Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி நபரின் அடாவடியின் பின் இருப்பது அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா?

Featured Replies

தனி நபரின் அடாவடியின் பின் இருப்பது அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா?

 

 

முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக  அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. 

Local_News.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைக்க முடியும்? எனவும், குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர் பெருமளவுக் காணியினை கையகப்படுத்த முயல்வதன் பின்னணியில் அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா உள்ளது?  என மாங்குளம் பொது அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.

தனிநபர் ஒருவர் வலுக்கட்டாயமாக காணியை பிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தவும் தயாராகவுள்ளோம் என பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

http://www.virakesari.lk/article/26901

  • தொடங்கியவர்

தனிநபர் ஒருவர் 40 ஏக்கர் காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி போடுகிராரா?

 

mankulam2-800x450.jpg

முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக இக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலே மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்தாகப் பிடித்து வேலி அமைக்க முடியும் எனவும் இக்காணி கூட அரச காணி எனத் தெரிவிக்கும் பொது அமைப்புகள் குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர் பெருமளவுக் காணியினை கையகப்படுத்த முயல்வதன் பின்னணியில் அரசியலா அல்லது அதிகாரிகளின் துணையா உள்ளனரா எனவும் மாங்குளம் பொது அமைப்புகள் வினா எழுப்பியுள்ளன

தனிநபர் அடாத்தாகக் காணி பிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாங்குளம் பொது அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.

mankulam1-450x800.jpg

http://globaltamilnews.net/archives/49324

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தனிநபர் யாரென்று அவரின் பெயரையும் செய்தியில் சேர்க்கும் வரை இந்த விடயம் வெறும் புரளி, வதந்தி என்றுதான் ஜனங்களுக்கு எண்ணத்தோன்றும். இத்துடன் குறித்தநபர் உறுதியாக குற்றச்செயல் புரிந்துள்ளார் எனின் அவரது பெயர் இல்லாமல் அவரை அணுகி தட்டிக்கேட்பதும் கடினம். பொதுஜனங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் குற்றங்கள் பற்றிய இதுபோன்ற செய்திகளில் குற்றம் செய்பவர் யாரென்று குறிப்பிடப்படவேண்டும். பெயர் வெளியிடப்படாதவரை குற்றவாளி குற்றச்செயலை தொடர்ந்து செய்வதற்கும் அது சாதகமாக அமையும்.

Edited by vanangaamudi

யார் அவர்??? அரேபிய வந்த்தேறியா ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.