Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசமைப்பு சாத்தியப்படாததே

Featured Replies

புதிய அரசமைப்பு சாத்தியப்படாததே

 
 
புதிய அரசமைப்பு சாத்தியப்படாததே

புதிய அர­சமைப்பு உரு­வாக்­கத்­தில் நடா­ளு­மன்­றத்தை விட­வும் மாகா­ணங்­க­ளுக்கு அதி­க­ள­வான அதி­கா­ரங்­கள் குவிக்­கப்­பட்­டுள் ளன. தற்­போது மேற்­கொள்­ளப்­ப­டும் புதிய அர­ச­மைப்பு முயற்சி வெற்­றி­ய­ளித்­தால், அதா­வது புதி­ய­தொரு அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டால் நாடா­ளு­மன்­றத்­துக்கு வேலை இருக்­காது என்று தெற்­குப் பகுதி மக்­க­ளி­டையே அழுத்­தம் திருத்­த­மாக நிறு­வப்­பட்­டா­ யிற்று.

இவ்­வா­றா­ன­தொரு மிகப்­பெ­ரும் தடையை தகர்த்து அர­ச­மைப்பு உத­ய­மா­குமா என்­றால் ஏகப்­பட்ட சந்­தே­கங்­கள், ஏக்­கங்­கள் மன­தில் தொக்கு நிற்­கின்­றன.

தமிழ் கூட்­ட­மைப்­பின் 
3 அம்­சக் கோரிக்கை

புதிய அர­ச­மைப்பை கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொள்ள வேண்­டு­மா­யின் தமது மூன்று முக்­கிய கோரிக்­கை­க­ளும் நிறை­வேற்­றப்­ப­டு­தல் அவ­சி­யம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

வடக்கு – கிழக்கு இணைப்பு, மாகா­ணங்­க­ளுக்கு வழக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­கள் திரும்­பப் பெறப்­பட முடி­யா­த­வா­றான இறுக்­க­மான பொறி­முறை, நிதித் துறைச் சுதந்­தி­ரம் ஆகி­ய­வையே கூட்­ட­மைப்­பின் முக்­கிய கோரிக்­கை­க­ளா­க­வுள்­ளன.

இந்த விட­யத்­தில் சிறு விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் இட­மில்லை என்று கூட்­ட­மைப் பின் பேச்­சா­ளர் சுமந்­தி­ரன் முன்­ன­தா­கவே தெரி­வித்தி­ருந்­தார். ‘‘இடைக்­கால அறிக்­கை­யில் ஓர் அங்­கு­லம் கூட இனிக் கீழி­றங்க முடி­யாது. நாம் ஏற்­க­னவே கீழி­றங்கி வந்­துள்­ளோம். தெரி­வுக்­காக விடப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்­கள் எமக்­குச் சாத­க­மாக வர­வேண்­டும்’ ’என­வும் அவர் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.

இந்த மூன்று அம்­சக் கோரிக்­கை­க­ளு­டன் அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தங்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் இந்த வாரம் நடை­பெற்­றன. இந்த விவா­தத்­தில் எடுத்­து­ரைக்­கப்­பட்ட கருத்­துக்­க­ளு­டன் கூட்­ட­டைப்­பின் மூன்று அம்­சக் கோரிக்­கை­களை எந்­த­ள­வுக்கு ஒத்­துப்­போ­கின்­றன: சாத்­தி­யப்­ப­டும் தன்­மை­யில் உள்­ளன என்று அலசி ஆராய்­தல் இன்­றி­ய­மை­யாத ஒன்­றா­கி­றது.

நாடா­ளு­மன்­றுக்கு 
வேலை­யில்லை
என்­கி­றார் மகிந்த

புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் நாடா­ளு­மன் றத்­துக்கு வேலை இல்லை என்று மிகப்­பெ­ரும் குண்­டைத் தூக்­கிப் போட்­டுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த.

வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீண்­டும் பெறப்­பட முடி­யாத இறுக்­க­மான பொறி­முறை இடைக்­கால அறிக்­கை­யில் உள்­ளது. இடைக்­கால அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ள­தன்­படி அர­ச­மைப்பு உரு­வா­னால் நாடா­ளு­மன்­றத்­தை­யும் விட மாகாண சபை­கள் அதி­கா­ரம் பெற்­றுத் திக­ழும். அத்­த­கைய நிலை­யில் நாடா­ளு­மன்­றத்­துக்கு வேலை இல்லை.

தற்­போது நாடா­ளு­மன்­றத்­தில் உள்­ள­வர்­கள் அடுத்த தடவை நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டாது மாகாண சபைத் தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­டு­வது சிறந்­த­தாக இருக்­கும் என்­றெல்­லாம் கண்­டு­பி­டித்­துள்­ளார் அவர்.

தனது அர­சி­ய­லுக்­கான அடி­நா­த­மாக பௌத்­தத்தை இறு­கப் பற்­றிப் பிடித்­தி­ருப்­ப­வர் மகிந்த. கடந்த காலங்­க­ளில் அவ­ரது நகர்­வு­கள், கருத்­துக்­கள், அறிக்­கை­கள் அனைத்­தும் இதைத் துல்­லி­ய­மாக வெளிப்­ப­டுத்­தும். தற்­போ­தும் அவர் தனது நிலைப்­பாட்­டில் இருந்து எள்­ள­ள­வும் மாற­வில்லை.

அர­ச­மைப் புக்­கான இடைக்­கால அறிக்கை மீது நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­ முன்­தி­னம் நடந்த விவா­ தத்­தில் உரை­யாற்­று­கை­யில் பௌத்­தத்தை வைத்து தென்­ப­குதி மக்­களை அவர் உசுப்­பேற்றி விட்­டுள்ளார்.

‘‘புதிய அர­ச­மைப்­பின் ஊடாக இல்­லாத பிரச்­சி­னை­யைத் தோற்­று­விக்க முனை­கின்­ற­ னர். பௌத்­தத்­துக்­கான முன்­னி­ரிமை நீக்­கப்­ப­டும் போது என்ன நிலமை ஏற்­ப­டும். தற்­போது இல்­லாத பிரச்­சி­னையே உரு­வா­கும்’’ என்று மகிந்த தெரி­வித்­தார் என ஊட­கங்­கள் பல­வும் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

எனின் மகிந்த, ‘‘அர­ச­மைப்பு நிறை­வே­றி­னால் தெற்கு கொதிப்­ப­டை­யும் அல்­லது கொதிப்­ப­டைய வேண்­டும்’’ என்று சொல்­லா­மல் சொல்லி நிற்­கின்­றார். பௌத்த சங்­க­பீ­டம் உள்­ளிட்ட பௌத்த அமைப்­புக்­கள் அர­ச­மைப்பை எதிர்க்­கின்­றன என்­றும் மகிந்த எச்­ச­ரித்­துள்­ளார்.

அதி­கா­ரப் பகிர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டால், வடக்கு – கிழக்கு இணைந்­தால் பய­ன­டை­வது வடக்கு மாகா­ணமே. ஏனைய இரு தரப்­பி­னர்­க­ளும் இந்த அர­ச­மைப்­பால் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­வார்­கள். வடக்­கு­டன் இணைக்­கப்­ப­டு­வ­தில், கிழக்கு மாகாண மக்­க­ளின் அபிப்­பி­ரா­யம் கவ­னத்­தில் கொள்­ளப்­ப­டல் வேண்­டும். ஆனால் கிழக்கு மாகாண மக்­கள் இதற்கு உடன்­ப­ட­வில்லை என்­றும் மகிந்த குறிப்­பிட்­டுள்­ளார்.

அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் மிகப்­பெ­ரும் புள்­ளி­யாக மகிந்த உள்­ளார். அவ­ரின் ஆத­ரவு புதிய அர­ச­மைப்பு உத­ய­மா­வ­தற்கு இன்றிய­மை­யா­தது. ஆனால் அவர் வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­க­ளு­டன் கூட்­ட­மைப்­பின் மூன்று அம்­சக் கோரிக்­கை­களை ஒப்­பிட்­டுப் பார்த்­தால், வடக்கு – கிழக்கு இணைப்பு, மாகா­ணங்­க­ளுக்கு வழக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­கள் திரும்­பப் பெறப்­பட முடி­யா­த­ வா­றான இறுக்­க­மான பொறி­முறை ஆகி­யன கேள்­விக்கு உட்­ப­டு­கின்­றன.

ஒற்­றை­யாட்சி என்­பதை
உறு­திப்­ப­டுத்­து­கி­றார் 
ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன

இடைக்­கால அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது ஒற்­றை­யாட்­சி­தான் என்­பதை உறு­திப்­ப­டுத்தி கருத்­துப் பகிர்ந்­துள்­ளார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­ந­டத்­தல் குழு­வில் அங்­கம் வகிக்­கும் முக்­கிய உறுப்­பி­ன­ரு­மான ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன.

புதிய அர­ச­மைப்­பில் ‘‘ஒற்­றை­யாட்சி முறைமை முன்பு இருந்­ததை விட­வும் மிக­வும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது’’ என்று அவர் தெள் ளத் தெளி­வா­கக் கோடிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.

‘‘கூட்­டாட்சி என்ற அம்­சமே இடைக்­கால அறிக்­கை­யில் எங்­கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை’’ என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். மாகா­ணங்­கள் பிரிந்து செல்­லு­த­லைத் தடுத்­தல். மாகா­ணங்­க­ளில் குழப்­பங்­கள், கல­வ­ரங்­கள், பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டும்­போது அரச தலை­வர் நேர­டி­யா­கத் தலை­யி­டு­தல், தேவை ஏற்­பட்­டால் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தல் உள்­ளிட்ட பல அம்­சங்­கள் கொழும்­புக்­குச் சாத­க­மாக உள்­ள­தை­யும் அவர் எடுத்­தி­யம்­பி­யுள்­ளார்.

ஜயம் ப­தி­யின் கருத்து கொழும்பு அர­சின் கருத்து என்றே எண்­ணத்­தோன்­று­கி­றது. ஏனெ­னில் அவ­ரி­டம்­தான் இடைக்­கால அறிக்கை தொடர்­பி­லும், புதிய அர­ச­மைப்­புக் குறித்­தும் புலம்­பெ­யர் மக்­க­ளுக்கு குறிப்­பாக புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளுக்கு விளக்­கம் கொடுக்­கும் பணி ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

ஜயம்­ப­தி­யின் கருத்­தின் மூலம் இரண்டு விட­யங்­கள் தெளி­வா­கி­ன்றன. ஒன்று, கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­யான ‘மாகா­ணங்­க­ளுக்கு வழக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­கள் திரும்­பப் பெறப்­பட முடி­யா­த­வா­றான இறுக்­க­மான பொறி­முறை’ என்­பது கேள்­விக்கு உட்­ப­டு­கி­றது.

இரண்­டா­வது, தேவை­யற்ற குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் மகிந்­த­வின் உரை அமைந்­துள்­ளது என்­ப­தும் தெளி­வா­கி­றது.

இணைப்பை 
எதிர்க்­கி­றது
ஜே.வி.பி.

புதிய அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­கும் முயற்­சிக்கு ஜே.வி.பியும் முட்­டுக்­கட்டை போட்­டுள்­ளது. புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை மீதான மூன்­றாம் நாள் விவா­தத்­தில் கலந்­து­கொண்ட ஜே.வி.பியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜித கேரத், ஜே.வி.பியின் நிலைப்­பாட்டை ஆணித்­த­ர­மாக எடுத்­தி­யம்­பி­யுள்­ளார்.

‘‘கிழக்கு மாகா­ணத்­தில் சிங்­க­ள­வர்­க­ளும், முஸ்­லிம்­க­ளும் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இவ்­வா­றான நிலை­யில் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தேசிய ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­யாது. கூட்­டாட்சி என்ற ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு எவ­ரா­வது முயன்­றால் அவர்­க­ளின் முயற்சி வெறும் கன­வா­கவே இருக்­கும்’’ என்று அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

எனின், கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­க­ளில் ஒன்­றான வடக்கு – கிழக்கு இணைப்பு என்­ப­தற்கு ஜே.வி.பியும் இட­ம­ளிக்­காது.

சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன்
அனுப்­பு­தல் தகாத செயல்

புதிய அர­ச­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்ள எதிர்ப்­ப­லை­களை நோக்­கு­கின்ற போது, கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­கள் நிரா­க­ரிக் கப்­ப­டும் என்றே மக்­க­ளி­டத்­தில் பர­வ­லாக கருத்­துக்­க­ளும், அபிப்­பி­ராங்­க­ளும் நில­வு­கின் றன.

வடக்­குக்கு சம்­பந்­தன் வெறுங்­கை­யு­டன் வந்­து­
வி­டு­வாரா என்ற எண்­ணப்­பா­டும் மக்­க­ளி­டத்­தில் மேலோங்­கு­கி­றது. இந்­தப் பின்­ன­ணி­யில் சிங்­க­ளக் கட்­சிகளுக்கு முறை­யான எச்­ச­ரிக்கை ஒன்­றைக் கொடுத்­துள்­ளார் அமைச்­சர் மனோ­க­ணே­சன்.

‘‘சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன் வடக்­குக்கு அனுப்­பி­னால் சிங்­க­ளக் கட்­சி­களை வர­லாறு மன்­னிக்­காது. தந்தை செல்­வ­நா­ய­கம். தமி­ழர்­களை கட­வுள்­தான் காப்­பாற்ற வேண்­டும் என்று சொன்­னார். சம்பந்­தனை, இலங்கை நாட்­டையே கட­வுள்­தான் காப்­பாற்ற வேண்­டும் என்று சொல்ல வைத்­து­வி­டா­தீர்­கள். அவ­ரைப் பல­வீ­னப்­ப­டுத்தி விடா­தீர்­கள்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, மகிந்த அணி, மக்­கள் விடு­தலை முன்­னணி ஆகிய சிங்­க­ளப் பெரும்­பான்­மைத் தரப்­புக்­கள் இதைப் புரிந்­து­கொள்ள வேண்­டும்’’ என்று மனோ­க­ணே­சன் மேலும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கட­வுள்­தான் காப்­பாற்ற வேண்­டும்

தமிழ் மக்­க­ளின் மன­தில் உள்ள கருத்­துக்­க­ளையே மனோ­க­ணே­சன் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். இது விட­யத்­தில் அவ­ருக்கு ஒரு சல்­யூட். தமிழ்க்­கூட்­ட­மைப்­பின் பிர­தி­நி­தி­கள் தமி­ழர்­க­ளுக்­கான பிர­தி­நி­தி­கள், தமி­ழர்­க­ளால் அனுப்பி வைக்­கப்­பட்­ட­வர்­கள்.

அவர்­கள் வெறுங்­கை­யு­டன் வடக்­குக்­குத் திரும்­பி­னால் தெற்கை, வடக்­கும் மன்­னிக்­காது, வர­லா­றும் மன்­னிக்­காது. கூட்­மைப்­பும் தன் நிலைப்­பாட்­டில் விடாப்­பி­டி­யாக உள்­ளது. மூன்று அம்­சக் கோரிக்­கை­கள் முழு­மை­பெ­ற­ வில்­லை­யேல் கட­வுள்­தான் இலங்­கைத் தீவைக் காப்­பாற்ற வேண்­டும்.

http://newuthayan.com/story/43429.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.