Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோனியை மட்டும் தாக்குவதில் நியாயமில்லை: விமர்சகர்களுக்கு கோலி பதிலடி

Featured Replies

தோனியை மட்டும் தாக்குவதில் நியாயமில்லை: விமர்சகர்களுக்கு கோலி பதிலடி

 

 
Kohli%20Dhonijpgjpg

கோப்புப் படம்

மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து வந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பதிலடி தந்துள்ளார். தான் உட்பட மற்ற பேட்ஸ்மென்கள் சரியாக விளையாடாமல் போனால் கூட எல்லாரும் வசதியாக ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 2வது டி20 போட்டியில் தோனியின் மந்தமான பேட்டிங்கே அணியின் தோல்விக்கு காரணம் எனப் பலர் விமர்சித்திருந்தனர்.

மேலும், முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லக்‌ஷ்மன், 'டி20 போட்டிக்கு இன்னும் இளையவர்களை வைத்து விளையாடவேண்டும்' என்றும், வீரேந்திர சேவாக், 'தோனிக்கு அணியில் என்ன பங்கு என்பதை நிர்வாகம் அவருக்கு புரியவைக்க வேண்டும்' என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் 3வது டி20 வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி பேசியதாவது:

"ஏன் மக்கள் அவரை மட்டும் தனியாக குற்றம் சாட்டுகின்றனர் என்று தெரியவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக நான் 3 ஆட்டங்களில் சரியாக ஆடவில்லையென்றால் கூட யாரும் என்னை எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் நான் இன்னும் 35 வயதைத் தாண்டவில்லை இல்லையா.

தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அனைத்து பரிசோதனைகளிலும் தேர்கிறார். களத்தில் அணியின் வியூகத்துக்கு எப்படியெல்லாம் பங்காற்ற முடியுமோ அப்படியெல்லாம் பங்காற்றுகிறார். தனது ஆட்டத்தில் கடினமாக உழைக்கிறார். அணியில் அவரது பங்கு என்ன என்பது அவருக்குப் புரியும். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதை நிரூபிப்பது சாத்தியமில்லை.

இலங்கை சுற்றுப்பயணத்திலும், ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் நன்றாகத்தான் பேட்டிங் செய்தார். இந்தத் தொடரைப் பொறுத்தவரை அவருக்கு ஆடும் வாய்ப்பும் சரியாக அமையவில்லை. அவர் எந்த நிலையில் பேட்டிங் ஆட வருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஹர்திக் பாண்டியாவும் அந்தப் போட்டியில் சரியாக ஆடவில்லை. ஏன் தோனி ஒருவரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? வசதியாக ஒருவரை மட்டும் தாக்குகிறீர்கள். இதில் நியாயமில்லை.

தோனி ஆட களமிறங்கும்போது தேவைப்படும் சராசரி, ஓவருக்கு 8.5 முதல் 9.5 ரன்கள் வரை இருக்கிறது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது போல களத்தின் தன்மை இருக்காது. முதல் நிலையில் இறங்கி ஆடும் வீரர்களால் எளிதாக முதல் பந்திலிருந்தே அடித்து ஆட முடியும். ஆனால் பின்னால் ஆட வரும் வீரர்களுக்கு அப்படி இருக்காது. அதுவும் நாங்கள் ஆடிய களங்கள் ஆட்டத்தின் பிற்பாதியில் தான் தேய்ந்து, சிதைய ஆரம்பித்தன.

எல்லாவற்றையும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அணி வீரர்களும், நிர்வாகமும் ஒருவர் எந்த நிலையில் ஆடச் செல்கிறார் என்பதை புரிந்து கொள்கின்றனர். களத்தின் தன்மை எப்படி இருக்கிறது, எந்த சூழலில் ஆடச் செல்கிறோம் என்பது எங்களுக்குப் புரியும். இந்த சூழலை வேறொரு கோணத்திலிருந்து பார்த்து பேசுபவர்களின் கருத்துகளைக் கண்டு நாங்க உணர்ச்சி பொங்க முடிவெடுக்க மாட்டோம்.

டெல்லி ஆட்டத்தில் அவர்  ஒரு சிக்ஸர் அடித்தார். ஆட்டம் முடிந்ததும் அதை 5 முறை போட்டுக் காட்டினார்கள். ஆனால் ஒரு போட்டியில் ஆடவில்லையென்றதுமே அவர் உயிருக்கு விலை பேசுகிறோம்.

மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தோனி மிக புத்திசாலியானவர். அவரது ஆட்டம், உடல் தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது அவருக்கு புரியும். அவர் சார்பில் வேறு யாரும் அதுகுறித்து முடிவெடுக்கக் கூடாது என நினைக்கிறேன்" என்று விராட் கோலி கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article20003149.ece

  • தொடங்கியவர்

30 வயதை கடந்தாலே விமர்சிக்கின்றனர்: தோனிக்கு ஆதரவாக கவாஸ்கர் கருத்து

08CHPMUGAVASKAR

கவாஸ்கர்   -  THE HINDU

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 30 வயதை கடந்துவிட்டாலே விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது என்றும், தோனியை கை காட்டுபவர்கள் ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது குறித்து பேசுவதில்லை என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தோனி விளையாடிய விதம் கடும் விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. முன்னாள் வீரர்களான விவிஎஸ் லட்சுமண், அஜித் அகர்கர் ஆகியோர் டி20 ஆட்டத்தில் இளம் வீரருக்கு தோனி வழிவிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூயிருப்பதாவது:

லட்சுமண், அகர்கர் ஆகியோர் தங்களது கருத்துகளை மட்டுமே தெரிவித்துள்ளனர். இது அவர்களது பார்வையாகும். தேர்வாளர்களின் பார்வையாகவோ, கேப்டனின் பார்வையாக இது இல்லை. என்ன நடைபெறுகிறது என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம். 30 வயதை கடந்து விட்டாலே, ஒவ்வொரு முறையும் அந்த வீரர் மீது தவறுகளை கண்டு பிடிக்கிறார்கள். மேலும் ஓய்வு பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

தோனி விளையாடிய அதே ஆட்டத்தில் மற்ற வீரர்கள் வெற்றிகரமாக செயல்படாததை நாம் பார்ப்பதில்லை. ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிலும் கூக்ளி பந்தை எதிர்கொள்ள முடியாமல் போல்டானார். இதை நாம் கண்டுகொள்வதில்லை. தொடக்க வீரர்கள் வழக்கமான தொடக்கத்தை கொடுக்கவில்லை என்ற உண்மையையும் நாம் பேசுவதில்லை. ஆனால் தோனியை மட்டும் கை காட்டுகிறோம். இது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article20002621.ece

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு தோனி வேண்டாம்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆலோசனை

 

 
dhoni

வலைப்பயிற்சியில் தோனி.   -  படம். | ஏ.எஃப்.பி.

தோனியின் சமீபகால பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்குப் பதிலாக வேறு இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஜித் அகார்கர், விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ள நிலையில் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு அடி மேலே போய், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தோனியை நீக்கி விட்டு புதிய வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கறாராக வாதிட்டுள்ளார்.

தோனியின் பேட்டிங் சரிவு! புள்ளி விவரங்கள் கூறுவதென்ன?

மும்பை ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 42 பந்துகளில் 25 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி அன்று 300 ரன்களுக்கும் மேல் செல்ல முடியாமல் போனது, நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டி20 போட்டியில் கான்பூரில் தோனி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தது நல்ல முயற்சி என்று வாதத்தை தோனி ஆதரவாளர்கள், கோலி உட்பட, முன்வைக்கின்றனர்.

ஆனால் அன்றைய போட்டியில் தோனி எடுத்த 49 ரன்களில் 24 ரன்கள் போட்டி ஏறக்குறைய வெற்றி பெற முடியாத நிலையை எட்டியபிறகு வந்ததே. விவிஎஸ். லஷ்மண் அந்தப் போட்டி குறித்துக் கூறும்போது, “கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 160, தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 80 தான். பெரிய இலக்கைத் துரத்தும் போது இது போதாது” என்றார்.

மட்டையாளர்களுக்கு சாதகமான மட்டைப் பிட்சில் தோனி முதல் 25 பந்துகளில் 9 பந்துகளில் ரன் எதையும் எடுக்கவில்லை. இதில் 6 ரன் இல்லாத பந்துகள் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக. இது ஏதோ ஒருமுறை என்றால் கோலி கூறுவது போல் அவரை மட்டும் இலக்காக்குவது தவறுதான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே தோனி பேட்டிங்கில் கடைசியில் பெரிய ஷாட்களை ஆடத் திணறி வருவதுதான் எதார்த்த நிலை என்று கிரிக் இன்போ இணையதளத்தின் உதவி ஆசிரியர் சித்தார்த் மோங்கா கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

அவர் மேலும் அந்தக் கட்டுரையில், 2016 தொடக்கம் முதலே, அனைத்து டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் கடைசி 10 ஓவர்களில் ஸ்பின் பந்து வீச்சில் ஓவருக்கு 6.87 ரன்கள் என்ற விகிதத்தில்தான் தோனி ஸ்கோர் செய்து வருகிறார். அவர் இந்தக் காலக்கட்டத்தில் எதிர்கொண்ட 46% ஸ்பின் பந்து வீச்சில் பெரிய அளவில் தோனியால் ரன்கள் எடுக்க முடியவில்லை. ஜனவரி 2016 முதலே ஒவ்வொரு 10 பந்துக்கும் ஒரு பவுண்டரி என்று கூட தோனியினால் ஸ்கோர் செய்ய முடியவில்லை என்று சித்தார்த் மோங்கா குறிப்பிடுகிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் கூட தோனியின் சமீபத்திய பாராட்டுக்குரிய இன்னிங்ஸ் எல்லாம் குறைந்த ரன் இலக்கு போட்டிகளில்தான், அதிலும் ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளின் குறைந்த இலக்குக்கு எதிராக வெற்றி பெற முடியவில்லை. ஃபிளாட் பிட்ச்களில் கூட ஸ்கோரிங் ரேட்டுக்கு தகுந்தவாறு தோனி ஆடமுடியாமல் உள்ளது என்று மோங்கா குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் ஐபிடைம்ஸ் இணையதளத்தில் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:

இந்தியா, நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான தொடர் வருகிறது. இலங்கை அணி வலுவிழந்த நிலையில் இருப்பதால் வேறு வீரர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர் உள்ளது, டாப் அணிகளுக்கு எதிராக சில டி20 போட்டிகள் உள்ளது அப்போது வாய்ப்பளித்த வீரர்களின் செயல்திறன் பற்றி மதிப்பிடலாம்.

இலங்கைக்கு எதிரான தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க சரியான தருணம் ஏற்பட்டுள்ளது. தோனி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திணறி வருகிறார். அவரது பேட்டிங் குறுகிப்போய் விட்டது. எனவே புதிய வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரம் கனிந்திருப்பதாகவே கருதுகிறேன்.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.

http://tamil.thehindu.com/sports/article20004558.ece

  • தொடங்கியவர்

எத்தனை ஆண்டுகள் தோனி விளையாடுவார்..? - கணிக்கும் நெஹ்ரா!

தோனியின் ஃபார்ம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். அவர் ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு வழிவிட வேண்டுமென்று ஒரு சாரரும், தொடர்ச்சியாக விளையாடி இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடித் தர வேண்டுமென்று இன்னொரு சாரரும் கருத்துகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, `தோனி 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இருப்பார்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெஹ்ரா

 
 

அவர் மேலும், `எந்த வீட்டிலும் ஒரு பெரியவர் தேவைப்படுவார். தோனி, இந்திய அணிக்கு அதைப் போலத்தான். உடல்தகுதி இருக்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். இடத்தைப் பொறுத்து கிரிக்கெட் விளையாடுவது வித்தியாசப்படும். இது மிகவும் கடினமான விளையாட்டு. அவர் நன்றாக விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து அணியில் நீடிக்க வேண்டுமென்று நான் கூறவில்லை. ஏனென்றால், சரியாக விளையாடவில்லை என்று தெரிந்தால், தோனியே தானாக விலகும் தன்மையுடையவர். என்னைப் பொறுத்தவரையில், தோனியை அவர் போக்குக்கு விட்டுவிட வேண்டும். அவரின் விளையாட்டைப் பற்றி அவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அவர் மிகவும் நேர்மையானவர். அவர் 2020-ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். 39 வயதில் நான் வேகப்பந்து வீச்சாளராக இருக்க முடியுமென்றால், தோனியின் உடற்தகுதிக்கு அவர் கண்டிப்பாக விளையாடலாம்' என்றார் தீர்க்கமாக.

http://www.vikatan.com/news/sports/107288-he-is-one-guy-who-is-very-honest-with-himself-and-the-country-ashish-nehra.html

  • கருத்துக்கள உறவுகள்

தோனி தொடர்ந்து விளையாட வேண்டும். அவரது விக்கட் காக்கும் திறமை பற்றி யாரும் சொல்வதில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்புவதால் தான் தோனி அழுத்தத்தில் விளையாடுகிறார் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

டோனியின் 179 டிகிரி ரீச்சுக்கு ரசிகர்களின் மீம்ஸ்

 
  • டோனியின் 179 டிகிரி ரீச்சுக்கு ரசிகர்களின் மீம்ஸ்

 

ஆனால் இப்படி தொடர் விமர்சனங்கள் வந்தால் டோனி வெகுவிரைவில் ஒருநாள், T20 போட்டி ஓய்வையும் அறிவிக்ககூடும்.

 

  • தொடங்கியவர்

பொறாமையினால் தோனியை விமரிசனம் செய்கிறார்கள்: ரவி சாஸ்திரி சாடல்!

 

dhonixx

 

தோனி மீதான விமரிசனங்களால் என்னிடம் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. தோனி ஓர் அருமையான அணி வீரர் என்று ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூஸிலாந்து டி20 தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-ஆவது டி20 ஆட்டத்தில் தோனி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து முன்னாள் கேப்டன் தோனி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்திருந்தார். அணியில் தோனியின் பங்களிப்பை அவருக்கு குழு மேலாண்மை புரிய வைக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் தோனி குறித்த தங்களுடைய கருத்துகளை ஊடகங்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

ஆனால், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தோனிக்கு ஆதரவாக கோலி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிலர் தோனி குறித்து மட்டும் விமர்சித்து வருவது ஏன்? என்று எனக்குப் புரியவில்லை. பேட்ஸ்மேனாக நான் சோபிக்கவில்லை எனில் எந்த விமர்சனங்களும் எழுவதில்லை. ஒருவேளை நான் 35 வயதுக்குள் இருப்பதால் விமர்சனங்கள் எழாமல் இருக்கலாம். ஒவ்வோர் ஆட்டத்திலும் சிறப்பான பங்களிப்பையும், கடின உழைப்பையும் தோனி அளித்து வருகிறார். அணியில் தன்னுடைய பங்களிப்பு என்ன என்பது அவருக்குத் தெரியும். விமர்சிப்பவர்களுக்கு மிகவும் பொறுமை தேவை என்றார் கோலி.

தற்போது, தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தோனி சரியாக விளையாடாமல் அவருக்கு மோசமான நாள்கள் அமையவேண்டும் என நம்மைச் சுற்றியுள்ள பொறாமை பிடித்த பலர் எண்ணுவது போல உள்ளது. சிலர், தோனியின் இறுதி நாள்களைக் காண விரும்புகிறார்கள். ஆனால் தோனியைப் போன்ற சிறந்த வீரர்கள் அவர்களுடைய எதிர்காலத்தை அவர்களாக முடிவு செய்துகொள்வார்கள். 

தோனி மீதான விமரிசனங்களால் என்னிடம் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அணியில் தோனி எந்த இடத்தில் உள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஓர் அருமையான அணி வீரர். அற்புதமான தலைமைப் பண்புகளைக் கொண்டவர். 

நான் முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராகத் தொலைக்காட்சிகளில் பணியாற்றியபோது என்னிடம் சில கேள்விகள் கேட்கப்படும். அந்நிகழ்ச்சிக்காக நீங்கள் பதில்களைச் சொல்ல வேண்டும்.

தோனி ஒரு சூப்பர் ஸ்டார். நம்முடைய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். எனவே அவர் எப்போதும் விவாதங்களில் இடம்பெறுவார். அவரைப் போன்ற ஒரு சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கை அமையும்போது அது தொலைக்காட்சிகளின் விவாதங்களில் மையமாக இருக்கும். கடந்த ஒருவருடத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் சராசரி - 65 ரன்கள். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி தோனி நிறைய உதவியுள்ளார் என்று தோனிக்கு ஆதரவாகப் பேட்டியளித்துள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/10/ms-dhoni-target-of-jealous-people-who-want-him-out-of-india-cricket-team-ravi-shastri-2805398.html

  • தொடங்கியவர்

டோனியை விமர்சனம் செய்த அகர்கரை டுவிட்டரில் புரட்டியெடுத்த ரசிகர்கள்

டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறிய அஜித் அகர்கரை, டோனி ரசிகர்கள் டுவிட்டரில் புரட்டியெடுத்துள்ளனர்.

டோனியை விமர்சனம் செய்த அகர்கரை டுவிட்டரில் புரட்டியெடுத்த ரசிகர்கள்
 
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 197 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது டோனி அதிரடியாக விளையாடவில்லை. இதனால் டோனி மீது விமர்சனம் எழும்பியது.

201711101705046013_1_3Dhoni002-s._L_styvpf.jpg

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர், டி20 கிரிக்கெட்டில் டோனி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, டோனிக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் டோனி ரசிகர்கள் அகர்கரை புரட்டியெடுத்துள்ளனர்.

இந்த டுவிட்டர்களை கீழே காண்போம்;-

201711101705046013_2_Dhoni001._L_styvpf.jpg

201711101705046013_3_Dhoni002._L_styvpf.jpg

201711101705046013_4_Dhoni003._L_styvpf.jpg

201711101705046013_5_Dhoni004._L_styvpf.jpg

201711101705046013_6_Dhoni005._L_styvpf.jpg

201711101705046013_7_Dhoni006._L_styvpf.jpg

201711101705046013_8_Dhoni008._L_styvpf.jpg
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/10170450/1128006/Ajit-Agarkar-Who-Wanted-MS-Dhoni-Out-Of-India-T20.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.