Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

Featured Replies

கருணாநிதியைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

 

சென்னை வரும் பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க இருக்கிறார். 

WhatsApp_Image_2017-11-06_at_9.08.43_AM_

 

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில், இன்று நடைபெறும் தினந்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக, தனி விமானம் மூலம் சென்னை வரும் மோடி, தினந்தந்தி நாளிதழின் பவளவிழா மலரை வெளியிட இருக்கிறார். மேலும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி.சோமநாதனின் மகள் திருமண விழாவில் பங்கேற்கிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Muralidhar_rao_09461.jpg

 சென்னை வரும் பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரிக்க இருக்கிறார். இந்தச் சந்திப்பை பா.ஜ.க தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் ட்விட்டரில் உறுதிசெய்துள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில், நண்பகல் 12.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்குப் மேல் கருணாநிதி ஓய்வெடுத்துவருகிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/106918-pm-modi-to-meet-karunanidhi-in-chennai.html

  • தொடங்கியவர்

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

http://www.vikatan.com/latest-news

திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி

 

Dkn_Daily_News_2017_8399730920792.jpg

சென்னை: சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=348932

  • தொடங்கியவர்

கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி

 

Dkn_Daily_News_2017__1361352801323.jpg

சென்னை: சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிவிலால் புரோகித்தும் சென்றார். மேலும் மத்திய  பாதுகாப்பு படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். கோபாலபுரம் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

மேலும் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மோடியை வரவேற்றனர். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி சுமார் 15 நிமிடம் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=348935

  • தொடங்கியவர்

சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு கருணாநிதி கொடுத்த பரிசு!

 
 

modi-_karunanidhi_meet_12307.jpg

 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.

 

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று நடந்த 'தினத்தந்தி பவளவிழா'வில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். இதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அவருடன் ஆளுநர் பன்வாரிலார் புரோஹித்தும் வந்தார். பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

modi-_stalin_1_12284.jpg

நண்பகல் 12.10 மணிக்கு கோபாலபுரம் வந்த பிரதமர் மோடியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். எம்.பி., கனிமொழி பிரதமருக்கு சால்வை கொடுத்து வரவேற்றார். அப்போது, தி.மு.க முதன்மை நிலைச் செயலாளர் துரைமுருகன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், பிரதமரை கருணாநிதியிடம்  அழைத்துச் சென்றார் மு.க.ஸ்டாலின். அப்போது, கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு பிரதமர் நலம் விசாரித்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்த பின்னர், பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் வழியனுப்பிவைத்தார். அப்போது, காரில் ஏறிய பிரதமர் மோடி, அங்கிருந்தவர்களைப் பார்த்து கைகாட்டினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

modi-_stalin_1a_12524.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி திடீரெனச் சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/106936-karunanidhis-gift-for-narendra-modi.html

  • தொடங்கியவர்

'ஓய்வெடுக்க என் வீட்டுக்கு வாருங்கள்': கருணாநிதிக்கு அழைப்புவிடுத்த மோடி- கனிமொழி பேட்டி

 

 
81577784-4362-420f-846c-a4ec1e2f3f0f

கோபாலபுரம் இல்லம் வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை ஓய்வெடுக்க தனது இல்லத்துக்கு அழைத்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார், அவரை மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி சால்வை அணிவித்து வரவேற்றனர்.

 

கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த பிரதமரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவரிடம் நலம் விசாரித்தார்.

இது குறித்து பேட்டி அளித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி , "பிரதமரும், திமுக தலைவரும் சந்தித்தது ஒரு நாகரிகமான நிகழ்வு, இதில் அரசியல் எதுவும் இல்லை. திமுக தலைவரை நலம் விசாரித்த பிரதமர், ஓய்வெடுக்க தனது டெல்லி இல்லத்துக்கு வருமாறு அழைத்தார்" எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19991766.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

உந்த குசும்பு தானே கூடாது ....அவர் வீட்டில எத்தைன வருசமா ஒய்வு எடுக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

426623.jpg

 

சாதனை படைக்க வாழ்த்துக்கள் ! நம்மாள வாழ்த்தத்தான் மிடியும் வேற என்ன பண்ண முடியும் ரெல் மீ ! அடபோங்கப்பா ..:cool:

  • தொடங்கியவர்

தொண்டர்களுக்கு 'கை அசைத்து' காட்டிய கருணாநிதி !

தொடர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் வெளிவராத கலைஞர், இப்போது தனது வீட்டிற்கு வெளியே தொண்டர்களுக்கு தனது கையை அசைத்து அசத்தினார் கருணாநிதி.

  • தொடங்கியவர்

கருணாநிதி - மோடி சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்கு?!

 
 

மோடி

தினத்தந்தி பவளவிழாவுக்கு வந்த மோடி, உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வில் இருக்கிற தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள், சரச்சைக்குரிய பிரபலங்களுடனான சந்திப்புகளை மிகக் கவனமாகத் தவிர்ப்பவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்டவர் இன்னும் சில தினங்களில் இந்திய அளவில் பரபரப்பை  ஏற்படுத்தப்போகும் ஒரு வழக்குடன் தொடர்புடைய கட்சியின் தலைவரைச் சந்தித்துவிட்டுச் சென்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. 

 

தமிழகத்தில், ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க இரு அணிகளாக பிளவுபட்டது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைத்தால் ஒன்றுசேர்வது பற்றி பரிசீலிப்பதாகச் சொன்ன ஓ.பி.எஸ் அணி அவ்வாறே கமிஷன் அமைக்கப்பட்டதைத்தொடர்ந்து தனது அணியுடன் அ.தி.மு.க-வில் ஒன்றிணைந்தார். 

தமிழக அரசியிலில், கடந்த10 மாதங்களாக நிகழ்ந்துவரும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பி.ஜே.பி இருப்பதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. மத்திய அரசுடன் அ.தி.மு.க அமைச்சர்களின் அணுகுமுறையும் ஜெயலலிதாவுக்குக் காட்டிய அதே பவ்யத்தை அவர்கள், மோடிக்கும் காட்டிவருவது இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன் ''பாராளுமன்றம் மற்றும் தமிழக சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்'' என பி.ஜே.பி எம்.பி இல.கணேசன் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்படி ''தமிழகத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுடன் கூட்டணி கண்டு கணிசமான இடங்களைத் தமிழக சட்டசபையில் பெறுவது பி.ஜே.பி-யின் எதிர்காலக் கணக்கு'' என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

கருணாநிதி

இந்நிலையில், இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவரை ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் வரவேற்றனர். நாடே பரபரப்பாக எதிர்நோக்கியிருக்கும் ஒரு வழக்குடன் தொடர்புடையவர், பிதரமரைச் சந்தித்து சால்வை வழங்குவது நல்ல மரபல்ல. ''தனிப்பட்ட சந்திப்பு என்பதால், பிரதமர் வட்டாரத்தினால் அவற்றை தவிர்க்கமுடியவில்லை'' என்கிறார்கள். ஆனால், ''தி.மு.க தலைவருடனான இந்தச் சந்திப்பு பல அரசியல் வியூகங்களுக்கும் அடித்தளம் வகுத்திருக்கிறது'' என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். 

எஸ்.வி சேகர்இதுகுறித்து பி.ஜே.பி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி சேகரிடம் பேசினோம். “பிரதமர்  தி.மு.க தலைவரைச் சந்தித்ததில், எந்த அரசியல் நோக்கமுமில்லை. பொதுவாக வயதில் பெரியவர்களைக் கண்டால் மதிக்கும் குணம் கொண்டவர் மோடி. பொதுமேடையிலேயே  பலமுறை, வயதில் பெரியவர்களின் காலில் அவர் விழுந்து வணங்கியதுண்டு. அவரது அரசியல் அத்தனை பண்பானது. வட இந்தியாவில், இது சர்வசாதாரண விஷயம்தான். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவர், பழுத்த அரசியல்வாதி, உடல்நிலை குன்றியிருக்கும் நிலையில், அவரைச் சந்திக்க விரும்பி இது நிகழ்ந்தது. மற்றபடி வேறு யாரையும் அவர் சந்திக்கச் செல்லவில்லை. தனிப்பட்ட முறையிலான  சந்திப்பில், யார் வருவார் யார் போவார்கள் என்பதையெல்லாம் ஒரு பிரதமர் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. 

அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த கால அரசியலில், கருணாநிதியின் பணிகளை அறிந்து அவர் மீது பிரதமருக்குப் பெருமதிப்பு உண்டு. தனிப்பட்ட சந்தர்ப்பங்களில் நானே அதை அறிந்திருக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான தி.மு.க-வின் ஒருசில தலைவர்கள் தவிர, தி.மு.க. மீதோ அதன் தலைமை மீதோ பிரதமருக்கு எந்த வெறுப்பும் கிடையாது. 

ஸ்டாலின் - மோடிஅப்படிப்பார்த்தால், பிரதமர் இன்று கலந்துகொண்ட மேடையில், எங்களின் பரம வைரியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எங்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிற பல தலைவர்களும் இருந்தனர். அவர்களுக்கும் மோடி வணக்கம் செய்தார். இது பொதுவான அரசியல் பண்பு. தி.மு.க-விலாவது ஒரு சில தலைவர்கள் பெயரில்தான் ஊழல் வழக்கு உள்ளது. அ.தி.மு.க-வில், அதன் முந்தைய தலைமையே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்தானே.  இன்றைய அமைச்சர்கள் பெயரிலும் அத்தனை வழக்குகள். அவர்களையும்தான் மரியாதை நிமித்தமாக பிரதமர் வணங்கினார். இது ஒரு பொதுவான அரசியல் பண்பு.

தி.மு.க-வைப் பொறுத்தவரை அதன் தலைவர்கள் சிலர் பேரில்தான் வழக்கு உள்ளது. ஆனால், அதன் தலைமை மேல் பெரிய அளவில் மக்களுக்கு அதிருப்தி இல்லை. ஊழல் வழக்குகளில் உள்ள தி.மு.க-வின் சில தலைவர்களும் எதிர்காலத்தில் விடுவிக்கப்பட்டால், அந்தக் கட்சியுடன் பி.ஜே.பி கூட்டணி கொள்வதில் எந்தத் தடையும் கிடையாது. கடந்த காலத்தில், இந்த இரு கட்சிகளுமே ஒன்றாகக் கூட்டணி கண்டவைதானே...!'' எனப் பேசி முடித்தார். 

பி.ஜே.பி-யின் டெல்லி மேலிடத்துடன் தொடர்புடைய தமிழகப் பிரமுகர் ஒருவருடன் இதுகுறித்துப் பேசினோம். “வட இந்தியாவில் கொள்கை அடிப்படையில், தலைவர்கள் ஒருவருக்கொருவர் மேடையில் மோதிக்கொண்டாலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்புகளில் நட்பு பாராட்டுவார்கள். வட இந்தியாவில், இது சகஜமான அரசியல் அணுகுமுறை. அதனால் மோடி - கருணாநிதி சந்திப்பில்,  துளியும் அரசியல்  இல்லை. இந்தச் சந்திப்பும் திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல. சில வாரங்களுக்கு முன் கருணாநிதியின் உடல்நிலை, மோசமாகிவிட்டது. அப்போது தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தேசியக் கட்சிகளுக்கும் தி.மு.க தலைமை இதுகுறித்து தகவல் தெரிவித்தது. அப்போதே பல தலைவர்கள் கோபாலபுரம் வந்து கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றார்கள். அந்தவகையில், பிரதமர் மோடிக்கும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 'தினத்தந்தி பவளவிழா'வுக்கு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மோடியின் தமிழகப் பயணத்திட்டம் அறிந்த தி.மு.க தலைமை 'இந்தப் பயணத்தின்போது கருணாநிதியை நலம் விசாரிக்கவேண்டும்' எனச் சென்னையிலிருந்து கோரிக்கை வைத்தது. 

இதன்படி நேற்றிரவுதான் கருணாநிதியைச் சந்திக்கும் கோரிக்கைக்கு மோடி தலையசைத்தார். உடனே இந்தத் தகவல், தி.மு.க தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது பிரதமருக்கு மதிய உணவை தங்கள் வீட்டில் ஏற்பாடு செய்வதாக தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதைக் கறாராக மறுத்துவிட்டார்கள். 'அதிகப்பட்சம் 5 லிருந்து 10 நிமிடங்களுக்கு மேல் பிரதமர் அங்கிருக்கமாட்டார். சால்வை, பரிசுகள் அளித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது' என்றும் கண்டிஷன் போட்டார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.  மேலும், 'தேவையற்ற விளம்பரங்கள் செய்து கூட்டத்தைக் கூட்டக் கூடாது' எனவும் தகவல் சொல்லப்பட்டது.  'சர்ச்சையோ சங்கடம் தரும் நிகழ்வோ அங்கு நடக்கக் கூடாது' என பிரதமர் தரப்பிலிருந்து 'நாசூக்காக'த் தெரிவிக்கப்பட்டது. அதனால் சில விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டது தி.மு.க. அதன்பிறகே இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்தச் சந்திப்பில், கருணாநிதிக்குப் புதிய உடைகள் அணிவித்து தயார் நிலையில் அவரது வழக்கமான அறையில் காத்திருக்கவைத்தார்கள். கோபாலபுரம் வீட்டுக்கு வருகைதந்த மோடி, கருணாநிதியின் அருகில் வந்ததும் அவரை கருணாநிதிக்கு அறிமுகம் செய்தார் ஸ்டாலின். உற்றுப்பார்த்த கருணாநிதியிடம் ''ஹவ் ஆர் யு...?'' என ஆங்கிலத்திலும் பின்னர் இந்தியிலும் சில வார்த்தைகளைப் பேசினார் மோடி. கருணாநிதி பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவருக்குப் பதிலளிக்க முனைந்தார். அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் மோடி. தனிப்பட்ட முறையில், ஒரு தலைவரை நலம் விசாரிப்பதற்காக நிகழ்ந்த இந்தச் சந்திப்பில், வழக்கைக் காரணம் காட்டி அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை ஒதுக்கும் அளவு அரசியல் நாகரிகம் தெரியாதவர் அல்ல மோடி” என்றார் அவர்.

மோடி

இன்னொரு தரப்பு, “தேர்தல்கமிஷனில் தங்களின் தேர்தல் சின்னத்திற்கு உரிமைக்கோரி அதிமுகவின் இரு அணிகளும் மல்லுக்கட்டி வரும் நிலையில், ஆவணங்களின்படி டி.டி.வி தினகரன் அணிக்கே தற்போது வாய்ப்பு சாதகமாக உள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் சென்றதாகச் சொல்லப்படுகிறது. ஆளும்கட்சியானாலும் ஓர் எல்லையைத்தாண்டி தேர்தல் கமிஷனை அதிகாரம் செய்வது இயலாத காரியம் என்பதால் மத்திய அரசுக்கு இது சற்று கிலி கொடுத்துள்ளது. சின்னம் தினகரன் அணிக்குச் சென்றால் தானாகக் கட்சியின் அதிகாரங்களும் தொண்டர்களும் தினகரன் அணிக்குச் செல்வார்கள். அப்போது அதிமுகவின் எடப்பாடி அணி பலமிழக்க வாய்ப்புண்டு. அப்போது அதிமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்து தமிழகத்தில் காலுான்ற நினைத்த தங்கள் எண்ணமும் ஈடேறாது என்பதோடு கடந்த காலச் சம்பவங்களால் தினகரன் தலைமையிலான அதிமுகவுடன் சமரசம் செய்துகொள்ளவும் முடியாது என்பது பா.ஜ.க மேலிடத்திற்கு நன்கு தெரியும். எனவேதான் தி.மு.க வுடன் ஓர் இணக்கத்தை இப்போதே கடைபிடித்தால் அது தேர்தல் நேரத்தில் பயன்படும் எனக் கணக்குபோட்டு இந்தச் சந்திப்பைப் பயன்படுத்திக்கொண்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பா.ஜ.கவின் இந்த மூவ் அறியவந்ததால்தான் ஸ்டாலின் தன் எழுச்சிப்பயணத்தை மழையைக்காரணம் காட்டி ரத்து செய்தார்” என்கிறார்கள்.

தமிழக அரசியலில் இனி என்னவெல்லாம் நடக்குமோ?!

http://www.vikatan.com/news/tamilnadu/106986-political-reasons-behind-modis-gopalapuram-visit.html

  • தொடங்கியவர்

கருணாநிதியுடன் பிரதமர் மோதி: ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு (புகைப்படத் தொகுப்பு)

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோதி அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி

திங்கட்கிழமை பிற்பகல் 12 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள மு. கருணாநிதியின் இல்லத்திற்கு நரேந்திர மோதி வந்தார்.

கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி

நரேந்திர மோதியை தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

 

கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி

நரேந்திர மோதியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்த நரேந்திர மோதி, அவரது கரங்களைப் பிடித்தபடி நலம் விசாரித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த நரேந்திர மோதி, அவரது கரங்களைப் பிடித்தபடி நலம் விசாரித்தார்.

கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி

பிரமதர் மோதி வருகையை ஒட்டி ஏராளமான பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்திருந்தனர்.

கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி

மோதி புறப்பட்டுச் சென்ற பிறகு, கீழே வந்த கருணாநிதி, கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இது அங்கிருந்த தொண்டர்களுக்கு உற்சாகமளித்தது

http://www.bbc.com/tamil/india-41884113

  • தொடங்கியவர்

மோடி வீசிய, 'கூக்ளி' பந்து: குழப்பத்தில் தமிழக கட்சிகள்

 

 

சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, யாரும் எதிர்பாராத வகையில், தி.மு.க., தலைவர், கருணாநிதியை சந்தித்துள்ளார்.



இந்த அரசியல் சாதுரியம், உள்ளூர், பா.ஜ., உள்பட அனைத்து கட்சியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழகத்தில், பா.ஜ.,வின், 'பினாமி' போல், அ.தி.மு.க., செயல்படுவதாக, தி.மு.க., தொடர்ந்து குறை கூறி வருகிறது.இதனால், தி.மு.க., - பா.ஜ., இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பல பிரச்னைகளில், இரு கட்சிகளுக்கும் ஆகாது. 'முரசொலி' பவள விழாவுக்கு, எல்லா கட்சிகளையும் அழைத்த, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், பா.ஜ.,வை அழைக்கவில்லை.

கலக்கம்

இந்நிலையில், தமிழக, பா.ஜ.,வினரே எதிர்பாராத வகையில், தி.மு.க., தலைவர், கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இது, கட்சி பேதமின்றி, தமிழக அரசியல்வாதிகளை குழப்பியுள்ளது. அ.தி.மு.க.,வினருக்கு மட்டும், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.,வினரோ, இதற்காக மகிழ்வதா, வேண்டாமா என, குழம்பியுள்ளனர்.

'2 ஜி ஸ்பெக்டரம்' வழக்கில், தீர்ப்பு தேதி நெருங்கும் நிலையில், கோபாலபுரத்திற்கு மோடி சென்றுள்ளார். அதனால், தி.மு,க.,விற்கு எதிராக, முன்னர் போல், காட்டமான கருத்துக்களை கூறலாமா; வேண்டாமா என்ற எண்ணம், பா.ஜ.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தி.மு.க., தலைமையில், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைக்க முயன்று வரும், கம்யூனிஸ்ட்டுகள் திட்டத்தை, மோடியின் வருகை, ஆட்டம் காண செய்துள்ளது.
 

 

லெக் ஸ்பின்



பிரதமர் மோடி, தன் சாதுரியத்தால், தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே, குழப்பத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார். கிரிக்கெட்டில், 'லெக் ஸ்பின்' வீசும் சுழல் பந்து வீச்சாளர், பேட்ஸ்மேனை விட்டு விலகி, இடதுபுறமாக திரும்பும் பந்தை வீசுவது வழக்கம். அதே நேரத்தில், திடீரென, பேட்ஸ்மேனை நோக்கிச் செல்லும், 'கூக்ளி' பந்தை வீசி, நிலை குலையவும் செய்வார். அதுபோன்ற கூக்ளி பந்தை, மோடி வீசியுள்ளார். அது, யாரை பதம் பார்க்கப் போகிறது என்பது, போகப் போக தெரியும். நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1890968

  • தொடங்கியவர்

கருணாநிதியுடன் மோடி சந்திப்பு! சுப்ரமணியன் சுவாமி சொல்வது என்ன?

6_11482.jpg

Chennai: 

தி.மு.க தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தை, பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

சென்னையில் நேற்று நடந்த தினத்தந்தி பவளவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கோபாலபுரம் சென்ற பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார். அப்போது, உடல்நிலைகுறித்து மோடி கேட்டறிந்தார்.  கருணாநிதி, முரசொலி பவளவிழா மலரை மோடிக்குப் பரிசாகக் கொடுத்தார். இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்புகுறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், மயிலாப்பூரில் இருக்கும் அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படிதான் கருணாநிதியை மோடி சந்தித்தார். கருணாநிதியை மோடி சந்தித்தாலும், 2ஜி வழக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்பதால் அவகாசம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. வழக்கில் ஆ.ராசாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், நிச்சயமாக உச்ச நீதிமன்றம் செல்வேன்" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/107031-modi-meets-karunanidhi-subramanian-swamy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.