Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் – மாற்று அணி உருவாகுமா?

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் – மாற்று அணி உருவாகுமா?

 

tamil_people_council_sri_lanka_tamil_mak

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டமொன்று, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் பேரவையின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

குறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத் தலைவர்களான லக்ஷ்மன், வைத்தியர் வரதராஜன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், பொது அமைப்புக்களின் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைப்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/archives/49452

 
 
 
 
 
 
யாழில் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம்
 
 

யாழில் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம்

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.

இந்தப் கூட்டத்தில் மக்களுக்கு ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம், தமிழ் மக்கள் பேரவையானது தொடர்ந்தும் மக்கள் இயக்கமாகவே செயற்படுமென தமிழ் மக்கள் பேரவையின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

20171112_103515-750x400.jpg20171112_103509-750x400.jpg20171112_103438-750x400.jpg20171112_103414-750x400.jpg

http://newuthayan.com/story/46150.html

  • தொடங்கியவர்

தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும் தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்கும்

  • தொடங்கியவர்

குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது. – சி.வி:-

 

TPC1-800x450.jpg

அரசாங்கம் தருகின்றார்கள் என்பதற்காக, தருவதை தரட்டும் என குறைபாடு உள்ள தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , மருத்துவர் எஸ்.லக்ஸ்மன் மற்றும் வ.வரதராஜா நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையினர் கலந்து கொண்டு இருந்தனர். குறித்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது.

குறைப்பாடு உள்ள அரசியல் தீர்வை தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்காலத்தில் பெற்றுக்கொண்டால் அதில் இருந்து என்றென்றைக்கும் நாங்கள் விடுபட முடியாது. அரசாங்கம் தருவதை தரட்டும் நாங்கள் எங்களின் அடிப்படை உரிமையில் இருந்து விடுபடவில்லை எனும் கொள்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்த வேண்டும் நாங்கள் அனைவரும் சேர்ந்து குறைபாடு உள்ள குறைந்த தீர்வினை பெற்றுக்கொண்டால் , வருங்கால சந்ததி அதனால் மிகவும் பாதிப்படைய போகின்றது.

தற்காலத்தில் கூட வடமாகணத்தில் மக்கள் தொகையில் மாற்றங்களை ஏற்படுத்த பலரும் பல பிரயத்தனங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறைபாடு உள்ள தீர்வினை உள்ளூராட்சி தேர்தலில் தகமையுடையோர் நிறுத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலில் நல்ல தகமையுடையவர்களைக் கொண்டுவரப்பட வேண்டும். அதற்காக கட்சிக்காக உழைப்பவர்கள், தங்களுடன் சேர்ந்திருப்வர்களை மாத்திரம் சேர்க்காமல், அந்தந்த துறைகளில் தகுதியுடையவர்களைச் சேர்க்க வேண்டும். என்னனென்ன குணாம்சம் ஒரு தவிசாளருக்கு இருக்க வேண்டுமோ அவற்றை கொண்டவரையே அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும். அதனைவிடுத்து கட்சி ரீதியாக தமக்குத் தேவையானவர்களை மாத்திரம் எடுக்க கூடாது.

இளைஞர்கள் இளம் பெண்களில் படித்த பட்டதாரிகளை வேட்பாளர்கள் பட்டியலுக்குள் உள்வாங்கவேண்டும்.  சில பேச்சாளர்கள் பேசும் போது, “தகுதியுடைவர்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளாது தமிழ் மக்களின் அடிப்படை உரித்துகளை ஏற்றுக்கொண்டவர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கின்றார்கள்.எந்த கட்சி தேர்தலில் நின்றாலும் தகுதி உடையவர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பில் இருந்து விலகுவது நல்லதல்ல. கூட்டமைப்பில் இருந்து வெளியே செல்வது நல்ல விடயமல்ல. அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நல்லது. தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. மக்கள் இயக்கமாகவே அது தொடர்ந்து செயற்படும் என மேலும் தெரிவித்தார்.

TPC2-800x450.jpg

http://globaltamilnews.net/archives/49474

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் பேரவையின் ஆசியுடன் புதிய கூட்டணி ?

 

gajayan.jpg

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்து உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பேரவையின் பங்களிப்புடன் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஈ.பி.ஆர்.எல்.எப்., சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கி புதிய கூட்டணி உருவாக உள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் அந்த புதிய கூட்டணி போட்டியிடும். அது தொடர்பில் மக்கள் பேரவை உத்தியோக பூர்வ முடிவினை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவெடுத்து உத்தியோக பூர்வ அறிக்கை ஊடாக அதனை வெளிப்படுத்தும் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/49503

  • தொடங்கியவர்

தமிழ்த்தேசியப் பற்றுறுதியும் ஆளுமையுமுள்ள மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்படவேண்டும்…

 

வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ் மக்கள் பேரவைஆரம்பித்துள்ளது-

TPC.jpg

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாகஅடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதிகொண்ட, திறன்மிக்க ஆளுமைகளைமக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ்மக்கள் பேரவை ஆரம்பித்துள்ளது.

இன்றைய சூழலில் மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய அர்ப்பணிப்பும் சேவைமனப்பான்மையும் கொண்ட இளையசமுதாயத்தின் பங்கேற்புடன் கூடிய அரசியற்களத்தின் தேவைபெரிதும் உணரப்படுகின்றது. அதுகாலத்தின் தேவையாகவும் உள்ளது. நாளைய தலைவர்களாக மிளிரக் கூடிய எமது இளையசமுதாயம், சமூகத்தோடு இணைந்து செயற்படவும் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களில் தேர்ச்சிபெறவும்,வெளிப்படைத்தன்மைகொண்ட நிர்வாக அமைப்புக்களைக் கட்டியமைக்கவும் தமக்கான ஓர் வாய்ப்பைத் தேடிக் காத்திருக்கிறது.

நிர்வாகஅனுபவமும் வினைத்திறன் மிக்கஆளுமைப்பண்பும் பொருந்திய குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற அரசாங்கமற்றும் தனியார்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தமது அனுபவ அறிவைமக்களுக்கான சேவையின்பால் தொடரவும் ஆர்வமுள்ளவாகளாக இருப்பதுஅவதானிக்கப்பட்டுவருகின்றது.

தத்தமது பிரதேசங்களில் இருக்கக்கூடிய முன்னேற்றகரமான வாய்ப்புக்களையும் அவற்றை சமூகப்பயன்கொண்டவையாக எய்துவதில் இருக்கக்கூடிய சவால்களையும் தமதுவாழ்வில் அல்லும் பகலும் சந்தித்துவரும் மக்கள் சேவையாளர்கள் பலர், இயலுமானவகைகளில் தமதுதிறன்களைஆக்கபூர்வமாக மடைதிறந்துவிட விருப்புக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஆண்களுக்குநிகராக ,பலசமயங்களில் மேனிலையில் நிர்வாகத்திறன் கொண்டும், அன்பும் அரவணைப்பும் மிக்க தமதுகரிசனைகளைதத்த மதுகுடும்பங்கள் கடந்தும் தாம் வாழும் சமூகத்தின் மீதும் அக்கறையுடன் பகிர்ந்தகொள்ளும் பெண்கள் எம் சமூகத்தின் முன்னோடிகளாக, முன்னுதாரணங்களாக, இருந்துவருகின்றனர்.

வாழ்வியல் விழுமியங்களும் முன்னுதாரணவாழ்வும் நிறைந்தபெருந்தகைகளைநாம் எமதுஊர்களில் இன்றும் காண்கிறோம். இனத்தின் விடுதலையின் பால் நாட்டம் கொண்டு,விசுவாசமும் நேர்மையும் ஒழுக்கமும் மிக்கஉதாரணமனிதர்களாகத் திகழும்,மக்களுக்காகத் தம்மையேஅர்ப்பணித்துப் போராடியமுன்னாள் போராளிகள் பலரும் எம்முள் உள்ளனர்.

ஓய்வறியா உடலுழைப்பும் நேர்மைத்திறனும் நிரம்பப்பெற்றதொழிலாளர்கள் தமதுபயனுறு சக்தியை தாம்சார்ந்த சமூகங்கள் பலன்பெறவும் மானுடவிடுதலையின்பால் தமதுஉழைப்பபைப் பகிர்ந்தகொள்ளவும் வேகங் கொண்டுள்ளனர்.

இத்தகையஒட்டுமொத்தசமூகப் பங்களிப்பைஆக்கபூர்வமான,ஆரோக்கியமானவழியில் எடுத்துச்செல்லும் ஓர் வாய்ப்பாக–எதிர்வரும் உள்ளுராட்சிமன்றங்களிற்கானதேர்தலைப் பயன்படுத்திக் கொள்வதுதமிழ்ப் பிரதேசங்களில் பொதுமக்களின் பங்கேற்புக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்புக்களைமக்கள் தளத்திலிருந்துகட்டியெழுப்புவதற்குஉதவும் எனதமிழர்தரப்பின் பலதளங்களிலிருந்தும் எழுந்தகோரிக்கையைதமிழ் மக்கள் பேரவைகவனத்திற் கொள்கிறது.

உயரியநோக்கங்கள் கொண்ட அரசியல்போ ராட்டவழிமுறையில், சமூகத்தின் அடித்தளஅமைப்பிலிருந்துஅதற்கானபயிற்சிக் களங்களைத் திறப்பதும், அரசியலிலும் நிர்வாகக் கட்டமைப்புக்களிலும் பொதுமக்களின் பங்கேற்பைஅதிகரிக்ககூடியவழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்வதும்,காலத்தின் தேவைஅறிந்தஉத்தியென்றபுத்திஜீவிகளின் ஆலோசனையை தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக் கொள்கின்றது.

பகிரங்கத்தன்மையான, திறந்த, திறன்மிக்க அதிகாரப் பொறிமுறையை அடித்தள அமைப்புக்களில் உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஊழலற்ற, அதிகாரப் போட்டிகளற்ற, மக்கள் சேவை என்றமகுடத்திற்குள் நின்று நிலைபெறக்கூடிய நிர்வாகங்களை ஊரகஅளவில் உருவாக்கிக் கொள்ளவுமான ஒருவாய்ப்பைமிகச் சரியான தெரிவுகளின் அடிப்படையிலான பிரதிநிதித்தவத்தின் மூலம் பெறமுடியுமானால், அதற்கானவழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், ஒத்தசித்தனைகளுடன் பயணிப்பவர்களுடன் அதற்காக் கைகோர்த்துக் கொள்ளவும் தமிழ் மக்கள் பேரவைதயாராகஉள்ளது. இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களும் கருத்தப் பகிர்வுகளும் தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

12-11-2017 தமிழ் மக்கள் பேரவை

http://globaltamilnews.net/archives/49508

  • தொடங்கியவர்

கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறுவது நல்லதல்ல –முதலமைச்சர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.