Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

Featured Replies

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலி சித்திரம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

bala

 

கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.

இது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக,  'லைன்ஸ் மீடியா 'என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட்டூனிஸ்ட் பாலா , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார். அதை லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தக் கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். மாறுவேடத்தில் வந்த 4 காவலர்கள் சென்னை கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டில் இருந்து அவரை கைது செய்து தரதரவென இழுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எங்கு கொண்டுச் செல்லப்படுகிறார் என்ற விவரம் தெரியவில்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/106888-cartoonist-bala-arrested.html

  • தொடங்கியவர்

தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பாலா கைது!

 
bala.png
 
தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் காட்டூனிஸ்ட் பாலா தமிழகத்தின் திருநெல்வேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
குறித்த ஊடகவியலாளர் திருநெல்வேலி சென்றபோது,  திருநெல்வேலி பொலிசார் அவரை கைதுசெய்து இழுத்துச் சென்றுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த ஊடவியலாளர்கள் கூறுகின்றனர்.
 
தமிழக முதல்வர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மற்றும்  திருநெல்வேலி பொலிஸ் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் மற்றும் அண்மையில் கந்துவெட்டி கடன் தொல்லையால் இடம்பெற்ற தீக்குளிப்பு தொடர்பான கேலிச் சித்திரம் தொடர்பிலேயே இவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
காட்டூனிஸ்ட் பாலா தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்றில் பணிபுரிவதுடன் சில ஆங்கில ஊடகங்களிலும் கேலிச்சித்திரங்களை வரைந்துள்ளார்.
 
2009இல் இடம்பெற்ற இனப்படுகொலைப் போர் தொடர்பிலும் இந்திய தமிழக அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கை அரசின் போர் நடவடிக்கை தொடர்பிலும் பிரசித்தமான கேலிச் சித்திரங்களை வரைந்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/48473

  • தொடங்கியவர்

ஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்தது – யாழ்.ஊடக அமையம்

DN2y13XX0AAZo7n.jpg
 

ஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை. என யாழ்.ஊடக அமையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பிரபல கருத்தோவியரான பாலா அண்மையில் வரைந்த கருத்தோவியத்திற்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நெல்லை பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. குறித்த அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

கேலிச்சித்திரமொன்றிற்காக ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான பாலா தமிழகத்தினில் கைது செய்யப்பட்டுள்ளமையினை இலங்கையின் வடக்கின் பலம் வாய்ந்த ஊடக அமைப்பான யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழகத்தின் நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு தீயினில் கருகி பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில்,காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின் அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுயாதீன கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி கார்ட்டூன் வரைந்து வருகிறார்.
இலங்கையின் வடகிழக்கு தமிழர் தாயகத்தினில் தென்னிலங்கை அரசுகளாலும் அதன் துணைப்படைகளாலும் ,அரச முப்படைகளாலும் கொல்லப்பட்டும் காணாமலும் போயுள்ள 41 இற்கும் அதிகமான தமிழ் ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையம் தொடர்ந்து போராடிவருகின்றது.

இந்நிலையினில் இலங்கை அரசிற்கு குறையாது இந்திய அரசின் கண்முன்னால் ஊடக கொலைகளும் கைதுகளும் அரங்கேறத்தொடங்கியுள்ளது. கௌரி லங்கேஸ்,தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என இந்தியா முழுவதும் அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஊடக சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றதொரு அமைப்பு என்ற வகையினில் இந்தியக்கொலைகளையும் கைதுகளையும் யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.எமது தொப்புள் கொடி உறவுகளது உரிமைக்குரலிற்கு கைகொடுக்கின்றது.அதிலும் பாலாவின் தூரிகைகள் ஈழத்திற்காக பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை.

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் மீதும், மனித உரிமை மீதும், ஊடக சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கைக்கொண்டுள்ள தேசமாக இந்திய தேசம் உருவாக யாழ்.ஊடக அமையத்தின் கோரிக்கைகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் ஊடாக இந்திய மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் யாழ்.ஊடக அமையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/archives/48512

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • தொடங்கியவர்

கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை நீதிமன்றம்!

கந்துவட்டிக் கொடுமைகுறித்து கேலிச்சித்திரம் வரைந்ததால் கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு, நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

Bala_11201.jpg

 
 


நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, கந்துவட்டிக் கொடுமையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்து இறந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா மீது, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 501 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட குற்றவியல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், கார்ட்டூனிஸ்ட் பாலாவை நேற்று சென்னையில் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டு நெல்லை கொண்டுசெல்லப்பட்ட பாலா, நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ், கார்ட்டூனிஸ்ட் பாலாவை இருநபர் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், வரும் 9-ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகவும் பாலாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.     

http://www.vikatan.com/news/tamilnadu/106925-cartoonist-bala-released-on-bail.html

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிடந்த சங்கை ஊதிகெடுத்த கதை ஏதோ ஒருவேகத்தில் கைது பண்ணியாச்சு ஊர் பேர் தெரியாமல் இருந்தவரை உலகம் முழுக்க தெரியவைச்ச்சிட்டான்கள் எந்த கார்ட்டூன் பார்த்து பயந்தனரோ அதே கார்ட்டூன் உலகம் முழுக்க ரெக்கை கட்டி பறக்குது . அந்தாள் 13 வருஷம் குமுதத்தில் கார்ட்டூன் போட்டு கூட பிரபலமாகவில்லை ஏன் நம்மாட்களுக்கே ஈழத்துக்கு கார்ட்டூன் போட்டவர் என்று இந்த கைதுக்கு பின்புதான் தெரியும் .

எடப்பாடி அரசு அனுபவமில்லா அரசு கைது பண்ணிய வேகத்தில் இன்று ஆளை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டது சிங்கம் சென்னையை நோக்கி வருகிறது என்று ட்விட்டரில் முழங்கு கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவரை கடந்த இருவருடங்களாகவே முகநூல் வாயிலாக அறிந்திருக்கிறேன். வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5.11.2017 at 10:53 AM, நவீனன் said:

தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பாலா கைது!

 
bala.png
 
தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் காட்டூனிஸ்ட் பாலா தமிழகத்தின் திருநெல்வேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
குறித்த ஊடகவியலாளர் திருநெல்வேலி சென்றபோது,  திருநெல்வேலி பொலிசார் அவரை கைதுசெய்து இழுத்துச் சென்றுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த ஊடவியலாளர்கள் கூறுகின்றனர்.
 
தமிழக முதல்வர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மற்றும்  திருநெல்வேலி பொலிஸ் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் மற்றும் அண்மையில் கந்துவெட்டி கடன் தொல்லையால் இடம்பெற்ற தீக்குளிப்பு தொடர்பான கேலிச் சித்திரம் தொடர்பிலேயே இவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
காட்டூனிஸ்ட் பாலா தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்றில் பணிபுரிவதுடன் சில ஆங்கில ஊடகங்களிலும் கேலிச்சித்திரங்களை வரைந்துள்ளார்.
 
2009இல் இடம்பெற்ற இனப்படுகொலைப் போர் தொடர்பிலும் இந்திய தமிழக அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கை அரசின் போர் நடவடிக்கை தொடர்பிலும் பிரசித்தமான கேலிச் சித்திரங்களை வரைந்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/48473

டாய்! மான மரியாதை அசிங்கங்களா! 
உங்க தலைவியை சிங்களவன் இவ்வளவு அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தும் போது எங்கடா போயிருந்தீங்க???tw_angry:

Bildergebnis für jayalalitha singala cartoon

முலைப்பால் உமிழ்ந்து கொண்டிருந்தீர்களா? :cool:

  • தொடங்கியவர்

இதைவிட நாகரிகமாக எனது கருத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்க முடியாது: கார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி

balajpg

கார்ட்டூனிஸ்ட் பாலா | படம் உதவி: அவரது முகநூல் பக்கம்.

கருத்துச் சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியான கார்ட்டூனிஸ்ட் பாலா, இதைவிட நாகரிமாக தனது கருத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என தனது நியாயத்தை முன்வைத்திருக்கிறார்.

கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை மையப்படுத்தி தமிழக முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அவரிடம் கைது நடவடிக்கை, கருத்து சுதந்திரம் என பல்வேறு கேள்விகளை 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் முன்வைத்தோம்.

அப்படி ஒரு கார்ட்டூனை வரையக் காரணம் என்ன?

இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி மாண்டு போகின்றனர். பெற்றோரே அந்தக் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்திருக்கின்றனர். எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அந்த வகையில் அந்த பிஞ்சுகள் தீயில் கருகிய சம்பவம் என்னை மனதளவில் வெகுவாக பாதித்தது. தீக்குளித்த இசக்கிமுத்துவும் அவரது மனைவியும் ஊரெல்லாம் கடன் வாங்கியிருக்கின்றனர் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது. எத்தகைய கதையை போலீஸ் கூறினாலும் குழந்தைகளுக்கும் தீவைக்க பெற்றோர் துணிந்தனர் என்றால் இனி வாழவே முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது புரிதல். 6 முறை ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாலேயே அந்த தீக்குளிப்பு சம்பவம் நடந்தது எனத் தெரிந்தபோது எனது கோபம் இன்னமும் அதிகரித்தது. அந்தக் குழந்தைகள் தீயில் எரிந்து சரிந்தது அதிகாரிகளின் அலட்சியத்தின், நிர்வாக சீர்கேட்டின் சாட்சி. அதை உருவகப்படுத்தவே அந்த கார்ட்டூனை நான் வரைந்தேன். அன்றைய தினம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் கோபத்தை, ஆற்றாமையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நான் எனது கார்ட்டூன் மூலம் எனது கருத்தைப் பதிவு செய்தேன்.

ஆனாலும், சற்றே நாகரிகமாக அந்த கார்ட்டூனை வரைந்திருக்கலாம் என பலரும் கருத்து கூறுகின்றனரே?

இதைவிட நாகரிகமாக எனது கருத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்க முடியாது. இதைவிட சுதந்திரமாக வெளிநாடுகளில் கார்ட்டூன் வரைய முடியும். ஏன் நம் நாட்டிலேயே நெருக்கடி நிலை இருந்தபோது சில ஆழமான சுதந்திரமான கேலிச்சித்திரங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்திருக்கின்றன. இப்போது நெருக்கடி நிலை ஏதும் அமலில் இல்லை. ஆனாலும் அடக்குமுறை இருக்கிறது. நிர்வாக சீர்கேட்டை உருவகப்படுத்தியே நான் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும்படி அந்த கார்ட்டூனை வரைந்தேன். எனவே, இதைவிட நாகரிகமாக எனது கருத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்க முடியாது. அப்படி ஏதாவது நாகரிகம் இருந்தால் எனக்கு யாரேனும் கற்றுத் தரட்டும். நானும் கற்றுக்கொள்கிறேன்.

கருத்து சுதந்திரத்துக்கு எல்லையே இல்லையா?

நிச்சயமாக எல்லை இருக்கிறது. தனிநபரை விமர்சிக்கும் ரீதியாக எனது கார்ட்டூன்கள் இருக்குமானால் அது கருத்து சுதந்திரம் அல்ல. அதேவேளையில் ஒரு பிரச்சினை சார்ந்து தனிநபரை நான் கார்ட்டூனாக வரைந்தால் அது அத்துமீறல் அல்ல.

இதே நெல்லை ஆட்சியரை நான் பலமுறை பாராட்டி கருத்துச் சித்திரம் வரைந்திருக்கிறேன். அவரது 'அன்புசுவர்' திட்டத்தைப் பாராட்டி கார்ட்டூன் வரைந்திருக்கிறேன். அதற்காக அவர் முகநூலில் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால், இங்கே இப்போது இசக்கிமுத்து குடும்பமே தீக்குளித்து பலியானதன் பின்னணியில் நிர்வாக சீர்கேடு இருக்கிறது. அந்த சீர்கேட்டில் ஆட்சியரின் பங்கும் இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த கார்ட்டூனை வரைந்தேன். ஒருவேளை, அந்த அரை நிர்வாண கார்ட்டூன் ஆட்சியரை வேதனைப்படுத்தியிருந்தால் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்பேன். ஆனால், அந்த கார்ட்டூனை வரைந்ததற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

ஞாயிறன்று உங்களை போலீஸார் கைது செய்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

எனக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாத சூழலே இருந்தது. ஒரு கார்ட்டூனுக்காக நெல்லையில் இருந்து சென்னைவரை வந்து கைது செய்வார்களானால் ஜனநாயகம் என்னவாயிற்று என்றே தோன்றியது. என் வீட்டுக்குள் திடும் என போலீஸார் புகுந்தனர். நிலைமையை உணரும் முன்னரே என்னை கைது செய்வதாகக் கூறினர். எனது மனைவி உடல்நிலை சரியில்லை என்று எடுத்துக்கூறியும் எதையும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. எதிர்வீட்டிலிருந்த எனது பத்திரிகை நண்பர் அருள் எழிலன் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கத் தயாராக இல்லை. மாற்று உடை எடுப்பதற்குக்கூட அனுமதிக்காமல் வேனில் ஏற்றினர். எனது செல்போன், லேப்டாப் ஆகியனவற்றைப் பறிமுதல் செய்துகொண்டனர். வேனில் ஏற்றியதும் ஒரு குரல் ஒலித்தது. "உங்களை சிறையில் அடைப்பதே எங்கள் நோக்கம். நீங்கள் வரைந்த கார்ட்டூனுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். நாங்கள் உங்களை அடிக்க மாட்டோம்" என்றது அந்தக் குரல். இறுக்கமான மனநிலையுடன் வேனில் பயணித்தேன்.

உங்களுக்காக குரல் கொடுத்த சக பத்திரிகையாளர்கள், சமூகப் போராளிகளுக்கு நீங்கள் சொல்ல முயல்வது என்ன?

இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் எனது கார்ட்டூனை பெரிய பேனராக வைத்து எனக்காக குரல் கொடுத்த தோழமைகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைக் கைது செய்ததன் மூலம் எனது ஒரு கார்ட்டூனை ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி நிர்வாக சீர்கேட்டை அரசே அம்பலப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்வேன். இந்தக் கைதுக்கு பின்னணி முழுக்க முழுக்க இந்த ஒரு கார்ட்டூன் மட்டுமல்ல. அண்மைக்காலமாகவே நான் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கார்ட்டூன் வரைந்துவருகிறேன். அதற்குப் பழிவாங்குவதற்காகவே இந்த கைது நடவடிக்கை. நெல்லை மாவட்ட ஆட்சியரை பயன்படுத்திக் கொண்டனர். அவ்வளவே. எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் என் சமூக அக்கறையை, நியாயமான கோபத்தை, ஆவேசத்தை தொடர்ந்து கார்ட்டூன்களாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பேன்.

ஊடகங்கள் அரசுடன் இணைந்து செயல்படவேண்டும் என முதல்வரும் ஊடகங்கள் மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படவேண்டும் என பிரதமர் மோடியும் இன்றைய தினத்தந்தி பவள விழாவில் பேசியிருக்கின்றனரே?

ஏற்கெனவே ஊடகங்கள் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் சூழல்தான் நிலவுகிறது இந்த நிலையில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார் என்றால் எங்களை எதிர்க்காதீர்கள்; எதிர்த்து எழுதாதீர்கள், கருத்துச் சித்திரம் வெளியிடாதீர் என்றே அதற்கு அர்த்தம். தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது. ஜெயலலிதா இல்லாத நிலையில் ஓபிஎஸ்.ஸும், ஈபிஎஸ்.ஸும் பாஜகவும் இங்கு ஒரு பக்கபலமாக இருக்கின்றனர். இந்த சூழலில் பாஜக குளிர்காய்கிறது.

இவ்வாறு பாலா தனது எதிர்கால பயணத்தின் உறுதியுடன் நம்மிடம் பேசிமுடித்தார்.

நாம் பாலாவிடம் பேசிமுடிக்கும் தருவாயில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆவேசமாக சில கருத்துகளைப் பகிர்ந்தார்.

இப்படி ஓர் அத்துமீறலை நான் பார்த்ததே இல்லை: வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

அவர் பேசுகையில், ''பாலா கைது பின்னணியில் அதிகார துஷ்பிரயோகம் இருக்கிறது. பாலா மீது ஐடி சட்டம் 67, ஐபிசி 501 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 501 என்பது அவதூறு வழக்கு. இது போலீஸார் நேரடியாக புலன் கொள்ளத்தக்கது அல்ல. இத்தகைய வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அதேபோல் ஐடி சட்டம் 67, கடந்த 2008-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி இதன் கீழும் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியாது. இத்தகைய நிலையில் ஐடி சட்டம் 67, ஐபிசி 501 ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது அதிகார துஷ்பிரயேகத்தையே காட்டுகிறது.

இரண்டாவதாக, ஒருவரை கைது செய்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. அதனை பின்பற்றியே கைது நடவடிக்கை அமைய வேண்டும். கைது செய்யப்படும் நபரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அது குறித்து உறவினரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து கையொப்பம் பெற வேண்டும். ஆனால், பாலாவின் லேப்டாப், மொபைல் போன் இன்னமும் போலீஸாரிடம்தான் இருக்கின்றன. அதில்தான் வங்கி எண் போன்ற பல முக்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஒருவேளை வங்கிக் கணக்கில் ஏதாவது மோசடி என எது நடந்தாலும் அதற்கு போலீஸார்தான் பொறுப்பேற்க வேண்டும்.

மூன்றாவதாக, இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம். நீதிபதி ஜாமீன் வழங்கிய பின்னர்கூட பாலாவை விடுவிக்க போலீஸுக்கு மனமில்லை. எப்படியாவது அவரை மீண்டும் வேறு வலுவான சட்டப்பிரிவில் கைது செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். நாங்கள் இல்லாவிட்டால் பாலாவை மீண்டும் வேனில் ஏற்றிச் சென்றிருப்பார்கள். நீதிமன்ற வளாகத்தில் நடந்த தள்ளுமுள்ளை கவனித்த நீதிபதி குறுக்கிட்டு போலீஸாரை எச்சரித்ததால் பாலாவை நாங்கள் மீட்க முடிந்தது. எனது வழக்கறிஞர் பணியில் இப்படி ஓர் அத்துமீறலை நான் பார்த்ததே இல்லை’’ என்றார் வாஞ்சிநாதன்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19993220.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.