Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்­னேஸ்­வ­ரன் கற்­றுக்­கொண்ட பாடம்

Featured Replies

  •  

விக்­னேஸ்­வ­ரன் கற்­றுக்­கொண்ட பாடம்

 

தற்­போது ஆட்­சி­யில் உள்ள அர­சைப் பத­விக்­குக் கொண்டு வந்­த­தில் தமி­ழர்­க­ளின் பங்­க­ளிப்பு மறுக்­கவோ, மறைக்­கவோ முடி­யா­தது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு, போர்க்­குற்­றங்­க­ளுக்­கான நீதி, பரி­கா­ரம் என்­ப­வற்­றின் அடி­ப்ப­டை­யில், அர­சி­டம் இருந்து சில எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் தமி­ழர்­கள் தற்­போ­தைய கூட்டு அர­சு­டன் கைகோர்த்­தார்­கள்.

இந்த மக்­கள் ஆணை­யின் அடிப்­ப­டை­யில்­தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் அர­சு­டன் இணைந்து பணி­யாற்­று­கின்­றது. எதிர்க் கட்­சி­யாக இருந்­தா­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆளும் தரப்­பின் பங்­கா­ளி­யா­கவே இயங்க வேண்­டி­யி­ருப்­ப­தன் நிர்ப்­பந்­தம் அது­தான்.

இந்த நிலைப்­பா­டு­தான் எல்­லோ­ரா­லும் கூட்­ட­மைப்பு நிர்ப்­பந்­திக்­கப்­ப­ட­வும் கார­ண­மாக இருக்­கி­றது. பாம்­பென்று அடிக்­க­வும் முடி­யாது, பழு­தென்று மிதிக்கவும் முடி­யாத ஒரு நிலை.

ஆனால், கடந்த காலங்­க­ளில் கூட்­ட­மைப்­பின் இந்த நிலைப்­பாட்டை தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் சிலரே கடு­மை­யாக எதிர்த்­தும் விமர்­சித்­தும் வந்­த­னர். அவர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வ­ராக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைக் குறிப்­பி­ட­லாம்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் அர­சுக்­கு­மான உற­வின்­தற்­போ­தைய போக்­கைத் தொடர்ந்­தும் குறை­சொல்லி வரு­ப­வ­ராக இருந்­தார் அவர்.

அந்­தப் போக்­கில் குறை கண்­ட­த­னா­லேயே கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அர­சி­யல் நிலைப்­பா­டு­டைய ஒரு­வ­ரா­க­வும் கடந்த சில வரு­ டங்­க­ளாக தன்னை அவர் மக்­கள் முன் நிறுத்தி வந்­தார்.

அரசு சொல்­வ­தற்­கெல்­லாம், அல்­லது அரசு விரும்­பு­பவற்­றக்கு எல்­லாம் கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள் தலை­யாட்­டிக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டாது என்று விமர்­சித்­தார். பதி­லாக எமக்கு இது­தான் வேண்­டும் என்று அவர்­கள் உறு­தி­யாக அர­சு­டன் முரண்­பட்டு நிற்­க­வேண்­டும் என்­றார்.

உட­ன­டி­யா­கக் கவ­னிக்க வேண்­டிய பல விட­யங்­க­ளில் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் முன்­வைத்த கோரிக்­கை­களை, வலி­யு­றுத்­தல்­களை அரசு கண்­டு­கொள்­ளா­மல் நகர்ந்­த­போது கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள் இப்­போ­துள்­ள­தை­வி­டக் கடு­மை­யாக நடந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றும், இன்­னும் தீவி­ர­மா­கக் கடு­மை­யாக அர­சு­டன் முட்­டி­மோ­த­வேண்­டும் என்­றும் விக்­னேஸ்­வ­ரன் தனது உரை­க­ளில் எடுத்­து­ரைத்­தார்.

ஆனால், கூட்­ட­மைப்பை அப்­படி வெளி­யி­லி­ருந்து விமர்­சிக்க முடிந்த விக்­னேஸ்­வ­ர­னால் அத்­த­கை­ய­தொரு நிலமை, சூழல் தனக்கு ஏற்­பட்­ட­போது அந்த இடத்­தி­லி­ருந்து நழு­வத்­தான் முடிந்­தி­ருக்­கி­றதே தவிர, முடி­வெ­டுக்க முடிந்­தி­ருக்­க­வில்லை.

அண்­மை­யில் நடந்து முடிந்த தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டத்­தில், கூட்­ட­மைப்­பைப் பல­வீ­னப்­ப­டுத்­தும் விதத்­தில் அதி­லுள்ள கட்­சி­கள் நடந்­து­கொள்­ளக்­கூ­டாது என்ற சாரப்­பட அவர் ஆற்­றிய உரையை அங்­கி­ருந்த ஈ.பி­.ஆர்­எல்­எவ் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னும், தமிழ் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­ல­மும் எதிர்த்­த­போது கூட்­டத்­தி­லி­ருந்தே நழு­விச் சென்­று­விட்­டார் முத­ல­மைச்­சர்.

அதன் பின்­னர் தொடர்ந்து நடந்த பேர­வை­யின் கூட்­டத்­தில் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளா­ன­மு­த­ல­மைச்­ச­ரும் கிழக்கு மாகா­ணப் பிர­தி­நி­தி­யும் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு மாறான ஒரு முடிவு எடுக்­கப்­பட்டு, பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பேர­வை­யின் அப்­ப­டிப்­பட்ட முடிவு ஏற்­பு­டை­யது அல்ல என்று முத­ல­மைச்­சர் வெளி­யி­லி­ருந்து முத­லில் கருத்­துத் தெரி­வித்­தார்.

பின்­னர் பேர­வை­யின் அறிக்கை வெளி­யா­னதை அடுத்து அதற்கு எதி­ரான தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தும் அறிக்கை ஒன்று அவ­ரி­டம் இருந்து வெளி­வ­ரும் என்று சொல்­லப்­பட்­டது.

இந்­தத் தக­வலை அடுத்து அவ­ரைச் சந்­தித்த பேர­வைப் பிர­தி­நி­தி­கள் இர­வி­ர­வாக அவ­ரு­டன் நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டி­னர். அதனை அடுத்து நேற்று அவர் விடுத்த கேள்வி பதில் அறிக்­கை­யில் தனது முன்­னைய நிலைப்­பாட்­டில் இருந்து முற்­றி­லும் மாறான ஒரு கருத்தை அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

கூட்­ட­மைப்­பைப் பலப்­ப­டுத்­த­வேண்­டிய நேரத்­தில் அதனை உடைக்­கப் பார்க்­கி­றார்­கள் என்று சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனை விமர்­சித்­த­வர், நேற்­றைய அறிக்­கை­யில் கூட்­ட­மைப்பு தனது தேர்­தல் அறிக்­கை­யின்­படி நடந்­து­கொள்­ளா­ததே அது உடை­வ­தற்­கான கார­ணம் என்று தெரி­விக்­கி­றார்.

இப்­ப­டித் தான் சார்ந்­துள்ள ஒரு மிகச் சிறிய அமைப்­புக்­குள்­ளேயே தனது நிலைப்­பாட்டை ஆணித்­த­ர­மா­கச் சொல்லி அந்த அமைப்பை வழிக்­குக் கொண்டு வர­மு­டி­யாது, அதன் நிலைப்­பாட்­டு­க்கு அமைவாக இரு நாள்­க­ளுக்­குள் தனது நிலைப்­பாட்டை மாற்­றும் முத­ல­மைச்­சர், 60 வரு­டங்­க­ளுக்­கும் மேலான ஒரு போராட்ட வர­லாற்­றைக் கொண்ட பிரச்­சி­னை­யில்- அதன் ஒரு வர­லாற்­றுத் தரு­ ணத்­தில் – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் மட்­டும் எடுத்­தேன் கவிழ்த்­தேன் என்று முடி­வு­க­ளை­யும் எடுத்து அர­சுக்கு எதிர்ப்­பைக் காட்­ட­வேண்­டும் என்று எப்­படி எதிர்­பார்க்­கி­றார்.

அர­சி­யல் என்­பது தலை­வர்­கள் விரும்­பும் முடி­வு­களை எடுக்­கும் களம் மட்­டு­மல்ல, அது சூழ­லை­யும் தேவை­க­ளை­யும் பொறுத்து முடி ­வெ­டுக்­கப்­ப­டும் இடம் என்­பதை முத­ல­மைச்­சர் இப்­போது, இந்­தப் பாடத்­தில் இருந்­தா­வது புரிந்­து­கொள்­வார் என்று நம்­ப­லாம்.

http://newuthayan.com/story/46868.html

15 hours ago, நவீனன் said:

விக்­னேஸ்­வ­ரன் கற்­றுக்­கொண்ட பாடம்

விக்­னேஸ்­வ­ரன் பாடங்கள் எதையும் கற்­றுக்­கொள்ளவில்லை. மாறாக அவர் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளான சரவணபவன், மாவை, சுமந்திரன், சம்பந்தன் போன்ற மக்குகளுக்கும், உதயன் போன்ற மூன்றாம்தர பத்திரிகைகளுக்கும் பாடம் கற்பிக்க முயலுகிறார். ஆனால் இந்த மக்குகளுக்கு இவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் இல்லை.

21 hours ago, Rajesh said:

விக்­னேஸ்­வ­ரன் பாடங்கள் எதையும் கற்­றுக்­கொள்ளவில்லை. மாறாக அவர் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளான சரவணபவன், மாவை, சுமந்திரன், சம்பந்தன் போன்ற மக்குகளுக்கும், உதயன் போன்ற மூன்றாம்தர பத்திரிகைகளுக்கும் பாடம் கற்பிக்க முயலுகிறார். ஆனால் இந்த மக்குகளுக்கு இவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் இல்லை.

தமிழர் மத்தியில் தரமான தமிழ் பத்திரிகையும், தரமான ஆங்கிலப் பத்திரிகையும் இல்லாதது பாரிய பின்னடைவு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.