Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நானே அதிகளவில் அவமானப் படுத்தப்படுகின்றேன் – ஜனாதிபதி

Featured Replies

இலங்கையில் நானே அதிகளவில் அவமானப் படுத்தப்படுகின்றேன் – ஜனாதிபதி

இலங்கையில் நானே அதிகளவில் அவமானப் படுத்தப்படுகின்றேன் – ஜனாதிபதி
 
”மலரும் பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் பகமுண – மஹசென் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

168 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில், இரண்டு தொழில்நுட்ப பிரிவுகளும், 8 வகுப்பறைகளும் காணப்படுகின்றன.

இதன்போது பாடசாலை வளாகத்தில் மரக்கன்றொன்றை ஜனாதிபதி நாட்டியதுடன், அழகியற்கலை பாடத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின் பின்னர் ஹெலஹார பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இதற்காக 600 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து….

இலங்கையில் நானே அதிகளவில் அவமானப்படுத்தப்படுகின்றேன். இதன் ஊடாக ஜனநாயக சமூகமொன்றின் சுதந்திரத்தை காண முடிகின்றது. இணையத்தளங்கள், பேஸ்புக் ஆகியவற்றின் ஊடாக என்னை நிந்திப்பதை உங்களால் காண முடியும். உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. இவை முன்னேற்றமடையாத மக்களின் இயல்பாகும். எவ்வகையான அவமானங்கள் வந்த போதிலும், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் எமக்குள்ள பொறுப்புக்களையும் கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்.

http://newsfirst.lk/tamil/2017/11/இலங்கையில்-நானே-அதிகளவில/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

இலங்கையில் நானே அதிகளவில் அவமானப்படுத்தப்படுகின்றேன். இதன் ஊடாக ஜனநாயக சமூகமொன்றின் சுதந்திரத்தை காண முடிகின்றது. இணையத்தளங்கள், பேஸ்புக் ஆகியவற்றின் ஊடாக என்னை நிந்திப்பதை உங்களால் காண முடியும். உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. இவை முன்னேற்றமடையாத மக்களின் இயல்பாகும். எவ்வகையான அவமானங்கள் வந்த போதிலும், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் எமக்குள்ள பொறுப்புக்களையும் கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்.

தேர்தல்லை சொன்னதை ஒழுங்காய் செய்தால் ஏன் மற்றவன் அவமானப்படுத்தப்போறான்?
பள்ளிக்கூடம் அரசியல் கதைக்கிற இடமே?

அதோடை முன்னேற்றம் அடைஞ்ச நாடுகளிலைதான் எல்லா அரசியல் தலைவர்களையும் ரிவி பேப்பர் ரேடியோ எல்லாத்திலையும் அந்தமாதிரி கலாய்ப்பார்கள். 

Ähnliches Foto

CpG8D4dW8AARgDb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன 100 நாளைக்குள் ஜனாதிபதி முறை முடிப்பன் என்று வந்திட்டு.. அதை 100 தலைமுறைக்கு காவுவது போல வாழ்ந்தால்.. எவன் மதிப்பான். :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.