Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேஷ், கஜேந்­தி­ர­கு­மா­ரு­ட­னான சந்­திப்பில் சி.வி. கருத்து மக்கள் இயக்கமாகவே பேரவை செயற்படும் என்றும் தெரிவிப்பு

Featured Replies

பேர­வையின் கொள்­கை­களை முன்­னெ­டுத்தால் யாருக்கும் ஆத­ரவு

28-ef7198cbc1e8aa71ed834d61d1cf756e75b589c1.jpg

 

சுரேஷ், கஜேந்­தி­ர­கு­மா­ரு­ட­னான சந்­திப்பில் சி.வி. கருத்து  மக்கள் இயக்கமாகவே பேரவை செயற்படும் என்றும் தெரிவிப்பு
(நமது நிருபர்)

பேர­வையில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் தேர்­தலில் பங்­கேற்­பது அவர்­க­ளது உரி­மை­யாகும்.பேர­வையின் கொள்­கைகள், செயற்­றிட்­டங்­களை  இந்தக் கட்­சிகள் அல்­லது தனி நபர்கள் முன்­னெ­டுப்­பார்­க­ளாயின் அதற்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டிய கடமை உள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.  

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், ஈ.பி.ஆர்.எல்.எவ்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்தின் ஆகியோர் அடங்­கிய குழு நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இந்­தச்­சந்­திப்­பின்­போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

இந்­தச்­சந்­திப்­பின்­போது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தாம் கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வது தொடர்பில் இரு கட்­சி­களின் தலை­வர்­களும் முத­ல­மைச்­ச­ருக்கு விளக்கிக் கூறி­யுள்­ளனர்.

இந்தச் சந்­திப்பு தொடர்பில் கருத்து தெரி­வித்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம்,

உள்­ளூ­ராட்சி தேர்தல் விடயம் குறித்தும் எமது கூட்­டணி தொடர்­பா­கவும் நாம் விளக்கிக் கூறினோம். இதன்­போது கருத்­து­ரைத்த முத­ல­மைச்சர் தமிழ் மக்கள் பேரவை என்­பது மக்கள் இயக்­க­மாகும். அந்த இயக்கம் அர­சி­யலில் ஈடு­ப­ட­மு­டி­யாது. மக்கள் இயக்­க­மா­கவே அது இருக்க வேண்டும்.

ஆனாலும் பேர­வையில் அங்கம் வகிக்கும் கட்­சி­யினர் அல்­லது தனி நபர்கள் தேர்­தல்­களில் போட்­டி­யிட முடியும். அதற்­கான உரிமை அவர்­க­ளுக்கு உள்­ளது. இவ்­வாறு போட்­டி­யி­டு­ப­வர்கள் பேர­வையின் கொள்­கை­க­ளையும் செயற்­றிட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்தச் செல்­வார்­க­ளாயின் அதற்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டி­யது பேர­வையின் கட­மை­யாக இருக்கம்.

இந்­த­வே­ளையில் தமிழ் அர­சி­யலில் மாற்று அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக வேண்­டி­யதும் தேவை­யா­க­வுள்­ளது. நாம் உரிய அர­சியல் முடி­வு­களை இந்தக் காலப்­ப­கு­தியில் எடுக்­கா­விடின் இன்னும் 5 வரு­டங்­களில் நாம் முழு­மை­யான இழப்­புக்­களை சந்­திக்­க­வேண்டி வர­லாம்எ ன்று முத­ல­மைச்சர் எம்­மிடம் கூறினார் என்று தெரி­வித்தார்.

இதே­வேளை முத­ல­மை்­சசர் வி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பு.ௌாட் அமைப்பின் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் நேற்று முன்தினமிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே இருக்குமெ்னறும் அதில் மாற்றக் கருத்துக்கு இடமில்லை என்றும் முதலாமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-16#page-1

1 hour ago, நவீனன் said:

சுரேஷ், கஜேந்­தி­ர­கு­மா­ரு­ட­னான சந்­திப்பில் சி.வி. கருத்து  மக்கள் இயக்கமாகவே பேரவை செயற்படும் என்றும் தெரிவிப்பு

தமிழர் காலைவாரிவிடும் தமிழரசுக்கட்சியை உடைப்பதற்கு பதிலாக கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் போன்ற சுயநல அரசியல்வாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இதே­வேளை முத­ல­மை்­சசர் வி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பு.ௌாட் அமைப்பின் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் நேற்று முன்தினமிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே இருக்குமெ்னறும் அதில் மாற்றக் கருத்துக்கு இடமில்லை என்றும் முதலாமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-16#page-1

ஒருவேளை பேரவை புதிய கட்சியேதுக்கும்ஆதரவளித்துவிட்டால் தாம் இல்லாதுபோய்விடுவோம்  என்ற பதட்டத்தைத் த.தே.கூட்டமைப்பு எதிர்கொள்வதின் விளைவே இச் சந்திப்பா? தமிழரது தேசிய நலனைக்காலிற்போட்டு மிதித்தவாறு "கூட்டமைப்பு" என்ற பெயரைவைத்துக் கூத்தாடும் தமிழரசுக்கட்சிக்கு (கூட்டமைப்புக்கு) சரியானதொரு பாடத்தைத் தமிழ்மக்கள் கற்பிக்கவேண்டியது அவசியமாகும். உள்ளுராட்சித்தேர்தலைத் தமிழினம் தனது அரசியல் விருப்புக்கான ஆயுதமாக மாற்றி உலகுக்கு ஒரு செய்தியைச் சொல்லவேண்டும். சிறிலங்காவுக்கோ கூத்தமைப்புக்கோ  அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.