Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்கூவர் மாநாட்டில் சிறீலங்காபடை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்கான செய்தியாளர் மாநாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வான்கூவர் மாநாட்டில் சிறீலங்காபடை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்கான செய்தியாளர் மாநாடு! Top News 
[Friday 2017-11-10 19:00]
நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் ஐ.நா.அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழுவின் செய்தியாளருடனான சந்திப்பொன்று நேற்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் ஊடக கூடத்தில் இடம் பெற்றது.

நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் ஐ.நா.அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழுவின் செய்தியாளருடனான சந்திப்பொன்று நேற்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் ஊடக கூடத்தில் இடம் பெற்றது.   

இதைத் தொடர்ந்து, சிறீ லங்காவினால் இழைக்கப்பட்ட சர்வதேச சட்ட மீறல் விடயங்களை முன்னிலைப்படுத்தவும் மற்றும் கனடிய அரசின் துரித செயற்பாட்டை வலியுறுத்தியும் அமைச்சர் ரால்ப் கூடேல் மற்றும் நீதி அமைச்சர் ஜோடி வில்சன்- றேபோ ஆகியோருக்கு இக் கூட்டுக்குழு எழுதிய கடிதத்தில் கனடிய அரசு இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் 35(1) ம் பிரிவின் பிரகாரம் வான்கூவர் மாநாட்டில் சிறீ லங்கா படை அதிகாரிகள் கலந்து கொள்வதைத் தவிர்க்குமுகமாக அவர்களுக்கு கனடிய நுழைவு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூடேல் அவர்களுக்கு இக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே வேளை மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் சட்டத்தின் பிரகாரம் உடனடியாக விசாரணைகள் தொடங்கப்படவேண்டும் என அமைச்சர் வில்சன் றேய்போ விடமும் இக் குழு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இக் கூட்டுக்குழுவில் பத்து கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

பிரபல கனடிய சட்ட நிறுவனமான நவா-வில்சன் ஏல்.எல்.பி. இத் தமிழ் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எனவும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு-

நவம்பர் 8, 2017

2017 ஐக்கிய நாடுகள் அமைதிபேண் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் சிறீ லங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்காகவும் இழைக்கப்பட்ட சர்வதேச யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தலுதற்கானதுமான செய்தியாளர் மாநாடு

ஒட்டாவா, ஒன்ராறியோ

கனடிய மற்றும் சர்வதேச பல்வேறு அமைப்புக்களின் கூட்டுக்குழு இன்று பி.ப. 1:30 மணிக்கு ஒட்டவா பாராளுமன்றத்தின் ஊடக கூடத்தில் சந்திப்பொன்றை நிகழ்த்தவுள்ளது. சிறீ லங்கா அரசு சர்வதேச சட்டங்களை மீறியிருப்பதை எடுத்துக்காட்டி அதன் மூலம், நவம்பர் 14, 15, 2017 அன்று வான்கூவரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் (UN Peacekeeping Defence Ministerial Conference) கனடிய அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது இக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

இது குறித்து அமைச்சர் ரால்ப் கூடேல் மற்றும் நீதி அமைச்சர் ஜோடி வில்சன்-றேபோ ஆகிய இருவருக்கும் இக் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்ட பிரிவு 35 (1) இன் கீழ், சிறீ லங்காவின் ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைவதைத் தடை செய்யவதற்காக அவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூடேல் அவர்களிடமும் அதே வேளை, இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் , இனப்படுகொலை விவகாரங்களில் ஈடுபட்ட காரணங்களுக்காக மனுக்குலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக்குற்றங்கள் சட்டத்தின் பிரகாரம் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் ஜோடி வில்சன்-றேபோ அவர்களிடமும் கடித்த மூலம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

“சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தை மீறியதற்காக சிறீ லங்காவின் ஆயுதப்படைகளுக்கெதிராக கண்டனத்துக்குரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. விமானத்திலிருந்து குண்டுகளை மருத்துவமனைகள், பறப்பு தடுக்கப்பட்ட பகுதிகள், அப்பாவி குடிமக்கள் மீது வீசியதுடன்,கற்பனை செய்து பார்க்க முடியாத பல ஈனச் செயல்களை தமது சொந்த மக்களுக்கு எதிராக செய்ததற்கான குற்றச்சாட்டுகளும் ஸ்ரீலங்காவின் ஆயுதப்படையினர்மீது சுமத்தப்பட்டுள்ளன. அவர்களின் இந்த சர்வதேச சட்ட மீறல்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்களாக கனடாவில் இன்று எம்மோடு வாழ்ந்து வரும் பலரும், சிறீ லங்காவின் ஆயுதப்படை அங்கத்தவர்கள் கனடிய மண்ணைச் சுதந்திரமாக மிதிப்பதையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிறீ லங்காவின் ஆயுதப்படையினர் குடிமக்கள் நிலங்களை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றனர் . தமிழ் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களும் அவர்களால் தொடரப்படுகின்றன. இந்த உரிமை மீறல்களுக்கு பெருமளவிலான சான்றுகள் இருந்தபோதிலும், இலங்கை அரசாங்கத்தினுள்ளேயிருக்கும் தப்பிக்கவிடும் கலாச்சாரம் சிறீ லங்காவின் ஆயுதப்படையினரைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாத்தும் வருகின்றது.” என்கிறார் இக் கூட்டுக்குழுவின் ஆலோசகரும், நவா-வில்சன் எல்.எல்.பி. சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரருமான திருமதி மல்லிகா வில்சன்.

இக்குற்றச்சாட்டுக்களுக்கு வலுச்சேர்ப்பதுபோல ஐ.நா. அமைதிகாப்பாளர்களாக ஹெய்ட்டிக்குச் சென்றிருந்த சிறீ லங்கா ஆயுதப்படையினர் அங்கு அடக்குமுறை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவம் அமைகிறது. ஐ.நா. அமைதிகாப்பாளர்களாக பணியாற்ற சென்றிருந்த சிறீ லங்காவின் ஆயுதப்படையினர் அங்கு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குழுக்களை நடத்தியதாகவும், ஹெய்ட்டிய பெண்களையும், குழந்தைகளையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில், பாலியல் வலோத்காரக் குற்றங்களுக்காகவும், ஒன்பது சிறுவர்கள்மீது பாலியல் குற்றங்கள் புரிந்ததற்கும், ஐ.நா. அமைதிகாப்பாளர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தவர்களில் குறைந்தபட்சம் 134 சிறீ லங்காவின் ஆயுதப்படையினர்மீது குற்றம் சாட்டப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் கூறுகிறது.

குற்றங்கள் வெளிக்கொணரப்பட்டபின் 114 ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டபோதும், அவர்களில் எவர் மீதும் சிறீ லங்கா நடவடிக்கை எடுக்கவில்லை, இதுகுறித்து அட்வொகேட் இண்டரநாஷனல் பணியகத்தில் பணியாற்றும் ஹெய்ட்டிய வழக்குரைஞரான மரியோ ஜோசப் “துயரத்திற்குப் பின் துயரத்தை சந்தித்து அதைச் சகித்தவாறிருக்கும் ஒரு நாட்டில் நன்மைக்கு பதிலாக தீமையல்லாவா ஐ.நா. செய்திருக்கிறது” என்று தன் வேதனை உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

முடிவாக, “நாடுகள் தங்கள் சொந்தக் குடிமக்களைக் கொல்லும் வரலாறு மீண்டும் மீண்டும் தொடர்வதை நாம் காண்கிறோம். சிறீ லங்கா, சிரியா, மியன்மார் என அண்மையில் சர்வதேச சட்டத்தினை ஒட்டுமொத்தமாகவும், முறைகேடாகவும் மீறும் போக்கானது, கனடா போன்ற நாடுகள் உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுத்து நின்று காட்டாவிட்டால் மேலும் மேலும் தொடரும். ஆகவே கனடாவில் சிறீ லங்கவின் பொறுப்புக்கூறலுக்கான ஒரு புதிய பிரச்சாரத்தை இன்று ஆரம்பிக்கிறோம்” என திருமதி மல்லிகா வில்சன் தெரிவித்திருக்கிறார்.

கூட்டுக்குழுவிலிருக்கும் அமைப்புக்கள்:

கனடிய அமைப்புக்கள்:

கனடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress), Centre for War Victims and Human Rights, கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils), Quebec Tamil Development Association, கனடிய தமிழர் சமூக அமைய ம் (Tamil Canadians Civil Society Forum).

சர்வதேச அமைப்புக்கள்:

Australian Tamil Congress, British Tamils Forum, People for Equality and Relief in Lanka, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam), United States Tamil Political Action Council.

By their Counsel: Nava Wilson LLP

For more information:

Kubes Navaratnam – Managing Partner

Nava Wilson LLP kubes@navawilson.law – 416-321-1100

 

canada-press-con-101117-seithy%20(1).jpeg

 

 

canada-press-con-101117-seithy%20(2).jpeg

http://seithy.com/breifNews.php?newsID=193603&category=TamilNews&language=tamil

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
  • Welcome
  • Welcome
 
கனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழாவில் ரூபவாகினியின் வருகையை அனுமதிப்பது தமிழின அழிப்பை ஆதரிப்பதாகும். 
[Thursday 2018-01-04 12:00]
கறுப்பு ஜூலை இனச் சுத்திகரிப்புக்கு ஓர் ஆண்டு முன்னதாக, 1982ம் ஆண்டு, இலங்கை அரசால் பாராளுமன்றச் சட்டத்தினூடாக முழுமையான   பரப்புரை ஊடகமாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி ரூபவாகினி ஒரு சுதந்திர ஊடகமல்ல.  ரூபவாகினி தொலைக்காட்சி ஊடகமானது, அதன் உருவாக்க காலத்திலிருந்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே செயற்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. மாறி மாறி அரசமைக்கும் சிங்களத்துக்கு ஓர் ஊதுகுழலாகவே ரூபவாகினி இன்றுவரை செயற்பட்டு வருகின்றது.

கறுப்பு ஜூலை இனச் சுத்திகரிப்புக்கு ஓர் ஆண்டு முன்னதாக, 1982ம் ஆண்டு, இலங்கை அரசால் பாராளுமன்றச் சட்டத்தினூடாக முழுமையான பரப்புரை ஊடகமாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி ரூபவாகினி ஒரு சுதந்திர ஊடகமல்ல. ரூபவாகினி தொலைக்காட்சி ஊடகமானது, அதன் உருவாக்க காலத்திலிருந்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே செயற்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. மாறி மாறி அரசமைக்கும் சிங்களத்துக்கு ஓர் ஊதுகுழலாகவே ரூபவாகினி இன்றுவரை செயற்பட்டு வருகின்றது.

   

தமிழினவழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரூபவாகினி தொலைக்காட்சியின் தமிழ்ச் சேவையானது, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காகவே போர் புரிகின்றது என்ற வாதத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடாகப் பரப்பியது மாத்திரமன்றி, பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மரணப் பொறிக்குள் பொதுமக்களைச் சிக்கவைத்துக் கொன்றொழித்ததில் ரூபவாகினிக்கு முக்கிய பங்குண்டு.

இன்று ஐக்கிய நாடுகள் அவையும் பல உலக நாடுகளும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்குரிய பரிகாரத்தை வேண்டிநிற்க, இலங்கை அரசாங்கம் அதில் எதையும் நிறைவேற்றாத நிலையில், கனடியத் தமிழர் பேரவை (CTC), ரூபவாகினி தொலைக்காட்சியைக் கனடாவினுள் அனுமதிப்பதென்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரான காலப்பகுதியில் கனடிய அரசாங்கம் தமிழருக்கான நீதி பெற்றுத் தருவதற்குரிய முயற்சியில் ஜெனிவாவிலும் வேறுபல வகைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் கூடும்போது அதைத் தனித்து நின்று புறக்கணித்தது. அதைத் தொடர்ந்து மொறிஷியஸ் நாடு புறக்கணித்ததென்பது வரலாறு.

இலங்கையில் புதிய அரசு உருவாகிய பின்பு தமிழர் நலன் சார்ந்த அரசியல், இராஜதந்திர ரீதியில் சிக்கியிருக்கின்றது. புதிய அரசானது தம்மை மிதவாதப்போக்குடையதாக உலக அரங்கில் காட்டிக்கொண்டு தமிழர்களுடைய அடிப்படைத் தேவைகளை மூடிமறைத்து அதற்கான பரிகார நீதியில் எந்த விதமான முன்னேற்றத்தையும் காட்டவில்லை. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களையும் அதனூடாக உருவாகி இருக்கும் அனத்துலக ரீதியான அழுத்தங்களையும் குறைக்கின்ற வகையில் பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றது. இம்முயற்சிகள் அனைத்தும் கூடிவராத சூழ்நிலையில் கனடியத் தமிழர் பேரவையினூடாக ரூபவாகினியின் வருகை என்பது இலங்கை அரசால் ஏவப்பட்டதாகப் பார்க்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. அது மட்டுமன்றி, புலம்பெயர் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழர் நலன் சார்ந்த செயற்பாடுகளை நீர்த்துப்போகச் செய்கின்ற செயற்பாடாகவும் இந்த வருகை பார்க்கப்படுகின்றது.

கனடியத் தமிழர்கள் பல விதத்திலும் தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு கனடியத் தமிழர் பேரவை ரூபவாகினி வருகையை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வேண்டுகோளைப் புறக்கணித்து, கனடியத் தமிழர் பேரவை தமிழின அழிப்புக்குத் துணை போன ரூபவாகினி தொலைக்காட்சியை ஜனவரி 20, 2018 நிகழ்வில் வரவழைத்தார்களானால், புலம்பெயர் தமிழ் மக்களின் வேண்டுகோளை ஏற்று கனடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் மாநகர சபை உறுப்பினர்கள், தமிழ் கல்விச்சபை உறுப்பினர்கள், ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், நடன ஆசிரியர்கள், தமிழ் வர்த்தகர்கள், தமிழ் ஊடகங்கள், கனடியத் தமிழர்கள் அனைவரும் இந்நிகழ்வைப் புறக்கணிப்பது மாத்திரமன்றி தமிழ் மக்களின் நலன் சார்ந்து ஒன்றுபட்டுச் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்துலக தமிழர்களைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் 14 அமைப்புக்களும் கனடிய மக்களை பிரதிநிதுத்துவம் செய்கின்ற 5 அமைப்புக்களும் இவ்வறிக்க்கையை வெளியிடுகின்றனர். தொடர்ந்தும் மேலதிக அமைப்புக்களை நாடியிருக்கின்றோம்.

பிற்குறிப்பு: கனடியத் தமிழர் பேரவை நிகழ்வில் ரூபவாகினியின் வருகையை மறுபரிசீலனை செய்யுமாறு மின்னஞ்சல் ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு எந்தவித பதிலும் கிடைக்காதவிடத்து இப்பதிவை மக்களிடம் வெளிக்கொணர்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

1. கனேடிய தமிழர் தேசிய அவை - கனடா

2. சுவிஸ் ஈழத்தமிழரவை - சுவிஸ்

3. நோர்வே ஈழத்தமிழர் அவை - நோர்வே

4. இத்தாலி ஈழத்தமிழரவை - இத்தாலி

5. பிரான்ஸ் தமிழர் பேரவை - பிரான்ஸ்

6. சுவீடன் தமிழர் தேசிய அவை - சுவீடன்

7. தமிழர் நீதிக்கான அமைப்பு - அவுஸ்திரேலியா

8. பெல்ஜியம் தமிழர் தேசிய அவை - பெல்ஜியம்

9. பின்லாந்து தமிழர் பேரவை - பின்லாந்து

10. டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் - டென்மார்க்

11. நெதர்லாந்து தமிழர் அவை - நெதர்லாந்து

12. நியூசீலந்து தமிழர் தேசிய அவை - நியூசீலந்து

13. தமிழர் இன அழிப்புக்கு எதிரான கூட்டமைப்பு - மொரிசியஸ்

14. யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

கனடிய அமைப்புக்கள்:

1. பிரம்ரன் தமிழ் ஒன்றியம்

2. மிசிசாகா தமிழ் ஒன்றியம்

3. கியுபெக் தமிழர் முன்னேற்றச்சங்கம்

4. கனடிய தமிழர் தேசிய அவை

5. கனடிய தமிழர் சமூக அமையம்

மேலதிக தொடர்புகளுக்கு: 416.830.7703

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.