக்கமான ஆடைகள் மற்றும் நீண்ட முடிகளையும் அணிந்துகொண்டு சில நேரங்களில் உண்மையான பெண்கள் போல தோற்றமளித்தனர்.

பெட்ரோகிராட் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தை சேர்ந்த 'எளிய வகுப்பு' உறுப்பினர்கள்படத்தின் காப்புரிமைOLGA KHOROSHILOVA Image captionபெட்ரோகிராட் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தை சேர்ந்த 'எளிய வகுப்பு' உறுப்பினர்கள்

'உயர்குடி மக்கள்' மற்றும் 'எளிய மக்கள்'

புரட்சி வர்க்க பிரிவை ஒழித்தபோதிலும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூக வகுப்புகளால் பிரிக்கப்பட்டனர். இரண்டு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் சமூகங்கள் இருந்தாலும், அவர்கள் அரிதாகவே இணைந்து செயல்பட்டனர்.

முதலாவது இருப்பவர்கள் 'உயர்குடியாளர்கள்' என்று அழைக்கப்பட்டவர்கள்; அதாவது, படைப்பு அறிவுஜீவிகள், பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் சாரிஸ்ட் ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள்.

மற்றொரு சமூகம் 'எளிய'தாகும். (அப்பெயர், தெளிவாக 'உயர்குடிகளால்' கண்டுபிடிக்கப்பட்டது). இவ்வகையினரில் வீரர்கள், மாலுமிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குகின்றனர். இவர்கள் ரஷ்ய புரட்சிக்கு முன்னர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கின் அழகுநிலையங்கள் முன்பு இருந்தவர்களும் இல்லை மற்றும் 1917க்கு பிறகு 'உயர்குடியை' சேர்ந்த விருத்தினர்களை வரவேற்றவர்களும் இல்லை.

1920களில், ஜெர்மன் 'ட்ரெஸ்ட்ஸி' தியேட்டர் (அதில் ஆண்கள் மற்றும் பெண்களைப் போன்ற ஆண்கள்) சோவியத்தின் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பிரபலமடைந்தது. குறிப்பாக பெர்லின் நைட் கிளப் 'எல் டொரடோ'வின் நட்சத்திரமான ஹான்சி ஸ்டூம் மீது பற்று வைத்திருந்தனர்.

1910களின் முற்பகுதியில், மட்லிடா க்ஷேஸ்ஸ்காவாக போன்று ஆடையணிந்த ஆண்கள்படத்தின் காப்புரிமைALAMY Image caption1910களின் முற்பகுதியில், மட்லிடா க்ஷேஸ்ஸ்காவாக போன்று ஆடையணிந்த ஆண்கள்

'உயர்குடியாளர்கள்' அரிதான வேளைகளில் 'எளிமையான' பிரிவை சேர்ந்த அழகான ஆண்களை மட்டுமே அவர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு அழைத்தனர். ஆனால் பெண்களின் உடையை அணிந்த ஆண் கலைஞர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

அவர்கள் நட்சத்திரங்களாகவும், மற்றவர்கள் மத்தியில், மார்க்டிலா கிஷ்சின்ஸ்காவைப் (இரண்டாம் சார்கோ நிக்கோலஸின் மனைவி) போன்ற புகழ்பெற்ற ஆடல் நங்கைகளாவும் இருந்தனர்.

தொழில்முறை தையல்காரர்களால் செய்யப்பட்ட அழகான உடைகளால் அவர்களின் அலமாரிகள் இருந்தன. அவர்கள் புகழ்பெற்ற பெட்ரோகிராட் தையல்காரர் லீஃபெர்ட்டிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்தார்கள்.

1910களில் ரஷ்ய 'டிராஸ்டி' தியேட்டர்,படத்தின் காப்புரிமைOLGA KHOROSHILOVA Image caption1910களில் ரஷ்ய 'டிராஸ்டி' தியேட்டர்,

புரட்சிக்கு முன்னர், லீஃபெர்ட் ஏகாதிபத்திய நீதிமன்றத்திற்கு ஒரு சப்ளையராகவும், மிரின்ஸ்கி தியேட்டரின் நடனக் கலைஞர்களுக்காக ஆடைகளையும் தயாரித்தார்.

அனைத்தும் முடிவுக்கு வந்தன

கண்கவர் ஆண் ஓரினசேர்கையாளர்களின் திருமண விழாவை நடத்தி எதிர்தரப்பு புரட்சியாளர்களை சிக்கவைக்க அஃபாநஸி ஷவுரின் திட்டத்திற்கு பிறகு, 1920யில் இது போன்ற உயர்தர திருமணங்களோ அல்லது கைதுகளோ நடைபெறவில்லை.

ஓரினச்சேர்க்கை பொறுத்துக் கொள்ளப்பட்டாலும், ஓரினச்சேர்க்கை சமூகம் 1930களில் அதன் சுதந்திரத்தை இழக்கத் தொடங்கியது.

1933 ஜூலையில், லெனின்கிராட் ஓரினச்சேர்க்கையாளர்களின் வழக்கு என்ற பெயரில் பலதரப்பட்ட வாழ்க்கை நிலையிலிருக்கும் 175 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முழு விவரங்களும் வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கைதுசெய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் பிரிட்டிஷ் உளவுத்துறையின் 'தீங்கிழைக்கும் எதிர்-புரட்சிவாதம்' மற்றும் 'சிவப்பு இராணுவத்தின் தார்மீக ஊழல்' ஆகியவற்றிற்காக பணியாற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்காக அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

புரட்சிக்கு முன்னும் பின்னும் ரஷ்யாவில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைந்த தகவலே உள்ளது. பெட்ரோகிராட், 1916-1917படத்தின் காப்புரிமைOLGA KHOROSHILOVA Image captionபுரட்சிக்கு முன்னும் பின்னும் ரஷ்யாவில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைந்த தகவலே உள்ளது. பெட்ரோகிராட், 1916-1917

இதில் 1921இல் நடந்த அஃபானாஸி ஷார்ரின் 'திருமணம்' என்பது குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது என்று கருதப்படுகிறது. இரகசிய காவல்துறையினரின் 'இராணுவம் மற்றும் கடற்படைகளை சிதைவடைந்தவர்கள்' என்று அவர்களின் கூற்றுக்களை மறந்துவிடவில்லை.

1930களின் முற்பகுதியிலும் அதே இரகசிய காவல்துறையினரால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களிலும் அதே கூற்றுகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன.

லெனின்கிராட் ஓரினச்சேர்க்கையாளர்களின் வழக்கு, 1934-ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் சட்டத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்குவதாகவும், ஓரினச் சேர்க்கை உரிமைகள் மீதான ரஷ்யாவின் குறுகியகால சகிப்புத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் காரணமானது.

ஒல்கா கொரோஷிலோவா பிபிசி ரஷ்யாவின் அண்ணா கோசின்ஸ்காயாவிடம் இவற்றை தெரிவித்தார்.

1991-இல் சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்த பின்னர், 1993-இல் ரஷ்யாவில் ஓரினிச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-41788210

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.