Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.!

Featured Replies

அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.!

 

 

ஹைத­ரா­பாத்தில் நடை­பெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­வதால் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்­வரும் 28ஆம் திகதி ஹைத­ரா­பாத்தில் நடை­பெ­று­கி­றது. மாநாட்டை பிர­தமர் நரேந்­திர மோடி தொடங்கி வைக்­கிறார்.

இம்­மா­நாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­கிறார். அமெ­ரிக்க தொழில் முனைவோர் குழு­வுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வரு­கிறார். ஹைத­ரா­பாத்தில் இவர் 3 நாட்கள் தங்­கு­கிறார்.

இவாங்கா ட்ரம்ப் வரு­கை­யை­யொட்டி ஹைத­ரா­பாத்தில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

ஹைத­ரா­பாத்தில் தங்கும் இவாங்கா ட்ரம்­புக்கு 5 அடுக்கு பாது­காப்பு கொடுக்­கப்­ப­டு­கி­றது. முதல் 2 அடுக்­கு­களில் அமெ­ரிக்க இரக­சிய பொலிஸார் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டு­கின்­றனர்.

இந்­திய சிறப்பு பாது­காப்பு படை­யினர் 3ஆவது அடுக்கு பாது­காப்பை கவ­னிக்­கின்­றனர். அதை­ய­டுத்து 4 மற்றும் 5-ஆவது அடுக்கு பாது­காப்பில் தெலுங்­கானா உளவுப் பிரிவு பாது­காப்பு பொலிஸார் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்கள் தீவி­ர­வாத தடுப்பு பயிற்சி மேற்­கொண்­ட­வர்கள்.

இவாங்­கா­வுக்கு மிரட்­டல்கள் இருப்­பதால் சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு நடை­பெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஹோட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது. அதே நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதலமைச்சர் சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஹோட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. 

இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் இரகசிய பொலிஸ் குழு பல தடவை ஹைதராபாத் வந்து ஹோட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் இவாங்கா ட்ரம்ப் பயணம் செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டு வருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வர வழைக்கப்படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க ஜனாதி பதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக் கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/27328

  • தொடங்கியவர்

மோடி - ட்ரம்ப் மகள் டின்னர்.... எப்படி தயராகிறது ஃபலுக்னாமா அரண்மனை?

 
 
Chennai: 

மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் உலக தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஹைதராபாத் வரவிருக்கிறார். அவரின் வருகைக்காக, ஒட்டுமொத்த ஹைதராபாத் நகரமும் பரபரப்பாக இயங்கி வருகிறது. பிச்சைக்காரர்கள் நகரை விட்டு அகற்றம், நகரில் திறந்து கிடந்த சாக்கடைகளை மூடுவது, புதிய சாலைகள் அமைப்பது என ஒட்டுமொத்த நகரையும் மாற்றி வருகின்றனர் அதிகாரிகள். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் மேற்பார்வையிட்டுக் கவனித்து வருகிறது. இவான்காவின் பாதுகாப்புக்குத் தேவையான அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவான்கா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இரவு உணவின்போது சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்தச் சந்திப்பு நடக்கும் ஹோட்டல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இவான்கா ட்ரம்ப் தங்கவிருக்கும் அரண்மனை

 

1893-ம் ஆண்டு கட்டப்பட்ட ஃபலுக்னாமா அரண்மனையில்தான் மோடி - இவான்கா சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த அரண்மனையை 10 ஆண்டுகளாக தாஜ் ஹோட்டல் நிர்வகித்து வருகிறது. இந்த ஹோட்டலில் உள்ள தேள் வடிவிலான 101 பேர் அமர்ந்து உணவு அருந்தும் டைனிங் ஹாலில்தான் இந்தச் சந்திப்புநடக்கவுள்ளது. இதுதான் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹால் என்று தெரிகிறது. இந்த அரண்மனை இத்தாலிய கலை நுணுக்கங்களோடு கட்டப்பட்டது. குதிரை வண்டியில் வரவேற்பு, ஆடம்பர உள்கட்டமைப்பு என நூற்றாண்டு கடந்த பெருமைகளைத் தாங்கி நிற்கிறது ஃபலுக்னாமா அரண்மனை.

கிராண்ட் டின்னர் :

கிராண்ட் டின்னர்

பிரதமர் மோடி - இவான்கா உடன் அமர்ந்து உணவு சாப்பிடவிருக்கும் 101 பேர் யார் என்ற விவரங்கள் பெறப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹைத்ராபாத் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். இன்னொரு திறந்தவெளிப் பகுதியில் 2,000 பேருக்கு அதே சமயத்தில் டின்னர் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோடியை சந்திப்பதற்கு முன் இவான்கா, உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின் ஹைதராபாத்தின் புராதனச் சின்னமான சார்மினாரைப் பார்வையிடுகிறார். இதே நேரத்தில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். செவ்வாய்க்கிழமை காலை இவான்கா இந்தியா வந்தது முதல், அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பும் வரை உயர்மட்டப் பாதுகாப்பில் ஹைதராபாத் நகரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாதுர்யமாக சமாளித்த இவான்கா !

அரண்மனை

தனது இந்தியப் பயணம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இவான்கா தெரிவித்துள்ளார். மோடி - டிரம்ப் குறித்த கேள்விக்கு அவர் மிகவும் சாதுர்யமாக பதிலளித்துள்ளார். "டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையும், மோடியின் 'மேக் இன் இந்தியா' கொள்கையும் மாறுபட்டுள்ளதே" என்ற கேள்விக்கு "இரண்டும் கொள்கை ரீதியாக மாறுபட்டவை. ஆனால் அது எந்தவிதத்திலும் மோடி - ட்ரம்ப் உறவைப் பாதிக்காது. இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்" என்று பதிலளித்துள்ளார்.

புதிதாக எதுவும் செய்யவில்லை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் மகள் இவான்காவின் வருகைக்காக ஹைதராபாத்தில் புதிய சாலைகள் போடப்பட்டிருப்பது, பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தியது குறித்து விளக்கமளித்துள்ள போலீஸார், "இந்தத் திட்டங்கள் எல்லாம் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டவை. இந்த மாநாட்டுக்காக புதிதாக ஒன்றும் செய்யவில்லை. பிச்சைக்காரர்கள் இல்லா நகரம் என்ற திட்டத்தின்கீழ் பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டு, அவர்கள் மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் திட்டம் நடைமுறையில்தான் உள்ளது" என்று கூறியுள்ளனர். டிரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வாக டிரம்பின் மகள் - மோடி சந்திப்பு அமைந்துள்ளது. இந்தப் பயணம் டிரம்ப்-ன் இந்தியா வருகையை தீர்மானிக்க ஏதுவாக இருக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. டிரம்ப் மகளுக்கே இவ்வளவு ஏற்பாடுகள் என்றால் டிரம்ப் வந்தால்....

https://www.vikatan.com/news/world/108889-ivanka-trumps-visit-to-india-and-how-hyderabad-is-getting-ready-for-that.html

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ஒரு நேரச் சாப்பாட்டிற்கே அலைகிறான் அதிலே இப்படி ஒரு டினராம்.

  • தொடங்கியவர்

ஹைதராபாத்தில் தொழில் முனைவு உச்சி மாநாடு; இவாங்கா ட்ரம்ப் பங்கேற்பு: வரலாறு காணாத பாதுகாப்பு

Published : 28 Nov 2017 11:06 IST
Updated : 28 Nov 2017 11:06 IST

ivanka%20hyd%203jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப்பிறகு அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரியை கை குலுக்கிப் பாராட்டினார்.

ivanka%20hyd%202jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இன்று காலை ஹைதராபாத் வந்தடைந்தார்.

ivanka%20hyd%203jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப்பிறகு அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரியை கை குலுக்கிப் பாராட்டினார்.

ivanka%20hyd%202jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இன்று காலை ஹைதராபாத் வந்தடைந்தார்.

சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். இன்று மதியம் பிரதமர் மோடி ஹைதராபாத் வருகிறார். இதனையொட்டி, வரலாறு காணாத வகையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாடு இன்று 28ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் முக்கிய விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள 1,600 தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கு மற்றொரு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளதால், ஹைதராபாத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 நாட்கள் ஹைதராபாத்தில் தங்க உள்ள இவாங்காவை இன்று காலை விமான நிலையத்தில் தெலங்கானா மாநில அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மிகுந்த பாதுகாப்புடன் டிரைடண்ட் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ள சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இரவு ஃபலக் நமா பேலஸில் அவருக்கு மத்திய அரசு சார்பில் தடபுடலான விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது. இதில் வட, தென்னிந்திய உணவு வகைகள், மற்றும் நிஜாம் காலத்து உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

இதில் பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாளையும் உச்சி மாநாடு தொடர்கிறது. நாளை இரவு கோல்கொண்டா கோட்டை வளாகத்தில் தெலங்கானா அரசு சார்பில் இவாங்காவிற்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவாங்கா நாளை இரவு 9.20 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இன்று மதியம் பிரதமர் மோடி ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கி வைக்கிறார். 30 கி.மீ தூரம் வரை இதில் பயணம் செய்யலாம். நாட்டின் 10வது மெட்ரோ ரயில் திட்டம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

http://tamil.thehindu.com/india/article21016844.ece?homepage=true

  • தொடங்கியவர்

இவான்கா டிரம்ப் பங்கேற்கும் ஹைதராபாத் மாநாடு : 8 சுவாரஸ்ய தகவல்கள்

ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்துகொள்கிறார். இம்மாநாடு குறித்த 8 சுவாரஸ்ய தகவல்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • பெண்கள் முன்னுரிமை மற்றும் அனைவருக்கும் செழிப்பான வளம் வளர வேண்டும் என்ற நோக்கத்தை மையப்படுத்தி இந்தாண்டிற்கான சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இருக்கும் என்று இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
  • இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 1,500 தொழில் முனைவோர் பங்குபெற உள்ளனர்.
ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017
  • இதுவரை நடைபெற்ற மாநாட்டிலேயே தற்போதுதான் முதன்முறையாக இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் தொழில் முனைவோரில் 52.5 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பவர்களில் சுமார் 31.5 சதவீதம் பேர், 30 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள்.
ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017
  • மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளில் 10ற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரநிதிகள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த மாநாட்டில் பங்குபெற்ற பிரநிதிகளிலே மிக குறைந்து வயதுடையவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ’ஆப் டெவலப்பர்’ ஹாமிஷ் ஃபின்லேசன். அவருக்கு 13 வயது.
ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017
  • சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு கடந்தாண்டு அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் நடைபெற்ற நிலையில், தெற்காசியாவில் முதல்முறையாக இந்தியாவில் இம்முறை நடைபெறுகிறது.
  • பிரதமர் மோதி மற்றும் இவான்கா டிரம்ப் பங்கேற்கும் நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வீடியோ கான்ஃபிரென்ஸ் மூலம் உரையாற்றவுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42147896

  • தொடங்கியவர்

இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார்: டிரம்ப் மகள் பேச்சு

 

ஐதராபாத் நகரில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா, பிரதமர் மோடி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார்: டிரம்ப் மகள் பேச்சு
 
ஐதராபாத்:

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை நடத்துகிறது. இன்று தொடங்கும் மாநாடு மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 127 நாடுகளைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 300 முதலீட்டாளர்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான பிரதிநிதிகள் வந்துள்ளனர். 

அமெரிக்காவின் 38 மாகாணங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் என 350 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா தலைமையேற்று அழைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய இவான்கா டிரம்ப், 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி தனது உரையை தொடங்கினார். இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார் என தனது தந்தையை குறிப்பிட்டு பேசிய அவர் பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்தார்.

மேலும் அவர் பிரதமர் மோடி குறித்து பேசுகையில், “நீங்கள் இங்கே சாதித்துள்ளது அசாத்தியமானது மற்றும் பிரமிக்கத்தக்கது. சிறுவயதில் டீ விற்பவராக தொடங்கி தற்போது பிரதமராக வந்துள்ளீர்கள். அசாத்திய மாற்றம் சாத்தியமே என்பதற்கு நீங்கள் (மோடி) உதாரணமாக இருக்கிறீர்கள்” என்று கூறினார்.

மேலும், அவர் பேசுகையில், “தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த பண்டைய நகரத்தில் இருப்பது சிறப்பானதாக இருக்கிறது. இங்குள்ள உங்களது தொழில்நுட்ப மையங்கள் உலகப்புகழ் பெற்ற பிரியானியை கூட வெல்லும். முதன் முதலாக சுமார் 1500 பெண் தொழில் முனைவோர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று இவான்கா தெரிவித்தார்.

மாநாடு தொடங்கப்படுவதற்கு முன்னதாக பிரதமர் மோடியுடன், இவான்கா டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/28183437/1131510/India-has-a-true-friend-in-White-House-says-Ivanka.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.