Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு நீதி ­கிட்­டுமா?

Featured Replies

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு நீதி ­கிட்­டுமா?

 
தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு நீதி ­கிட்­டுமா?
 
 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வின் கூட்டு அர­சில் கடந்த மூன்று ஆண்­டு­கள் காலத்­தில் தமிழ் மக்­கள் சாத்­வீக வழி­யில் பல போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். அவற்­றுள் தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை மிக முக்­கி­ய­மான ஒன்று.

இன்­றைய கூட்டு அரசு தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைப்­ப­தா­னால் அனைத்து அர­சி­யல் கைதி­க­ளை­யும் எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி பொது­மன்­னிப்­பில் விடு­தலை செய்­யக்­கோரி 2015ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 13ஆம் திக­தி­யன்று வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஒரு நாள் முழுக் கடை­ய­டைப்பு தமிழ் மக்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி ­ருந்­தது.

அப்­போது தமது விடு­தலை வேண்டி சிறைச்­சா­லை­க­ளில் உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தில் தமிழ் அர­சி­யல் கைதி­கள் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளில் 13 பேர் ஆபத்­தான நிலை­யி­ல் இ­ருந்­த­னர்.

130 இற்கு மேற்­பட்ட தமிழ் அர­சி­யல் கைதி­ கள் தங்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­யு­மாறு 2015 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் நாடு முழு­வ­தி ­லும் உள்ள சிறை­க­ளில் உணவு ஒறுப் புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

குறித்த விட­யம் தொடர்­பாக அப்­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தீர்­மா­னம் மேற் கொள்­ளப்­ப­டு­மென வழங்­கிய வாக்­கு­று­தியை நம்பி கைதி­கள் தமது உணவு ஒறுப்புப் போராட்­டத்­தைக் கைவிட்­ட­னர். பின்னர் 50 இற்கு மேற்­பட்ட அர­சி­யல் கைதி­கள் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­ னர்.

நீண்ட காலம் இழுபடும் சிக்கல் தீருமா?

போர் இடம்­பெற்ற 30 வருட காலப்­ப­கு­தி­யில் சந்­தே­கத்­தின் பேரில் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் தமிழ் இளை­ஞர்­கள், யுவ­தி­கள் பலர் நாட்­டின் பல பாகங்­க­ளி­லும் வைத்து கைது செய்­யப்­பட்டு அவ­ச­ர­கால மற்­றும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

புதிய அரச தலை­வர் மைத்­திரி பத­வி­யேற்ற ஆரம்­பத்­தில் நான்கு, ஐந்து மாதங்­கள் குறித்த விட­யம் தொடர்­பாக எந்­த­வித அக்­க­றை­யும் செலுத்­த­வில்லை.

மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தி­லும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் சிறை­க­ளில் உணவு ஒறுப்புப் போராட்­டங்­களை நடத்­தி­யது மட்­டு­மன்றி, அவர்­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் தமிழ் மக்­க­ளும் பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தும் அவை எவை­யும் எது­வித பய னும் தர­வில்லை.

அதே­பா­ணி­யில் கூட்டு அர­சும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் பாரா­மு­கத்­தோடு செயற் பட்டு வரு­கின்­றது. சிறை­யிலி­ருக்­கக் கூடிய 31 கைதி­க­ளின் சாவுத்­தண்­டனை, ஆயுட்­கா­லத் தண்­டனை, 200 ஆண்­டு­கள், 300 ஆண்­டு­கள் என்­ற­வாறு நீதி­மன்­றத்­தி­னால் கடும் தண்­ட­னை­கள் விதிக்­கப்­பட்டு வெளி­யு­ல­கம் தெரி­யா­த­வாறு சிறைக்­கம்­பி­களை எண்­ணிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

தமிழ் அர­சி­யல் தரப்­பி­ன­ரது அழுத்­தத்தை அலட்­சி­யம் செய்கிறது கூட்டு அரசு

அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உரத்­துக் குரல் கொடுத்­தி­ருந்­தா­லும், கூட்டு அரசோ அந்த விட­யத்தை முடி­வுக்­குக் கொண்டு வர முயல்­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

இன்­று­வ­ரை­யில் கூட்டு அரசு ஏற்க முடி­யாத பல கார­ணங்­க­ளைக் கூறி வரு­கின்­றது.
தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­வ­தால் தென்­னி­லங்­கை­யில் கூட்டு அர­சுக்­குப் பெரும் நெருக்­கடி ஏற்­ப­டும் என்­பது உண்­மையே.

அத­னையே கார­ண­மா­கக் காட்­டிக் கொண்டு தொடர்ந்­தும் மூன்­றாண்டு வரை கடும்­போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது கூட்டு அரசு. போர்க் காலத்­தில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்ட போரா­ளி­கள் பலர் மகிந்த ஆட்­சி­யி­ன­ரால் படிப்­ப­டி­யாக நான்கு வருட காலப்­ப­கு­தி­யில் மறு­வாழ்வு அளிக்­கப்­பட்டு சமூ­கத்­து­டன் இணைக்­கப்­பட்­ட­னர்.

அவர்­களை விடுத்­தமை போன்று சிறை­க­ளில் தண்­ட­னையை அனு­ப­வித்து வரு­கின்ற தமிழ் அர­சி­யல் கைதி­களை ஏன் விடு­விக்க முடி­யாது. இந்த விட­யத்­தில் கூட்டு அரசு ஏன் பின்­ன­டிக்க வேண்­டும்? ஆட்சி மாற்­றத்­தின் பின்­னரும் இந்­தக் கைதி­க­ளின் உற­வி­னர்­க­ளால் மனம் நொந்து எழுப்­பப்­ப­டு­கின்ற கேள்வி இது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன பதவி யேற்ற பின்­னர் அதே மாதத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் தமது முத­லா­வது சந்­திப்பை அரச தலை­வ­ரு­டன் மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

தமிழ்க் கைதி­கள் விட­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி ­னர் மற்­றும் தலைமை அமைச்­சர் ஆகி­யோ­ரு­டன் கூடி ஆராய்ந்­த­து­டன் அரசு இது விட­யத்­தில் கவ­ன­மெ­டுக்­கு­மென உறு­தி­யும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

கூட்டு அரசு பத­வி­யேற்ற பின்­ன­ரும் அநு­ரா­த­பு­ரம் சிறை­யி­லுள்ள தமிழ் அர­சி­யல் கைதிகள் தாக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அரசு மாறி­யி­ருந்­தா­லும் சிறைச்­சா­லை­யி­லுள்ள நிர்­வாக அதி­கா­ரி­கள், காவ­லர்­கள் மட்­டத்­தில் மாற்­றங்­கள் எது­வும் மேற்­கொள்­வ­தில்லை. மூன்று வரு­டங்­க­ளில் தமிழ்க் கைதி­கள் பல­வி­தங்­க­ளில் சிறை­ க­ளில் துன்­பு­றுத்­தப்­பட்டே வரு­கின்­ற­னர்.

நியா­யத்தை வேண்­டு­மென்றே புறம் தள்ள முய­ல்கின்றன இன­வா­தத் தரப்­புக்­கள்

தமிழ் அர­சி­யல் கைதி­களை வெளி­யில் விட்­டால் ஆபத்து. புலி­கள் உரு­வா­கி­வி­டு­வர், தமிழ் அர­சி­யல் கைதி­கள் என எவ­ரும் சிறை­க­ளில் இல்லை, பயங்­க­ர­வா­தத்­தோடு சம்­பந்­தப்­பட்டு தண்­டனை பெற்ற தமிழ்க் கைதி­களே உள்­ள­னர், அவர்­களை விடு­விக்க முடி­யாது என அரச தரப்­பி­ன­ரில் பலர் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­வ­தில் எந்த ஆபத்­தும் நாட்­டுக்கு இல்லை என்­பதை உணர மறுக்­கின்ற தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­கள் அர­சி­யல் கைதி­க­ளின் விவ­கா­ரத்தை மீண்­டும் மீண்­டும் இறுக்­க­மான கட்­டத்­துக்­குள் வைத்­தி­ருப்­ப­தையே விரும்­பு­கின்­ற­னர்.

இலங்­கை­யில் 1987 ஆம் ஆண்­டுக்கு முன்­னர் சிறை­யி­லி­ருந்த பல தமிழ் அர­சி­யல் கைதி­கள் 1987ஆம் ஆண்டு பொது­மன்­னிப்­பின் பிர­கா­ரம் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

அர­சைக் கவிழ்க்­கின்ற குற்­றச்­சாட்­டில் 1972ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் தலை­வர்­கள் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் நீதி­மன்­றி­னால் விசா­ரிக்­கப்­பட்டு தண்­டனை பெற்று பின்­னர் ஆட்சி அமைத்த அர­சி­னால் பொது­மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­விக்­கப்­பட்­ட­ னர்.

முடி­வின்­றித் தொட­ரு­கின்ற தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் சிறைச் சா­லைப் போராட்­டங்­க­ளி­னால் அவர்­க­ளின் விடு­தலை என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ளது. இது கைதி­க­ளது உற­வி­னர்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­றத்­தைக் கொடுத்­துள்­ளது.

மைத்­தி­ரி­யின் கூட்டரசில் சிறை வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் நிபந்­த­னை­யற்ற விடு­த­லையை வலி­யு­றுத்­தி­யும் சிறை­யி­னில் உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்த தமிழ்க் கைதி­க­ளி­னது வழக்கு விசா­ர­ணையை அநு­ரா­த­பு­ரத்­தில் நடத்­தாது வவு­னியா நீதி­மன்­றத்­தில் நடத்­தப்­பட வேண்­டு­மெ­னக் கோரி­யும் கடந்த மாதம் 13ஆம் திக­தி­யன்று வடக்கு மாகா­ணத்­தில் பூரண கடை­ய­டைப்பு பொது­அ­மைப்­புக்­கள் மற்­றும் தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளது அனு­ச­ர­ணை­யு­டன் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால யாழ்ப்­பா­ணம் வந்­த­போது தமிழ் அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அர­சின் எந்­த­வொரு நிலைப்­பாட்­டை­ யும் இங்கு வைத்து தெரி­விக்­க­வில்லை.

கொழும்பு சென்ற பின்­ன­ரும் இது பற்­றிய கருத்­துக்­களை வெளி­யி­டாது மெள­னம் காத்து வரு­கின்­றார். தொடர்ந்து பல வாரங்கள் வரை­யில் சிறைக் கைதி­கள் உணவு ஒறுப்புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்தனர்.

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர் குழு 19ஆம் திகதி அரச தலை­வ­ரைச சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்­தா­லும் அது பெரும் பயன் எத­னை­யும் தர­வில்லை. இது குறித்­துப் பரி­சீ­லித்து முடிவு மேற்­கொள்ள கால அவ­கா­சத்தை மாண­வர்­க­ளி­டம் கேட்­டி­ருந்­தார்.

தமிழ் அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் சட்­டம், ஒழுங்கு அமைச்­சர் சாக­ல­ரத்­னா­யக்க, பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்த்­தன, முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா போன்­றோர் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்­கவே முடி­யாது. அவர்­கள் விடு­த­லைப் புலி­கள் தான் என்ற கருத்தை உறு­தி­யா­கவே கூறி வரு­கின்­ற­னர்.

தமிழ் மக்­க­ளுக்­குப் பூச்­சாண்டி காட்ட முய­லும் அரச தலை­வர்

தன்­னைப் பல­வீ­னப்­ப­டுத்­தி­னால் பெரிய பேய் ஒன்று சக்தி பெறும் என்று யாழ்ப்­பா­ணத்­தில் உரை­யாற்றுகையில் அரச தலை­வர் மைத்­திரி பூச்­சாண்டி காட்­டி­யி­ருந்­தார்.

அவ­ரது கருத்து நிலைப்­பாடு அப்­ப­டி­யாக இருக்­கு­மா­னால் மகிந்த ஆட்­சிக்­கும் இன்­றைய கூட்டு ஆட்­சிக்­கும் என்ன வேறுபாடு என தமிழ் மக்­க­ளால் சந்­தே­கம் எழுப்­ப­ப்ப­டு­கின்­றது.

கடந்த மாதம் 17ஆம் திகதி எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான இரா.சம்­பந்­தன் நாடா­ ளு­மன்­றத்­தில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­க­ளும் சரி தண்­டனை பெற்று சிறை­வா­சத்தை தொடர்ந்து அனு­ப­வித்­துக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளும் தனிப்­பட்ட முறை­யில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை.

அவர்­கள் அத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­பட்­ட­தன் பின்­ன­ணி­யில் ஒரு அர­சி­யல் பரி­மா­ணம் உள்­ளது. அத­னைப் புரிந்து கொள்­ளுங்­கள். அர­சி­யல் கைதி­கள் என்று எவ­ரும் இல்லை என்று எவ­ரும் கூற முடி­யாது.

அத்­து­டன் ஜே.வி.பியி­னர் முன்­னர் நாட்­டில் பல கிளர்ச்­சி­களை அர­சுக்கு எதி­ராக நடத்தி பின்­னர் அர­சி­னால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத் தண்­ட­னை­யைப் பெற்­ற­வர்­கள்.

அவர்கள் பொது­மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­விக் கப்­பட்­ட­தை­யும் கிளர்ச்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு அர­சி­யல் பரி­மா­ணம் ஒன்று இருந்­தது. அந்த அர­சி­யல் பரி­மா­ணத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே அவர்­கள் தொடர்­பில் முடிவு எடுக்­கப்­பட்­டுத் தீர்வு வழங்­கப்­பட்­டது எனத் தெளி­வாக விளக்­கி ­யி­ருந்­தார்.

இந்­தக் கூற்றை கூட்டு அரசு தெளி­வா­கப் புரிந்­து­கொண்டு இது விட­யத்­தில் காலம் கடத்­தாது சாத­க­மான முடிவை எடுக் கவேண்­டும். தடுப்­பி­லுள்­ளோர் பயங்­க­ர­வா­தி­க­ளல்­லர் என்­றும் இரா. சம்­பந்­தன் கூறிய கருத்­துக்கு அரசு செவி­ம­டுக்க வேண்­டும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பி­ன­ரும் மற்­றும் தமிழ்த் தரப்­பி­ன­ரும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் கூட்டு அர­சுக்கு நெருக்­க­டி­களை கொடுத்­தி­ருந்­தா­லும் மகிந்த ஆட்­சி­யைப் போல் மைத்­திரி தரப்­பி­ன­ரும் அவற்­றைக் கவ­னத்­தில் எடுப்­ப­தற்­குப் பின்­ன­டிக்­கின்­ற­ னர்.

தமிழ் அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அரச தலை­வர் மனி­தா­பி­மா­னத்­து­டன் அணுக வேண்­டும். சிறைக்­கை­தி­ க­ளின் போராட்­டத்­தைப் புரிந்­து­ கொள்ள வேண்­டும. அவர்­க­ளின் உற­வி­னர்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டும்.

அரச தலை­வர் கால அவ­கா­சம் கேட்­டி­ருந்­த­தா­கச் செய்­தி­கள் வந்­தி­ருந்­தன. அரச தலை­வ­ரி­ட­மி­ருந்து அர­சி­யல் கைதி­கள் பிரச்­சினை சம்­பந்­த­மாக ஒரு தெளி­வாக முடி­வைத் தரு­வார் என அர­சி­யல் கைதி­க­ளால் எதிர்­பார்க்­கப்­பட்ட போதி­லும் எல்­லோ­ரை­யுமே ஏமாற்­றி­விட்டு அரச தலை­வர் கட்­டார் நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொண்டு திரும்­பி­ யுள்­ளார்.

சிறைக்­கை­தி­கள் போராட்­டத்­தில் தொடர்ந்­தும் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்­கான விடு­த­லையை வேண்டி அர­சி­யல் கட்­சி­கள் பொது அமைப்­புக்­கள் அண்­மை­யில் நடத்­திய போராட்­டத்­தை­யும் சிறைக்­கை­தி­ க­ளின் உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தை­யும் உதா­சீ­னப்­ப­டுத்தி வரு­கின்­றார் என தமிழ்­மக்­கள் மனம் புளுங்­கு­கின்­ற­னர்.

மகிந்த அரசு போன்று ஏமாற்­றும் தந்­தி­ரத்தை கூட்டு அரசும் தொடர்ந்து கடைப்­பி­டிக்­கப் போகின்­றதா? என்­பதே தமிழ் மக்­க­ளின் மன­தைக் குடை­யும் கேள்­வி­யா­கும்.

http://newuthayan.com/story/44117.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.