Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன ­ரீ­தி­யான பதற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டாம்...பகிரங்கமாக மஹிந்­த­விடம் கோரிக்கை விடுத்தார் சம்­பந்தன்

Featured Replies

இன ­ரீ­தி­யான பதற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டாம்

258-bfd6f8ac1cf4fc4ae0ea820898aa1983b92a8198.jpg

 

பகிரங்கமாக மஹிந்­த­விடம் கோரிக்கை விடுத்தார் சம்­பந்தன்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் செயற் பா­டுகள் இனங்­க­ளி­டையே ஐக்­கியமின்­மையை ஏற்­ப­டுத்து­கி­றது. அவர் அதி­காரப் பகிர்­வுக்கு எதி­ராக இருக்கி­றாரா என்­பதை வெளிப்­ப­டை­யாக தெரி­விக்க வேண்டும் என கோரிய எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன்  புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­க­ளுக்கு மகிந்த ராஜ­பக்ஷ ஒத்­து­ழைப்­ப­ளிப்­பது அவ­ரது அடிப்­படைக் கட­மை­யென்றும் சுட்­டிக்­காட்­டினார். 

புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் மகிந்­த­ரா­ஜ­பக்ஷ இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கியம் இன்­மையை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டிய எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் அதி­கா­ரங்­களை கைப்­பற்­று­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை பயன்­ப­டுத்த வேண்டாம் என்றும் கேட்­டுக்­கொண்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாத்­தினை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

நாட்டின் பொரு­ளா­தாரம் சிக்­கி­லாக இருக்கும் சந்­தர்ப்­பத்தில் தனது வரவு செல­வுத்­திட்­டத்­தினை நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர சமர்ப்­பித்­துள்ளார். சிக்­க­லாக இருக்கும் இந்த நிலை­மையில் அதற்கு முகங்­கொ­டுக்கும் வகை­யி­லான வரவு செலவுத் திட்­ட­மொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காணும் விட­யத்­திலும் மக்­களின் உரி­மை­களை மேம்­ப­டுத்தும் விட­யத்­திலும் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­ட­வ­ராவார்.

இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் தேசியப் பிரச்­சி­னைக்கும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் பல முன்­மொ­ழி­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. மோத­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக பல பல பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது. அதற்கு இந்த வர­வு-­செ­ல­வுத்­திட்டம் சிறந்த ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த வர­வு-­செ­லவுத் திட்ட முன்­மொ­ழி­வு­களை அந்­தந்த அமைச்­சுகள் மிக விரைவில் செயற்­ப­டுத்த வேண்டும். எமது நாடு பல இயற்கை வளங்­களை கொண்­டுள்­ளது. இந்த நாட்­டுக்கு வர்த்­தக கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த அமை­விடம் பொரு­ள­தா­ரத்­திற்கு வலுச்­சேர்ப்­ப­தா­க­வுள்­ளது.

எமது பொரு­ளா­தா­ரத்தை உள்­ளுர்­மட்­டத்தில் பலப்­ப­டுத்த வேண்டும். நாம் சுதந்­திரம் அடைந்த போது எம்­மிடம் ஆரோக்­கி­ய­மான பொரு­ளா­தாரம் காணப்­பட்­டது. பல நாடுகள் எம்மை வியப்­பாக பார்த்­தன. ஆனால், சில நோய்கள் எமது நாட்­டினை பீடித்­தன. குறிப்­பாக சமத்­துவம் இன்மை பார­பட்­டசம், நீதி­யின்மை, தனிப்­ப­டுத்தல் என எமக்கு ஏற்­பட்ட நோய்­களால் பொரு­ளா­தார வளர்ச்­சி­யற்­றுப்­போ­னது.

இந்த நாட்டில் ஜன­நா­யக வலு­வூட்­ட­லுக்­கான கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை, சிவி­லியன்;களுக்கு எதி­ரானத் தாக்­குதல், சட்­ட­வாக்கம் அமுல்­ப­டுத்­தாமை என்­பன அபி­வி­ருத்­திக்குத் தடை­யாக இருந்­தன. ஆயுதம் தாங்­கிய போராட்­டத்­திற்கும் அதுவே இட்­டுச்­சென்­றது. ஜன­நா­யக தமிழ் தலை­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால் யுத்­தத்தை தடுத்­தி­ருக்­கலாம். இந்த நாட்டில் ஒரு ஐக்­கியம் ஏற்­பட்­டு­ருக்கும். அந்த சந்­தர்ப்­பங்கள் நழு­வி­டப்­பட்­டுள்­ளன.

எமது நாட்டின் இறைமை ஆட்­புல பிர­தேசம் பாது­காக்­கப்­பட்டு ஏற்­று­மதி சார் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். எமக்கு அண்­மையில் பல சந்தை வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே அந்த நாடு­களை இணைத்து செயற்­பட்டால் பொரு­ளா­தார வெற்­றிக்­களை கொள்ள முடியும்.

எமது நாட்­டிற்கு சர்­வ­தேச ரீதியில் பல உத­விகள் கிடைக்­கின்­றன. அந்த உத­வி­களைப் பயன்­ப­டுத்தி ஐக்­கி­யத்­தையும், நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தா­னத்­தையும் இந்த நாட்டில் ஏற்­ப­டுத்த வேண்டும். அவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­ப­டு­வ­தற்கு இந்த நாட்டில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­பட வேண்டும். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை எட்­டு­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டடில் ஈடு­பட்­டுள்ளோம். இந்த செயற்­பாட்டில் வெற்­றி­ய­டை­வ­தா­னது இந்த நாட்டில் வெற்­றி­க­ர­மான பொரு­ளா­தா­ரத்­திற்கு வழி­வ­குக்கும். இதன் மூலமே நாட்டில் நிரந்­த­ர­மான சமா­தா­னத்­தையும் சாத்­தி­ய­மான பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யையும் ஏற்­ப­டுத முடியும்.

துர்­திஸ்­ட­வ­ச­மாக எமது நாடு பொரு­ளா­தா­ரத்தில் பெரும் பின்­ன­டை­வினை அடைந்­துள்­ளது. பாரிய கடன் சுமை­யினுள் உள்­ளது. இதற்­கான கார­ணத்தை இந்த நாட்டின் மக்கள் அறிந்­துள்­கொள்ள வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் செயற்­பா­டுகள் இனங்­க­ளி­டையே ஐக்­கியம் இன்­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றன. அவர் அதி­காரப் பகிர்­வுக்கு எதி­ராக இருக்­கி­றாரா என்­பதை வெளிப்­ப­டை­யாக தெரி­விக்க வேண்டும். கொழும்பில் இருந்து மாத்­திரம் அதி­கா­ரத்தை செலுத்த வேண்டும் என்று விரும்­பு­கின்­றாரா என்­பதை பகி­ரங்­க­மாக தெரி­விக்க வேண்டும். அவர் 18 ஆவது திருத்­தத்தின் ஊடாக இதனை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சித்­தி­ருந்தார்.

மக்­கள தமது இறை­மையின் அடிப்­ப­டையில் ஆட்­சியில் பங்கு கொள்ள வேண்டும் என்றால் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். அதி­காரப் பகிர்வு நாட்டைப் பிரிப்­ப­தற்­கான முயற்சி என்று முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ கூறு­கிறார். அது பொய்­யான கூற்­றாகும். அவ்­வாறு அவர் கூறு­வ­தையும் நாள் முற்­றாக நிரா­க­ரிக்­கின்றேன். இந்த நாடு பிள­வுப்­ப­டா­த­தது பிரிக்க முடி­யா­தது என்று நாம் குறிப்­பிட்­டுள்ளோம். நாட்­டுக்குள் அதி­கா­ரங்கள் பகி­ரப்­படும் போது நாடு பிள­வ­டை­யாது என்று தெட்டத் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. ஒரு மூத்த அர­சியல் வாதி­யி­ட­மி­ரு­நது இவ்­வா­றான வெளிப்­பாடு வரக்­கூ­டாது. அவ­ரிடம் இருந்து இவ்­வா­றான வெளிப்­பாடு வெளி­வ­ரு­வ­தை­யிட்டு கவ­லை­ய­டை­கின்றேன்.

தற்­போது ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் இலங்­கையின் எதிர்­கா­லத்தை கருத்திற் கொண்டு நாட்டை ஒன்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மக்­களின் அபிப்­ப­ரா­யங்­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்க ஒரு வரு­டத்­திற்குள் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போது முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அவ்­வா­றா­ன­தொரு அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டதை அடுத்து அதை மக்­களின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு சமர்ப்­பிப்பேன் என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். இங்கு யாரும் அதைத் தவிர வேறு எதையும் செய்­ய­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தும் குழு, உப­கு­ழுக்கள், நிபு­ணர்கள், மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்கள் ஊடாக நாமும் அர­சி­ய­ல­மைப்பு வரை­வொன்­றையே உரு­வாக்கப் பார்க்­கிறோம். இந்த அனைத்து விட­யங்­களும் பரி­சீ­லிக்­கப்­பட்­டுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பு சபையில் இது விவாத்­திக்­கப்­பட்­டதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்­தினால் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையில் நிறை­வேற்­றப்­பட்டு அத­னை­ய­டுத்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்­றினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதை விடுத்து மக்­க­ளுக்கு மறைத்து எதையும் செய்ய வேண்­டிய அவ­சியம் எமக்கு கிடை­யாது.பின்னர் எதற்­காக அவர் முன்­மொ­ழிந்­த­வொரு விட­யத்­தையே எதிர்க்­கிறார்?

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் போது மகிந்த ராஜ­பக்ஷ சில விட­யங்­களை தெரி­வித்­தி­ருந்தார். அப்­போது அவர் முன்­வைத்த விட­யங்­க­ளையே எதற்­காக தற்­போது எதிர்க்­கிறார்? 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றும் தீர்­மானம் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. அதன்­மூலம் புதிய அர­சி­ய­ல­மைப்பை இயற்­று­வ­தற்­கான பணி­களை நாம் ஆரம்­பித்­தி­ருந்தோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று இயற்­றப்­ப­டு­வதை நீங்கள் எதிர்க்கும் பட்­சத்தில் நீங்கள் ஏன் அந்த பாரா­ளு­மன்ற அமர்­விற்கு வருகை தந்து அந்த தீர்­மா­னத்தை எதிர்த்­தி­ருக்­க­வில்லை என்று நான் மகிந்த ராஜ­ப­க்ஷ­விடம் கேள்வி எழுப்­பு­கிறேன். அந்த அமர்­வுக்கு வருகை தந்து புதிய அர­சி­ய­ல­மைப்பு இந்த நாட்­டுக்கு தேவை­யில்லை என்று நீங்கள் ஏன் கூறி­யி­ருக்­க­வில்லை? அந்த சந்­தர்ப்­பத்தில் நீங்கள் ஏன் அதை எதிர்த்­தி­ருக்­க­வில்லை? என்­பதே எனது கேள்­வி­யாகும். இதற்கு அவர் பதி­ல­ளிக்க தயா­ராக இருக்­கின்­றாரா?

தற்­போது உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில், அந்த தேர்­தலில் மகிந்த ராஜ­பக்ஸ வெற்றி பெற்று அர­சாங்­கத்தை தோற்­க­டிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. அது உங்­க­ளது அர­சியல் செயற்­பாடு என்ற வகையில் அது பற்றி யாரும் குறை கூற முடி­யாது. ஆனாலும் அந்த இலக்கை அடை­வ­தற்­காக நீங்கள் இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யா­னது நாட்டை பிள­வுப்­ப­டுத்­து­மென்று கூறி இந்த நாட்டில் இன ரீதி­யான பதற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கி­றீர்கள். இது தான் உங்­க­ளது நிலை­பா­டாக இருக்­கு­மென்றால் அர­சி­ய­ல­மைப்பு சபை தொடர்­பான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போது நீங்கள் பாரா­ளு­மன்றம் வந்து அந்த தீர்­மா­னத்தை ஏன் எதிர்த்­தி­ருக்­க­வில்லை? அவ்­வா­றி­ருக்­கையில் எமது மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்கும் வழியை எதிர்க்­கா­தீர்கள்.

2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இலங்கைத் தொடர்­பான தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக தேவை­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுத்து அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­பட வேண்­டி­யதை அந்த தீர்­மானம் வலி­யு­றுத்­து­கி­றது. இந்த நாடு ஏற்­றுக்­கொண்ட இந்த தீர்­மானம் மீறப்­பட வேண்டும் என்று கரு­து­கி­றீர்­களா? இலங்­கையில் நல்­லி­ணக்கம் மற்றும் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் நிமித்தம் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான சில விட­யங்­களை செய்­வ­தாக நீங்கள் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு உறு­தி­ய­ளித்­துள்­ளீர்கள்.

2015 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தாக 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் எமது நாட்டின் நிலைமை மிகவும் மோச­மாக இருந்­தமை எமக்குத் தெரியும். இந்த நாடு பொரு­ளா­தார தடை­க­ளுக்கும் பெரும் சிர­மங்­க­ளுக்கும் உள்­ளாகும் நிலை­மை­யொன்றும் காணப்­பட்­டது. எனினும், புதிய அர­சாங்­க­மொன்று ஆட்­சிக்கு வந்து புதிய போக்­கொன்று வந்­த­மை­யினால் அவை இடம்­பெ­ற­வில்லை.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வைக்கு நாம் ஏற்­க­னவே அளித்­துள்ள உறு­தி­மொ­ழி­களை கடை­பி­டிப்­ப­தற்கு நாம் கடப்­பட்­டி­ருக்­க­வில்­லையா என்று நான் உங்­க­ளிடம் கேட்­கிறேன். நீண்ட கால­மாக நான் சிறந்­த­மு­றையில் உங்­க­ளுடன் தனிப்­பட்ட உற­வினை பேணி­வ­ரு­கின்றேன். அத்­த­கைய முன்னாள் மகிந்த ராஜ­பக்ஷ இங்கு இருப்­ப­தை­யிட்டு நான் சந்­தோ­ச­ம­டை­கிறேன்.

உங்­க­ளது ஒத்­து­ழைப்பு எமக்குத் தேவை. நீங்கள் இந்த நாட்­டி­லுள்ள சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யொ­ருவர். இந்த நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் மதிப்பை நீங்கள் கொண்­டி­ருக்­கி­றீர்கள். புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை இயற்­று­வதில் நீங்கள் பங்­க­ளிப்பு செய்ய வேண்டும் என்­பது எமது விருப்­ப­மாகும். இதற்கு ஒத்­து­ழைப்­ப­ளிக்­கு­மாறு நான் உங்­க­ளிடம் கோரு­கிறேன்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 10 வரு­டங்கள் மகிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியில் இருந்தார். 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஆட்­சியில் இருந்த ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் அர­சாங்­கத்­திலும் அங்கம் வகித்­தி­ருந்தார். அப்­படி பார்க்கும் போது சுமார் 20 வரு­டங்கள் மகிந்த ராஜ­பக்ஸ அதி­கா­ரத்தில் இருந்­துள்ளார். 2015 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இந்த நாட்டு மக்கள் உங்­களை ஜனா­தி­ப­தி­யா­கவோ அல்­லது பிர­த­ம­ரா­கவோ தெரி­வு­செய்­தி­ருக்­க­வில்லை.

2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் உங்­க­ளுக்கு கிடைத்த வாக்­கு­களின் எண்­ணிக்­கை­யுடன் ஒப்­பிடும் போது 2015 ஆம் ஆண்டு தேர்­தல்­களில் உங்­க­ளுக்­கான வாக்­குகள் கணி­ச­மா­ன­ளவு குறை­வ­டைந்­தி­ருந்­தன. மக்கள் உங்­களை ஜனா­தி­ப­தி­யா­கவோ அல்­லது பிர­த­ம­ரா­கவோ தெரி­வு­செய்ய விரும்­ப­வில்லை என்­பதை தெளி­வாக எடுத்­து­ரைத்­தி­ருந்­தனர். அது தான் இந்த நாட்டு மக்­களின் ஆணை­யாக இருந்­தது. அந்த ஆணை மதிக்­கப்­பட வேண்டும்.

சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யா­கவும், ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ரா­கவும் மக்கள் தெரி­வு­செய்­தி­ருந்­தனர். இந்த நாட்டின் நல­னுக்­காக இரண்டு கட்­சி­களும் இணைந்து செயற்­பட வேண்டும் என்­பதை மக்கள் விரும்­பு­கி­றார்கள் என்­பதே அந்த தெரி­வு­களின் அர்த்­த­மாகும். அதையே மக்­களின் ஆணை தெளி­வாக எடுத்­து­காட்­டி­யி­ருந்­தது.

நீங்கள் சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட தலை­வ­ராக இருக்­கி­றீர்கள். உங்­க­ளது தந்தை டி.ஏ. ராஜ­ப­க்ஷவின் மீது நான் மிகுந்த மாரி­யாதை வைத்­துள்ளேன். பல சிரேஷ்;ட தலை­வர்கள் அப்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் இருந்­த­போ­திலும் கூட டி.ஏ. ராஜ­பக்ஷ மட்­டுமே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க அர­சி­லி­ருந்து வெளி­யேறி எதி­ர­ணிக்கு சென்ற போது அவ­ருடன் சென்றார். பண்­டா­ர­நா­யக்க அதை எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. அவர் பின்னால் திரும்பிப் பார்த்­து­விட்டு பின்­தொ­டர்­வது தனது நிழல் என்ற தாம் கரு­தி­ய­தாக தெரி­வித்­தி­ருந்தார். அந்த சந்­தர்ப்­பத்தில் இருந்து உங்­க­ளது தந்தை மீது நான் மிகுந்த மரி­யாதை கொண்­டி­ருந்தேன்.

உங்களையும் அந்த உயர் மதிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அது உங்களது அடிப்படை கடமை என்பதை உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். அந்த கடமையில் இருந்து நீங்கள் விலகிவிடக் கூடாது. அது தான் இந்த நாட்டுக்கு தேவையானயாகவுள்ளது.

இந்த நாடு மீண்டும் இருளுக்குள் செல்லாமல் வெளிச்சத்திற்கு வந்து முன்னேறி செல்வதென்றால் நாம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும். அது எமது மக்களை ஐக்கியப்படுத்துவதாகவும் அனைத்து இலங்கையர்களும் இலங்கை என்ற பிளவுபடாத பிரிக்கப்பட முடியாத எமது நாட்டில் வாழக்கூடியதாக இருக்கும் வகையிலும் அமைய வேண்டும். அதன் நிமித்தம் நீங்கள் அதை செய்ய வேண்டும்.

நீங்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் அதை வேறு வழிகளில் செய்யுங்கள். அதில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வழியாக அரசியலமைப்பை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. அது செய்யப்படக் கூடாது.

பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த கட்சியில் நீங்கள் அங்கம் வகிக்கிறீர்கள். நாம் உங்களுக்கு பல்வேறு தேர்தல்களிலும் ஆதரவளித்திருக்கிறோம். நாம் உங்களுக்கு எதிரானவர்கள் என்று கருத வேண்டாம். எமக்கு எதிராகவும் இருக்க வேண்டாம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பளிக்குமாறு நான் உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இது உங்களது அடிப்படைக்கடமையாகும். இந்த நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்த செயற்படுவோம். புரிந்து கொள்ளுங்கள் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-17#page-1

  • கருத்துக்கள உறவுகள்
அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதமாக அரசியலமைப்பை பயன்படுத்த வேண்டாம்! - மகிந்தவைக் கோரும் சம்பந்தன் 
[Friday 2017-11-17 08:00]
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பு தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பு தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.   

அரசியலமைப்பு தயாரிப்பை எதிர்ப்பதாயின் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்க முடியும். மக்கள் மத்தியில் இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

2018ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

"உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியதேவை உங்களுக்கு உள்ளது. அது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் அது குறித்து எவரும் முறைப்பாடு செய்ய முடியாது. எனினும், இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். இதனாலேயே அரசியலமைப்பு நாட்டை பிரிக்கும் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கின்றீர்கள். அரசியலமைப்பு தயாரிப்புக்கு எதிர்ப்புதெரிவிப்பதாயின், ஏன் பாராளுமன்றத்துக்கு வந்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவில்லை" என்றும் கேள்வியெழுப்பினார்.

அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் வேறுவழிகளில் அதனைக் கைப்பற்றுங்கள். அதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரத்துக்கு வருவதற்காக அரசியலமைப்பை ஒரு வழியாகப் பயன்படுத்த வேண்டாம் என்றார். "மக்களால் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவரான நீங்கள் அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாடுகளில் பங்குதாரராக கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகின்றோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். இதிலிருந்து விலகமுடியாது" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசியலமைப்பு தொடர்பில் எதிரான கருத்துக்களைக் கேட்க முடிகிறது. இது துரதிஷ்டவசமானது என்பதுடன், இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையாது என்பதை அவர்கள் உணரவேண்டும். அரசியலமைப்பின் கடந்தகால மற்றும் தற்கால அனுபவங்கள் குறித்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இது நாட்டில் அக்கறையுடையவர்களின் அடிப்படையாகும். இதுவிடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் எடுத்துள்ள நிலைப்பாடானது சமூகங்களுக்கிடையில் குரோதத்துக்கே வழிவகுக்கும்.

அவர் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், அதிகாரங்கள் கொழும்பில் மாத்திரமே இருக்கவேண்டும் எனக் கூறிவருகிறார். பதினெட்டாவது திருத்தத்தின் ஊடாக இதனை அவர் நடைமுறைப்படுத்த முயற்சித்திருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினருக்கே நன்மை பயப்பதாக இருக்கும். அதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது. அதிகாரத்தில் நேரடியாகப் பங்கெடுப்பதாயின் அதிகாரம் பகிரப்பட வேண்டும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்‌ஷ கூறிவருகின்றார். அவருடைய இந்தக் கருத்து பிழையானது என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றேன். பிரிக்கப்படாத, ஒற்றுமையான நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு என்பதை நாம் முன்வைத்த யோசனைகளில் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே தேசிய அரசாங்கம் தற்பொழுது அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. அரசியலமைப்பு சபை மற்றும் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு, பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றின் ஊடாக அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். மக்களுக்குத் தெரியாமல் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட விரும்பவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தன்னால் முன்மொழியப்பட்ட விடயத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தற்பொழுது எடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையொன்று சபையில் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இதன் மூலம் ஆரம்பமானது. அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாயின் ஏன் பாராளுமன்றத்தில் வந்து அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாக்களிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியுள்ளது. இது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் யாரும் அதற்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியாது. இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி இதுவல்ல.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் வழங்கிவரும் அர்ப்பணிப்பு மற்றும் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், சமாதானத்தை ஏற்படுத்தவும் ஐ.நா மனித உரிமைகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளன. 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைமை மோசமாக இருந்ததுடன், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளைக் கொண்டுவருவதற்கான நிலைமை காணப்பட்டது. அவ்வாறு தடைகள் கொண்டுவரப்பட்டிருந்தால் நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதா எனக் கேட்விரும்புகின்றேன்? எம்முடன் ஒத்துழைத்து செயற்படுமாறு கோருகின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தார். இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்திலும் அங்கம் வகித்திருந்தார். இதற்கமைய 20 வருடங்களாக மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடைபெற்றன. இந்த நாட்டிலுள்ள மக்கள் உங்களை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யவுமில்லை. உங்களை பிரதமராகவும் தெரிவுசெய்யவில்லை.

2010 ஆண்டு தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் நீங்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்களை தெரிவுசெய்ய மக்கள் விரும்பவில்லையென்பது தெளிவாகப் புரிந்தது. மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணை மதிக்கப்பட வேண்டும். மக்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ஐ.தே.கவைச் சேர்ந்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையும் மக்கள் தெரிவுசெய்துள்ளனர். இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

நீங்கள் தலைவர் என்பதுடன் உங்களுடைய தந்தை மீது நாம் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, அவருடன் சேர்ந்து சென்ற ஒரேயொரு அரசியல்வாதி உங்களுடைய தந்தையாராவார். தன்னை பின்தொடர்வது நிழல் என்று நினைத்ததாக பண்டாரநாயக்கவே கூறியிருந்தார். அந்த நாளிலிருந்து உங்கள் தந்தையார் மீது நான் மிகுந்த கௌரவத்தைக் கொண்டிருக்கின்றேன். அந்த மதிப்பை நீங்களும் கொண்டிருக்கவேண்டும் என்றே விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாட்டுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். நீங்கள் இந்தக் கடமையிலிருந்து தவறமுடியாது. நாடு இதனையே எதிர்பார்த்துள்ளது. நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குப் போகக் கூடாது என்பதையே மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் ஒளியைப் பெற்று முன்னோக்கி நகர்ந்து செல்லவேண்டும் என கருதினால் கட்டாயமாக புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்கவேண்டும். மக்களை ஒன்றிணைப்பதற்கு இது அவசியமாகும். இலங்கை எமது நாடு என்ற உணர்வுடன் சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய உணர்வு வழங்கப்பட வேண்டும். பிரிக்கப்படாத நாட்டுக்குள் நீங்கள் இதனைச் செய்ய வேண்டும்.

சுதந்திரக் கட்சிக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. எங்களை எதிரானவர்களாக பார்க்க வேண்டாம் என சு.க எம்.பிக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். கடந்த காலத்தில் சு.கவுக்கு தேர்தல்களில் ஆதரவு வழங்கியுள்ளோம். எனவே அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் சகலரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=194003&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

சம்பந்தனின் உரை உணர்வுபூர்வமானது

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிவசப்படுகிறார் சம்பந்தர்’  

சம்பந்தர் உணர்ச்சிவசப்படுகிறாரா....? ஒரு இடத்திலாவது அவர் உணர்ச்சிவசப்பட்டதான வார்த்ததையையே காணவில்லையே.! ஐயா சம்பந்தர் ஒருமுறையாவது உணர்ச்சிவசப்பட்டிருந்தால்....! இன்று தமிழினம் ஏதாவது விடயத்தில் ஒரு விடியலை என்றாலும் பெற்று மகிழந்திருக்கும்.!! :(   

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.