Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிருணிக்காவைத் தவிர ஏனைய 8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் : தீர்ப்பு 24 இல்

Featured Replies

ஹிருணிக்காவைத் தவிர ஏனைய  8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் : தீர்ப்பு 24 இல்

 

கடந்த 2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவைத் தவிர ஏனைய எட்டுப் பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

hirunika.jpg

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை  இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஹிருணிக்கா தவிர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த எட்டு பேருக்கும் எதிர்வரும் 24 ஆம் திகதி தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/26713

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் தனது வேலையை ஒழுங்கா செய்தா 
அந்த பிள்ளை ஏன் இப்படி செய்ய போகிறது ?

ஊருக்குள் ரவுடிகள் இருந்தால் 
கடத்தி நாலு சாத்து சாத்துவதில் என்ன தப்பு ? 

1 minute ago, Maruthankerny said:

அரசாங்கம் தனது வேலையை ஒழுங்கா செய்தா 
அந்த பிள்ளை ஏன் இப்படி செய்ய போகிறது ?

ஊருக்குள் ரவுடிகள் இருந்தால் 
கடத்தி நாலு சாத்து சாத்துவதில் என்ன தப்பு ? 

என்ன இருந்த்தாலும் நீங்கள் ஒரு பொம்பிளை பிள்ளைக்கு இப்படி வக்காளத்து வாங்க கூடாது ???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

என்ன இருந்த்தாலும் நீங்கள் ஒரு பொம்பிளை பிள்ளைக்கு இப்படி வக்காளத்து வாங்க கூடாது ???

பெண் பிள்ளைகளை பாதுகாப்பது 
ஒவ்வரு ஆணின் கடமை அல்லவா ?

11 hours ago, Maruthankerny said:

பெண் பிள்ளைகளை பாதுகாப்பது 
ஒவ்வரு ஆணின் கடமை அல்லவா ?

அவர் ஒரு மங்கையர்கரசியாக இருந்தால் பரவாயில்லை, அவர் தான் ஒரு சொர்ணா அக்காவாச்சே !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.