Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயமான சந்தேகம்

Featured Replies

நியாயமான சந்தேகம்

 

இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­றிய சுமந்­திரன், பௌத்­தத்­திற்கு எதிர்ப்­பில்லை என கூறி­யி­ருக்­கின்றார். அவர் மட்­டு­மல்ல பௌத்த மதத்தை தமிழ் மக்கள் எவ­ருமே எதிர்க்­க­வில்லை. பௌத்த மதத்­திற்கு அர­சி­ய­ல­மைப்பில் மேன்­மை­யான இடம் வழங்­கப்­ப­டு­வதை தமிழ் மக்கள் விரும்­ப­வில்லை. அதைத்தான் அவர்கள் எதிர்க்­கின்­றார்கள். அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் இது முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாகும்.

 

இடைக்­கால அறிக்கை தொடர்­பி­லான விவாதம் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான அர­சியல் வர­லாற்றில் அதி­முக்­கிய நிகழ்­வாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆனால், தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ற வகையில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணத்­தக்­க­தொரு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கு அது வழி வகுக்­குமா என்­பது பல்­வேறு தரப்­பினர் மத்­தி­யிலும் கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கின்­றது.  

மூன்று தினங்­க­ளுக்கு நடை­பெறும் என முன்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த இந்த விவாதம் மேலும் இரண்டு தினங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இருப்­பினும், புதிய அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்கம் பற்­றிய முரண் நிலை­களைக் களை­வ­தற்கு அவ­சி­ய­மான ஆரோக்­கி­ய­மான கருத்­துக்­க­ளிலும் பார்க்க, முரண்­பா­டு­களை அதி­க­ரிக்கச் செய்­வ­தற்­கான கருத்­துக்­களே அதி­க­மாக இந்த விவா­தத்தில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இதனால், இந்த விவா­தத்தின் ஊடாக பிரச்சினை­க­ளுக்கு முடிவு காணத்­தக்­கதோர் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முடி­யாமல் போய்­வி­டுமோ என்ற நியா­ய­மான சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

புரை­யோ­டி­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு நாட்டின் ஆட்சி முறை எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டி­யது முக்­கி­ய­மாகும். நடை­மு­றையில் உள்ள ஒற்றை ஆட்­சியின் கீழ் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடி­யாது. அதன் கீழ் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­பதும் சாத்­தி­ய­மற்­றது என்ற கசப்­பான உண்மை ஏற்­க­னவே உணர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இது­வ­ரை­யி­லான ஆட்சிப் போக்கு அந்த கசப்­பான அர­சியல் வர­லாற்றுப் பாடத்தைத் தமிழ் மக்­க­ளுக்குத் தெளி­வாகக் கற்­பித்­தி­ருக்­கின்­றது. 

அவ­நம்­பிக்­கையும் அடக்­கு­மு­றையும் 

மத்­தியில் அதி­கா­ரங்­களைக் குவிப்­ப­தற்கும், தேசிய சிறு­பான்மை இன மக்­களை ஆட்சி அதி­கா­ரங்­க­ளற்ற இனக்­கு­ழு­மங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­குமே இந்த நாட்டின் ஒற்றை ஆட்சி முறைமை இது­வ­ரையில் வழி­வ­குத்­தி­ருக்­கின்­றது. 

இங்கு பல இனங்­க­ளையும் சேர்ந்த மக்கள் வாழ்­கின்­றார்கள். அவர்கள் பல்­வேறு மதங்­களைப் பின்­பற்­று­கின்­றார்கள். பல்­லின மக்­க­ளையும் பல மதங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து அவர்கள் ஒற்­று­மை­யா­கவும். நல்­லி­ணக்­கத்­தோடும் வாழ்­வ­தற்கு ஏற்ற வகையில் இந்த ஒற்றை ஆட்சி முறையின் அரச நிர்­வாகச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. யாவரும் இந் நாட்டு மக்கள். அவர்கள் அனை­வரும் சம உரிமை உடை­ய­வர்கள். சம அள­வி­லான உரித்­துக்­களைக் கொண்­ட­வர்கள் என்ற உணர்­வுடன் வாழக்­கூ­டிய சூழலை இந்த ஒற்றை ஆட்­சியின் மூலம் உரு­வாக்க முடி­ய­வில்லை. 

மாறாக இந்த நாடு சிங்­கள மக்­க­ளுக்கே உரி­யது. அனைத்து உரி­மை­களும் அவர்­க­ளுக்கே உரி­யது. ஏனையோர் ஒதுக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள், அல்­லது ஒடுக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் என்ற அர­சியல் கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே ஒற்றை ஆட்சி முறை தனது அர­சியல் பய­ணத்தை  மேற்­கொண்டு வந்­துள்­ளது. 

அர­சியல் தீர்­வுக்­காக தமிழ் மக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தீர்க்­க­மான அஹிம்சைப் போராட்டம் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. ஆட்­சி­யா­ளர்­க­ளினால் எள்ளி நகை­யாடி புறந்­தள்­ளப்­பட்­டது. அதனால், அவ­நம்­பிக்­கை­யையே அது அளித்­தி­ருந்­தது. அந்த அவ­நம்­பிக்­கையும், அஹிம்சை போராட்­டத்தை நசுக்­கு­வ­தற்­காக அர­சுகள் மேற்­கொண்ட ஆயுத முனை­யி­லான அடக்­கு­முறை போக்­குமே தமிழ் மக்­களை ஆயுதப் போராட்­டத்தில் குதிக்கத் தூண்­டி­யி­ருந்­தது. 

ஆட்சி மாற்­றமும் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க முயற்­சியும்

அர­சு­களை ஆட்டம் காணச் செய்­தி­ருந்த அந்த ஆயுதப் போராட்­டமும், பயங்­க­ர­வாதம் என்ற போர்­வையில் அனைத்­து­லக நாடு­களின் ஆத­ர­வோடு அழித்­தொ­ழிக்­கப்­பட்­டது. ஆனால் போராட்­டத்­திற்கு அடிப்­ப­டை­யான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை. மாறாக ஜன­நா­யகப் போர்­வையில் மென்­போக்­கி­லான வன்­மு­றையின் மூலம், தமிழ் மக்­களின் உரி­மைக்­கான குரல்­களை நசுக்­கு­வ­தற்­காக இரா­ணுவ மயப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளையே அது மேற்­கொண்­டி­ருந்­தது. 

மறு­பக்­கத்தில் இரா­ணுவ வெற்­றி­வா­தத்தில் சிங்­கள மக்­களை மூழ்கச் செய்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, தனக்­கென நிரந்­த­ர­மான அர­சியல் வாழ்­வுக்கு வழி­கோல முற்­பட்டார். இரா­ணுவ மயப்­பட்ட அவ­ரு­டைய அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஜன­நா­யகம் நசுக்­கப்­பட்­டது. எதேச்­ச­தி­காரப் போக்கு தலை­தூக்­கி­யது. இதனால் ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்து அதற்குப் புத்­துயிர் ஊட்­டு­வ­தற்­கா­கவே நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­யது. 

ஜன­நா­ய­கத்தை அச்­சு­றுத்­திய நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வர­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­துக்கு சவா­லான விகி­தா­சார தேர்தல் முறையை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற இரண்டு முக்­கிய நோக்­கங்­க­ளுக்­கா­கவே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க நல்­லாட்சி அரசாங்கம் முற்­பட்­டி­ருந்­தது. 

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்கு உறு­துணை புரிந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு விரும்­பி­ய­வாறு புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கும் இணங்­கி­யி­ருந்­தது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­போடு புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. 

முயற்­சிகள் இதய சுத்­தி­யா­ன­வையா.....?

இருப்­பினும், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் வகையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள், இதய சுத்­தி­யுடன் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. ஒற்றை ஆட்­சியை மேலும் இறுக்­க­மாக்கி, அதனை இன்னும் வலு­வாக முன்­னெ­டுப்­ப­தற்­கான வழி­மு­றை­யி­லேயே அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்­கின்­றன. 

நடை­மு­றையில் உள்ள ஒற்றை ஆட்சி முறையில் மாற்­ற­மில்லை. பெரும்­பான்­மை­யி­ன­ரா­கிய பௌத்த சிங்­கள மக்­களை முதன்­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக, பௌத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை – மேலா­திக்க நிலைமை என்ற அம்சம் முன்­னி­லும்­பார்க்க, வலு­வாக, புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான அடிப்­படைக் கொள்­கையில் வரை­யறை செய்­யப்­ப­டு­கின்­றது. ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற ஒற்­றை­யாட்சி முறையும், பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை என்­பதும், ஏனைய தேசிய சிறு­பான்மை இன மக்­களை, தொடர்ந்தும் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக வைத்­தி­ருப்­ப­தற்­கான அடிப்­படை அர­சியல் நிலைப்­பாடு என்­பதை அரச தரப்­பி­ன­ரு­டைய கூற்­றுக்கள் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன. 

வர­லாற்று ரீதி­யான தேசிய இன­மாக தமிழ் மக்­களைச் சுட்­டிக்­காட்டி, அவர்­க­ளது தாயகப் பிர­தேசம் என்ற கார­ணத்­திற்­காக வடக்கும் கிழக்கும் இணைந்த, பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மை­யுடன் கூடிய, சுய­நிர்­ணய உரி­மையைக் கொண்ட சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வே வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைப் பிர­தி­நி­திகள், அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இந்த நிலைப்­பாட்டை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­துதான் வேடிக்­கை­யா­னது. அதே­நே­ரத்தில் அது, விப­ரீ­த­மா­னதும், வேத­னைக்கும் உரி­ய­தாகும். ஒற்றை ஆட்சி முறை­யையும், பௌத்த மதத்­திற்கே மேன்­மை­யான இடம் என்­ப­தையும் சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தின்­போது பேசு­கையில் தெரி­வித்­தி­ருக்­கின்றார். அர­சி­ய­ல­மைப்­புக்­கான அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற அவையில் அமர்ந்­தி­ருந்த அவர்கள் இரு­வ­ரையும் சுட்­டிக்­காட்டி அவர் இதனைக் கூறி­யி­ருக்­கின்றார். அவ்­வாறு அவர்கள் ஏற்­றுக்­கொண்­டதன் பின்னர் தமிழ் மக்­க­ளுக்கு என்ன பிரச்­சினை இருக்­கின்­றது என்ற தொனியில் அவ­ரு­டைய கருத்து அமைந்­தி­ருந்­த­தா­கவே கொள்ள வேண்டும். 

சம்­பந்தன் இந்த நாட்டின் எதிர்க்­கட்சித் தலைவர் என்­ப­தற்கும் அப்பால், தமிழ்த் தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர், தமிழ் மக்­களின் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்றப் பிர­தி­நிதி. சுமந்­திரன் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அதி­கா­ர­பூர்வ பேச்­சாளர். யாழ் மாவட்ட தமிழ் மக்­களால் பாராளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நிதி. அது மட்­டு­மல்ல. அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் தமிழ் மக்­க­ளு­டைய ஏகப் பிர­தி­நி­திகள் என்ற அந்­தஸ்­து­டை­ய­வர்கள். எனவே, இவர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்ற கருத்­துக்­களும், இவர்­களால் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற நிலைப்­பா­டு­களும் தமிழ் மக்­க­ளு­டைய கருத்­துக்­க­ளா­கவும், தமிழ் மக்­க­ளு­டைய நிலைப்­பா­டா­க­வுமே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

அடிப்­படை என்ன?

இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­றிய சுமந்­திரன், பௌத்­தத்­திற்கு எதிர்ப்­பில்லை என கூறி­யி­ருக்­கின்றார். அவர் மட்­டு­மல்ல பௌத்த மதத்தை தமிழ் மக்கள் எவ­ருமே எதிர்க்­க­வில்லை. பௌத்த மதத்­திற்கு அர­சி­ய­ல­மைப்பில் மேன்­மை­யான இடம் வழங்­கப்­ப­டு­வதை தமிழ் மக்கள் விரும்­ப­வில்லை. அதைத்தான் அவர்கள் எதிர்க்­கின்­றார்கள். அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் இது முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாகும்.

ஆனால் சுமந்­திரன் தனது உரையில், 'நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்­க­ளையும் சம­மா­கவே மதிக்­கின்றோம். அனைத்­துக்கும் சம அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது தான் எமது கோரிக்­கை­யா­க­வுள்­ளது. இருப்­பினும் பெரும்­பான்­மை­யான பௌத்த மதத்­தினை பின்­பற்றும் மக்கள் பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் அல்­லது தற்­போ­துள்­ள­மை­யைப்­போன்றே புதிய அர­சி­ய­ல­மைப்­பிலும் அமை­ய­வேண்டும் என்று விரும்­பு­வார்­க­ளாயின் அதனை நாம் எதிர்க்கப் போவ­தில்லை. அதனால் எமக்கு எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை' என குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். இதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்குப் பிரச்­சி­னை­யாக உள்ள முக்­கிய விட­யத்தை அவர் 'எமக்கு எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை' என்று வரை­ய­றுத்­தி­ருக்­கின்றார். 

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் அர­சியல் ரீதி­யாக இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய துணை­யோடு பௌத்த மத ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்து ஆல­யங்கள், கிறிஸ்­தவ ஆல­யங்கள் அமைந்­துள்ள காணி­க­ளிலும், அவற்­றுக்கு அரு­கிலும் பௌத்த மதத்தைப் பின்­பற்­று­கின்ற மக்கள் எவ­ருமே இல்­லாத இடங்­களில் புத்தர் சிலைகள் நிறு­வப்­ப­டு­கின்­றன. அடாத்­தாக பௌத்த விகா­ரைகள் கட்­டப்­ப­டு­கின்­றன. இந்த நட­வ­டிக்­கைகள் தமிழ் மக்­க­ளு­டைய மத உரி­மை­களை அப்­பட்­ட­மாக மீறு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளாகும். இத்­த­கைய ஒரு சூழலில் பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வதை நாம் எதிர்க்கப் போவ­தில்லை என தமிழ் மக்­க­ளு­டைய சார்பில் உரை­யாற்­றிய சுமந்­திரன் எந்த அடிப்­ப­டையில் கூறி­யி­ருக்­கின்றார் என்­பது தெரி­ய­வில்லை. 

அனைத்து மதங்­களும் சம­மாக மதிக்­கப்­பட வேண்டும். அனைத்து மதங்­களும் சம­மான உரி­மை­களைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்ற அடிப்­ப­டையில் மதச்­சார்­பற்ற ஆட்சி முறை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மி­யர்­க­ளான தமிழ் பேசும் மக்­களின் எதிர்­பார்ப்­பாகும். அர­சியல் ரீதி­யாக ஏற்­க­னவே மேலா­திக்க நிலையைக் கொண்­டுள்ள பௌத்­தர்­களின் மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­க­ளி­னாலும், மத ரீதி­யான வன்­மு­றை­க­ளி­னாலும் அவர்கள் நொந்து நூலாகிப் போயி­ருக்­கின்­றார்கள். ஆயினும் அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு இன்னும் முடி­வேற்­ப­ட­வில்லை. அத்­து­மீ­றல்­க­ளா­கவும், அச்­சு­றுத்­தல்­க­ளா­கவும், வன்­மு­றை­க­ளா­கவும் பௌத்த மத ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டுகள் தொடர்ந்த வண்­ணமே இருக்­கின்­றன. இந்த நிலையில் எந்­த­வி­த­மான நிபந்­த­னை­க­ளு­மின்றி, பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை என்ற அர­சி­ய­ல­மைப்­புக்­கான அடிப்­படை நிலைப்­பாட்டை ஏற்­றுக்­கொள்­வது என்­பது நேர் முர­ணான நிலைப்­பா­டாகும்.பிரிக்­கப்­பட முடி­யாத,பிரிக்­கப்­படக் கூடாத, ஒரு­மித்த நாடு – ஏக்­கிய ராஜ்­ஜிய .இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் ரீதி­யாக ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்வு காணத் தவ­றி­யது மட்­டு­மல்­லாமல், தொடர்ச்­சி­யாக தேசிய சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய உரி­மை­களைக் கப­ளீ­கரம் செய்து வந்த ஆட்­சி­யா­ளர்­களின் போக்கு கார­ண­மா­கவே தமி­ழர்கள் தனி­நாடு கோரி போராட நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். 

இதற்­காக அஹிம்சை வழி­யிலும், ஆயு­த­மேந்­தியும் நடத்­தப்­பட்ட போராட்­டங்­களின் அழுத்­தத்தில் இருந்து மீண்டு எழுந்­துள்ள அரச தரப்­பினர், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் சுதந்­திர காற்­றையே சுவா­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விட­யத்தில், அர­சியல் ரீதி­யாக அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்­கத்­தக்க ஆளு­மை­யுள்ள அர­சியல் வலு­வில்­லா­த­வர்­க­ளா­கவே ஆளும் தரப்­பினர் தமிழ் மக்­களை நோக்­கு­கின்­றார்கள். தமிழ் மக்­க­ளுi­டைய அர­சியல் கள நிலை­மையும் அவ்­வாறே காணப்­ப­டு­கின்­றது. 

அர­சாங்­கத்தின் மீது அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க வல்ல அர­சியல் பலம் தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கு­மே­யானால், இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள காணிப்­பி­ரச்­சினை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் பற்­றிய பிரச்­சினை, அர­சியல் கைதி­களின் பிரச்­சினை என தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­களின் பட்­டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்­டி­ருக்­க­மாட்­டாது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களே, அர­சியல் தலை­மை­க­ளின்றி சுய­மாக மேற்­கொள்­கின்ற போராட்­டங்­க­ளின்­போது, சாதா­ரண அர­சி­யல்­வா­தி­களில் இருந்து, துறை சார்ந்த அமைச்­சர்கள் மட்­டு­மல்­லாமல், நாட்டுத் தலை­வர்­க­ளான பிர­தமர், ஜனா­தி­பதி வரையில் அரச தரப்­பி­னரால் அளிக்­கப்­ப­டு­கின்ற உறு­தி­மொ­ழி­களும் நிறை­வேற்­றப்­ப­டாமல் காற்றில் கரைந்து கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ் மக்கள் அர­சியல் ரீதி­யாகப் பல­மற்­றி­ருப்­பதே இதற்குக் கார­ண­மாகும்.

யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளுக்­கான பொறுப்பு கூறு­கின்ற பாரிய பிரச்­சினை மட்­டு­மல்­லாமல், சின்னச் சின்ன பிரச்­சி­னை­க­ளுக்குக் கூட ஐ.நா. மன்­றத்­தையும் சர்­வ­தே­சத்­தையும் உத­விக்கு அழைக்­கின்ற அர­சியல் மனப்­பாங்கு தமிழ் மக்கள் மத்­தியில் வளர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்­கான முறை­யான அர­சியல் பலம் வளர்க்­கப்­பட்­டி­ருக்­கு­மே­யானால், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காகப் பிறரில் தங்­கி­யி­ருக்­கின்ற இந்த நிலைமை மலை­போல வளர்ந்­தி­ருக்­க­மாட்­டாது.

ஏனோ தானோ என்று செயற்­பட முடி­யாது

எதேச்­ச­தி­காரப் போக்கைக் கொண்­டி­ருந்த முன்­னைய ஆட்­சியில் அர­சாங்­கத்­துடன் நடத்­தப்­பட்ட அர­சியல் தீர்­வுக்­கான நேரடிப் பேச்­சு­வார்த்­தைகள் தன்­னிச்­சை­யாக அர­சாங்­கத்­தினால் முறிக்­கப்­பட்­டி­ருந்­தது.  

எதிர்க்­கட்சி என்ற முக்­கி­ய­மான அர­சியல் அந்­தஸ்தைப் பெற்­றி­ருக்­கின்ற சூழலில், நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு முழு­மை­யான ஆத­ரவை வழங்கி வரு­கின்­றது. அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மாகச் செயற்­பட்டு வரு­கின்­றது. ஆயினும் அர­சியல் தீர்­வுக்­காக அர­சாங்­கத்­துடன் ஒரு நேரடி பேச்­சு­வார்த்­தையை நடத்த முடி­யாத நிலை­யி­லேயே கூட்­ட­மைப்பின் தலைமை காணப்­ப­டு­கின்­றது. 

ஒரு நேரடி பேச்­சு­வார்த்­தையின் மூலம் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்­காமல் போயி­ருந்­தா­லும்­கூட, அல்­லது அத்­த­கைய சந்­தர்ப்­பத்தை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் உரு­வாக்கிக் கொள்ள முடி­யாமல் போயி­ருந்­தா­லும்­கூட, புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு ஆக்­க­பூர்­வ­மான முறையில் செயற்­பட வேண்டும் என்­பதே தமிழ் மக்­களின் பொது­வான எதிர்­பார்ப்­பாகும். 

அடிப்­படை விட­யங்கள் தொடக்கம் அநே­க­மாக அனைத்து விட­யங்­க­ளிலும் முரண்­பா­டான நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன. இருப்­பினும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் ஊடாக ஓர் அர­சியல் தீர்வை எட்­டு­வ­தற்­கான முயற்­சியைக் கைவி­டவோ அல்­லது அதில் ஏனோ தானோ என்று செயற்­ப­டவோ முடி­யாது.

எதற்­கெ­டுத்­தாலும் ஐ.நா.­விடம் முறை­யி­டுவோம். சர்­வ­தே­சத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வருவோம் என்று பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்குப் பிறரில் தங்­கி­யி­ருக்­கின்ற நிலையில் அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் செயற்­பட முடி­யாது. அவ்­வாறு செயற்­ப­டவும் கூடாது. ஏனெனில் தமிழ் மக்களுடைய பங்களிப்பையும் உள்ளடக்கியதாகவே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற அந்தஸ்தில் இரா.சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சுமந்திரனும் தமிழ் மக்களின் சார்பில் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவில் முக்கிய பிரதிநிதிகளாக இடம்பெற்றிருக்கின்றார்கள். 

பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடாது

எனவே, உரிய சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள், நிலைப்பாடுகள் என்பவற்றை அழுத்தமாக எடுத்துக்கூறி அவற்றையும் உள்ளடக்குவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்திற்கு, அரசியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏனைய அரசியல் விடயங்களில் கைக்கொள்கின்ற விட்டுக் கொடுத்துச் செயற்படுகின்ற மென்வழிப் போக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நன்மையளிக்க மாட்டாது. 

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்கின்ற வாய்ப்பு வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளுக்கு கிட்டியிருக்கின்றது. எங்களுடைய பிரச்சினைக்கு நாங்களே தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியம்.

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.